PDA

View Full Version : ""டூ இன் ஒன்'' - உண்மை நிகழ்ச்சி



ஆன்டனி ஜானி
07-11-2010, 03:18 PM
. இங்கிலாந்தின் அரசராக 1936ம் ஆண்டு எட்டாம் எட்வர்ட் இருந்தார். தன்னுடைய பாட்டியான, புகழ்பெற்ற விக்டோரியா மகாராணியின் குணங்களை நன்கு அறிந்தவர்.
அவர் சிறு வயதில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, அவரது ஆசிரியர் ஒரு நாள், ""சொர்க்கத்தில் எல்லா மனிதர்களும் ஒன்றாகவே கருதப்படுவர்,'' என்றார்.
அதற்கு எட்வர்ட், ""ஐயா! சொர்க்கத்தில் என்னுடைய பாட்டி விக்டோரியா மகாராணி கூடவா, எல்லாருடனும் ஒன்றாகக் கருதப்படுவார்?'' என்று கேட்டான்.
""ஆமாம்! சொர்க்கத்தில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பேதமில்லை. அரசனாக இருந்தாலும் சரி, அடிமையாக இருந்தாலும் சரி, ஒன்றாகவே கருதப்படுவர்!'' என்று சற்று விளக்கமாகக் கூறினார் ஆசிரியர். அதைக்கேட்ட சிறுவன் எட்வர்ட்டிற்குக் கோபம் வந்தது.
""என் பாட்டியை யாரென்று நினைத்துக் கொண்டீர்கள்? பிரிட்டனுக்கே மகாராணியாக இருந்தவர். அவரை மற்றவர்களுக்குச் சமமாக நடத்தினால் அது அவருக்குப் பிடிக்காது. ஆகவே, அவர் சொர்க்கத்திற்குச் செல்ல மாட்டார்!'' என்று சொன்னார்.
அதைக்கேட்டதும் விக்டோரியா மகாராணிக்கே சிரிப்பு வந்துவிட்டது. இந்த கதையில் நாம் புரிந்து கொல்லவேன்டியது சொர்க்கத்தில் உயர்ந்தவன்,தாழ்ந்தவன் பாகுபாடு கிடையாது............ ஒரே குலம்,ஒருவனே தேவன்

பாலகன்
07-11-2010, 03:54 PM
நல்ல கருத்துகள். மகாராணியார் சிரிப்பாக எடுத்துக்கொன்டு விட்டாரே :)

வானவர்கோன்
07-11-2010, 05:37 PM
கதை நல்ல கதை தான், ஆனால் எழுத்துக்களை பிழையற எழுதினால் சொற்கள் கொல்லப்படாமல் அமையும்!

ரங்கராஜன்
08-11-2010, 02:10 AM
கதை நன்றாக இருக்கிறது, நீதிகதைகள் மற்றும் நிஜசம்பவங்கள் பகுதியில் பதிக்க வேண்டிய கதையை ஏன்பண்பட்டவர் பகுதியில் பதித்தீர்கள் என்று குழப்பமாக இருக்கிறது சகாய ஆண்டனி......... பண்பட்டவர்கள் பகுதிக்கான நோக்கம் வேறு அதனால் நீங்கள் இந்த கதையை சாதாரண திரியிலே பதிக்கலாமே.....

ismhari
18-12-2010, 05:14 AM
நல்ல கருத்து

ஆன்டனி ஜானி
18-12-2010, 03:50 PM
இன்றைய ஏழை நாளைய
பணக்காரன்
இன்றைய மாணவர்கள் நாளைய
சொத்துக்கள்
இன்று மேலே இருப்பவன் நாளை
கீழே குதித்து தான் ஆகனும்
அது போல தான் இந்த கதையும் ...

அனைத்து பின்னூட்டத்திற்க்கும் நன்றிகள் .....

விகடன்
20-12-2010, 01:07 PM
தன்னை நன்கறிந்த பேரன் என்ற பெருமிதத்தில் சிரித்திருப்பாரோ??

அது சரி. விக்டோரியா மகாராணி தற்போது எங்கே இருக்கிறார்? சொர்க்கத்திலா? நரகத்திலா??

ஆன்டனி ஜானி
20-12-2010, 01:43 PM
நல்லது செய்தால் சொர்க்கம் கிடைத்திருக்கும்

வஞ்சக உள்ளம் படைத்தவருக்கு நரகம் தானே கிடைக்கும்

அவர் மகாராணியாக இருந்ததால் நரகம் தான் கிடைத்து இருக்கும்

றெனிநிமல்
22-12-2010, 08:18 AM
உயர்ந்தவன் தாழ்ந்தவன் சொர்க்கத்தில் இல்லை என்பதால் தான்
எங்கள் பரம்பரை இங்கேயே அனைத்து ஆசைகளையும் அதிகாரத்தோடு
அநுபவிக்கின்றது என்று பையன் எட்வேட் சொல்லாமல் விட்டாரே!