PDA

View Full Version : கர்ப்பமடைவதற்கு முன் தடுப்பூசி போடணும்!ஆன்டனி ஜானி
07-11-2010, 02:35 PM
"சீனாவில், "நாம் இருவர், நமக்கொருவர்' கொள்கையை பின்பற்றவில்லை எனில், அடி, உதை, தண்டனை, கட் டாய கருச்சிதைவு ஆகியவை நடத்தப்படுகின்றன' என, பத்திரிகை செய்திகள் கூறுகின்றனர். இங்கு நாம், எவ்வளவு குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். முன்பெல்லாம் இந்த நிலை தான் நீடித்தது. இப்போது தான், இங்கேயும், "நாம் இருவர், நமக்கொருவர்' என்ற கொள்கையைப் பின்பற்றுமாறு அரசு வலியுறுத்துகிறது.
சிலர், அந்த கொள்கையை பின்பற்றவும் துவங்கி விட்டனர். இந்தக் கொள்கையைப் பின்பற்ற, பல காரணங்கள் உருவாகி விட்டன. கூட்டுக் குடும்பச் சிதைவு, வேலைக்காக வெளியூர் செல்லும் நிர்பந்தம், குழந்தை பராமரிப்புக்கு தேவையான வசதியின்மை ஆகியவை உருவாகி விட்டன. குழந்தைகளை கவனித்து கொள்ளும் ஆயாக்கள் பற்றாக்குறை அல்லது அவர்களை பணியமர்த்த அதிக செலவு ஆகியவை, பெரும் பிரச்னைகளாக உள்ளன.
பெண்களும், முதுநிலைப் பட்டப்படிப்பு முடித்த பிறகே அல்லது நிரந்தர வேலையில் அமர்ந்த பிறகே, குழந்தை பெற்றுக் கொள்வது என்ற முடிவுக்கு வந்து விட்டனர். இதனால், அதிக சம்பளம், ஒரே ஒரு குழந்தை என்ற கொள்கையைப் பின்பற்றும் போக்கு அதிகரித்துள்ளது.
"எனக்கு தேவை ஒரு குழந்தை தான்' என்ற முடிவுடன் இருக்கும் வரை, பிரச்னை இல்லை. ஆரோக்கியமான குழந்தையாகப் பிறக்கிறதா, நல்ல முறையில் வளர்கிறதா என்பது தான் முக்கியமானதாக இருக்கிறது.
மகப்பேறு என்பது நோய் அல்ல என்றும், குழந்தை ஆரோக்கியமானதாக இருக்க, நாமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதை, பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டால், மகப்பேறு மாதங்களை எளிதாகக் கடக்கலாம்.
இளவயதில் சுறுசுறுப்புடன் இருப்பவர்களுக்கு, எலும்பும், தசை வளர்ச்சியும் நல்ல முறையில் அமையும். மகப்பேறு அடையும் வரை, சுறுசுறுப்பாகவே இருப்பவர்களுக்கு அதிக வாந்தி, வயிறு உப்புசம், தூக்கமின்மை ஆகியவை ஏற்படாது.
தினமும் 40 நிமிட நடைபயிற்சி போதுமானது. இது, கர்ப்ப காலத்தை எளிதாக்கும்; பிரசவத்தின் போது நீண்ட நேரம் வலி ஏற்படுவது தவிர்க்கப்பட்டு, சுகப்பிரசவம் ஏற்படும்.
ஒரு பெண்ணுக்கு, உடல் நிறை குறியீட்டெண் (பி.எம்.ஐ.,) 23 தான் இருக்க வேண்டும். உயரத்தை மீட்டரில் கணக்கிட்டு, அதன் இரு மடங்கால், கிலோவில் கணக்கிடப்பட்ட உடல் எடையை வகுத்தால், உடல் நிறை குறியீட்டெண் கிடைக்கும். இந்த எண் 23 என இருக்க வேண்டும்.
