PDA

View Full Version : விடை உங்களுக்கு தெரியுமா?????



ஸ்ரீசரண்
08-11-2010, 07:58 AM
அனைவருக்கும் வணக்கம்,

இதுக்கு விடை உங்களுக்கு தெரியுமா ?

7 x 3 x 6 = 219318
5 x 8 x 7 = 406956
2 x 8 x 3 = 160424
9 x 3 x 4 = ???????

ஓவியன்
08-11-2010, 09:07 AM
7 x 3 x 6 = 219318
5 x 8 x 7 = 406956
2 x 8 x 3 = 160424
9 x 3 x 4 = 279312

பிரேம்
08-11-2010, 09:24 AM
எப்டின்னு..konjam விளக்குங்க..

தாமரை
08-11-2010, 09:45 AM
7 x 3 = 21
6 x 3 = 18

7 + 6 = 13
13 x 3 = 39 - திருப்பிப் போட்டா = 93

இந்த வகையில் 7 x 3 x 6 = 219318 சரி.

5 x 8 = 40
7 x 8 = 56

5 + 7 = 12
12 x 8 = 96 - திருப்பிப் போட்டா = 69

இந்த வகையில் 5 x 8 x 7 = 406956 சரி.

2 x 8 = 16
3 x 8 = 24

2 + 3 = 5
5 x 8 = 40 - திருப்பிப் போட்டா = 04

இந்த வகையில் 2 x 8 x 3 = 160424 சரி.

9 x 3 = 27
4 x 3 = 12

9 + 4 = 13
13 x 3 = 39 - திருப்பிப் போட்டா = 69

இந்த வகையில் 9 x 3 x 4 = 279312 சரியான பதிலாகிறது..

ஓவியன்
08-11-2010, 09:49 AM
நான் விடை வந்த விதத்தை தட்டச்சி வருவதற்குள் செல்வண்ணா விடை வந்த விதத்தை கூறிவிட்டார், இருந்தாலும் நாமளும் சொல்லுவமிலே.... :cool:

__________________________________________________________________________

இந்த வினாவை பின்வரும் வடிவத்துக்கு மாற்றுவோம்;

A x B x C = விடை

A x B = விடையின் முதலிரு இலக்கத்தினை தரும்

B x C = விடையின் கடைசி இரு இலக்கத்தினை தரும்

இப்போது மீதமாக இருப்பது நடுவிலுள்ள இரு இலக்கங்கள்,

முதலிரு இலக்கத்தையும் கடைசி இரு இலக்கத்தையும் கூட்டி விட்டு வரும் இரு இலக்கத்தை வளம் மாற்றிப் போட்டால் நடுவிலுள்ள இரு இலக்கங்களும் கிடைக்கும்....

இப்போது விடைக்கு வருகிறேன்

9 x 3 = 27

3 x 4 = 12

27 + 12 = 39 , 39 ஐ வளம் மாற்றி எழுதினால் 93.

ஆகவே விடை 279312

விகடன்
08-11-2010, 09:52 AM
அடடா...
கொஞ்சம் லேட்டாகிட்டோமே.

----
பொருப்பாளர்களே,

இந்தத்திரியை, இதேபோல் உள்ள மற்றய திரியுடன் இணைத்துவிடலாமே?

ஜனகன்
09-11-2010, 10:16 AM
9 9 9 9
5 5 5 5
3 3 3 3
1 1 1 1

இந்த 16 எண்களில் எதாவது 6 எண்களின் கூடுதல் = 21
அந்த 6 எண்கள் எவை?...

ஸ்ரீசரண்
09-11-2010, 12:29 PM
இந்த எண்களை எப்படி வேண்டுமானாலும் உபயோகப் படுத்திக் கொள்ளலாமா ?
அப்படினா இதோ என்னோட பதில் :
(9 x 5) / (3 x 1) + 3 + 3 = 21 :mini023:
சரியா ஜனகன் ....... :mini023: :mini023: :mini023:

ஜனகன்
09-11-2010, 01:45 PM
அந்த ஆறு எண்களையும் தெளிவாக கொடுங்கள் சரோஸ்.

ஸ்ரீசரண்
09-11-2010, 02:32 PM
ஆறு நம்பர உபயோகம் பண்ணனும்னு சொன்னிங்க.

முதல்ல 9 x 5 = 45. இதுல ரெண்டு நம்பர்.

அடுத்தது 3 x 1 = 3 இதுல ரெண்டு நம்பர்.

அடுத்தது அந்த 45 -அ 3 ஆல வகுக்கணும்

அப்ப 45 / 3 = 15 மொத்தம் நாலு நம்பர் டோட்டல் 15

அதோட ரெண்டு தடவை 3-அ கூட்டுனா மொத்த டோட்டல் = 21

இதுல ரெண்டு நம்பர் 15 + 3 + 3 = 21

ஆக மொத்தம் ஆறு நம்பர் மொத்த டோட்டல் 21.

