PDA

View Full Version : LG OPTIMUS சிறு விமர்சனம்

மயூ
09-11-2010, 08:40 AM
கூகிள் கம்பனி பல ஆயிரம் செலவழித்து தயார்த்த அந்ரொயிட் மென்பொருள் இப்போது அப்பிள் இரக தொலைபேசிகளுக்குப் போட்டித் தொலைபேசிபேசி தயாரிக்கும் நிறுவனங்களின் தாரக மந்திரம். சாம்சுங், எச்.டி.சி போன்ற நிறுவனங்கள் இந்த கைத்தொலைபேசி இயங்குதளத்தைப் பாவிக்கின்றன. இவற்றை விட கூகிள் நிறுவனமே கூகிள் நெக்சஸ் என்று ஒரு தொலைபேசியை வெளியிட்டுள்ளது.

அந்திரொயிட் மென்பொருள் இயங்குதளம் திறந்த மூலம் என்பதனால் நாளைக்கே நீங்கள் ஒரு செல்பேசி நிறுவனம் திறந்தாலம் உங்கள் செல்பேசியிலும் இலவசமாகப் பாவித்துக்கொள்ளலாம். அத்துடன் உங்களுக்குத் தேவையான மாற்றங்களையும் செய்துகொள்ளலாம்.

எல்லாம் சரிதான் ஆனால் இந்த தொலைபேசிகளை வாங்குவதற்கு கொள்ளை விலை கொடுக்கவேண்டியிருக்கும். இத்தனை நாளும் இந்தக் காரணத்தால் நொக்கியாவே தஞ்சம் என்று இருந்துவிட்டோம்.
அண்மையில் ஸ்மார்ட் நகர்பேசி வாங்கவேண்டும் என்ற சிரங்கு வருத்தம் மிக உச்சியை அடைந்துவிட்டது. பெருமளவில் பணம் செலவழிக்கவும் விருப்பம் இல்லை ஆகவே சந்தையில் எந்த தொலைபேசியை வாங்கலாம் என்று விசாரிக்கத் தொடங்கினேன்.
பல ஆராய்ச்சிகளின் பின்னர் அண்மையில் பத்தாயிரம் இந்திய ரூபாய்களுக்கு LG OPTIMUS எனும் அன்ரொயிட் தொலைபேசியை வாங்கினேன்.

http://www.geocaching.com/images/gadgets/lg_optimus_gt540_7.jpg
இதில் முக்கிய விடையம் என்னவென்றால் அந்திரொயிட் 1.6 இயங்கு தளமே உள்ளது. சந்தையில் இப்போது அன்ரொயிட் 2.2 தொலைபேசிகளும் வந்துவிட்டன. ஆனாலும் இணையத்தில் கணனிமூலம் தொலைபேசியை இணைத்து உங்கள் LG OPTIMUS இன் இயங்குதள பதிப்பை 2.1 க்கு ஏற்றிக்கொள்ளலாம்.
தொலைபேசில் நான் விரும்பும் முக்கிய விடையங்கள்

1. GPS: ஹைதராபாத்தில் தலையை சுற்றி பேக்காட்ட வெளிக்கிடும் ஆட்டோக் காரப் பசங்களைக் கண்காணிக்க மிகவும் உகந்த கருவி உள்ளமைந்துள்ளது.

2. பாடல் கேட்கும் வசதி. இது பல தொலைபேசிகளிலும் இப்போது இருக்கும் ஒரு வசதி.

3. பேஸ்புக், ஜிமெயில் போன்ற இணையத்தளங்களை மின்னல் வேகத்தில் பார்க்க கூடிய தன்மை

4. தொலைக்காட்சி விளம்பரத்தில் வருவதுபோல பார்கோட் ஸ்கானர், மொழிமாற்றி போன்ற பல செயலிகள்

5. 3 மெகா பிக்சல் கமிரா உள்ளது. புகைப்படங்களில் தரம் பரவாயில்லை. ஆகா ஓகோ என்று இல்லாவிட்டாலும் ஓரளவு தரமாகவே உள்ளது.

6. 3ஜி வலையமைப்பில் 7 Mbps வேகத்தில் இணையலாம்

7. wi-fi ஆதரவு உண்டு

8. DivX காணொளிகளை இயக்கும் வல்லமை

மேலும் அறிய http://www.gsmarena.com/lg_gt540_optimus-3081.php

வழமை போல தமிழ் ஆதரவு பூச்சியம். ஒபேரா மினி மூலம் தமிழ் தளங்களை வாசிக்கலாம். மன்றத்தையும் பார்த்தேன் அழகாகத் தெரிகின்றது. ஆனால் உள்ளிடுவதில் சிக்கள் உள்ளது.

கொடுத்த பணத்திற்கு மிகவும் திருப்தியாக இந்த தொலைபேசி உள்ளது. :icon_b:

ஏதும் கேள்வியிருந்தால் கேளுங்கள் விடை கொட்டப்படும்.

ஆதவா
09-11-2010, 08:48 AM
போனும் பார்க்க நல்லாத்தாம்ல இருக்கு!!
3rd Party அப்லிகேஷன்லாம் எப்படி இருக்கு?
பேட்டரி லைஃப்?
முக்கியமாக பயனர் இடைமுகம் எப்ப்டி இருக்கு!!???

