PDA

View Full Version : வேண்டும் மன மாற்றம் - பதில் கவிதைவானவர்கோன்
07-11-2010, 06:15 PM
http://lh5.ggpht.com/_ija4A80-p4I/TNaEuLJC3FI/AAAAAAAAAVk/cTVGY0-Gjvw/sad.JPG
நம் வீதிக் கடையில்
வாங்கிய இனிப்பை
உண்ட குழந்தை
வைத்தியசாலையில்!

குறைந்த விலையில்
கொடுப்பதற்காய்
செய்துள்ள தந்திரம்
கலப்படம்!

கடைக்காரனுக்கு
அது வியாபாரம்
நம் குழந்தைகட்கோ
அதனால் வியாதி!

குழந்தையின்
சில மணித்துளி
இன்பத்துக்காய்
கொடுத்த இனிப்பே
இயமனாய் வந்து நிற்பதா!

பிஞ்சு மழலைகள்
அழுது பிடிவாதமாய்
கேட்கினும்
இனிப்புப் பரிசளிப்பு
பலகாரமாய் வேண்டாமே!

பட்டாசு
வாண வேடிக்கை
இல்லாமல்
பண்டிகை ஏது!

பட்டாசு வெடித்ததால்
பார்வையிழந்தோர்
பலராம்
இவ்வுலகில்!

பட்டாசு வெடிவிபத்தால்
நிரந்தர ஊனமானோரும்
அவ்வாறே!

பிஞ்சு மழலைகள்
அழுது பிடிவாதமாய்
கேட்கினும்
இனிப்புப் பரிசளிப்பு
பட்டாசாய் வேண்டாமே!

நண்பர் ரவி (http://www.tamilmantram.com/vb/member.php?u=6081) எழுதிய "வேண்டும் மன மாற்றம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=499386#post499386)" கவிதைக்கு பதில் கவிதை

அமரன்
07-11-2010, 06:31 PM
அன்பளிப்பு..
இதைவிட வேறென்ன இனிப்பு!

அன்பே ஆபத்தாகிடாமல் இருக்க அவதானம் தேவை..

அதை உணர்த்திய கவிதை.

வானவர்கோன்
07-11-2010, 06:43 PM
அன்பளிப்பு..
இதைவிட வேறென்ன இனிப்பு!

அன்பே ஆபத்தாகிடாமல் இருக்க அவதானம் தேவை..

அதை உணர்த்திய கவிதை.

"அன்புக்குமுண்டோ அடைக்கும் தாழ்" நன்றி அமரன்.

Ravee
08-11-2010, 11:53 AM
வானவர்க்கொன் நம் இருவர் பார்வையுமே வேறுபடுகிறது கருத்தில் . காற்று குடிநீர் சுத்தம் இல்லாமல் போகிறது என்பதற்காக நாம் சுவாசிக்கவோ, நீர் அருந்தாமல் இருக்கவோ முடியாது ... குறை களைவதுதான் அறிவு . ஆபத்து எதில்தான் இல்லை சாலையில் இறங்கி நடந்தால் கூட ஆபத்துதான் எனவே வீட்டில் முடங்கி கிடக்க முடியுமா ? இனிப்பும் , வாணவெடிகளும் சந்தோசத்திற்காக ... எல்லை மீறாமல் பிள்ளைகளை காப்பது பெற்றவர் கடமை .... இல்லை என்று சொல்லாமல் :)

nambi
08-11-2010, 01:52 PM
பிஞ்சு மழலைகள்
அழுது பிடிவாதமாய்
கேட்கினும்
இனிப்புப் பரிசளிப்பு
பட்டாசாய் வேண்டாமே!

நண்பர் ரவி (http://www.tamilmantram.com/vb/member.php?u=6081) எழுதிய "வேண்டும் மன மாற்றம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=499386#post499386)" கவிதைக்கு பதில் கவிதை
இதை பிஞ்சு மனநிலையில் எழுத முடியாதே.....வளர்ந்த பெரியவர்கள் மனநிலையில் வேண்டுமானால் எழுதலாம்....

