PDA

View Full Version : பிரித்தெழுதுவது சரியா? சேர்த்தெழுதுவது சரியா?

குணமதி
08-11-2010, 04:18 AM
பிரித்தெழுதுவது சரியா? சேர்த்தெழுதுவது சரியா?

பாடல்களைப் படிப்போர் எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்னும் நோக்கத்தில், பலர், பாடலின் சொற்களை உடைத்துப் பிரித்துத் தனித்தனிச் சொற்களாக எழுதுகின்றனர்.
சிலர் உரைநடை எழுதும்போதும் சொற்களைப் பிரித்து எழுதுவதைப் பார்க்கின்றோம்.

அவனுடனே என்று சேர்த்தெழுதினால் with him என்று பொருள்படும்.
அவன் உடனே என்று பிரித்தெழுதினால் he at once என்று பொருள்படும்.
வந்தானானால் என்று சேர்த்தெழுதினால் if he comes என்று பொருள்படும்.
வந்தான் ஆனால் என்று பிரித்தெழுதினால் He came, but என்று பொருள்படும்.

நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு என்று சேர்த்து எழுதினால், நன்மை செய்வதிலுங்கூடத் தவறுண்டாகிவிடும் என்று பொருள்படும்.
நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டு என்று பிரித்தெழுதினால், நன்மை செய்ய நினைக்கும் தவறு உண்டு என்று பொருள் மயக்கம் ஏற்பட நேரும்.

எனவே, மிகக் கவனத்தோடு இடமறிந்து பொருள்மயக்கம் ஏற்படாதவாறு சேர்த்தோ பிரித்தோ எழுத வேண்டும்.

பொருள் உணரும் திறன் குறைந்த இக்காலத்தில், பாடல்களில் எல்லாச் சொற்களையும் பிரித்தே எழுதுதல் வேண்டும் என்ற கொள்கை பெரும்பாலானவர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, கீழே உள்ள கம்பராமாயணப் பாடல் 797-ஐப் பாருங்கள்:

நற்றாயினு நல்ல னெனக்கிவ னென்று நாடி
இற்றேயிறை யெய்தினை ஏய்ந்தது கோடி யென்னாற்
பொற்றாரகன் மார்பத மில்லுழை வந்த போதே
உற்றார்செயன் மற்றுமுண் டோவென வுற்று ரைத்தான்.

இப் பாடலை,

நல்தாயினும் நல்லன் எனக்கு இவன் என்று நாடி
இற்றே இறை எய்தினை ஏய்ந்தது கோடி என்னால்
பொன்தார் அகல்மார்ப தம் இல்லுழை வந்த போதே
உற்றார் செயல் மற்றும் உண்டோ என உற்று உரைத்தான்.

என்று பிரித்து எழுதுகிறார்கள்; அச்சிடுகிறார்கள். முதல் முறைப்படி எழுதுகையில் நான்கடிகளின் முதற்சீர்கள் நற்றா, இற்றே, பொற்றா, உற்றார் என்றமைந்ததால் ஏற்படும் பாடலின் எதுகை இன்பத்தைப் பிரித்தெழுதுவதால் இழக்கிறோம் என்பது மட்டுமன்றிப் பாடலைப் படைத்தவனின் முழுத்திறமும் பாடலின் முழு நயமும் அறிய முடியாமற் போகின்றது.

எல்லாச் சொற்களையுமே சேர்த்தெழுதுதலும் எல்லாச் சொற்களையுமே பிரித்தெழுதுதலும் இக்காலத்தில் தமிழுக்குச் சிறப்பளிக்காது. தேவையான இடங்களில் பொருள் கெடாதபடி, நிறுத்தக் குறிகளையும் பயன்படுத்திச் சேர்த்தோ பிரித்தோ எழுதலே சிறப்பாம்.

உதவி : பாவாணரின் ‘கட்டுரை வரைவியல்’ நூல். பாவாணருக்கு நன்றி.

தாமரை
08-11-2010, 04:26 AM
மிகச்சிறந்த கருத்து இது. நன்றி குணமதி!

