PDA

View Full Version : தொலைந்து போனவன் விட்டுச் சென்ற குறிப்புகள்: காலம் (4)rambal
19-11-2003, 04:55 PM
தொலைந்து போனவன் விட்டுச் சென்ற குறிப்புகள்: காலம் (4)

0
அடிக்குறிப்பு:
காலம்: எப்போது ஆரம்பித்தது? எப்போது முடியும்? காலம் சூனியத்தில் இருந்து ஆரம்பித்தது என்றால் அந்த சூனியம் என்னவாக இருக்கும்?
அப்படியானால் அகாலம் என்பது என்ன? நேற்று என்பது நாளையானால் நாளை என்பது நேற்றானால் இன்று இந்த கணம் இங்கு
இருப்பது என்பது மட்டுமே நிஜம். கடந்த காலத்தை ஏதேனும் ஒரு மைக்ரோ சிப்பில் பதித்து வேண்டும் எனும் பொழுது
பத்து கோடி வருடங்களுக்கு முன் என்ன நிகழ்ந்தது என்ரு பார்த்துவிட்டு நேற்று நெத தவறுகளையும் திருத்திவிட்டு வரலாற்றில்
பெயரையும் பொறித்து விட்டு வரலாம்.. இது சாத்தியமா?

0
நான் இதற்கு முன் வாழ்ந்த நாட்டைச் சேர்ந்த சக்தி வாய்ந்த போராட்ட இனக்குழுவை இந்த நாட்டில் தடை
செய்துவிட்டார்கள். இதனால், நானும் அந்த இனக்குழுவைச் சேர்ந்தவன் என்ற சந்தேகம் இங்கிருக்கும் காவல்துறைக்கு
வந்துவிட்டது. என்னைப் பிடிக்கும் முயற்சியை அவர்கள் ஆரம்பித்துவிட்டார்கள். இவர்களிடம் இருந்து தப்பிப்ப்து எப்படி?

0
எனது இனக்குழுவில் பிறக்கும் குழந்தைகளுக்கு மண்ணின் பெயரை வைத்து அந்த மண்ணை கொஞ்சம் எடுத்து
கரைத்து வாயில் ஊற்றுவார்கள். பழுப்பும் சிவப்பும் கலந்த பறவைகள் பிறந்து எட்டாவது நாள் ஆன
குழந்தைகளை விளையாட்டாக எடுத்துச் சென்று ஒளித்து வைத்துக் கொள்ளும். குழந்தைகளைத் தேடிச் செல்லும்
அந்தக் குழந்தையின் தாய் தனது நிர்வாணத்தை அந்தப் பறவைகளுக்குக் காட்டவேண்டும். அதன் பின்புதான் அந்தப் பறவைகள் புதரில் இருக்கும் ஒளித்து வைத்த குழந்தைகளைத் திருப்பிக் கொடுக்கும். அந்தப் பறவையின் பாஷைதான் எனது குழுவின் மொழியாக
மாறியது. பாம்பு இரண்டு புணரும் ஓசை எனது இனக்குழுவைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கேட்கும். அதன் விளைவாகத்தான்
எனது இனக்குழுவைச் சார்ந்தவர்கள் புணரும் போது பாம்புகள் புணரும் சப்தத்தை வெளிப்படுத்துகின்றனர். என் இனத்துப் பெண்கள்,
சூரியன் அஸ்தமனமாகும் பொழுது எந்த மலர் மலர்கிறதோ, அது மலரும் தருணத்தில் எந்த திசையில் இருக்கிறதோ
அந்த திசையில் இருந்து வரும் ஆடவனுடன் கலவியில் ஈடுபட காத்திருப்பார்கள். பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும்
அதிசயப் பூ மலரும் தினத்தன்று எதுவாக விரும்புகிறோமோ அதுவாகவே மாறி அடுத்த நாள் முதல் ஜாமத்தில் மறுபடியும்
மனிதனாக மாறிவிடுவார்கள். நீல நிறக்கண்களுடைய பெண்களின் முதல் பூப்புக் குருதியை கழுகுகளின் கண் படாத இடத்தில்
எந்த மண்ணின் பெயரை கொண்டிருக்கிறாளோ அந்த மண் இருக்கும் இடத்தில் புதைத்துவிடுவதும், மழைக்காலத்தில்
வெட்டும் மின்னல்னால் அந்தக் குருதி நீல நிறக்கற்களாக மாறிவிடும். அதை அவளுக்கு கணவனாக வரப்போறவனுடைய
கண்களைத் தவிர வேறு யார் கண்ணிற்கும் புலப்படாது. அவன் அந்தக் கற்களை எடுத்துக் கொண்டு அந்த மண்ணின் பெயருள்ள
பெண்ணைத்தேடி இனக்குழுவில் அவளைக் கண்டுபிடித்ததும் அந்தக் கற்களை தட்சணையாகக் கொடுத்துவிட்டு மணம் முடித்துக்
கொள்வான்.

0
கனவில் பற்பல செய்திகள் எனது இனத்தைப் பற்றிய குறிப்புகளைக் கொடுக்க இப்போது எனக்கு சந்தோசமானது.
ஒரு மறதியில் மூளையின் ஏதோ ஒரு அடுக்கில் தொலைந்து போன இனம், மொழி அத்தனையும்
ஒரு கணத்தில் வெளி வர [b]நான் இந்த உலகை மறக்கிறேன்..

0
கபேக்குச் செல்லும் வழியில் நான் அவளைப் பார்த்தேன். அவள் கண்கள் நீல நிறத்தில் இருந்தது. அவள் பாரீஸின்
குறுகியத் தெருக்கள் வழியாக சென்றாள். நானும் அவளைப் பின்தொடர்ந்து சென்றேன். இறுதியாக அவள் ஒரு கதவைத் திறந்து
அதன் உள்ளே சென்றாள். நானும் அதையே செய்ய அங்கு கபேயில் இருக்கும் அந்த முதியவர் இருந்தார்.
அவர் அருகில் சில நீலக் கற்கள் இருந்ததை எடுத்துக் காட்டினேன். உன் கண்களுக்கு அவைகள் தெரிகிறதா என்று என்னிடம் மீண்டும்
அவர் கேட்டார். ஆமாம் நன்றாகத் தெரிகின்றன நீலக் கற்கள் என்றேன். எனக்கு அந்தப் பெண்ணை விட எனது இனக்குழுவைக் கண்டுபிடிப்பதுதான் மிகவும் முக்கியம் என்றும் அதன்பின் அவளை மணந்து கொள்கிறேன் என்றும் கூறினேன்..