சரியா ஜனகன்

ஸ்ரீதர்
09-11-2010, 04:09 PM
9 9 9 9
5 5 5 5
3 3 3 3
1 1 1 1

இந்த 16 எண்களில் எதாவது 6 எண்களின் கூடுதல் = 21
அந்த 6 எண்கள் எவை?...

3+3+3+11+1 சரியா ?

ஜனகன்
09-11-2010, 05:51 PM
3+3+3+11+1 சரியா ?

ஆறு இலக்கங்கள் வரவேண்டும்.

ஜனகன்
09-11-2010, 05:58 PM
சரோஸ், நீங்கள் கொடுத்த பதில் சரி என்றாலும்

சுலபமாக இதோ... 9x1+1+3+3+5=21

ஜனகன்
09-11-2010, 06:01 PM
________
| 4 | 4 | 4 |
________
| 4 | * | 4 |
________
| 4 | 4 | 4 |
________

ஒரு குதிரை லாயத்தில் 32 குதிரைகள் மேற்கூறியுள்ள முறையில் கட்டி வைக்கபட்டிருந்தன. நடுவில் குதிரை காவலனின் வீடு இருந்தது. ஒரு வழிப்போக்கன் 8 குதிரைகளை எடுத்துக்கொண்டு வந்து காவலனிடம் அதை கட்டிக்கொள்ள இடம் கேட்டான். அதற்க்கு காவலர் நீ கட்டிக்கொள்ளலாம், ஆனால் என் முதலாளி தினமும் நான்கு மூலையிலும் நின்று கூட்டிப்பார்ப்பார். அப்பொழுது மொத்தம் 12 வரவேண்டும், அவ்வாறு கட்ட முடிந்தால் கட்டிக்கொள் என்றார். அவனும் அதே போல் கட்டிக்கொண்டான், முதலாளி வந்து என்னும் பொழுதும் சரியாக இருந்தது. மறு நாள் செல்லும்பொழுது கூடுதலாக 4 குதிரைகளையும் திருடிச்சென்றான், அதையும் முதலாளியால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்பொழுது அந்த லாயத்தில் கூடுதலாக இருக்கும்போதும் குறைந்தபோதும் குதிரைகளை எப்படி கட்டிவைத்திருந்தான்.

ஸ்ரீசரண்
09-11-2010, 11:46 PM
இப்படி தான் :

குதிரைய கட்டும் போது

--------------------
| 2 | 8 | 2 |
--------------------
| 8 | x | 8 |
--------------------
| 2 | 8 | 2 |
--------------------


குதிரைய ஓட்டிட்டு போகும் போது :


--------------------
| 5 | 2 | 5 |
--------------------
| 2 | x | 2 |
--------------------
| 5 | 2 | 5 |
--------------------


விடை சரியா ஜனகன் :lachen001:

தாமரை
09-11-2010, 11:52 PM
________
| 4 | 4 | 4 |
________
| 4 | * | 4 |
________
| 4 | 4 | 4 |
________

ஒரு குதிரை லாயத்தில் 32 குதிரைகள் மேற்கூறியுள்ள முறையில் கட்டி வைக்கபட்டிருந்தன. நடுவில் குதிரை காவலனின் வீடு இருந்தது. ஒரு வழிப்போக்கன் 8 குதிரைகளை எடுத்துக்கொண்டு வந்து காவலனிடம் அதை கட்டிக்கொள்ள இடம் கேட்டான். அதற்க்கு காவலர் நீ கட்டிக்கொள்ளலாம், ஆனால் என் முதலாளி தினமும் நான்கு மூலையிலும் நின்று கூட்டிப்பார்ப்பார். அப்பொழுது மொத்தம் 12 வரவேண்டும், அவ்வாறு கட்ட முடிந்தால் கட்டிக்கொள் என்றார். அவனும் அதே போல் கட்டிக்கொண்டான், முதலாளி வந்து என்னும் பொழுதும் சரியாக இருந்தது. மறு நாள் செல்லும்பொழுது கூடுதலாக 4 குதிரைகளையும் திருடிச்சென்றான், அதையும் முதலாளியால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்பொழுது அந்த லாயத்தில் கூடுதலாக இருக்கும்போதும் குறைந்தபோதும் குதிரைகளை எப்படி கட்டிவைத்திருந்தான்.
__________
| 2| 8| 2 |
__________
| 8 | * |8| = 8 x4 + 2x4 = 40
__________
| 2 | 8 |2|
__________
__________
| 5 | 2| 5 |
__________
| 2 | * | 2 | = 5 x4 + 2x4 = 28
__________
| 5 | 2 | 5|
__________

ஜனகன்
10-11-2010, 08:13 PM
சரோஸ், தாமரை மிகச் சரியான விடை வாழ்த்துக்கள்.

sures
17-11-2010, 02:44 PM
ம்ம்... நல்ல கணக்குகளும், அதற்கேற்றால்போல் விடைகளும்.