பிஞ்சு வயதில் நானும் தானே பட்டாசு வெடிக்க விரும்பினேன்....அந்த வயதில் இப்படி பேசுவபவர்களை கண்டாலே வெறுப்புதான் மிஞ்சியது... இதை கேட்டு என் தந்தை வாங்கித்தரவில்லையே...:D

பட்டாசே இங்கில்லாமல் அனைவரும் வெடிக்கத் தடையாக இருந்தால் நான் விரும்பப்போவதில்லை..என் வீட்டு எதிரில் இருக்கும் பிள்ளைகள் வெடிக்கும் பொழுது நான் மட்டும் எப்படி? பொய்யான புரட்சிமனப்பான்மையுடன் வேடிக்கை பார்க்காமல் இருக்க முடியும்? அந்த வயதில்? ஏக்கத்துடன் வெம்பி அழத்தான் முடியும். (அந்த வயதில் அன்றைய இலக்கு பட்டாசு மட்டும்தான்)

காசை கரியாக்காதேடா? என்று சொல்லும் என் நெருங்கிய உறவுகளை கூட கஞ்சத்தன உறவுகள் என்று தானே நினைக்கத்தோன்றியது அந்த வயதில்?:D

சிவகாசியில் இருக்கும் குழந்தைகளுக்கு வேண்டுமானால் கல்வியை விலக்கி பணிபுரிவதால் பட்டாசு மேல் ஒரு வெறுப்பு ஏற்படாலம்...? வெடிக்காமல் ஒதுக்கி கூட இருக்கலாம்...எனக்கு அதற்கு கூட வாய்ப்பில்லை? மீசை அரும்பியபோது வெள்ளமென பட்டாசு ஆனால் வெடிக்க மனமில்லை (இந்த எண்ணங்கள் வந்ததினால் இருக்கலாம்)...என்னைப்போல் அந்த வயதில் ஏங்கிய இன்னொரு குழந்தைக்கு கொடுக்கமட்டுமே மனமிருந்தது.

பட்டாசு வேண்டாமே! என்று குழந்தைக்கு ஒரு உண்மை நரகாசுரானாக மாற யார்? தான் விரும்புவார்கள்?:D

வானவர்கோன்
08-11-2010, 03:22 PM
நண்பர்கள் ரவி, நம்பி இருவரின் கருத்துக்களை வாசித்தேன், நன்றி.

மூன்றாம் உலக நாடுகள் வெறும் சந்தைகளாக மட்டுமே இருப்பதால், இங்கு முதலாளித்துவவாதிகள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள், மரணத்தின் மதிப்பு மலிவானதாக இருப்பதால் தங்களின் நச்சு பண்டங்களை இலகுவில் விற்று பணத்தைப் பெருக்கிக் கொள்கின்றார்கள்.

இதன் வழியாகவே பட்டாசு வியாபாரமும் நம் நாடுகளில் மும்முரமாக இருக்கின்றது, பட்டாசுக்காக குழந்தை ஏங்குகின்றதே என்பதற்காக நாளைய சந்ததி அந்தகர்களாக தள்ளப்படக் கூடாது.

வளர்ந்த நாடுகளான ஐரோப்பிய நாடுகள் பட்டாசு வேடிக்கைகளை பொது இடங்களில் வைத்தே நடத்துகின்றன, அதுவும் பராயமடைந்தோர் மாத்திரமே வெடிக்க வைக்க வேண்டுமென கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளன, இந்த வெடியினால் ஏற்படும் விபத்துக்கள் பெருமளவு தவிர்க்கப்படுகின்றன.

காலப் போக்கில் வெடி வேடிக்கைகளை நிறுத்தும் யோசனைகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. உலக மாசடைவைத் தவிர்க்க எல்லா நாடுகளும் முன் வரும் போது நாம் மாத்திரம் இன்னும் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கின்றது.

குழந்தைகளை வளர்த்தெடுக்கும் பொறுப்பு பெற்றோரையே சார்ந்திருக்கும், முன் வீட்டு குழந்தைகள் வாண வேடிக்கை காட்டுகிறார்களே இதைப் பார்த்து எமது குழந்தைகளும் ஏக்கம் கொள்ளுமே, இவர்களுக்கும் பட்டாசு வாங்கிக் கொடுக்க வேண்டுமே என்பதெல்லாம் பிழையான வாதம், அவர்களின் கவனத்தைத் திருப்ப பல விளையாட்டு உத்திகள் நம் நாட்டில் மலிந்து உள்ளனவே!

அதன் தாக்கமே வேண்டும் மன மாற்றம் பதில் கவிதை.

nambi
08-11-2010, 04:06 PM
இல்லையே நான் ஏக்கம் கொண்டிருந்தேனே! அந்த வயதில்! அது தவறா?

இந்த கருத்துக்கள் எல்லாம் அப்போதும் இருந்தவைகள் தான்....

அகிம்சையை போதித்த மகாத்மா காந்தியும் ஒரு காலத்தில் குழந்தைதான்.....அவருடைய குழந்தை பருவத்தின் சுவாரசியங்களை அனுபவிக்காமல் இருந்திருக்க முடியாது...ஏக்கங்களை சுமக்காமல் இருந்திருக்க முடியாது...அனைவரும் வெளிப்படையாக ஒத்துக்கொள்ளமாட்டார்கள்...அவர்களின் மீதுள்ள மதிப்புமிக்க பார்வையின் காரணமாக...


அவரும் கூட பட்டாசு வெடித்துதான் இருப்பார்...3 வயதிலிருந்து 14 வயுது வரையுள்ளவர்கள் தான் இதற்கெல்லாம் ஆசை படுவார்கள்....

அந்த வயதில் எப்படி? இணையத்தில் வந்து கருத்து பரிமாற்றம் செய்யவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?:D..

விதிவிலக்குகள் இருக்கலாம்....ஒருசிலரை வைத்து இந்த உலகம் இல்லையே...:D

ஒன்று யாருமே பட்டாசு வெடிக்க கூடாது, அதற்கு தடைபோட்டு முற்றிலும் ஒழிக்க வேண்டும். (முதலில் அந்த தொழில் செய்யும் மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழிசெய்துவிட்டு ஒழியுங்கள்)...

அப்படியில்லாமல் அனைவரும் வெடிக்க என் மக்கள் மட்டும் வெடிக்காமல் ஏக்கத்துடன் இருந்து நாட்டுக்கு பெரிய முன்னுதாரணத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறுவதால் மட்டும் நாளையே தீர்வு ஏற்பட்டு விடப்போகிறதா? ஒருவர் இருவர்....மாறுவதால் ஏற்படக்கூடிய மாற்றங்களா இவைகள்? இந்த மாற்றங்களை எந்த குழந்தையாவது மனவுவந்து ஏற்று கொள்ளுமா?

நமது கொள்கைகள் வேறு.... குழந்தையின் மனநிலை வேறு? நாம் வேண்டுமானல் முன்னூதாரணமாக இருக்கலாம் இன்றைய நிலையில்...இது தேவையற்றது என்ற வாதத்தை வைக்கலாம்..எதையும் குழந்தையிடம் திணிக்க முடியாது...இதுவே ஒரு சர்வாதிகார மனப்பான்மை...

வருடத்தில் ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால் மட்டுமே காற்று மாசுபடுகிறது...


வாகனங்கள் வெளியிடும் புகையினால் கூடத்தான் காற்று மாசுபடுகிறது...365 நாளும் ஒரு வினாடி கூட இடைவிடாமல்...கார்பன் மோனாக்சைடு....ஏன் அதை தடை செய்யலாமே? நாம நடந்து போகனுமே?

(எப்பவுமே நமக்கு பிடிக்காதது யாருக்கும் பிடிக்க கூடாது என்பது குடும்ப உறவுகளில் பரவலாக உள்ள குறைபாடுதான்...)

தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் காற்று மாசுகள் கூடத்தான் வெப்பமயமாக்கலை ஏற்படுத்துகிறது.... இன்னும் எத்தனையோ விஷயங்கள் 365 நாளும் ஏற்படுத்துகிறது...அதை விடவா? இது?

எனக்கு புரியவில்லை இது எதை வலியுறுத்துகிறது என்று...?

ஓவியன்
11-11-2010, 01:44 AM
நன்மை தீமைகளை அறியாது குழந்தை மனம், நாம் தான் நன்மை தீமைகளை சொல்லிக் கொடுத்து அளவுடன், பாதுகாப்புடன் வாழ்ய்ம் வழி வகைகளை அவர்களுக்குக் காட்டிக் கொடுக்க வேண்டும்.

வாழ்த்துகள் வானவர்கோன் அவர்களே..!! :)