PDA

View Full Version : பிராட்மேனை விட தெண்டுல்கர் சிறந்த பேட்ஸ்மேன்: ஜாகீர் அப்பாஸ் சொல்கிறார்

kathir_tamil
10-11-2010, 10:10 AM
கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படு பவர் டான் பிராட்மேன். தற்போது தெண்டுல்கர் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். டெஸ்டில் 50-வது சதத்தை நெருங்குவதால் அவர் பிராட்மேனுக்கு மேலானவராக கருதப்படுகிறார். இன்றைய பிராட்மேன் தெண்டுல்கர் என்று இங்கிலாந்து பத்திரிகை புகழாரம் சூட்டி இருந்தது.

இந்த நிலையில் பிராட்மேனை விட தெண்டுல்கர் சிறந்தவர், கிரிக்கெட்டின் எல்லா காலக்கட்டத்திலும் அவர்தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாகீர் அப்பாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

பிராட் மேனை சிறந்த வீரராக மக்கள் நினைக் கிறார்கள். அவரது பேட்டிங்கை நான் பார்த்தது கிடையாது. அதே நேரத்தில் அவர் தெண்டுல் கரை விட சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க முடியாது.

பிராட் மேனை விட தெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மேன். அவர் 21 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். ஆயிரக்கணக்கான ரன்களையும், டஜன் கணக்கில் சதங்களையும் எடுத்துள்ளார். அதே நேரத்தில் இன்னும் புதுமுக வீரர் போல் ரன்களை குவிக்க நினைக்கிறார்.

அவரது பேட்டிங்கை பார்க்கும்போது இளைஞர்போல் ஆடுவது தெரிகிறது. பாகிஸ்தான் வீரர்கள் அவரிடம் இருந்து பாடம் கற்று கொள்ள வேண்டும். சரியான காலக் கட்டத்தில் அவர் பிறந்து இருப்பது அதிர்ஷ்டமே.

முதல் தர போட்டியில் 100-க்கும் மேற்பட்ட சதம் அடித்த ஒரே ஆசிய வீரர் என்ற பெருமை எனக்கு உள்ளது. ஆனால் என்னால் 16 ஆண்டுகளில் 78 டெஸ்ட்டே ஆட முடிந்தது. 1970-ல் பிறந்து இருந்தால் மேலும் டெஸ்டில் விளையாடி இருக்கலாம். தவறான காலக்கட்டத்தில் நான் பிறந்ததாக நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

63 வயதான ஜாகீர்அப்பாஸ் 78 டெஸ்டில் விளையாடி 5062 ரன் எடுத்துள்ளார். 12 சதம் அடித்துள்ளார். 459 முதல் தரப் போட்டியில் விளையாடி 108 சதம் அடித்துள்ளார்.

நன்றி - மாலை மலர்

xavier_raja
11-11-2010, 12:37 PM
சச்சின் மிகவும் தன்னடக்கத்துடன் இதனை மறுத்துள்ளார்.. நிறை குடம் தளும்பாது என்பது இதுதான்..

கண்ணன்
11-11-2010, 02:02 PM
மிகைப்படுத்தலையெல்லாம் விட்டு, ஒன்றைப் பார்ப்போம்,

ப்ராட்மன், தன்னுடைய காலத்தில் விளையாடியவர்கள் அனைவரைக் காட்டிலும் சராசரியாக 40+ ரன்கள் அதிகம் எடுத்துள்ளார். அதைப்போல் ஒருவர் ஆதிக்கம் செலுத்தாத வரை, அவரை யாருடனும் ஒப்பிட முடியாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

-முருகன் கண்ணன்

ஓவியன்
11-11-2010, 02:37 PM
ப்ராட்மன், தன்னுடைய காலத்தில் விளையாடியவர்கள் அனைவரைக் காட்டிலும் சராசரியாக 40+ ரன்கள் அதிகம் எடுத்துள்ளார். அதைப்போல் ஒருவர் ஆதிக்கம் செலுத்தாத வரை, அவரை யாருடனும் ஒப்பிட முடியாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து

கிரஹம் போலக், கிரஹம்பொலக்னு ஒருத்தர் தென்னாபிரிக்காவுக்காக விளையாடினாரே, தென்னாபிரிக்க கிரிக்கட் அணிக்கு நிற வெறிக்கு எதிராக போடப்பட்ட தடையினால் அவரது எதிர்காலம் பாதிக்கப்பட்டிராவிட்டால் நீங்கள் இப்படி ஒரு கருத்தினை வெளியிட்டிருக்க முடியுமோ என்னவோ...??