நான் HTC Touch2 விண்டோஸ் மொபைல் வைத்திருக்கிறேன். நீ சொன்ன அத்தனையும் இருக்கிறது. GPS க்கு External (Google) உபயோகப்படுத்துகிறேன். பாடல் கேட்கும் தரம் துல்லியமாக (ஓரளவு i pad க்கு நிகராக) உள்ளது.. மற்றபடி நீ சொன்னதிலிருந்து வேறெந்த மாறுதலும் இல்லை!!

ஓவியன்
09-11-2010, 08:59 AM
நல்ல பதிவு மயூ, மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு O2 XDA Atom வாங்கி உபயோகித்துப் பார்த்தேன், அதற்கும் எனக்கும் ஏனோ சரிவரவில்லை....

அதன் பின் வேண்டாமிந்த வில்லங்கமென நொக்கியாவுடனேயே இருக்கின்றேன்....

உங்களுடைய பகிர்வைப் பார்த்தால் மீளவும் ஒரு தடவை முயற்சி பண்ணலாம் போலிருக்கிறது. :)

ஏதும் கேள்வியிருந்தால் கேளுங்கள் விடை கொட்டப்படும்.

அப்படியே, அந்த ஃபோனை பார்சல் பண்ணி ஓமானுக்கு அனுப்பி வைக்கிறீரா...??? :cool:

மயூ
09-11-2010, 10:25 AM
போனும் பார்க்க நல்லாத்தாம்ல இருக்கு!!
3rd Party அப்லிகேஷன்லாம் எப்படி இருக்கு?
பேட்டரி லைஃப்?
முக்கியமாக பயனர் இடைமுகம் எப்ப்டி இருக்கு!!???

நான் HTC Touch2 விண்டோஸ் மொபைல் வைத்திருக்கிறேன். நீ சொன்ன அத்தனையும் இருக்கிறது. GPS க்கு External (Google) உபயோகப்படுத்துகிறேன். பாடல் கேட்கும் தரம் துல்லியமாக (ஓரளவு i pad க்கு நிகராக) உள்ளது.. மற்றபடி நீ சொன்னதிலிருந்து வேறெந்த மாறுதலும் இல்லை!!

மூன்றாம் நபர் தயாரித்த பல செயலிகள் இருக்கின்றன. எந்த துறை எடுத்தாலும் ஏதாவது ஒரு அப்லிகேசன் இருக்கின்றது. தமிழ் செயலிகள் கூட இருக்கின்றது நண்பா.

பயனர் இடைமுகம் சிறப்பாகவே உள்ளது. பயனபடுத்தவும் இலகுவாகவுள்ளது. இது எனது முதலாவது தொடுதிரை செல்பேசி என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவும். அதனால் இந்த தொலைபேசிக்கு அளவுக்கு அதிகமாக மார்க்குப் போடுறனோ தெரியேல.

எச்.டி.சி மொபைலின் விலையும் கிட்டத்தட்ட இதே விலையோ??? இணையம், ஜிபிஎஸ் என்று ஒரே விளையாட்டாக விளையாடினால் பாட்டரி ஒரே நாளில் கதம். சாதாரணப் பாவனை என்றால் இரண்டு அரை நாள் தாக்குப்பிடிக்கின்றது.

மயூ
09-11-2010, 10:27 AM
நல்ல பதிவு மயூ, மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு O2 XDA Atom வாங்கி உபயோகித்துப் பார்த்தேன், அதற்கும் எனக்கும் ஏனோ சரிவரவில்லை....

அதன் பின் வேண்டாமிந்த வில்லங்கமென நொக்கியாவுடனேயே இருக்கின்றேன்....

உங்களுடைய பகிர்வைப் பார்த்தால் மீளவும் ஒரு தடவை முயற்சி பண்ணலாம் போலிருக்கிறது. :)

அப்படியே, அந்த ஃபோனை பார்சல் பண்ணி ஓமானுக்கு அனுப்பி வைக்கிறீரா...??? :cool:
உங்கள் ஓஎஸ் போனில் என்ன இயங்குதளம். நொக்கியாவின் சிம்பியன் இயங்குதளங்களில் செயற்படுத்த ஒழுங்கான செயலிகள் கிடைப்பதில்லை என்பதே பொதுவான குற்றச்சாட்டு.
அப்பிள், அன்ரோயிட் போன்களில் போதுமான அளவு செயலிகள் உண்டு. :icon_b:

கேள்விக்குப் பதிகள் கிடைக்கும் போன் கொடுக்க நான் என்ன பரிசு குலுக்கலா நடத்துறன். :traurig001:

Ravee
09-11-2010, 12:38 PM
விலை என்னவோ நண்பரே ? சர்வீஸ் சப்போட் எப்படி உள்ளது ?:confused:

மயூ
12-11-2010, 03:29 AM
விலை என்னவோ நண்பரே ? சர்வீஸ் சப்போட் எப்படி உள்ளது ?:confused:
பதிவில் குறிப்பிட்டிருந்தேனே 10 ஆயிரம் இந்திய ரூபாய்கள். ஒரு வருட சேவை தருவதாகக் கூறினார்கள்.