PDA

View Full Version : வாடகை வீடும் நுகர்வோர் மன்றங்களும்



Vijisri
14-11-2010, 08:40 PM
சராசரி மனிதனுக்கு அதிக பீஸ் வாங்கும் பள்ளி, வழக்கறிஞர் என்று பல வகைகளில் அல்லாடல் உள்ளது. இன்சுரன்ஸ் கட்ட மறந்து டிராபிக்கில் மாட்டினால் மேஜிஸ்ட்ரேட்டிடம் முறையிட்டு ஏதாவது செய்ய முடிகிறதா? இரண்டு மூன்று வருடம் பிரீமியம் கட்டாதவரும் இரண்டு நாள் மட்டும் கட்டாதவரும் ஒரே அபராதம்தான் கட்டுகிறார்கள். நீதிமன்றம் சென்றவருக்கு வக்கீல் பீஸ் கட்டிய இரசீது நிச்சயம் இருக்காது. அது நுகர்வோர் மோசடி லஞ்சம் இல்லையா?

நாங்கள் மந்தைவெளியில் ஒரு வீட்டில் வாடகை கொடுத்து 20 ஆண்டுகள் இருந்தோம். வாடகைக்கு இரசீது கிடையாது. இரசீது கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று நல்ல முறையில்தான் கேட்டோம். உடனே என் மகனுக்கு வீடு வேண்டும் என்று காலி செய்ய சொல்லி விட்டார். ரூ6000/- வாடகை என்ற நிலை மாறி இப்பொழுது ரூ10000/- கொடுத்து வேறு வீடு மாற்றி நாங்கள் இழந்ததெல்லாம் ஒரு வகை நுகர்வோர் மோசடிதானே!

திட்டம் போட்டு திருடுபவர்களை என்ன சொல்ல. சரியான வீடு கிடைக்கவில்லை என்று நாங்கள் கூறியும் தன் பிள்ளையின் மைத்துனரிடம் கூறி எங்களுக்கு வீடு பார்க்கும் ஏற்பாடு செய்து பின் அதற்கான செலவு என்று அட்வான்ஸையும் சரியாக திருப்பவில்லை. நாங்கள் இடம் பெயர்ந்த வீடு அவர்கள் பார்த்துக் கொடுத்த வீடும் இல்லை. நாங்கள் காலி செய்த வீட்டில் அவர் மகனும் குடி வரவில்லை. Mylapore Timesல் விளம்பரம் செய்து ரூ9000/-க்கு வாடகைக்குதான் கொடுத்துள்ளார். இவ்வாறான ஊழல் கலாச்சாரம் வாழ்கையுடன் பின்னிப் பிணைந்திருப்பது 'லஞ்சம் கொடுக்க மாட்டோம்' என்ற வைராக்கியத்தால் நுகர்வோர் மன்றங்கள் சென்று சரிசெய்ய முடியாது.

அமரன்
14-11-2010, 08:47 PM
வாங்க விஜி!

இன்னார் செய்தார் என்று சொல்லிக் காட்டுவதில் விழிப்புணர்வு ஏற்படும்தான். ஆனால் இன்னது நடந்தது என்று சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தும் அளவுக்குத்தான் மன்றக் கட்டுமானம் உள்ளது.

மன்றத்தை நன்கு சுற்றிப்பார்த்தால் நீங்களே இதை உணர்வீர்கள்.

அந்த அடிப்படையில் உங்கள் பதிவை திருத்துகைக்கு உட்படுத்தி உள்ளேன்.

புரிந்துணர்வுக்கு நன்றி.

M.Jagadeesan
15-11-2010, 12:15 AM
வீட்டு வாடகை ரசீது யாரும் கொடுக்கமாட்டார்கள். இருபது ஆண்டுகளாக ரசீது கேட்காத நீங்கள் திடீரென்று கேட்டுள்ளீர்கள்.அதுவும் தவறுதானே.ரூ 6000 வாடகையில்தான் இருந்துள்ளீர்கள். மந்தைவெளியில் இவ்வளவு குறைவான வாடகைக்கு வீடு கிடைக்காது.நீங்கள் பேசாமல் இருந்திருக்கலாம்.முதலில் நாம் பிழைக்கும் வழியைத் தெரிந்து கொள்ளவேண்டும்.

nambi
15-11-2010, 01:58 AM
நண்பருக்கு வணக்கம்! வருக! வருக!
............................

வீடு வாடகைக்கான ரசீது கொடுப்பதில்லை...அது ரொம்ப காலமாக அனைத்து வீட்டு உரிமையாளரும் கடைப்பிடிக்கின்ற சட்டவிரோத செயல் தான்....மறுப்பதற்கில்லை...உறவுகளும் அப்படித்தான் வசூலிக்கின்றன...அது பற்றி அப்புறம் பர்ர்க்கலாம்....

