PDA

View Full Version : சிதறும் எண்ணங்கள்Ravee
12-11-2010, 04:01 AM
http://farm1.static.flickr.com/100/279166285_7119fb144a.jpg

சிதறும் எண்ணங்கள்

அசதியில் பேருந்தில் கண்ணயர
அழுகுரல் கேட்டு கண்விழித்தேன்
ஆட்டோ ஒன்றில் சிறு பையன்
அழுதுகொண்டு இருந்தான் கண்கள் வீங்க
இப்போது என் எண்ணம்
ஆட்டோகாரன் நல்லவானா ? கெட்டவனா ?
அதற்குள் சென்றது பேருந்து
அடுத்த நிறுத்தத்தை நோக்கி
அடுத்தநொடி அழைத்தேன் மனைவியை
அன்பு மகள் பத்திரமா என்று கேட்க !!!

பூமகள்
12-11-2010, 07:21 AM
கோவை கொணர்ந்த கொடூர நினைப்புகள்
பதைபதைக்கும் நெஞ்சோடு தொடரும் திகைப்புகள்..

பெற்றெடுத்த பின் காத்தல் கடமைச் சுமை
கூடும் நடப்புகள்..

எவர் நம்பி எப்படி அனுப்ப..
யார் எந்த முகமூடியிட்டு பழகுகிறார்கள்..

புரியாத தவிப்பிலேயே பெற்றோர்..
மகளைப் பெற்றாலும் மகனைப் பெற்றாலும்
காசு சேர்க்காவிட்டாலும்
காசு சேர்த்தாலும் பிரச்சனை தானோ??


--

ரவி.. மறக்க நினைக்கும் ரணத்தை திரும்ப நினைவூட்டி தீமூட்டி விட்டீர்கள்.. எரிகிறது நெஞ்சம்.

கவிதை எதார்த்தம் சொல்கிறது. வாழ்த்துகள்.

Ravee
12-11-2010, 08:27 AM
நன்றி பூமகள் , சில அவலங்கள் நம்மை அதிக விழிப்புடன் இருக்கவைக்கிறது . :)

தாமரை
12-11-2010, 09:24 AM
http://farm1.static.flickr.com/100/279166285_7119fb144a.jpg

சிதறும் எண்ணங்கள்

அசதியில் பேருந்தில் கண்ணயர
அழுகுரல் கேட்டு கண்விழித்தேன்
ஆட்டோ ஒன்றில் சிறு பையன்
அழுதுகொண்டு இருந்தான் கண்கள் வீங்க
இப்போது என் எண்ணம்
ஆட்டோகாரன் நல்லவானா ? கெட்டவனா ?
அதற்குள் சென்றது பேருந்து
அடுத்த நிறுத்தத்தை நோக்கி
அடுத்தநொடி அழைத்தேன் மனைவியை
அன்பு மகள் பத்திரமா என்று கேட்க !!!

இயல்பான ஒரு சின்ன நிகழ்ச்சியை ஒரு விழிப்புணர்வு கவிதையாக மாறி வந்திருக்கிறது இரவி.

இது போன்ற சின்ன விஷயங்களை பிடிக்கையில் சட்டென உள்ளம் தொட்டுவிடுகிறீர்கள்.

கருவாய் பிடித்த விஷயம் மிக மிகக் கூர்மையானது. உண்மையிலேயே அழுதபடி / தூங்கியபடி அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளைக் கண்டால் மனம் பகீரென்பதை இப்பொழுது தவிர்க்க முடியவில்லை.

முதலில் பதறும் மனம் அடுத்து நமது குழந்தை எப்படி இருக்கோ என புலம்ப ஆரம்பித்து விடுகிறது. அந்த முடிச்சையும் அழகாக போட்டிருக்கிறீர்கள்.

கவிதை எழுதி முடித்தாகி விட்டதா?

இன்னும் இல்லை. இன்னும் கொஞ்சம் விஷயம் பாக்கி இருக்கிறது.

கவிதைக்கு மிக முக்கியமான கருவை பிடித்து விட்டீர்கள். இப்பொழுது அதை அழகு படுத்த வேண்டும்.

எனக்கு கோவை நிகழ்ச்சி இன்னும் மனதுக்குள் பாரமாய் இருக்கிறது. அழுது கொண்டு போகும் குழந்தையை விட தூங்கிக் கொண்டு பொகும் குழந்தையைப் பார்க்கும் போதுதான் பகீரென்கிறது. அதனால் இங்கே அழுது கொண்டு என்பதை தூங்கிக் கொண்டு மாற்றுகிறேன்.

ஆழ்ந்த உறக்கம்
கலைந்தபோது கண்ணில் பட்டது
ஆட்டோவில் சிறுவன் உறக்கம்..

ஆட்டோக்காரன்
நல்லவனா? கெட்டவனா?

பேருந்தோடு
எண்ணமும் விரைந்தது

உடனே அழைத்துக் கேட்டேன்
குழந்தை பத்திரமா இருக்காளா?

உரை நடையில் இருந்து சற்று மாறுபட்டு சொல்லவந்ததைச் சுருக்காகவும் சுருக்கமாகவும் மாற்றினால் கவிதை இன்னும் பலமாய் தவிக்கும்.

இதோடு போதுமா?