இதை அடிக்கடி நம்மன்றத்தவர் பலர் சிறப்பாய் உபயோகிப்பதைக் கண்டிருக்கிறேன். :D:D:D

nambi
08-11-2010, 06:17 AM
மிகவும் தேவையானப்பதிவு....பகிர்வுக்கு மிக்க நன்றி!
..............
மொழிமாற்றுப்படங்களில் அதிகமாக இந்த மாதிரி பிரித்தெழுதிய உரையாடல்கள் வரும்...தெலுங்கு, இந்திப் படங்கள் அந்த வாயசைப்புக்கு ஏற்ற மாதிரி தமிழில் வரவேண்டும் என்பதற்காக '' நான் வந்தேன் நேற்று''....என்று...'' டோங்கிரி'' என்று கூடப் பொருள் புரியாத வார்த்தைகளை பயனபடுத்தி ஒப்பேத்துவார்கள்....:D

திரைப்படப்பாடல்களில் இப்படி பிரித்தெழுதி இரட்டை அர்த்தமாக பொருள் கொள்ள வழிவகுப்பார்கள்....

மணிரத்தினம் படத்தில் இது மாதிரி நிறைய வசனங்கள் வரும்...:D
''அடிச்சுடுவேன்...உன்னை...''
''சாப்பிட்டேன்...நேற்று...''
''வருவேன் நாளைக்கு''....முடிந்தால்...

M.Jagadeesan
09-11-2010, 04:13 AM
அமரர் கல்கி அவர்கள், கம்ப இராமாயணம் படித்துக் கொண்டிருந்த பொழுது, சுந்தர காண்டத்தில்,"கடறாவு படலம்" என்று ஒரு படலத்தின் பெயர் இருந்ததாம்.அதன் பொருளை,அவரால் எளிதில் விளங்கிக் கொள்ள முடிய வில்லையாம். பெரு முயற்சிக்குப் பின் அது "கடல் தாவு படலம்" (அனுமன் கடலைத் தாண்டிய படலம்) என்று கண்டறிந்ததாக எழுதுகிறார்.
அக்காலத்தில் பதிப்பித்த பெரும்பாலான நூல்களில் வார்த்தைகளைச் சேர்த்தே அச்சிட்டிருக்கிறார்கள்.இது பொருளில் குழப்பத்தை உருவாக்கிய காரணத்தினால்,தற்பொழுது வார்த்தைகளைப் பிரித்தே அச்சிடுகிறார்கள்.

முள்+தைத்தது=முட்டைத்தது.
புண்வாயில்+ஈ +மொய்த்தது=புண்வாயிலீ மொய்த்தது.
முழு+ஆண்டு=முழுவாண்டு.

முட்டைத்தது,புண்வாயிலீ மொய்த்தது, முழுவாண்டு ஆகிய சொற்கள் எளிதில் பொருள் கொள்ளமுடியாதது. "நாட்கள்" என்று எழுதினால் நாள்பட்ட "கள்" என்ற பொருளைத் தரும்." நாள்கள்" என்று எழுதினால் பல தினங்கள் என்ற பொருளைத் தரும்.

எனவே பிரித்து எழுதுவதில் எந்த தவறும் இல்லை.எதுகை,மோனை போன்ற தொடை இன்பங்கள் கெட்டுவிடும் என்றும் சொல்லமுடியாது.
தற்போது நாம் படித்துவரும் திருக்குறள் பதிப்பு பரிமேலழரின் வைப்புமுறையைப் பின்பற்றியது.அதில் சொற்களைப் பிரித்தே உரை கண்டுள்ளார்.இதனால் குறளின், கவிநயம் கெட்டுவிட்டதாகச் சொல்லமுடியாது.
"லட்டு" என்ற இனிப்புப் பொருளை நாம் உடைத்துத் தான் சாப்பிடுகிறோம். அதனால் "லட்டு"வின் சுவை குன்றிவிடுமா என்ன?

குணமதி
12-11-2010, 07:20 AM
மிகச்சிறந்த கருத்து இது. நன்றி குணமதி!

இதை அடிக்கடி நம்மன்றத்தவர் பலர் சிறப்பாய் உபயோகிப்பதைக் கண்டிருக்கிறேன். :D:D:D

மிக்க நன்றி.

குணமதி
12-11-2010, 07:21 AM
மிகவும் தேவையானப்பதிவு....பகிர்வுக்கு மிக்க நன்றி!
..............
மொழிமாற்றுப்படங்களில் அதிகமாக இந்த மாதிரி பிரித்தெழுதிய உரையாடல்கள் வரும்...தெலுங்கு, இந்திப் படங்கள் அந்த வாயசைப்புக்கு ஏற்ற மாதிரி தமிழில் வரவேண்டும் என்பதற்காக '' நான் வந்தேன் நேற்று''....என்று...'' டோங்கிரி'' என்று கூடப் பொருள் புரியாத வார்த்தைகளை பயனபடுத்தி ஒப்பேத்துவார்கள்....:D

திரைப்படப்பாடல்களில் இப்படி பிரித்தெழுதி இரட்டை அர்த்தமாக பொருள் கொள்ள வழிவகுப்பார்கள்....