உடனடியாக வீடு காலி செய்ய சொல்ல வீட்டு உரிமையாளருக்கு அதிகாரம் இல்லை..பெரும்பாலும் வீட்டு வாடகைச் சட்டம்...வீட்டின் வாடகைதாரருக்கே அதிக உரிமைகள் வழங்கியுள்ளது. (காலி செய்ய இரண்டு மாதம் அவகாசம் என்றாலும் அதற்கு மேலும் பெறலாம்) ஆரம்பத்திலேயே இது பற்றி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று ஒரு புகார் செய்து கால அவகாசத்தை அங்கேயே பெற்றிருக்கலாம்...(அவர்கள் பேச்சுவார்த்தையில் ஒத்துக்கொள்ளாத பட்சத்தில்)

இல்லையேல் இலவச சட்டஉதவி மையத்தை நாடி ஒரு வழக்குரைஞரின் ஆலோசனையும் பெற்று அதன்படி நடவடிக்கைகளில் இறங்கியிருக்கலாம்...(தனியாக செயல்பட முடியாத நிலையில் இருக்கும் சூழ்நிலைகளை சொல்லி)....உதவிபெற்றிருக்கலாம்..அப்படி செய்திருந்தால்...வீட்டின் முன்பணம் முழுமையாக திரும்ப கிடைத்திருக்கும்...

அருகில் உள்ள காவல் நிலையம் சரியாக செயல்படாது என்ற நம்பிக்கை இருக்குமானால் மாநகர காவல்துறைக்கு (ஆணையருக்கு) மின்னஞ்சல் மூலம் உங்கள் புகாரின் நகலை அனுப்பியிருக்கலாம்..இதனால் கீழ்மட்டத்தில் (காவல் நிலையத்தில்) ஒரளவுக்கு...முறைகேடுகளை உங்கள் விஷயத்திற்காக தடுத்து நியாயமன உங்கள் முன்பணத்தை திரும்ப கிடைக்க வழிசெய்திருக்கலாம்...

இந்த வழிமுறைகளையெல்லாம் கையாண்டு மிக எளிமையாக வீட்டு வாடகை முன்பணத்தை வீட்டு உரிமையாளரிடம் திரும்ப பெற்றிருக்கின்றனர். நீங்கள் காவல் துறைக்கு போக மாட்டீர்கள் என்ற நம்பிக்கையிலேயே வீட்டின் உரிமையாளர் எல்லை மீறி அதிக சட்டவிரோதத்திற்கு சென்றுள்ளார்.
.......................
நுகர்வோர் மன்றத்திற்கு வீட்டின் வாடகை செலுத்திய ரசீது...ரப்பர் ஸ்டாம்ப் குத்தியது இருந்தாலும் நீங்களே வழக்கு பதியலாம்..அல்லது ஒப்பந்த நகல் இது இப்போது பல இடங்களில் வீட்டு உரிமையாளரால் பின்பற்றபடுகிறது...(காரணம் வீட்டுவாடகைச்சட்டத்தினால் வீட்டின் உரிமையாளருக்குத்தான் அதிக பாதிப்பு உள்ளது அதில் இருந்து விடுபடுவதற்கு இந்த ஒப்பந்தமும் வழிசெய்கிறது...).....

....நுகர்வோர் மன்றத்தில் வழக்கு பதிய அவ்வளவு செலவுகள் இல்லை..வழக்குரைஞர்கள் வைத்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை...வீட்டின் குடும்ப உறுப்பினரில் யாராவது ஒருவர் கூட வழக்கிற்காக ஆஜர் ஆகலாம்...தேவைப்பட்டால் இலவச சட்ட ஆலோசனைகளும் அந்த மன்றத்தின் அருகிலேயே தருகின்றனர்.
...............
லஞ்சம் தருவதில் யாருக்கும் உடன்பாடில்லை...இது குறித்து நேற்று கூட தொலைக்காட்சியில் அலசப்பட்டது...அதில் உள்ள ஒரு இளைஞர் கூட்டமைப்பு லஞ்சத்தினால் பாதிக்கப்பட்டவருக்கு உதவுவதற்காக தொண்டுள்ளத்துடன் அமைக்கப்பட்டுள்ளது (சத்தியாகிரகா) (அவர்களும் லஞ்சித்தினால் பாதிக்கப்பட்டு அதனால் இன்னும் பிறரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக வாங்குபவர்களையும் கொடுப்பவர்களையும் கட்டுபடுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது)....அதைத்தொடர்பு கொள்ளலாம்....
................
இப்போது எல்லாம் முடிந்துவிட்டதால் இதை இப்போது முன்னெடுத்து செல்வது சற்று கடினமான விஷயம்.... இருப்பினும் புகார் அளிக்கலாம்....நேரிடையாக காவல் நிலையத்திலும் அளிக்கலாம்...அல்லது....காவல்துறை இணையதளத்தின் மூலமும் புகார் அளிக்கலாம்....அல்லது பதிவு அஞ்சல் மூலமும் புகார் அளிக்கலாம்...புகார் மனு ஆணையாளரின் குறிப்புடன் காவல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்படும்.. .(மீண்டும் காவல்நிலையத்தில் இருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான தகவல்கள் ஆணையாளருக்கு காவல் நிலையம் விளக்க கடிதத்துடன் குறிப்பிட்ட காலவகாசத்திற்குள் அனுப்பி வைக்கவேண்டும்...இது வழக்கமான முறை) அதன்படி விரைவில் ஒரளவுக்கு பணம் திரும்ப கிடைக்கலாம். இதற்காக கையூட்டு எதுவும் தர முயற்சிக்க வேண்டாம்...எதிர்தரப்பு தந்தாலும் பரவாயில்லை...இதில் வரும் எந்த விஷயத்தையும் நியாயமற்ற முறையில் (காவல் துறையினரால்) செய்துவிடமுடியாது...இது (சிவில்). நண்பர்கள் யாராவது வழக்குரைஞர்களாக இருந்தால் அவர்கள் உதவியையும் நாடலாம்...