இன்னும் கூட குறுக்கலாம். பேருந்தும் எண்ணமும் கூட தேவையில்லை எனத் தோன்றலாம். அழைப்பு கூட தேவையா இல்லையா என யோசிக்கலாம். இதில் உங்களுக்கு என்று அளவு கோலை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக் கொள்ளுங்கள். இயன்றவரை செதுக்குங்கள்..

கரு - உரு முடிந்த பின்னால் சுரு எனப்படும் சுருதி கொடுங்கள். படித்துப் பாருங்கள். அதை ஒரு தாளத்துடன் அதை ஒரு உணர்ச்சியுடன் வார்த்தைக்களை இணைத்தும் பிணைத்தும் பார்த்து படிக்கும் ஒலி அந்த உணர்வை பிரதிபலிக்கிறதா என கவனிக்க வேண்டும்.


ஆழ்ந்த உறக்கம்
கலைந்த போது
கண்ணில் பட்டது
ஆட்டோவில் சிறுவன் உறக்கம்..

ஆட்டோக்காரன்
நல்லவனா? கெட்டவனா?

விரைந்தன
பேருந்தும் எண்ணமும்

பதட்டமாய் அழைத்துக் கேட்டேன்
பத்திரமாய் இருக்காளா குழந்தை?

இவை மூன்றும் முடிந்தால் கவிதையை கொஞ்சம் கெட்டிச் சட்னி வச்சுப் பார்சல் செய்திடுங்க... :lachen001::lachen001:

நான் சும்மா உங்க கருவுக்கு வேறு வேறு வடிவம் காட்ட முயற்சி செய்திருக்கிறேன், இதுதான் சிறந்தது என்பது இல்லை.

ஆனால் கவிதைக் குறுகி இருந்து விளக்கம் விழி விரிய வைத்தால் அதற்கு ஈடு இணை எதுவும் இல்லை.

இன்னும் நிறைய நிறைய எழுதுங்கள்.

Ravee
12-11-2010, 10:03 AM
ஆழ்ந்த உறக்கம்
கலைந்த போது
கண்ணில் பட்டது
ஆட்டோவில் சிறுவன் உறக்கம்..

ஆட்டோக்காரன்
நல்லவனா? கெட்டவனா?

விரைந்தன
பேருந்தும் எண்ணமும்

பதட்டமாய் அழைத்துக் கேட்டேன்
பத்திரமாய் இருக்காளா குழந்தை?

இவை மூன்றும் முடிந்தால் கவிதையை கொஞ்சம் கெட்டிச் சட்னி வச்சுப் பார்சல் செய்திடுங்க...

நான் சும்மா உங்க கருவுக்கு வேறு வேறு வடிவம் காட்ட முயற்சி செய்திருக்கிறேன், இதுதான் சிறந்தது என்பது இல்லை.

ஆனால் கவிதைக் குறுகி இருந்து விளக்கம் விழி விரிய வைத்தால் அதற்கு ஈடு இணை எதுவும் இல்லை.

இன்னும் நிறைய நிறைய எழுதுங்கள்.


அண்ணா இதை பலமுறை சொல்லி இருக்கீங்க , ஆனா இப்படி உருமாற்றம் பண்ணி காட்டியது இல்லை , இப்போது மனதில் நன்றாக பதிகிறது. இன்னும் வார்த்தை ஜாலங்கள் கற்க வேண்டும் . சிலருக்கு கற்பூர புத்தி சட்டுன்னு பத்திக்குவாங்க .... முடிந்த வரை கரிக்கட்டையாக இருக்க முயற்சி செய்யுறேன். இந்த செய்தி பதிவில் வந்தால் புதியவர்கள் பலருக்கு நன்மையாக இருக்கும் என்ற காரணத்தாலே உங்களை பதிவிட வலியுறுத்தினேன் .... நன்றி அண்ணா :)

பென்ஸ்
18-11-2010, 03:57 PM
நன்று ரவியின் கவியும்
தாமரையின் திருத்தமும்....

ரவி... நிஜமாகவே நெற்றி குவித்து ஒருமுறை கவிதை படமாய் வந்தது... சில உணர்வை தீண்ட கவிதைகளால் மட்டுமே முடியும்... உங்களால் முடிந்தது...

ஆன்டனி ஜானி
18-11-2010, 06:02 PM
இந்த கால கட்டத்தில் ஒருவன் நல்லவனா , கெட்டவனா என்பதை கண்டு பிடிக்க ரெம்ப கஷ்டம் .........இருந்தாலும் அடுத்த குழந்தையின் அழுகுரல் நமது குழந்தையின் அழுகுரலாக நமது மனதிற்க்குள் வருவதர்க்கு முதல் காரணம் பாசம்,இந்த பாசமலர் இருந்தால் குழந்தை கடத்தல்கள் எல்லாம் செய்வதர்க்கு மனசு இடம் கொடுக்காது ............ """ குழந்தைகள் தெய்வத்திற்க்கு சமம் """"

ஆதவா
19-11-2010, 03:21 AM
கவிதையும் எண்ணங்களும், தாமரை அண்ணாவின் மாற்றங்களும்
அருமை!

வானவர்கோன்
19-11-2010, 11:01 PM
குழந்தைக் கடத்தற்காரர்களால்
கண்ணீர் தான் எஞ்சுதே
இம் மண்ணில்!

கப்பமும் கடத்தலும்
கொலையும் கொள்ளையும்
குரூரனின் கோரவெறியே!