கண்ணன்
11-11-2010, 03:25 PM

போலக் 23 டெஸ்ட் போட்டியில் விளையாடிய பிறகுதான், தென்னாப்பிரிக்கா தடை செய்யப்பட்டது. அந்த 23 போட்டிகளில் போலக்கின் சராசரி 61, அதாவது பிராட்மனைவிட 39 ரன்கள் குறைவு. இதை வைத்து எப்படி அவர் பிராட்மனைப் போல ஆதிக்கம் செலுத்தியிருப்பார் என சொல்ல முடியும்?

- முருகன் கண்ணன்

ஓவியன்
11-11-2010, 03:40 PM
அந்த 23 போட்டிகளில் போலக்கின் சராசரி 61, அதாவது பிராட்மனைவிட 39 ரன்கள் குறைவு. இதை வைத்து எப்படி அவர் பிராட்மனைப் போல ஆதிக்கம் செலுத்தியிருப்பார் என சொல்ல முடியும்?

பிராட்மனின் முதல் 23 போட்டிகளில் மட்டுமான சராசரியைக் கொண்டு வாருங்கள், அப்போது கிரஹம் போலக் தொடர்ந்து விளையாடியிருந்தால் பிராட்மனைப் போல ஆதிக்கம் செலுத்தியிருப்பாரா இல்லையா என முடிவு செய்யலாம். :cool:

அமரன்
11-11-2010, 03:46 PM
பிராட்மன் காலத்தில் சச்சினும் சச்சின் காலத்தில் பிராட்மனும் பிறந்திருந்தால்.. அப்பாஸ் எப்படிச் சொல்லி இருப்பார்..

மச்சான்
11-11-2010, 06:52 PM
பிராட்மேனை விட சச்சின் சிறந்தவர்தான் என ஒப்பிட்டு பேசியது ஒரு ஆச்சானோ அல்லது பூச்சானோ அல்ல.....! அதனை சொன்ன ஸஹீர் அப்பாஸும் பேட்டிங்கில் பல நுணுக்கங்கள் அறிந்த சிறந்த பேட்ஸ்மேன் என்பதை யாராலும் மறுக்க இயலாது.:cool:

.

கண்ணன்
11-11-2010, 08:26 PM
பிராட்மனின் முதல் 23 போட்டிகளில் மட்டுமான சராசரியைக் கொண்டு வாருங்கள், அப்போது கிரஹம் போலக் தொடர்ந்து விளையாடியிருந்தால் பிராட்மனைப் போல ஆதிக்கம் செலுத்தியிருப்பாரா இல்லையா என முடிவு செய்யலாம். :cool:

முதல் 23 டெஸ்ட் போட்டிகளில் பிராட்மனின் சராசரி: 99.7

http://stats.espncricinfo.com/ci/engine/player/4188.html?class=1;template=results;type=allround;view=cumulative

aren
12-11-2010, 12:01 AM
பிராட்மென் ஏன் கவாஸ்கர் காலத்தில்கூட ஹெல்மெட், கைக்கு ஒரு கார்டு, இடுப்புக்கு ஒரு கார்டு, தொடைக்கு ஒரு கார்டு என்று எதுவும் கிடையாது. வெறு காலுக்கு பேட் மற்றும் கைகளுக்கு கிளவுஸ், இதை மட்டுமே வைத்துக்கொண்டு ஆடினார்கள். ஒரு ஓவரில் இத்தனை பெளன்சர்கள் மட்டுமே போடலாம் என்ற நியதியெல்லாம் கிடையாது. இடுப்புக்கு மேல் போட்டால் நோ பால் என்பதெல்லாம் கிடையாது, அதனால் ஆறு பந்துகளுமே பெளன்சர்களாக வந்துவிழும். ஆடுவது மிகவும் கடினம். அந்த நிலையிலும் அவர்கள் சிறப்பாக விளையாடி நிறைய ரன்கள் குவித்துள்ளார்கள். ஆகையால் அந்த காலத்து வீரர்களை இந்த காலத்து வீரர்களுடன் ஒப்பிட முடியாது.