(இன்னும் சில விஷயங்கள் தவறாக புரிதலுடன் தங்கள் பதிவில் இருக்கிறது...பாதகமில்லை..அது பற்றி பிறகு பதிவிடுகிறேன்...உதாரணம் இன்சூரன்ஸ்:D)

நன்றி! தங்கள் வரவு நல்வரவு ஆகுக....

ஆதி
15-11-2010, 03:09 AM
வாங்க விஜிஸ்ரீ, அறிமுகப்பகுதியில் தங்களைப் பற்றிய அறிமுகத்தை தரலாமே...

Vijisri
17-05-2011, 04:11 AM
மந்தைவெளி ஆளுக்கே நுகர்வோர் மன்றம் பாடம் என்பது சற்று மிகைதான்! நுகர்வோர் மன்றங்கள் மட்டும் அல்ல, நீதிமன்றங்களும் இங்கு பயன்படத்தக்க வகையில் இருப்பதில்லை என்பது ஊரரிந்த உண்மை. தகவல் உரிமை, நுகர்வோர் உரிமை, மனித உரிமை போன்ற சில புதிய சட்டங்களுக்கு ஆர்வமாக பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்த முனைந்தாலும் அடிப்படை ஏதும் மாரவில்லை என்பதை உணர்ந்த சராசரி மனிதன் விழிப்புணர்வு ப்ரசாரகர்களை சந்தேக கண்ணொடுதான் பார்க்கிரான். CAI என்ற அமைப்பின் ப்ரசாரம் ஒன்றை சமீபத்தில் கேட்க நேரிட்டது. எதையும் மன்றதிற்கு எடுத்துச் செல்லாமல் இடைத் தரகாக இவர்கள் ஆதாயம் தேடுவதாகவே எனக்கு படுகிறது!!

Vijisri
17-05-2011, 04:24 AM
நான் மன்றங்களில் 10க்கும் அதிகமான வழக்குகளில் ஈடுபாடுடன் செயல்பட்டு கொன்ன்டிருக்கிறேன். ஆரம்ப நாட்களில் வாதத்தை எடுத்து வைப்பதற்கும் முன்னால் நீதிபதி 'Case Dismissed ' என்று ஈரம் இல்லாமல் வெளியே தள்ளப்பட்டேன். இன்றும் அவ்வாறே தணிகாசலம் போன்ற நீதிபதிகள் நடந்து கொண்டாலும் NCDRC யில் மேல்முறையீடு செய்து வழக்கை நடத்துகிறேன். என் அனுபவம் பிரச்சாரம் செய்பவர்களின் அனுபவத்தை விட முதன்மையானது.

தாமரை
17-05-2011, 05:29 AM
சின்ன விஷயம்தான்.

நுகர்வோர் உரிமை என்பது போல் நுகர்வோர் கடமை என்றும் ஒன்று உள்ளது என்பதை நாம் என்றுமே நினைவில் கொள்ளுதல் மிக முக்கியம்.

வீட்டு விஷயத்திற்கு வருவோம். வீட்டு வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை நாம் சரியாக படிப்பது கூட இல்லை. 11 மாதங்களுக்குப் பிறகு மறு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என ஒரு வாக்கியம் அதில் இருப்பதையே மறந்து விடுவோம். 11 மாதத்திற்கு பின்னால் ஒப்பந்த புதுப்பிப்பு என்பது நம்மைப் பொறுத்தவரை அனாவசியச் செலவு என்று புதுப்பிப்பதே இல்லை.

ஆனால் வீட்டு உரிமையாளர் அதிக வாடகை கேட்கும் போதோ அல்லது பின்னொரு நாளில் ரசீது கொடுக்க கேட்கும் பொழுது மறுக்கும் பொழுதோ, நமது உரிமை உணர்வு எழுந்து கொள்கிறது.

கடமையைச் செய்யாதவருக்கு உரிமை கேட்க தார்மீக உரிமையே கிடையாது.

