PDA

View Full Version : படைப்புகளும் ஏக்கங்களும்...



rambal
20-11-2003, 07:03 AM
படைப்புகளும் ஏக்கங்களும்...

கடவுளைப் பூஜிக்கும்
மந்திரப் பாடலாயும்
யாராலும்
உணர்ந்து கொள்ள
முடியாத கடவுளாயும்
இருக்கின்றன
எனது படைப்புகள்..

பூஜையைப்
புரிந்து கொள்ள
இயலாத பக்தர்களாய்
வாசகர்கள்..

சிதைந்து போன
கோயிலாய்
மாறிவிடுமோ என்ற
அச்சம் அர்ச்சகருக்கு..

பக்தர்களின் காணிக்கை
தட்டில் விழுந்தால்
மட்டுமே வண்டி ஓடும்
நிலையில் இருக்கும்
அர்ச்சகன் நான்..

கடவுள் அருள்பாலிப்பதெல்லாம்
இருக்கட்டும்..
முதலில் பக்தர்கள்
தயை வேண்டும் எனக்கு...

Mano.G.
20-11-2003, 08:41 AM
மழைக்காக ஏங்கும்
நெல் பயிரோ நீ
கைதட்டும் பாராட்டும்
தானா உனக்கு ஊட்டமும் ஊக்கமும்

இங்கோ கிணற்றில் போட்ட கற்களாய்
உன் படைப்புக்களோ என
கவலை வேண்டாம்
இருக்கிரோம்
நாங்கள்
உனக்கு வேண்டிய
ஊக்கமும் ஆக்கமும் கொடுக்க


மனோ.ஜி

Nanban
20-11-2003, 02:57 PM
கடவுளைக் காண
கிளம்பியது கூட்டம்
கையில் கிடைத்த
வாகனம் ஏற.¢.

நடுவழியில்
சந்தேகம் வந்தது -
கடவுள் எங்கிருக்கிறார்?

பக்கத்தில்
நின்ற வாகன ஓட்டியிடம்
விசாரணை.....

விரைந்து செல்லுங்கள் -
நடை சாத்தும் நேரம்,
அண்ணா சாலை வளைவில்
தேவி தியேட்டர்களில்
ஏதாவது ஒன்றில்....

ஏதாவது சாலை ஒன்றில்
பக்தர்கள் சென்ற
வாகனம் துப்பிய
அமில வாயுக்களால்,
சுவாசிக்கத் திணறும்
மலரொன்றை
கவிதை ஒன்றால்
வருடிக் கொண்டே
தன் பக்தனை
தேடிக் கொண்டிருக்கக் கூடும்........

கடவுள் புன்னகையுடன்.......

இ.இசாக்
20-11-2003, 03:12 PM
இது தான்
இன்றைய சூழல் நண்பன் அவர்களே!
கடவுளின் பெயரால்
என்னென்னவோ நடக்கிறது.
என்னை நினைத்துப்போற்றவே மனிதர்களை படைத்தேன்
என்பது கடவுளின் வாக்குமூலம்.
கடவுளின் நினைவில் இருந்ததைவிட ஆன்மீகவாதிகள்
சொல்லவேண்டாம்.
பாவம் கடவுள்

Nanban
20-11-2003, 03:17 PM
ஆம், இசாக் அவர்களே.

மத வேறுபாடின்றி, இன்றைய மக்கள் போற்றுவது திரையரங்குகள், TV பெட்டிகளின் தொடர் அறுவைகள் என்று தான்.........

இறைவன் சங்கடத்துடன், தன் உண்மை பக்தர்களைத் தேடி, தெருத் தெருவாக அலைந்தாலும் வியப்பிருக்காது......

இ.இசாக்
20-11-2003, 03:25 PM
ஒரு முறை கவிக்கோ எழுதி வாசித்ததாக நினைவு.

இறைவன் தீர்ப்பு நாளில்
அனைவரையும் விசாரித்து சொர்க்கம், நரகம் தரும்போது
முதலில்
நாத்திகனை சொர்க்கத்துக்கு அனுப்பினானாம்
காரணம்
ஆன்மீகவாதிகள்
என்பெயரை சொல்லி மனிதர்களை பலியிட்டார்கள்
இவன்
என்னை இல்லை என்று சொன்னாலும்
மனிதர்கள் வாழ வழிசெய்தான் (மோதலற்ற வாழ்வு மானுட சிறப்பு._ உரிமைக்காக போராடுவது வேறு)

Nanban
20-11-2003, 03:37 PM
ஆன்மீகவாதிகள்,
என்பெயரை சொல்லி
மனிதர்களைப் பலியிட்டார்கள்.

இவன் (நாத்திகன்),
என்னை இல்லை
என்று சொன்னாலும்
மனிதர்கள் வாழ வழிசெய்தான்

(மோதலற்ற வாழ்வு மானுட சிறப்பு._ உரிமைக்காக போராடுவது வேறு)

ஆத்திகமோ, நாத்திகமோ - உயிரை மதிப்பது தான் இறவனுக்கு இனிமையான விஷயம் என்று கவிக்கோ சொன்னது எத்தனை உண்மை......

இளசு
20-11-2003, 08:51 PM
ராமின் கவிதை ஒரு தளத்திலும்
நண்பன் -இசாக் அலசல் வேறு தளத்திலும்
இயங்குவதாய் எண்ணுகிறேன்..
என் எண்ணம் சரியா?????

rambal
20-11-2003, 08:54 PM
உங்கள் எண்ணம் மிகச்சரியே... தவறாகத் திரிக்கப்பட்டுவிட்டது..
இந்தக் கவிதை மட்டுமல்ல.. எல்லாம்...

