PDA

View Full Version : பின்னூட்டம்.



M.Jagadeesan
14-11-2010, 02:17 AM
மன்றத்தில்,
பொன்னாட்டம் இருக்கின்ற படைப்பிற்கு எல்லாம்-தக்க
பின்னூட்டம் இல்லையெனச் சிலர் பிதற்றுகின்றார்.

என்றுமே
காக்கைக்குத் தன்குஞ்சு பொன்குஞ்சுதான்

நம் படைப்பு சிறந்ததென்று
நாமா சொல்லுவது?
நாடல்லவா சொல்ல வேண்டும்?

அன்றொருநாள் மாமதுரை மண்ணில்
"தமிழ் நாட்டைப் பற்றித்" தகவுடைய பாடலைத்
தருவோருக்குத்
தக்க சன்மானம் தரப்படும் என்று
தமிழ்ச் சங்கத்தார்
தண்டோரா போட்டனர்.

பலரும் பங்கேற்ற அப்போட்டியில்
பாரதியின்
"செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே"-
என்ற பாடலும் பங்கேற்றது.

ஆனால் பாரதியின் பாடலுக்கு
மிக்கபுகழ் மாமதுரைத் தமிழ்ச் சங்கத்தில்
தக்கதோர் பின்னூட்டம் தரப்பட வில்லை.

இன்றளவும் தித்திக்கும் செந்தமிழ்ப் பாடலுக்கு
"இரண்டாம் பரிசு" என்றே அறிவிப்புச் செய்தனர்.

அப்போட்டியில்
முதல் பரிசு பெற்ற பாடலோ இன்று குப்பையிலே
பாரதியின் பாடலோ கோபுரத்திலே.

எனவே படைப்புகளில்
பின்னூட்டம் பெறுவதெல்லாம் தங்கமுமல்ல
பின்னூட்டம் மறுப்பதெல்லாம் தகரமுமல்ல.

"என்கடன் பணிசெய்து கிடப்பதே"-என்ற
அப்பர் பெருமானின் அருள்வாக்கிற்கு இணங்க

"நம்கடன் படைப்பதே" என்ற
மனநிலையோடு
மன்றத்தில் பணி செய்வோம்.

மதி
14-11-2010, 02:19 AM
நச்சென்று ஒரு கவிதை..!!

M.Jagadeesan
14-11-2010, 03:10 AM
நச்சென்று ஒரு கவிதை..!!

நன்றி மதி அவர்களே

பாலகன்
14-11-2010, 03:29 AM
நண்பரே அருமையான பதிவு. மிகுந்த பக்குவமாக சொல்லியிருக்கிறீர்கள்

இரண்டாம் இடம் கிடைத்தாலும் கோபுரம் கோபுரம் தான்

குப்பையில் இருந்தாலும் மாணிக்கம் மாணிக்கமே

நன்றி

பென்ஸ்
14-11-2010, 03:50 AM
ரஜினி படம்...
கமல் படம்.... போல...
கதை இல்லாவிட்டாலும் பெயருக்காக ஓடும்...
என் ராசவின் மனசிலே படத்திற்க்கு முதல் மாதங்களில் வரவேற்ப்பு இல்லை...
அங்கிகாரன் கிடைக்கும் வரை எதுவும் கவனிக்கபடுவதில்லை.....
அந்த அங்கிகாரம் கிடைக்க வேண்டி பாடுபடுவதே ஒரு கலைஞனின் வேலைதானே... அது நல்ல படைப்போ அல்லது வித்தியாசமான படைப்போ....
சிலர் ஆபாசத்தை எடுத்து எழுதி கவனத்தை திருப்புவர்....
சிலர் சர்ச்சைகுரியவற்றி எழுதி கவனத்தை திருப்புவர்...

சரி.. அந்த முதல் பரிசு பெற்ற கவிதை எதுவோ???

Ravee
14-11-2010, 03:56 AM
அந்த முதல் கவிதை எது என்று யாருக்கும் தெரியாது , குறிப்புகளும் இல்லை பென்ஸ் .... இந்த தகவல் முன்னரே கேட்டு இருக்கிறேன். :)

M.Jagadeesan
14-11-2010, 04:26 AM
நண்பரே அருமையான பதிவு. மிகுந்த பக்குவமாக சொல்லியிருக்கிறீர்கள்

இரண்டாம் இடம் கிடைத்தாலும் கோபுரம் கோபுரம் தான்

குப்பையில் இருந்தாலும் மாணிக்கம் மாணிக்கமே

நன்றி

நன்றி மகாபிரபு அவர்களே

M.Jagadeesan
14-11-2010, 04:31 AM
ரஜினி படம்...
கமல் படம்.... போல...
கதை இல்லாவிட்டாலும் பெயருக்காக ஓடும்...
என் ராசவின் மனசிலே படத்திற்க்கு முதல் மாதங்களில் வரவேற்ப்பு இல்லை...
அங்கிகாரன் கிடைக்கும் வரை எதுவும் கவனிக்கபடுவதில்லை.....
அந்த அங்கிகாரம் கிடைக்க வேண்டி பாடுபடுவதே ஒரு கலைஞனின் வேலைதானே... அது நல்ல படைப்போ அல்லது வித்தியாசமான படைப்போ....
சிலர் ஆபாசத்தை எடுத்து எழுதி கவனத்தை திருப்புவர்....
சிலர் சர்ச்சைகுரியவற்றி எழுதி கவனத்தை திருப்புவர்...

சரி.. அந்த முதல் பரிசு பெற்ற கவிதை எதுவோ???

நன்றி பென்ஸ்
முதல் கவிதையைப் பற்றி மதுரை தமிழ்ச் சங்கத்தாரிடம்தான் கேட்கவேண்டும்.அந்தச்
சங்கம் இருக்கிறதோ என்னவோ?

M.Jagadeesan
14-11-2010, 04:34 AM
பின்னூட்டத்திற்கு நன்றி ரவி அவர்களே

M.Jagadeesan
30-01-2013, 07:03 AM
பாலகன் அவர்களின் பாராட்டுக்கு நன்றி!

மஞ்சுபாஷிணி
30-01-2013, 12:45 PM
அருமையா சொல்லிட்டீங்க ஜகதீசன் ஐயா....

உண்மையே ஐயா...

arun
30-01-2013, 03:25 PM
ஆகா மிகவும் பக்குவப்பட்ட பதிவு ! நெகிழ்வுடன் பாராட்டுகிறேன்

prakash01
31-01-2013, 05:55 PM
என்றுமே
காக்கைக்குத் தன்குஞ்சு பொன்குஞ்சுதான்





எனவே படைப்புகளில்
பின்னூட்டம் பெறுவதெல்லாம் தங்கமுமல்ல
பின்னூட்டம் மறுப்பதெல்லாம் தகரமுமல்ல.

"என்கடன் பணிசெய்து கிடப்பதே"-என்ற
அப்பர் பெருமானின் அருள்வாக்கிற்கு இணங்க

"நம்கடன் படைப்பதே" என்ற
மனநிலையோடு
மன்றத்தில் பணி செய்வோம்.

நிசத்தமான வரிகள்.

நன்று..

ஜான்
01-02-2013, 12:36 AM
நம் கடன் படைப்பதே ,படிப்பதே என்றும் சேர்த்துக் கொள்ளலாம்

M.Jagadeesan
01-02-2013, 01:32 AM
சுபாஷிணி, அருண், பிரகாஷ் மற்றும் ஜான் அவர்களின் பாராட்டுக்கு நன்றி.