விழிப்புணர்வு என்பது மற்றவர்களை மாற்றுவது அல்ல,

தான் மாறுவது என்பதாகும்.

Vijisri
18-05-2011, 08:21 AM
PhD போன்ற ஆராய்ச்சி படிப்பு படித்தவரும் வேலை வேண்டும் என்றால் தங்கள் கல்வி தகுதி சான்றுகளை (நகல் அல்ல) கிரயமாக கொடுத்து அடிமை தொழில் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ள நம் தமிழகத்தில் உரிமை கேட்கும் தாமரை எப்படி? யதார்த்தம் என்று ஒன்று உண்டல்லவா? பெற்றவர்களை மக்கள் காப்பற்றவேண்டும் என்று கூட புதிதாக உரிமை கூறும் சட்டம் இருப்பதினாலேயே உங்கள் பெற்றோருக்கு எழுத்து மூலம் பட்டயம் எழுதி கொடுத்தீர்களா?

Vijisri
18-05-2011, 08:25 AM
There is no use in fighting amongst ourselves. The Right in India are available only in paper and it is hard to secure tham through Consumer Court for ordinary public. This is a plain and simple fact

Vijisri
20-05-2011, 04:48 AM
சமூகத்தினரின் உணர்வுகளால் வழங்கபடுவது உரிமை. அது சட்டத்தினால் ஏற்படுவது அல்ல. மறுக்கப்பட்டட உரிமைகள் சட்டப்படி ஆராயப்படும் இடம்தான் மன்றங்கள். மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக பிரதிவாதி தண்டனை பெற்றாலும் வாதி இழந்த எதனையும் பெறுவதில்லை. செய்திகளில் நுகர்வோருக்கு சாதகமாக ஒரு தீர்ப்பில் இருபது லட்சம் என்று வந்தாலும் அந்த தீர்ப்பிலேயே மேல்முறையிட்டில் அது எடுபடாத வகையில்தான் தீர்ப்புகள் எழுதப்படுகின்றன. நுகர்வோர் மன்றம் மற்றும் சட்டம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நீங்கி சமூக நல்உணர்வுகள் ஊட்டும் பிரச்சாரங்கள் தேவை.விழிப்புணர்வு என்று செய்யப்படும் இதற பிரசாரங்கள் பிற ஆதாயங்களுக்காகத்தான்.

aren
20-05-2011, 08:47 AM
20 வருடம் ரசீது கேட்காதபோது திடீரென்று ரசீது கேட்க வேண்டும் என்று எதற்காக தோன்றியது.

மந்தைவெளியில் 6000 ரூபாய்க்கு ஒரு குடிசைவீடு கூட கிடைக்காதே. அப்படியென்றால் இவ்வளவு குறைந்த வாடகையில் இருந்த நீங்கள் ஏன் அந்த வாய்ப்பை இழந்தீர்கள். ரசீது கேட்கவேண்டும் என்று எதற்காக தோன்றியது என்று நீங்கள் எழுதினால் உங்கள் பிரச்சனையை புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

நீங்கள் 6000 ரூபாய் கொடுத்த இடத்தை அவர்கள் மறுபடியும் 9000 ரூபாய்க்கு வாடகைக்கு கொடுத்துள்ளார்கள் என்றால் அவர்கள் இதுவரை நஷ்டப்பட்டே இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

வாடகைக்கு வீடு எடுக்கும்போது ஒரு ஒப்பந்தம் செய்வீர்கள் அல்லவா, அந்த ஒப்பந்தத்தில் சரியான வாடகை என்று இருக்குமே, அதுவே ரசீதாக உபயோகப்படுத்திக்கொள்ளலாமே.

ரொம்ப சுலபமான வழி என்னவென்றால் கொடுக்கும் வாடகையை பணமாக கொடுக்காமல் காசோலையாக கொடுத்தால் அதுவே ரசீதிற்கு சமமாக இருக்குமே.

நாஞ்சில் த.க.ஜெய்
20-05-2011, 06:44 PM
இன்று நிலம் விற்கும் விலையில் இது போன்று குறுக்கு வழியில் அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படலாமா? உழைத்து தன காசில் வாங்க வேண்டும் அது தான் நன்று நண்பரே ...நண்பர் தாமரை அவர்களின் கருத்து மிகவும் பொருந்தக்கூடியது சட்டத்திற்கு வேண்டியது சாட்சிகள் மட்டுமே கடமையை சரிவர செய்யாத ஒருவனால் எவ்வாறு சாட்சிகள் சேகரிக்க முடியும் ...

தங்கவேல்
08-06-2011, 08:39 AM
ரசீது கேட்டதற்காக வீடு மாறியது கூட ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம். அதை விடக் கொடுமையெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது கோயமுத்தூரில். அடிமையாய் வாழ பழகிக் கொண்டால் தான் வாடகை வீடு வசதிப்படும். இல்லையென்றால் வீடு தேடியே வாழ்க்கை போய் விடும்.

