PDA

View Full Version : கொசுக்களை விரட்டும் இயந்திரம்



ஆன்டனி ஜானி
12-11-2010, 04:36 PM
கொசுக்கள் தனது ரத்த உணவை, அதன் இரைகள் வெளிப்படுத்தும் வெப்பம் மற்றும் கார்பன்டை ஆக்சைடில் இருந்து தான், அடையாளம் கண்டு கொள்கிறது. தற்போது ஒரு புதிய கருவி வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்தக்கருவி, இயந்திரம் போன்று இருந்தாலும் மனிதர்களைப் போன்றே வெப்பத் தையும்,கார்பன்டை ஆக்சைடையும் வெளிப்படுத்துகிறது. இந்த வெப்பமும், கார்பன்டை ஆக்சைடும் கொசுக்களை தன் பக்கம் இழுக்கிறது. கொசுக்கள் உள்ளே இழுக்கப்பட்டு அதில் பாயும் மின்னோட்டத்தில் அழிக்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு இடங்களில், பல்வேறு சூழ்நிலைகளில், பலமுறை இந்தக்கருவியின் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் திறன் பரிசோதிக்கப் பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் நெடி, சத்தம், பூச்சிக்கொல்லி மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாயுக்கள், இதில் இல்லை. எதிர் காலத்தில் கொசுக்களை ஒழிப்பதில், இந்த முறையே முன்னணியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

****நன்றி **** இந்த தகவலை நமக்கு வெளிபடுத்தி தந்த தினமலருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்****

வியாசன்
12-11-2010, 06:55 PM
முரண்பாடானதாக இருக்கின்றது. தலைப்பில கொசுக்களை விரட்டும் இயந்திரம் என்றிருக்கின்றறது .செய்தியல் கொசுக்களை உள்ளிழுப்பதாக கூறப்படுகின்றது. இது வேலைக்காகது போல் இருக்கின்றது. :lachen001::lachen001::lachen001:

தகவலுக்கு நன்றி நண்பரே

எந்திரன்
27-01-2011, 04:23 AM
உருவத்தில் சிறியதாக இருந்தாலும் பெரும் துன்பங்களை விளைவிக்க வல்லவை கொசுக்கள். அவற்றை விரட்டினாலும் சரி, அல்லது இழுத்து கொண்டு வந்து அழித்தாலும் சரி. எப்படியோ கொசுக்களும், அவைகளால் உண்டாகும் நோய்களும் ஒழிந்தால் சரி