அந்த காலத்தவர்கள் செய்தது ஒரு சகாப்தம் என்பதே என் கருத்து.

அந்த காலத்தில் நடந்ததுமாதிரி ஒரு ரூலும் இல்லாமல் இந்த காலத்து வீரர்களை ஆடச்சொல்லுங்கள், அப்புறம் பார்க்கலாம்.

தென் ஆப்பிரிக்காவில் பந்து இடுப்புக்கு மேல் எழும்பினால் இப்பொழுது இருக்கும் ஆட்டக்காரர்கள் இத்தனை தடுப்புகள் உடம்பில் இருந்தாலும் ஆடமுடியாமல் தடுமாறுகிறார்கள் என்பது நமக்குத் தெரிந்தவிஷயமே.

kathir_tamil
12-11-2010, 04:11 AM
சச்சின் மிகவும் தன்னடக்கத்துடன் இதனை மறுத்துள்ளார்.. நிறை குடம் தளும்பாது என்பது இதுதான்..

இதுதான் நமக்கு பெருமை ...

அமரன்
12-11-2010, 05:40 AM
அப்பாஸ் கட்டுரையில் இதைத் தொட்டிருக்காரே அண்ணா.. தானும் கொஞ்சம் பிந்திப் பிறந்திருக்கலாம் என்ற அங்கலாய்ப்பு வேறு..

பிராட்மென் ஏன் கவாஸ்கர் காலத்தில்கூட ஹெல்மெட், கைக்கு ஒரு கார்டு, இடுப்புக்கு ஒரு கார்டு, தொடைக்கு ஒரு கார்டு என்று எதுவும் கிடையாது. வெறு காலுக்கு பேட் மற்றும் கைகளுக்கு கிளவுஸ், இதை மட்டுமே வைத்துக்கொண்டு ஆடினார்கள். ஒரு ஓவரில் இத்தனை பெளன்சர்கள் மட்டுமே போடலாம் என்ற நியதியெல்லாம் கிடையாது. இடுப்புக்கு மேல் போட்டால் நோ பால் என்பதெல்லாம் கிடையாது, அதனால் ஆறு பந்துகளுமே பெளன்சர்களாக வந்துவிழும். ஆடுவது மிகவும் கடினம். அந்த நிலையிலும் அவர்கள் சிறப்பாக விளையாடி நிறைய ரன்கள் குவித்துள்ளார்கள். ஆகையால் அந்த காலத்து வீரர்களை இந்த காலத்து வீரர்களுடன் ஒப்பிட முடியாது.

அந்த காலத்தவர்கள் செய்தது ஒரு சகாப்தம் என்பதே என் கருத்து.

அந்த காலத்தில் நடந்ததுமாதிரி ஒரு ரூலும் இல்லாமல் இந்த காலத்து வீரர்களை ஆடச்சொல்லுங்கள், அப்புறம் பார்க்கலாம்.

தென் ஆப்பிரிக்காவில் பந்து இடுப்புக்கு மேல் எழும்பினால் இப்பொழுது இருக்கும் ஆட்டக்காரர்கள் இத்தனை தடுப்புகள் உடம்பில் இருந்தாலும் ஆடமுடியாமல் தடுமாறுகிறார்கள் என்பது நமக்குத் தெரிந்தவிஷயமே.

aren
12-11-2010, 04:47 PM
அப்பாஸ் கட்டுரையில் இதைத் தொட்டிருக்காரே அண்ணா.. தானும் கொஞ்சம் பிந்திப் பிறந்திருக்கலாம் என்ற அங்கலாய்ப்பு வேறு..