தாமரை
09-06-2011, 05:03 AM
PhD போன்ற ஆராய்ச்சி படிப்பு படித்தவரும் வேலை வேண்டும் என்றால் தங்கள் கல்வி தகுதி சான்றுகளை (நகல் அல்ல) கிரயமாக கொடுத்து அடிமை தொழில் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ள நம் தமிழகத்தில் உரிமை கேட்கும் தாமரை எப்படி? யதார்த்தம் என்று ஒன்று உண்டல்லவா? பெற்றவர்களை மக்கள் காப்பற்றவேண்டும் என்று கூட புதிதாக உரிமை கூறும் சட்டம் இருப்பதினாலேயே உங்கள் பெற்றோருக்கு எழுத்து மூலம் பட்டயம் எழுதி கொடுத்தீர்களா?


நாம் கடமைகளைச் சரிவரச் செய்யாததால்தான் உரிமையைக் கேட்கவியலாமல் தவிக்கிறோம் என்பதை ஒப்புக் கொண்டதற்கு நன்றி.

எது உரிமை? எது கடமை?

பெற்றவர்களுக்கு இறுதிக் காலத்தில் பாதுகாப்பு அளிப்பது கடமை.

பெற்றவர் சம்பாதித்த சொத்துக்களை அனுபவிப்பது உரிமை.

கடமையைச் செய்ய மறுக்கிறோம். உரிமை உரிமை என்று போராடுகிறோம். இதுதானே இன்றைய எதார்த்த நிலை. அதைத்தானே அந்தச் சட்டம் உணர்த்துகிறது? எது கடமை எது உரிமை என்று புரிந்து கொள்ள மறுப்பது வேடிக்கையாய் இருக்கிறது.

சமூகத்தின் உணர்வுகளினால் உரிமைகள் கொடுக்கப்படுகின்றன. அதற்கு அடிப்படையே சமூகத்தில் இருக்கும் அந்த உரிமைக்கு அடிப்படையான கடமைகள் தான்..

அந்த கடமைகள் மதிக்கப்படாமல் மிதிக்கப்படும்பொழுதுதான் அவற்றைக் காப்பாற்றச் சட்டங்கள் வகுக்கப்படுகின்றன. அதாவது உரிமை என்பது உண்டாகும் பொழுது அதற்கு முன்பாகவே கடமை என்ற ஒன்று உண்டாகிவிடுகிறது. அந்தக் கடமை சரிவர செய்யப்படாத பொழுது சரியான வழியில் பாதுகாக்கச் சட்டங்கள் உருவாக்கப் படுகின்றன.

எனவே சட்டங்களின் முதல் அடிப்படை கடமையைச் செய்தலை கண்காணித்தல், இரண்டாம் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல்.

வாடகை வீட்டில் குடியிருப்பவரும் சரி, வீட்டை வாடகைக்கு விடுவோரும் சரி இருவருமே சமூகத்தின் உள்ளேதான் இருக்கிறார்கள். இருவருக்கும் கடமைகளும் உரிமைகளும் உண்டு.

50,00,000 முதலீட்டிற்கு வங்கி வட்டியே மாதம் 45,000 ரூபாய் வருகிறது. அப்படி இருக்க முதலீடு செய்து வீட்டைக் கட்டி 9000 ரூபாய்க்கு வாடகைக்கு விடுபவர்கள் பெரும் தியாகிகள்.
விலைவாசி தற்போது வருடத்திற்கு 12 சதவிகிதம் உயர்ந்து கொண்டிருக்கிறது என்பதையும் மறக்கக் கூடாது.

அதிலும் கைவைத்து பங்கு வர்த்தகத்தில் பணம் முதலீடு செய்வதைப் போல, அங்கும் முதலுக்கே மோசம் வந்தால் ??? வாடகைக்கு விட என யார் வீட்டைக் கட்டுவார்கள்?

அப்புறம் சொந்த வீடுகள் கட்ட இயலாதோர் எங்குதான் வசிப்பார்கள்?

ஒப்பசந்தை விலைக்கு வாடகையை உயர்த்துவதற்காகத்தான் 11 மாத கால ஒப்பந்தமே போடப்படுகிறது. அதையும் நாம் அறிவோம். ஆனால் ஒப்புக் கொள்ள மாட்டோம்.

ந்தத்தின் ஒவ்வொரு வருட இறுதியிலும் சராசரி சந்தை விலைக்கு ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய கடமை வாடகைதாரருக்கு உண்டு. சுயலாபத்திற்காக அதை செய்வதில்லை நாம். காரணம் அதிக வாடகை கொடுக்கணுமே

பின்னர் வாடகையை திடீரென உயர்த்துகிறார்கள் என கூப்பாடு போடுவது எந்த விதத்தில் நியாயம்?

வீட்டுக்கு வாடகையை நிர்ணயிக்க வீட்டு உரிமையாளருக்கு உரிமை இருக்கிறது என்பதை வசதியாக மறந்துவிடுகிறோம்.

