PDA

View Full Version : சண்டை மகத்துவம்



inban
15-11-2010, 03:17 PM
தாத்தா வாங்கிவரும்
திராச்சைக்கு தொடங்கி
எப்போதும் சண்டை அவளோடு

வீட்டில் எபோதும்
உதை வாங்க வைக்கும் அவளுக்கு
மனசாட்சியே இல்லை
என்பதுதான்
அபோதைய
அசைக்கமுடியாத நம்பிக்கை

பந்து விளையாட கிளம்பினால்
பூச் செடிகளுக்கு
காவல் இருக்க ஓடுவாள்

பண்டிகை தினங்களில்
புத்தாடை காட்டி
'எப்படி' என்பாள்
'பூனைக்கு பூமாலை' என்றதும்
கோபத்தில் தலைமுடி பிடிப்பாள்

காலாண்டு தேர்விலே
தவறிய தகவல்
வீடு வரை எட்டாது இருக்க
எதையோ
லஞ்சமாக தந்தது ஞாபகம்

வள்ளிக்கு வைத்த முத்தத்தை
முச்சந்திக்கு இழுத்தது

சட்டை பையில் கிடந்த சிகிரெட்டினை
சித்தியிடம் நீட்டியது-என
மோதலிலேயே எங்களின்
உறவுப்பாலம் உருப்பெற்றிருந்தாலும்

கல்யாணமாகி அவள்
கணவன் வீடு போனபோதுதான் தெரிகிறது
சண்டை மகத்துவமும்...
சகோதர பாசமும்...

ஆதவா
16-11-2010, 04:01 AM
இல்லாதபோதுதான் அன்பின் அருமை புரியும்
கவிதைக்கு வாழ்த்துக்கள்

inban
16-11-2010, 12:25 PM
இல்லாதபோதுதான் அன்பின் அருமை புரியும்
கவிதைக்கு வாழ்த்துக்கள்

நன்றி நண்பரே..

பூமகள்
17-11-2010, 03:00 AM
ஏனோ கண் கலங்கிவிட்டது..

சண்டைகளுக்குள் தான் ஒளிந்திருக்கிறது அநேக வீடுகளில் சகோதர பாசங்கள்..

பாராட்டுகள் இன்பன். :)

அமரன்
24-11-2010, 07:30 PM
அடித்தலும் கடிதலும் ‘உரிமை’யின் விளைவுகளே.

சகோதர பாசங்கள் இதற்குப் பொருத்தமான உதாரணம்.

இதையே சிலர் சினிமாத்தனம் எனும் போது சினிமா உயரம் தொடுகிறது.