பார்த்தேன் அமரன், ஆனால் அவர் தொட்டிருப்பது தன்னால் 78 டெஸ்டுகளே ஆடமுடிந்தது ஆனால் சில வருடங்கள் கழித்து பிறந்திருந்தால் நிறைய டெஸ்டுகள் ஆடியிருக்கலாம் என்றே சொல்லியிருக்கிறார்.

ஆனால் அந்த காலத்தில் சாதித்தது நிச்சயம் மகத்தானது என்பதே கருத்து.

இப்பொழுது இருக்கும் தலைமுறையில் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இல்லை என்பதை முற்றிலும் ஒப்புக்கொள்கிறேன்.

நாஞ்சில் த.க.ஜெய்
03-12-2010, 03:06 PM
ஒரு வீரர் சிறந்தவரா இல்லையா என்பதை அவரவர் காலத்தில் உள்ள வீரர்களுடன் ஒபிடுவதை கூட ஓரளவிற்கு ஒப்புகொள்ளலாம் .ஆனால் அன்றைய விளையாட்டு களத்தில் பிராட்மன் சாதித்த சாதனைகள் இன்றைய களத்தில் இருக்கும் சச்சின் சாதனை களுடன் ஒப்பிடுவது தவறு அன்றைய களத்தில் அவர் செய்த சாதனைகள் தான் இன்றைய வீரர்கள் விளையாட வேண்டும் சாதிக்க வேண்டும் என்ற ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கும் அது இன்றைய சச்சினுக்கும் கூட ஒரு உந்துகோலாக இருந்திருக்கும் .இன்றைய காலகட்டத்தில் சச்சினின் சாதனைகள் போற்றுதல் குரியது . இவருடைய சாதனைகள் இன்றும் பல வருடங்கள் அவர் பெயர் சொல்லும் .என்னை பொறுத்த வரையில் அன்றைய களத்தில் பிராட்மன் இன்றைய களத்தில் சச்சின் சிறந்தவர் எந்த சூழலிலும் இதில் மாற்றம் இல்லை .

என்றும் நட்புடன்
த.க.ஜெய்

கௌதமன்
11-12-2010, 04:22 PM
கிரிக்கெட் என்பது திறமை, ஆட்டநுணுக்கம், மனத்திண்மை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்தது.
இதில் திறமை என்பது இயல்பாகவும், ஆர்வத்தாலும், இளமையில் கிடைத்தப் பயிற்சியினாலும் வருவது.
ஆட்ட நுணுக்கம் மூத்த வீரர்களிடமிருந்தும், இடைவிடாத பயிற்சியினாலும் அனுபவத்தாலும் கிடைப்பது.
மனத்திண்மை என்பது சூழ்நிலையாலும், பக்குவத்தாலும், இயல்பான குணத்தாலும் வருவது.
தவறுகளைத் திருத்துவதற்கும், வியூகம் அமைப்பதற்கும், எதிராளியை எடை போடவும் சிறந்த பயிற்சிச் செயயவும் தொழிற்நுட்பம் உதவும்.

இதில் குறைபாடு வரும்போது சிறந்த ஆட்டக்காரர்கள்க் கூட சில சமயம் சோபிப்பது இல்லை.

கொஞ்சம் யோசித்தால் பிராட்மென் காலத்தில் உள்ள சிரமங்கள் புரியும்.

பாலகன்
12-12-2010, 02:01 AM
வேறுவேறு காலகட்ட மனிதர்களை ஒப்பிடுவதே ஜகீர் அப்பாஸ் எதையோ நமக்கு சொல்லவருகிறார் என்பதற்கான விடயமாகவே இதை எடுத்துக்கொள்ளவேன்டும்.

செய்தியின் முதல் பத்தியில் இங்கிலாந்து பத்திரிக்கை சச்சினுக்கு புகழாரம் சூட்டியது என்று இருந்ததை எல்லாரும் கவனிக்கத்தவறி விட்டீர்கள். :D

இப்ப புரிஞ்சிருக்குமே! :lachen001: