PDA

View Full Version : அன்பு நண்பர்களே வணக்கம் .ஒரு பைத்தியக்காரன்பைத்தியகாரன்
06-04-2003, 11:25 AM
அய்யா என் பெயர் விபூஷ் பிள்ளை எனப்படும் பைத்தியக்காரன்.
நான் சைக்காலஜி படித்து பைத்தியக்காரன் என பட்டம் பெற்றவன்.

எனக்கு 31 வயதாகிறது.தற்பொழுது வரை யாரும் பெண் கொடுக்க சம்மதிக்காததனால் நான் திருமனம் முடிக்காமல் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன்.
எனக்கு பிடித்தது எல்லோரும் எனக்கு ஜால்ரா அடிப்பதை.
அடிக்கடி மனம் நொந்து போகும் பின் பயஙகர ஜாலியாகும் ஆசாமி நான்.எனக்கு பிடித்தவை இறைவன் சிவன்.உளவியல் துறை,ஊர் சுற்றுதல்,படித்தல்.கலாய்த்தல்.இப்பொழுது கணினி.


சுத்த சைவம்.எப்போதாவது சொர்க்கம் போவதுண்டு.


ஆசை கடைசிவரை இப்படியே இருந்து விட வேண்டும்.


என்னை பிடித்தவர்களை எனக்கு பிடிக்கும்

aren
06-04-2003, 11:34 AM
நண்பரே உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும். கவலைப்பட வேண்டாம். வாழ்க்கையே இப்படித்தான். எல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும்.

இளசு
06-04-2003, 02:05 PM
காரியப் பைத்தியம், ஞானக்கிறுக்கன் என்ற வரிசையில் வரத்தக்க
அறிவார்ந்த நண்பரே,
உளவியல் படித்தவரே, உளறுவதுபோல் பாசாங்கில் உன்னத (நகைச்)சுவை
மடல் படைத்தவரே,
மன்றத்தில் இன்றியமையாத பங்கு வகிக்கும் தகுதி உமக்கு உண்டென்று என் பட்சி சொல்கிறது....
வாருங்கள் இனிய நண்பரே, உம்மை வரவேற்று மகிழ்கிறேன். வாழ்த்துகள்.

poo
06-04-2003, 06:54 PM
உங்களை பெயர் சொல்லி அழைத்தால் கோபிக்க மாட்டீரே???

வருக வருக ...

chezhian
06-04-2003, 08:31 PM
நல்வரவு நண்பரே

உங்களை பெயர் சொல்லி அழைத்தால் கோபிக்க மாட்டீரே???

வருக வருக ...

பூவின் சந்தேகம் எனக்கும் உண்டு.......... :)

Narathar
07-04-2003, 03:50 AM
வா பைத்தியகாரா.............
(பெயர் வைப்பதே அழைப்பதற்குத்தானே? அவர் வைத்த பெயரை நான் சொல்ல பயப்படுவானேன்??? )
அழகான பெயர்!
அருமையான அறிமுகம்!!
நீர் இத்தளத்தில் "பத்தும் சொல்ல" வாழ்த்துகிறேன்!!!

Narathar
07-04-2003, 03:54 AM
ஆசை :கடைசிவரை இப்படியே இருந்து விட வேண்டும்.இனி உமக்கு யாரும் பொண்ணு கொடுக்க மாட்டார்கள் என்று அவ்வளவு "தன்னம்பிக்கையா??"

prabhaa
07-04-2003, 04:23 AM
என்ன ஒரு வித்யாசமான அறிமுகம்...

நாமெல்லாம் ஒத்துக்கொள்ளாததை,
இவர் ஒத்துக்கொண்டு,
அதை தன் பெயராக வைத்துகொண்டு,
வாழ்க்கையை அனுபவித்து கொண்டு,
இருக்கிறார்.

வருக வருக...

Vanambadi
07-04-2003, 04:27 AM
பைத்தியக்காரரை வருக வருக என் வரவேற்கிறேன் வைத்தியம் பார்த்துக்கொள்வதற்கு. நீங்கள் இங்கு வந்துவிட்டர்கள் இனிமேல் உங்கள் பைத்தியம் குணமாகிவிடும் என நினைக்கிறேன்.

Dinesh
07-04-2003, 12:44 PM
வாருங்கள் நண்பரே!
உண்மையை(!) ஒத்துக்கொள்ளும் பக்குவம் பலருக்கும் வருவதில்லை..
அப்படி பக்குவப்பட்டவர்களை இந்த உலகம் பைத்தியம் என்றுதான் கூறுகிறது..
எனவே பக்குவப்பட்ட உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

தினேஷ்.

poo
07-04-2003, 01:30 PM
தினேஷ் குசும்பு ஓவர்ப்பா

madhuraikumaran
07-04-2003, 03:55 PM
ஆஹா... என்ன ஒரு அறிமுகம் !!! நீங்கள் இந்த மன்றத்தில் பேரும் பேறும் புகழும் பெற வாழ்த்துகிறேன் !!!

பைத்தியகாரன்
08-04-2003, 06:10 PM
பகிர்ந்த துன்பம் பாதியாகிறது!
பகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகிறது!!

தினேஷ் உங்கள் வரி நன் றாக உள்ளது

Dinesh
12-04-2003, 07:52 AM
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பரே!

தினேஷ்.

raamaih nadar
14-04-2003, 10:37 AM
வணக்கம்
உங்கள் பெயரே வித்தியாசமாகவுள்ளது நீங்கள் பைத்தியமா?

மன்றத்தில் உங்கள் வரவு நல்வரவாகுக

aren
14-04-2003, 01:14 PM
hi differen fello .r u psyche.? ok

nice to meet u

உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.

நீங்கள் தமிழில் எப்படி தட்டச்சு செய்வது என்று கற்றுக் கொள்ளுங்கள். இங்கே தமிழில்தான் எழுதவேண்டும் என்பதால். உங்களுக்கு ஏதாவது உதவிகள் தேவையென்றால் கேட்கவும். நாங்கள் உதவுகிறோம். வாழ்த்துக்கள்.

பைத்தியகாரன்
24-04-2003, 04:09 PM
சரி சரி யாராவது பெண்ள்.சும்மா போய் விடாதீர்கள்.

lingam
25-04-2003, 02:56 PM
பைத்தியக்காரனே, உமக்கு பின்னால் இந்த மன்றத்தில் நுழைந்தவன் நான் ஆகவே வாருங்கள் என வரவேற்பு சொன்னால் நன்றாக இருக்காது. உங்கள் கையெழுத்தில் இருக்கும் தத்துவம் பல தடவை எனது நண்பர் ஒருவர் சொல்லி கேட்டிருக்கிறேன். அந்த நண்பர் தான் நீவிரோ என ஒருகணம் சந்தேகித்தாலும், உங்கள் வசிவிடம் வேறாக இருக்க அவரில்லை என அறிந்து கொண்டேன்.

அதுசரி அது என்ன பென் வேண்டும் என்று கேட்டிருக்கிறீர்கள். எனக்கு புரியவில்லை. ம்ம்ம்ம் பெண்ணாக இருக்குமோ அப்படியென்றால் கோட்டையை முற்றுகையிட்டு உள்ளே நுழையத் துடிக்கும் பைத்தியக்காரரோ நீங்கள் ? :-)

poo
25-04-2003, 03:47 PM
பைத்தியக்கார(ணம்)ரர்.. புரிகிறது!!!

பைத்தியகாரன்
25-04-2003, 06:42 PM
போங்க பூ புரிஞ்சு என்ன செய்ய?