PDA

View Full Version : பெரிய படங்களின் அளவை எளிய முறையில் குறைக்க



kathir_tamil
10-11-2010, 06:54 AM
பெரிய படங்களின் அளவையும் அதன் கோப்பு அளவையும் (File Size) இலவச மென்பொருள் மூலம் மிக எளிதான முறையில் குறைப்பது எப்படி என்பதை விளக்கும் பதிவு இது.

டிஜிட்டல் கேமரா மூலம் புகைப்படங்கள் எடுக்கும் போது MB கணக்கில் அவை அளவில் பெரியதாக இருக்கும். அவற்றை ஈமெயில் மூலமாக அனுப்பும் போது அதிக நேரம் பிடிக்கும். பெரிய படங்களை மைக்ரோசாப்ட் வோர்ட் , பவர்பாய்ண்ட் போன்றவற்றில் உபயோகிக்கும் போதும் அதிக இடம் பிடித்து கொள்ளும். இது போன்ற சமயங்களில் படங்களின் அளவை குறைக்க வேண்டி இருக்கும். சாதாரணமாக இதனை செய்ய போடோஷோப் , பெயிண்ட் போன்ற மென்பொருள்கள் மூலம் படத்தை திறந்து, படத்தின் அளவை குறைத்து மீண்டும் புதிய பெயரில் சேமிப்போம். நேரம் அதிகம் விரயம் ஆகும்.

தற்போது திறக்காமலே வலது கிளிக் மூலம் அந்த படத்தை சிறிதாக்க முடியும். இதற்கான இலவச மென்பொருளை இங்கே கிளிக் செய்து தரவிறக்கி இன்ஸ்டால் (http://sourceforge.net/project/downloading.php?group_id=224498&filename=ImageResizerClone-2.0.msi) செய்து கொள்ளுங்கள்.

இனி நீங்கள் படத்தை உபயோக படுத்தும் போது அந்த படத்தின் Thumbnail மீது வலது கிளிக் செய்தால் தோன்றும் மெனுவில் "Resize Pictures" என்ற புதிய ஆப்சன் இருக்கும்.

அதனை கிளிக் செய்தால் வரும் விண்டோவில் small (640 x 480 pixels), medium (800 x 600 pixels), large (1024 x 768 pixels) and Handheld PC (240 x 320 pixels) தோன்றும் அளவுகளில் உங்கள் தேவையை அளித்து OK கிளிக் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான அளவு குறைந்த புதிய படம் கிடைத்துவிடும்.

எடுத்துகாட்டாக என்னிடம் உள்ள man.jpg , 3008x2000 என்ற அளவில் 2.5 MB கோப்பளவு (File Size) கொண்ட படம். அதனை நான் 640x480 அளவு கொண்ட படமாக சுருக்கி கொண்டேன். man(small).jpg என்ற பெயரில் சேமிக்கப்பட்டு விட்டது. அதன் கோப்பளவு (File Size) 92.2 KB மட்டுமே. அதிக சேமிப்பு. ஈமெயில் மூலம் அனுப்ப விரும்பினால் மிக எளிதாக அனுப்பி விடலாம்.

புதிய பெயரில் சேமிக்காமல் , ஒரிஜினல் படத்தில் பெயரிலேயே சேமிக்க விரும்பினால் "Resize the original pictures (don't create copies)" என்ற ஆப்சனை தேர்வு செய்து கொள்ளவும். இப்போது உங்கள் ஒரிஜினல் படமே அளவு குறைவுள்ளதாக மாறி இருக்கும்.

நிறைய படங்களை ஒரே நேரத்தில் அளவை குறைக்க விரும்பினால், படங்கள் உள்ள போல்டரை ஓபன் செய்து வேண்டுமென்ற படங்களை செலக்ட் செய்து கொண்டு வலது கிளிக் மூலம் "Resize Pictures" கொடுக்கவும்.


அளவு குறைக்கப்பட்ட பின்பு படத்தின் தெளிவில் பெரிய மாற்றம் இருப்பதாக தெரியவில்லை. நன்றாகவே உள்ளது. உதாரணத்திற்கு இந்த விவரங்களை பாருங்கள்

1. 4368x2912 ஒரிஜினல் படம் - 1.21 MB
2. 640x426 அளவில் சுருக்கப்பட்ட படம் - 55.6 KB
3. 800x533 அளவில் சுருக்கப்பட்ட படம் - 71.0 KB
4. 1024x682 அளவில் சுருக்கப்பட்ட படம் - 95.8 KB



தகவல்: டிவிஎஸ் 50

பாலகன்
13-11-2010, 07:37 PM
வலைதளங்களை பயன்படுத்துபவர்களுக்கு இது பயனுள்ள தகவல்
நன்றி

sakthim
14-11-2010, 04:17 AM
பல சமயங்களில் நானும் இது போல் புகைப்படங்களை ஈமெயில் மூலமாக அனுப்ப போராடி இருக்கிறேன். தகவலுக்கு நன்றி.