இவ்வாறு அடுத்தவருக்கும் இருக்கும் உரிமையை மறுத்து நம் உரிமையை மட்டுமே நிலைநாட்ட முயற்சித்தால், எதிர்காலத்தில் யாருமே ஒரு வாடகை வீட்டில் 11 மாதத்திற்கு மேல் வாடகைக்கு நிலையாக இருக்க முடியாத நிலைக்குதான் நாம் சமூகத்தை தள்ளுகிறோம் என்பதையும் மறக்கக் கூடாது. ஏனென்றால் சொத்துப் பாதுகாப்பு மற்றும் சொத்துக்களின் மூலம் வருமானம் என்ற அவர்களின் உரிமைகளுக்கு உண்டாகும் பங்கத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும் என்ற கட்டாயம் அவர்களுக்குக் கிடையாது.

சுதந்திரம் என்பது பரஸ்பரம் ஒருவர் உரிமையை ஒருவர் மதித்து நடத்தலாகும்.

6000 ரூபாய் மாதவாடகை. அது வீட்டு உரிமையாளருக்கு ஒரு வருமானம் அல்லவா. நீங்கள் வீட்டு வாடகைக்கு ரசீது கேட்டீர்கள். ரசீது கொடுத்தால் அவர் வரி கட்ட வேண்டும்.

வரி 33 சதவிகிதம்.ஆகிறது. அதாவது 2000. அதாவது 6000 ரூபாய் வாடகைக்கு பதிலாக அவர்களுக்கு 4000 ரூபாய்தான் கிடைக்கும். அவர்களுக்கு 6000 ரூபாய் நிரந்தரமாக கிடைக்க வேண்டுமானால் 9000 ரூபாய் வாடகை வாங்கினால் மட்டுமே என்பதை வசதியாக மறைத்து விட்டு, புலம்புவது ஏன்?

சோப்பு வாங்கினால் கூட உற்பத்தி வரி, சேவை வரி, விற்பனை வரி ஆகியவற்றை நுகர்வோர்தான் செலுத்துகிறோம். கம்பெனிகள் அவற்றை விலையில் சேர்த்திருக்கும்.

நியாயமாக நான் 9000 மாதம் தருகிறேன். ரசீது கொடுங்கள் என கேட்டிருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்க் நஷ்டமில்லாமல் இருக்கும்.

நீங்கள் கொடுத்த இரண்டாவது பதிவிற்கு,


பி.ஹெச்.டி போன்ற படிப்பு படித்தவர்கள் நிறுவனங்களைத் தலைமை தாங்கும் அளவிற்கான தகுதி பெற்றிருக்க வேண்டும். அவர்கள் பட்டங்களை அடகு வைத்தல் என்பது அவர்களது தகுதியின்மையைக் காட்டுகிறது என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?

எனக்குத் தெரிந்து அப்படி யாரும் அடகு வைக்கவில்லை. (எனக்கு குறைந்தபட்சம் 30 பி.ஹெச் டி முடித்த நண்பர்கள் உண்டு.) ஏழைகளாக வாழ்க்கையைத் தொடங்கினாலும் இன்று அனைவருமே நல்ல நிலையில்தான் இருக்கிறார்கள்.

karikaalan
14-06-2011, 08:08 AM
20 வருடங்கள் ஒரு குடும்பம் ஒரே வீட்டில் வாடகைக்கு இருந்தால், அவர்களைக் கிளப்புவது ப்ரம்மப் ப்ரயத்னம். தில்லியில்.

வீட்டுக்காரர்கள், இதுபோன்ற வாடகைதாரர்களைக் கிளப்பும் வழியே தனி. மொத்தமாக ஒரு தொகை பேசி அதற்குள் முடியுமானால் ஒரு ஃப்ளாட் வாங்கியே தந்து விடுகிறார்கள். சற்று தொலைவில் இருந்தாலும், வாடகைதாரர்கள் இடம் பெயர்ந்து செல்கிறார்கள்.

20 வருடங்கள் இருந்ததற்கான அத்தாட்சிகள் பலப்பல உங்களிடம் இருந்தாக வேண்டும். திருமணப் பத்திரிகை, கார்ப்பொரேஷனிலிருந்து பெறப்படும் குழந்தை பிறந்த அத்தாட்சி, இறந்தவர் அத்தாட்சி, வங்கிக் கணக்கு வைத்திருந்தீர்களானால் அவர்கள் அனுப்பும் மாதாந்திர கணக்கு, ஒரு உத்தியோகத்தில் இருந்தீர்களானால் அவர்கள் அனுப்பும் கடிதங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தபால் மூலமாக அனுப்பும் அட்ரஸ் எழுதப்பட்ட கடிதக்கவர்கள், அட்டைகள், வங்கிகளிடமிருந்து பெற்றிருக்கக்கூடிய கடன் அட்டைகளின் கணக்குகளைத் தாங்கிய ஸ்டேட்மெண்டுகள், இன்னும் பற்பல சான்றிதழ்கள் தங்களிடம் சேர்ந்திருக்க வேண்டும்.

இவ்வளவு அத்தாட்சிகள் இருக்கும் போது .... சராசரி மனிதனிடம் இவைகளில் ஒருசில கட்டாயம் இருந்தாக வேண்டும் .... தாங்கள் ஏன் கோர்ட்டுக்குச் செல்லவில்லை?

தாமரைஜி சொன்னது போல் எங்கோ உதைக்கிறது..

===கரிகாலன்

சிவா.ஜி
14-06-2011, 01:54 PM
நானும் 32 வயதுவரை வாடகைவீட்டில் குடியிருந்தவன் தான். இப்போது வாடகை வாங்கிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய ஒரு கடையை 7 வருடங்களாக வாடகைக்கு எடுத்திருப்பவர்கள்...நான் அதை மாற்றியமைத்துக் கட்டப்போகிறேன்...அதனால் தயவுசெய்து காலி செய்யுங்கள் என்று சொன்னால்....இவ்வளவு முதல் போட்டுவிட்டோம்....உடனே காலி செய்ய முடியாது(இவ்வளவுக்கும் நான் அவர்களுக்கு மூன்றுமாதம் அவகாசம் கொடுத்தேன்) இதே ஏரியாவில் இதைப்போலவே(இளிச்சவாய ஓனர்) கிடைத்த பிறகு காலி செய்கிறேன் என்று சொல்கிறார்கள். வெறும் இரண்டாயிரம் கொடுத்துவிட்டு பல லட்சங்கள் மதிப்புள்ளக் கடையை சொந்தமாக்கிக்கொள்ள...வக்கீல் தேடுகிறார்கள்.

லஞ்சம் வாங்கியோ, கொள்ளையடித்தோ...2G விற்றோ சம்பாதித்துக் கட்டியதல்ல அந்தக் கட்டடம்...பிற்கால வருமான ஆதாரத்துக்காக கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தில் கட்டப்பட்டது. இதற்கு உரிமை கொண்டாடும் அவர்களைப் போலத்தான் இருக்கிறது உங்கள் பதிவும். சந்தை நிலவரத்தை மனதில் கொள்ளாமல்....அதிக வாடகைக்காக காலி செய்யச் சொல்கிறர்கள் என்று சொல்வதே அடிப்படைத் தவறு....அதற்கும் மேல் அவர்கள் மீது வழக்குத் தொடுக்க நினைப்பது....அடேங்கப்பா.....என்னத்த சொல்றது....?

தாமரை
14-06-2011, 04:58 PM
இதிலிருந்து என்ன தெரியுதுன்னா...

டெல்லி நொய்டாவில் செய்வது போல யாரையும் ஒரே வாடகை வீட்டில் 3 வருடத்திற்கு மேல இருக்க விடவே கூடாது... :sprachlos020::sprachlos020::sprachlos020::sprachlos020:

aren
15-06-2011, 03:42 AM
இதிலிருந்து என்ன தெரியுதுன்னா...

டெல்லி நொய்டாவில் செய்வது போல யாரையும் ஒரே வாடகை வீட்டில் 3 வருடத்திற்கு மேல இருக்க விடவே கூடாது... :sprachlos020::sprachlos020::sprachlos020::sprachlos020:

நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. ஆனால் ஒவ்வொரு மூன்று வருடத்தொருமுறை வீட்டை புதுப்பிக்கவேண்டும், அதற்கு காசுக்கு எங்கே போவது. அதனால்தான் வாடகையையும் ஏற்ற வேண்டியதாகிறது.

arun
09-07-2011, 03:06 AM
என்ன தான் நாம் நமது கடமையில் சரியாக இருந்தாலும் சில சமயங்களில் வீட்டு உரிமையாளர்கள் அவர்கள் கடமையில் இருந்து தவறி விடுகிறார்கள்

அதற்கு காரணம் கேட்பார் பேச்சுக்கு ஆடுவதால் தான் என நினைக்கிறேன்

ஒப்பந்தங்கள் சரியாக போட்டாலே பிரச்சினைகள் வரும்போது ஒப்பந்தமே இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது.

