PDA

View Full Version : பத்திரிகையிலிருந்து வந்திருக்கும் ஐயாக்களோடு...



M.Rishan Shareef
15-11-2010, 11:12 AM
பத்திரிகையிலிருந்து வந்திருக்கும் ஐயாக்களோடு... (http://rishantranslations.blogspot.com/2010/11/blog-post_15.html)


நானா?

ஓமோம்

இப்பொழுது பத்தாம் வகுப்புக்குத்தான் போகிறேன்
கிராமத்துப் பள்ளிக்கூடத்துக்கு

ஐயோ ஓம்
எழுத்துக்களையும் வாசிக்க முடியும்
பாண் தேயிலை சீனி சுற்றித் தரும்
தாள் துண்டுகளை வாசித்தே
நாட்டுநடப்புகளும்
கொஞ்சமேனும் புரிகிறது
உபகாரப் பணம்பெறும் படிவங்கள்
கிராமசேவகர் தாளெல்லாம்
பூரணப்படுத்துவது நான்தான்

ஆங்கிலம்....?

இல்லை ஐயா,

இங்கு ஆசிரியர்கள் இல்லையே
முழுப் பள்ளிக்கூடத்துக்குமே
இருவர்தான் இருக்கிறார்கள்

அரச தேர்வோ?
ஐயோ
அது மிகக் கடினமாம்
ஆசிரியர்கள் இல்லையே

கற்பிக்கவில்லை எங்களுக்கு
விஞ்ஞானம்
கணிதம்
அத்தோடு மொழியையேனும்

சமயமா?

சமயப் பள்ளிக்கூடத்தில் சொல்லித் தந்திருப்பவை
மட்டுமே தெரியும்

நன்றாகப் படிக்க வேண்டுமா?

ஐயோ இல்லை ஐயா...

வீண் கனவுகளெதற்கு?
எழுதுவினைஞர்
ஆசிரியர்
பதவிகளை வகிக்க
எண்ணிப் பார்க்கவும் முடியாது எம்மால்
குறைந்தது
அட்டெண்டண்ட் வேலையாவது எடுக்கமுடியாது
ஆறு பாடமாவது சித்தியடையாமல்

இந்தக் கொஞ்ச காலத்தையும்
இப்படியே கடத்திக் கொண்டு போய்
*கார்மண்டுக்காவது போக வேண்டும்
காமண்டிலிருந்தென்றால் வெளிநாடுகளுக்கும்
அனுப்புகிறார்களாமே
அப்படியாவது போக முடியுமென்றால்
கொஞ்சமாவது
தலை தூக்க இயலுமாகும்

பொய்க் கனவுகளெதற்கு?

இந்தக் கொஞ்ச காலத்தையும்
இப்படியே கடத்திக் கொண்டு போய்
கார்மண்டுக்காவது போகவேண்டும்

* கார்மண்ட் - ஆடை தயாரிப்பு நிலையம்

மூலம் - சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# உயிர்மை
# திண்ணை
# ஊடறு
# தடாகம்

ஆதவா
15-11-2010, 01:40 PM
அன்பின் ரிஷான்,... மொழிபெயர்ப்பு பிரமாதம் (மூலம் எப்படியெனத் தெரியாமலேயே)

M.Rishan Shareef
15-11-2010, 11:59 PM
அன்பின் ஆதவா,

கருத்துக்கு நன்றி நண்பா :-)

ஆன்டனி ஜானி
07-12-2010, 04:43 PM
அருமையான மொழிபெயர்ப்பு
அருமை,அருமை நண்பா ,,,உங்கள் பகிவுக்கு
வாழ்த்துக்கள் .....

Hega
08-12-2010, 08:45 AM
இலங்கையின் தற்கால கல்வி குறித்தா கற்கால கல்வி குறித்தா இந்த ஆராய்ச்சி...

அந்த அளவு மோசமாகவா இலங்கை கல்வித்துறை இருக்கிறது..

ஆன்டனி ஜானி
09-12-2010, 02:40 PM
இலங்கையின் தற்கால கல்வி குறித்தா கற்கால கல்வி குறித்தா இந்த ஆராய்ச்சி...

அந்த அளவு மோசமாகவா இலங்கை கல்வித்துறை இருக்கிறது..
இலங்கை கல்வித்துறை மட்டும் இல்ல
இலங்கை ராணுவமும் கொலை வெரியில் தான்
செயல்படுகிறார்கள் எப்பம் யாரை கொலை செய்கிறார்கள் எப்பம் சுடுகிறார்கள் என்று தெரியவில்லை இப்படி மோசமாக போய் கொண்டு இருக்கிறது இலங்கை அரசு

பாலகன்
09-12-2010, 03:23 PM
இலங்கை அரசு இந்திய அரசின் செல்லப்பிள்ளை ஆயிற்றே :)

ம் என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே! இருட்டினில் நீதி மறையட்டுமே!

M.Rishan Shareef
01-06-2011, 02:15 PM
அன்பின் ஆன்டனி ஜானி, Hega, மகாபிரபு,

கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே !