PDA

View Full Version : எரியட்டும் நிழல்



inban
09-11-2010, 02:12 PM
கிழட்டு நாயகனின் கிள்ளலிலே
நாயகி
போலிவெட்கம் பூண்ட போது ...

அழவென்று
கிளிசரினை
கைகொள்ள நேர்ந்தபோது ...

மார்கழி மாதத்து
நாய் கூட்டமாய்
உங்களின் நடன அசைவுகள்
நெஞ்சினை துவைத்த போது ...

இன்னாரின் உதட்டசைவுக்கு
யாரோ
உயர் கொடுத்த போது...

பழமைகளை பூட்டிவைகும்
பட்டறையாக
உங்களின்
பிம்பங்கள் பிறழ்ந்தபோது ...

வீதிக்கும் வீட்டுக்குமான உறவை
அது
விலக்கிவிட்டு எழுந்தபோது ...

எங்கள் திரைச்சீலை
தனக்குதானே
தீவைத்துக்கொண்டது .

அமரன்
24-11-2010, 07:37 PM
நடிப்பது அவ்வளவு சுலபமில்லை இன்பன்.



செயற்கைத்தனங்கள் தந்த எரிவில் நம்மை மறைத்த ‘திரைச்சீலை’ சாம்பலானால் நல்லதுதானே.

பென்ஸ்
24-11-2010, 07:46 PM
நல்ல கவிதை... ரசிக்க வைக்கும் நடை...

ஆனால் எனக்கு அமரனின் வார்த்தைகள் என் மனதை கொள்ளை கொண்டு போனதில் ஆச்சரியம்மில்லை.

மேடையில் நடித்ததால் எவர் வாழ்க்கையும் பாதிக்க படவில்லையே... நிஜ வாழ்க்கை நடிகர்களால் எத்தனை துன்பம் துயரம்...

inban
25-11-2010, 03:15 PM
[QUOTE=அமரன்;502134]நடிப்பது அவ்வளவு சுலபமில்லை இன்பன்.




உண்மைதான். நடிப்பு சுலபமில்லைதான்
நான் சுட்டவந்தது நடிப்பு சொல்லும் கருத்தை; உண்மைக்கும் அதற்குமான தொடர்பை...

வானவர்கோன்
25-11-2010, 03:26 PM
வாழ்க்கையில் எண்ணற்ற ஏற்ற இறக்கங்கள், இதில் நடிப்பு ஒரு துளி.