PDA

View Full Version : தொலைந்து போனவன் விட்டுச் சென்ற குறிப்புகrambal
19-11-2003, 04:50 PM
தொலைந்து போனவன் விட்டுச் சென்ற குறிப்புகள்: (அத்யாயம் 1)

அந்த அறைக்குள் நான் நுழைந்த பொழுது செசாரியா எவோராவின் கேப்போ வெர்தியில் சங் டி பெரோனா
ஓடிக் கொண்டிருந்தது.. அந்த அறையெங்கும் பொருட்கள் கலைந்திருந்தது.. அவன் இருந்ததற்கான அடையாளங்கள்
இல்லை. ஒருவனின் இருப்பு என்பது அவனின் பொருட்கள் மூலம் மட்டுமே உறுதி செய்யப்படுகிறது..
காலத்தின் ஓட்டத்தில் காணாமல் கரைந்து போய் விட்டான் அவன்.. பூமியின் தாதுக்கள் அவனுக்கான சுவாசத்தை
வழங்கிக்கொண்டிருக்க ஏதேனும் ஒரு மூலையில் இருந்து அவற்றை அவன் நுகர்ந்து கொண்டிருக்கலாம்..
அறையின் விளக்கைப் போட்டதும் திடீரென்று பரவிய வெளிச்சத்தில் கண்கள் கூசியது.. இப்போது மெதுவாக
அந்த அறையை [b]ஆரம்பத்தில் இருந்து துலாவ ஆரம்பித்தேன். அவனது கட்டில் வெறுமையாக.. அவனது உடுப்புகள் ஒன்று கூட இல்லை
என்பதை உறுதி செய்த பின் அவன் உபயோகப்படுத்திய மேஜையின் டிராயரைத் திறந்தேன்.
சிகப்பு நிறத்தில் அட்டை போட்ட தடித்த நோட் புக் ஒன்று மட்டும் இருந்தது.. அதைப் பிரிக்க முதல் பக்கத்தில் இருந்து
நான்காக மடிக்கப்பட்ட ஒரு பேப்பர் நழுவி கீழே விழுந்தது. அதைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தேன்..

நண்பனே,

எனது ஆதி மொழியையும் எனது இனக்குழுவையும் கண்டுபிடித்து எனது ஆதி மொழியோடு கரைவதற்காகவும்,
எனது ஆதியினத் தேவதையிடம் சரணடைவதற்காகவும்..
இந்த நோட்டு புத்தககம் எங்கும் எனது தேடலின் குறிப்புகளை உனக்காக விட்டுப் போயிருக்கிறேன்..
இவைகளைப் படிப்பதின் மூலம் எனது இனக்குழுவைப் பற்றி முழுமையாக
தெரிந்து கொள்வாய்.

பை - பை,
ழோர்ல் பெரேக்.


கடிதத்தை மடித்துவிட்டு யோசனையில் ஆழ்ந்தேன். இப்போது இவனை எங்கு தேட? இவன் அடிக்கடி சந்திக்கும் அவளிடம்
சொல்லலாமா? இவனைப் பற்றி அவளிடம் விசாரிக்க வேண்டுமானால், முதலில் அவளைக் கண்டுபிடிக்கவேண்டும். இவன்
சொன்ன அடையாளங்களை வைத்து அவளை கண்டுபிடிப்பதென்பது இயலாத காரியம்..
இருந்த போதும் முயற்சிக்கலாம் என்று எண்ணியவாறு அவன் அடிக்கடி செல்லும் கபேக்கு சென்றேன்.
அங்கு ஒரு முதியவர் இருந்தார். அவரிடம் அவளைப் பற்றிய அடையாளங்கள் சொல்லிக் கேட்டதற்கு
அவள் இரண்டு நாட்களாக வரவில்லை என்றும் இறுதியாக அவளை இர்வனுடன் பார்த்ததாகவும் சொல்லி அவனது
அடையாளங்கள் பற்றி சொன்னார். அவர் சொன்ன அடையாளங்களை வைத்து ஊகிக்கையில் அது அவனேதான்.
அப்படியானால், அவனும் அவளும்தான் எங்கோ சென்றிருக்கிறார்கள்.
சரி எங்காவது போகட்டும் எனக்கென்ன கவலை என்று நினைத்து அந்த குறுகிய சந்தைக் கடந்து மெயின் ரோட்டை
அடைந்து எனது அறைக்குத் திரும்பி வந்தேன். அவன் விட்டுச் சென்ற நோட் புக் அங்கிருந்தது.

படிக்கலாமா வேண்டாமா என்ற தர்க்கப்போராட்டத்திற்குப் பிறகு பிரித்துப் படிக்க ஆரம்பித்தேன்.

இளசு
19-11-2003, 06:23 PM
அன்பு ராம்,
இரண்டாவது நாவலுக்கு என் வாழ்த்துகள்.
ஒரே இரவில் ஒரு முழுநாவல்..
அதுவும் முன்னுரைக்குப்பிறகு...
அவ்வப்போது எழுதி .. சுடச்சுட...
இது ஒரு புது முயற்சி..
ஒரு சாதனை...

என் பாராட்டுகள்.

rambal
19-11-2003, 07:20 PM
பத்து அத்யாயங்களில் இந்தக் குறுநாவல் முடிந்து விட்டது..
என் கடமை எழுதுவதே.. இனி உங்கல் பணிக்காகக் காத்திருக்கும்..(விமர்சனத்திற்கு)

முத்து
19-11-2003, 09:10 PM
ஒரே நாளில் குறுநாவல் ..
அதுவும் முன்னுரை எழுதிக் கொஞ்ச நேரத்தில்
அண்ணன் இளசு சொன்னதுபோல

நிச்சயமாய் இது ஒரு சாதனை முயற்சி ...

தொடருங்கள் ராம்பால் ....

rika
14-12-2003, 02:56 PM
வித்தியாசமான முயற்சிதான்..
முழு நாவலையும் படித்துவிட்டு கருத்து கூறுகிறேன்..
ஆரம்பத்திற்கு நீல நிறம் கொடுத்திருப்பதின் அர்த்தம் விளங்கவில்லை..

முத்து
14-12-2003, 03:01 PM
..
ஆரம்பத்திற்கு நீல நிறம் கொடுத்திருப்பதின் அர்த்தம் விளங்கவில்லை..

[b]உங்களுக்கே விளங்கவில்லையா ரிகா அவர்களே ...
சும்மாதானே சொல்கிறீர்கள் :wink:

இக்பால்
15-12-2003, 07:42 AM
என்னங்க முத்து தம்பி...புதிர் போடுறீங்க...எனக்கே புரியவில்லை. ரீகா
தங்கைக்கு எப்படி புரியும்?-அன்புடன் அண்ணா.

rika
15-12-2003, 02:55 PM
எனக்கே விளங்கவில்லையா...
என்றால் என்ன அர்த்தம்?
முதலில் எனக்கு விளங்கவில்லை..
பின் முழு நாவலையும் படித்தபின்புதான் விளங்கியது..
அதற்கு விமர்சணத்தையும் தனியாக பதித்துள்ளேன்..