முத்து
20-11-2003, 09:00 PM
ராமின் கவிதை ஒரு தளத்திலும்
நண்பன் -இசாக் அலசல் வேறு தளத்திலும்
இயங்குவதாய் எண்ணுகிறேன்..
என் எண்ணம் சரியா?????


அண்ணா
நானும் அதுதான் நினைத்தேன் ...
கவிதை அவரது எழுத்தைப் பற்றி , வாசகர்களைப் பற்றி விமர்சனங்களை எதிர்பார்த்து ஆனால் ......

இ.இசாக்
21-11-2003, 01:19 PM
இளசு அண்ணா,ராம்பால், நண்பர் முத்து..!
நண்பர் நண்பன் அவர்களின் கவிதை சார்ந்தே என் கருத்தை பதிந்தேன்,
நண்பன் அவர்களும் அப்படியே தொடர்ந்தார்.
தளம் மாறி பேசப்பட்டது என்பது சரி.
திரிக்கப்பட்டதாக ராம் சொல்லும் கருத்து தவறானது.
எந்த படைப்பாளியின் கருத்தையும் திரித்து பேசவோ அதை சார்ந்து மறைமுகமாகவோ எழுத தெரியாதவன் நான்.
என் கருத்தை தெளிவாக நேராக பதியும் கொள்கை என்னுடையது.

puppy
21-11-2003, 05:04 PM
இசாக் ராம் உங்களை பற்றி சொல்லவில்லை.......நீங்கள் கவலைபடாமல்
பதியுங்கள்

இளசு
21-11-2003, 06:09 PM
இளவல் இசாக்,
உங்களை, நண்பனை மிகமதிக்கும் பட்டியலில் ராம் முதலில்...
நானும் உண்டென்று சொல்லவும் வேண்டுமோ...
நாமனைவரும் ஒருவரையொருவர் புரிந்தவர்தானே...

முத்து
21-11-2003, 09:42 PM
எந்த படைப்பாளியின் கருத்தையும் திரித்து பேசவோ அதை சார்ந்து மறைமுகமாகவோ எழுத தெரியாதவன் நான்.


அன்பு இசாக் ...
இதை நீங்கள் சொல்லவேண்டியதே இல்லை ...
நீங்கள் சொல்வதற்கு முன்பே இது
இங்குள்ள அனைவருக்கும் நன்றாகத் தெரியும்தானே ...

Mano.G.
21-11-2003, 11:49 PM
ஐயா நான் தவறான கருத்தில்
எழுதியிருந்தால் மன்னிக்கவும்

என் மூளைக்கு எட்டிய வகையில்
ராம்பாலின் கவிதைக்கு இதுதான் அர்த்தம் என நினைத்தேன்

சாரி,

மனோ.ஜி

இளசு
21-11-2003, 11:53 PM
நண்பரே மனோஜி.. என்ன இது?
உங்கள் பதிவை யாரும் ஏதும் குறை சொல்லவில்லையே
அப்படி ஒரு குறைகண்டு யாரும் சொன்னாலும்
மன்னிப்பு கேட்கும் அளவுக்கு அந்நியர்களா இங்கே?
எங்கள் முன்னோடிகள் நீங்கள், அண்ணல் கரிகாலன்,அன்பின் ஆரென்..
நீங்கள் இப்படி சொல்வது எனக்கு வருத்தம் வரவைக்கிறது..

Mano.G.
22-11-2003, 03:41 AM
ஐயா நான் தவறான கருத்தில்
[u]எழுதியிருந்தால் மன்னிக்கவும்

என் மூளைக்கு எட்டிய வகையில்
ராம்பாலின் கவிதைக்கு இதுதான் அர்த்தம் என நினைத்தேன்

சாரி,

மனோ.ஜி

நண்பர் இளசு அவர்களே
வருந்த வேண்டாம்
நான் மேலே கோடிட்டு காட்டியது தான்
தமிழில் சொல் விளையாட்டோ ?

இருந்தால் மன்னிக்கவும்
இல்லா விட்டால் விட்டு விடவும்.

மனோ.ஜி

aren
28-11-2003, 04:13 AM
ராம் அவர்கள் சொல்ல நினைத்தது வேறு, அனால் இங்கே அலசியது வேறு. ராம் அவர்கள் படைப்பாளியின் ஏக்கம் பற்றி கூறியிருக்கிறார், ஆனால் விவாதம் கடவுள்பற்றி சென்றுவிட்டது. அதனால்தான் ராம் அவர்கள் வழிமாறிவிட்டது என்ற அர்த்தத்தில் சொல்லியிருக்கிறார்.

இந்தப் பதிவை இரண்டாக பிரித்தால் சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

பாரதி
28-11-2003, 10:23 AM
அன்பு ராம்,

உங்கள் கவிதை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் கொஞ்சம் முரண்பட்டும் இருக்கிறது. முதலில் படைப்புகளை "கடவுள்" என்றும், முடியும் இடத்தில் "கடவுள்" என்பதன் பொருள் வேறாகவும் காட்டி இருக்கிறீர்கள்..

உங்களுக்கே புரிகிறது... கடவுளைத் தேடி பக்தர்கள் வரத்தானே செய்வார்கள். இல்லையா..? பக்தர்கள் வரவில்லை என்று கோவிலை மூடி விடாதீர்கள். ( நான் சொல்லி இருப்பது உங்கள் கவிதைக்குரிய கடவுள், பக்தர்களைப் பற்றி.)

poo
28-11-2003, 03:08 PM
ராமின் கவிதையில் கவிஞனின் ஏக்கம் புரிகிறது...