மணிரத்தினம் படத்தில் இது மாதிரி நிறைய வசனங்கள் வரும்...:D
''அடிச்சுடுவேன்...உன்னை...''
''சாப்பிட்டேன்...நேற்று...''
''வருவேன் நாளைக்கு''....முடிந்தால்...

நன்றி நம்பி.

குணமதி
12-11-2010, 07:25 AM
அமரர் கல்கி அவர்கள், கம்ப இராமாயணம் படித்துக் கொண்டிருந்த பொழுது, சுந்தர காண்டத்தில்,"கடறாவு படலம்" என்று ஒரு படலத்தின் பெயர் இருந்ததாம்.அதன் பொருளை,அவரால் எளிதில் விளங்கிக் கொள்ள முடிய வில்லையாம். பெரு முயற்சிக்குப் பின் அது "கடல் தாவு படலம்" (அனுமன் கடலைத் தாண்டிய படலம்) என்று கண்டறிந்ததாக எழுதுகிறார்.
அக்காலத்தில் பதிப்பித்த பெரும்பாலான நூல்களில் வார்த்தைகளைச் சேர்த்தே அச்சிட்டிருக்கிறார்கள்.இது பொருளில் குழப்பத்தை உருவாக்கிய காரணத்தினால்,தற்பொழுது வார்த்தைகளைப் பிரித்தே அச்சிடுகிறார்கள்.

முள்+தைத்தது=முட்டைத்தது.
புண்வாயில்+ஈ +மொய்த்தது=புண்வாயிலீ மொய்த்தது.
முழு+ஆண்டு=முழுவாண்டு.

முட்டைத்தது,புண்வாயிலீ மொய்த்தது, முழுவாண்டு ஆகிய சொற்கள் எளிதில் பொருள் கொள்ளமுடியாதது. "நாட்கள்" என்று எழுதினால் நாள்பட்ட "கள்" என்ற பொருளைத் தரும்." நாள்கள்" என்று எழுதினால் பல தினங்கள் என்ற பொருளைத் தரும்.

எனவே பிரித்து எழுதுவதில் எந்த தவறும் இல்லை.எதுகை,மோனை போன்ற தொடை இன்பங்கள் கெட்டுவிடும் என்றும் சொல்லமுடியாது.
தற்போது நாம் படித்துவரும் திருக்குறள் பதிப்பு பரிமேலழரின் வைப்புமுறையைப் பின்பற்றியது.அதில் சொற்களைப் பிரித்தே உரை கண்டுள்ளார்.இதனால் குறளின், கவிநயம் கெட்டுவிட்டதாகச் சொல்லமுடியாது.
"லட்டு" என்ற இனிப்புப் பொருளை நாம் உடைத்துத் தான் சாப்பிடுகிறோம். அதனால் "லட்டு"வின் சுவை குன்றிவிடுமா என்ன?

பின்னூட்டத்திற்கு நன்றி.

எல்லாச் சொற்களையுமே சேர்த்தெழுதுதலும் எல்லாச் சொற்களையுமே பிரித்தெழுதுதலும் இக்காலத்தில் தமிழுக்குச் சிறப்பளிக்காது. தேவையான இடங்களில் பொருள் கெடாதபடி, நிறுத்தக் குறிகளையும் பயன்படுத்திச் சேர்த்தோ பிரித்தோ எழுதலே சிறப்பாம். - கட்டுரையின் இறுதியில் கூறிய இதையே மறுபடியும் கூறிக்கொள்கின்றேன்.