Vijisri
18-10-2011, 09:25 PM
சரியான பதில் கூறினால் மனம் வருத்தப்படுவீர்கள் என்று அமைதியாக இருந்துவிட்டேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு நம்பிக்கயின் அடிப்படையில் வாடகைக்கு என் தகப்பனார் குடி சென்ற வீட்டில் இன்று நான் தலைஎடுத்துவிட்ட நிலையில் இரசீது கேட்டேன் என்றால் நான் கடைமயில் தவறிவிட்டடேன் என்றும் வீட்டு சொந்தக்கரரின் சொத்தை கொள்ளை அடித்துவிட்டேன் என்றும் கூறுவதில் இருந்து நுகர்வோரை நோகடிக்கும் நுகர்வோர் மன்றங்களின் போக்குத்தான் தெரிகிறது. இரசீது கேட்பதில் உள்ள சிக்கல்களை பற்றி அல்லவா இங்கு விவாதிக்க வேண்டும்? இன்று ரூ10000 வாங்குபவர் அதற்க்கு இரசீது கொடுக்கமாட்டார் என்பது மட்டும் அல்லாமல் அரசாங்கத்துக்கும் எந்த வரியும் செலுத்தப் போவதில்லை. அடிப்படையில் நிலைமை நுகர்வோரை சூரையாட வசதியாக இருக்க நுகர்வோர் நீதிமன்றங்கள் என்பதும் வக்கீல்களிடம் மாட்டிக்கொண்டு முழி பிதுங்குவதற்கு என்பதாகவே உள்ளது என்பதல்லவா என் கருத்து. வக்கீல்களின் வில்லங்க போக்கை விசாரிக்காத நுகர்வோர் நீதி மன்றம் என்பது Fraud

Vijisri
18-10-2011, 09:34 PM
20 வருடங்கள் ஒரு குடும்பம் ஒரே வீட்டில் வாடகைக்கு இருந்தால், அவர்களைக் கிளப்புவது ப்ரம்மப் ப்ரயத்னம். தில்லியில்.

இவ்வளவு அத்தாட்சிகள் இருக்கும் போது .... சராசரி மனிதனிடம் இவைகளில் ஒருசில கட்டாயம் இருந்தாக வேண்டும் .... தாங்கள் ஏன் கோர்ட்டுக்குச் செல்லவில்லை?
===கரிகாலன்மந்தைவெலி டெல்லியில் இல்லை. மேலும் தன் மகன் குடும்பம்... என்று கூறப்பட்ட காரணத்திற்க்கு எந்த கோர்டிலும் அப்பீல் இல்லை. 20 வருட உறவு என்பதிற்க்கு நான் கொடுத்த மரியாதை என்பதும் ஒரு உண்மை

Vijisri
18-10-2011, 09:50 PM
நானும் 32 வயதுவரை வாடகைவீட்டில் குடியிருந்தவன் தான். இப்போது வாடகை வாங்கிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய ஒரு கடையை 7 வருடங்களாக வாடகைக்கு எடுத்திருப்பவர்கள்...நான் அதை மாற்றியமைத்துக் கட்டப்போகிறேன்...அதனால் தயவுசெய்து காலி செய்யுங்கள் என்று சொன்னால்....இவ்வளவு முதல் போட்டுவிட்டோம்....உடனே காலி செய்ய முடியாது(இவ்வளவுக்கும் நான் அவர்களுக்கு மூன்றுமாதம் அவகாசம் கொடுத்தேன்) இதே ஏரியாவில் இதைப்போலவே(இளிச்சவாய ஓனர்) கிடைத்த பிறகு காலி செய்கிறேன் என்று சொல்கிறார்கள். வெறும் இரண்டாயிரம் கொடுத்துவிட்டு பல லட்சங்கள் மதிப்புள்ளக் கடையை சொந்தமாக்கிக்கொள்ள...வக்கீல் தேடுகிறார்கள்.

லஞ்சம் வாங்கியோ, கொள்ளையடித்தோ...2G விற்றோ சம்பாதித்துக் கட்டியதல்ல அந்தக் கட்டடம்...பிற்கால வருமான ஆதாரத்துக்காக கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தில் கட்டப்பட்டது. இதற்கு உரிமை கொண்டாடும் அவர்களைப் போலத்தான் இருக்கிறது உங்கள் பதிவும். சந்தை நிலவரத்தை மனதில் கொள்ளாமல்....அதிக வாடகைக்காக காலி செய்யச் சொல்கிறர்கள் என்று சொல்வதே அடிப்படைத் தவறு....அதற்கும் மேல் அவர்கள் மீது வழக்குத் தொடுக்க நினைப்பது....அடேங்கப்பா.....என்னத்த சொல்றது....?வாடகையில் வரும் வருமானம் உழைத்து வரும் வருமானம் என்பது தாங்கள் எவ்வாறு பண்பட்டவர் என்பதை காட்டுகிறது! சந்தை மதிப்பு என்பது இது நாள் வரை அங்கு தன் உழைப்பால் கடை நடத்துபவர் முயற்சியில் உயர்ந்தது. அடுத்தவர் உழைப்பை சொந்தம் கொண்டாடும் நீங்கள்தான் தமிழகத்தின் தலைசிறந்த ஓனர்!! லஞ்சம் வாங்கியோ, கொள்ளையடித்தோ...இல்லாமல் எப்படி சார் சொந்த வீடும் கடையும் கட்ட முடியும்? கொள்ளை அடிக்கிறோம் என்று கூட தெரியாமல் கொள்ளை அடிக்கும் உங்களைப்போன்ற அப்பாவி ஓனர் இருக்கவே முடியாது சார்!!