ஆன்டனி ஜானி
12-11-2010, 01:12 PM
ரெம்ப அருமையான கருத்து நன்றி******* நாம் தமிழில் எழுதும் போது சில வாக்கியங்களை பிரித்து எழுத வேண்டும் சில வாக்கியங்களை சேர்த்து தான் எழுத வேண்டும் அப்பொழுதுதான் அது ஒரு வரியை செம்மை படுத்தும் இப்போது சில வார்த்தைகள் எடுத்து கொண்டால் ( எ-கா ) இப்போது - இப்பொழுது பச்சை கிளி - பச்சைக்கிளி ) இரண்டும் ஒரே வாக்கியம் நாம் பயன் படுத்தும் போது ......இப்போது அவர்கள் வருவார்கள் ....இதுபோல நாம் உச்சரிக்கிறோம் ,,,,,,நன்றி

Hega
19-12-2010, 12:20 PM
பின்னூட்டத்திற்கு நன்றி.

எல்லாச் சொற்களையுமே சேர்த்தெழுதுதலும் எல்லாச் சொற்களையுமே பிரித்தெழுதுதலும் இக்காலத்தில் தமிழுக்குச் சிறப்பளிக்காது. தேவையான இடங்களில் பொருள் கெடாதபடி, நிறுத்தக் குறிகளையும் பயன்படுத்திச் சேர்த்தோ பிரித்தோ எழுதலே சிறப்பாம். - கட்டுரையின் இறுதியில் கூறிய இதையே மறுபடியும் கூறிக்கொள்கின்றேன்.

அருமை குணம்தி அவர்களே..

ஒரேழுத்து மாறினால் தலையெழுத்தும் மாறும் என்பார்கள்.
அஃதே, வார்த்தைகளைமட்டுமல்ல் சொற்களை கூறு போடுவதினாலும் ஆகும் என்பதை மிக தெளிவாக புரிய வைத்தமைக்கு நன்றிகள்.

பாலகன்
19-12-2010, 02:10 PM
அருமை குணம்தி அவர்களே..

ஒரேழுத்து மாறினால் தலையெழுத்தும் மாறும் என்பார்கள்.
அஃதே, வார்த்தைகளைமட்டுமல்ல் சொற்களை கூறு போடுவதினாலும் ஆகும் என்பதை மிக தெளிவாக புரிய வைத்தமைக்கு நன்றிகள்.

அருமையான கருத்து! தமிழில் இப்படி வைத்துக்கொள்ளலாம் அப்படி இருக்கலாம் என்று இல்லாமல் எப்படி முறையாக எழுதவேண்டுமோ அப்படித்தான் இருக்கவேன்டும்.

ஆங்கிலத்தில் இதுபோல் நாம் செய்தால் ஒத்துக்கொள்வார்களா :icon_b:

திரி துவங்கி எமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய குணமதிக்கும் நன்றிகள்

நாஞ்சில் த.க.ஜெய்
24-12-2010, 01:51 PM
மொழி மாற்ற பதிவு என்று பழைய கலைகளின் பதிவுகள் இது போன்று பிழைகளினால் இன்று உண்மை கலையின் வெளிபாடினை நாம் இழந்து கொண்டிருக்கிறோமோ என்ற ஐயப்பாடு தோன்றுகிறது .மிகவும் நல்ல பதிவு நண்பரே
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

குணமதி
28-12-2010, 11:12 AM
அருமை குணம்தி அவர்களே..

ஒரேழுத்து மாறினால் தலையெழுத்தும் மாறும் என்பார்கள்.
அஃதே, வார்த்தைகளைமட்டுமல்ல் சொற்களை கூறு போடுவதினாலும் ஆகும் என்பதை மிக தெளிவாக புரிய வைத்தமைக்கு நன்றிகள்.

நன்றிக்கு நன்றி.

குணமதி
28-12-2010, 11:14 AM
அருமையான கருத்து! தமிழில் இப்படி வைத்துக்கொள்ளலாம் அப்படி இருக்கலாம் என்று இல்லாமல் எப்படி முறையாக எழுதவேண்டுமோ அப்படித்தான் இருக்கவேன்டும்.

ஆங்கிலத்தில் இதுபோல் நாம் செய்தால் ஒத்துக்கொள்வார்களா :icon_b:

திரி துவங்கி எமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய குணமதிக்கும் நன்றிகள்

நன்றி நண்பரே.

குணமதி
28-12-2010, 11:16 AM
மொழி மாற்ற பதிவு என்று பழைய கலைகளின் பதிவுகள் இது போன்று பிழைகளினால் இன்று உண்மை கலையின் வெளிப்பாட்டினை நாம் இழந்து கொண்டிருக்கிறோமோ என்ற ஐயப்பாடு தோன்றுகிறது .மிகவும் நல்ல பதிவு நண்பரே
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

மிக்க நன்றி.