இதற்கு கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால் பிரச்னை தான். குறைவாக இருந்தால், சத்தான உணவு சாப்பிட வேண்டும். அதிகமாக இருந்தால், சரியான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு கடைபிடித்து, உடல் எடையைக் குறைக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தின் போது, தொற்று நோய்களான ருபெல்லா, அம்மை, மஞ்சள் காமாலை, தசை இறுக்கி நோய் ஆகியவை ஏற்பட்டால், தாய் - சேய்க்கு ஆபத்து. இந்த நோய்களுக்கு, தடுப்பு மருந்து உண்டு.
திருமணம் நிச்சயம் செய்துள்ள பெண்கள், திருமணத்திற்கு மூன்று மாதத்திற்கு முன், இத்தகைய தடுப்பூசிகளை போட வேண்டும். மூளை மற்றும் நரம்பு பாதிப்புகளை தவிர்க்க, தினமும் ஐந்து மி.லி., கிராம் போலிக் அமிலம் சத்து உட்கொள்ள வேண்டும்.
கர்ப்பிணியோ, அவர் அருகாமையில் யாரா வதோ, புகைபிடிக்கக் கூடாது. இந்தியாவில் ஆண்டுதோறும் பிறக்கும் 25 லட்சம் குழந்தைகளில் ஒன்றரை சதவீத குழந்தைகள், மூளை அல்லது உடல் வளர்ச்சி குறைபாடுடன் பிறக்கின்றனர். அவர்களில் 6 சதவீதத்தினர், உடலின் வளர்சிதை மாற்றத்தில் குறைபாட்டுடன் உள்ளனர்.
அதற்கு பரம்பரையான, ஒரே ஒரு மரபணு கூட காரணமாக அமையலாம். பிறந்த குழந்தைகள், நோயை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை அல்ல. குழந்தை பிறந்த சில நாட்களிலேயே வளர்சிதை மாற்றக் குறைபாடு ஏற்பட்டால், அதை கண்டுபிடிக்கும் நேரத்திற்குள் குழந்தைக்கு நிரந்தர பாதிப்பு ஏற்படலாம் அல்லது இறந்து போகவும் வாய்ப்பு உண்டு.
பிறந்த குழந்தையின் காலைச் சுரண்டி ஒரே ஒரு சொட்டு ரத்தம் எடுத்து, அதைப் பரிசோதித்து, குழந்தையிடம் குறைபாடு ஏதும் உள்ளதா என்று கண்டறியும் முறை, 1960ல் அமெரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்தப் பரிசோதனையை, குழந்தை பிறந்த உடனேயே மேற்கொண்டால், மூளைச் செயல்பாட்டில் மாறுபாட்டைத் தவிர்க்கக் கூடிய உணவுகளைக் கொடுத்து, குழந்தையைக் காப்பாற்றலாம்.
இந்தியாவில் கூட, மரபணு, ரத்தம், வளர்ச்சி, சுரப்பி ஆகியவை தொடர்பான 50 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உடனடி பரிசோதனை, குழந்தையின் உயிரைக் காக்கும்.
இந்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய பெற்றோர் யார்?
* நெருங்கிய உறவினரை திருமணம் செய்து கொண்டோர். பலவகை மக்கள், கலாசார வழக்கமாக, இதுபோன்று திருமணம் செய்து கொள்கின்றனர். இதனால், செயல்திறன் குறைந்த மரபணுக்களைக் கொண்ட குழந்தைகள் பிறக்க வாய்ப்பு ஏற்படுகிறது. இந்த மரபணுக்களே, மேலே குறிப்பிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
* குடும்ப உறுப்பினர்களிடையே காணப்படும் அறிகுறிகளை வைத்தே, இதுபோன்ற கோளாறுகளை கண்டறிந்து விடலாம். இதற்கு பரிசோதனையே தேவையில்லை. பிறந்த உடனேயே குழந்தை இறப்பது, வளர்ச்சியில் தாமதம் போன்ற அறிகுறிகள் தென்படும். இதுபோன்ற பிறப்புகள், அவற்றின் மூதாதையரிடையே உள்ள குறைபாட்டைச் சுட்டிக் காட்டும்.
* கர்ப்பம் தரிப்பதில் தாமதம் ஏற்படுதல், செயற்கை கருவூட்டல், சோதனைக் குழாய் முறையில் குழந்தை வளர்ப்பு ஆகியவற்றை மேற்கொள்வோருக்கு இதுபோன்ற முறையில் பிறக்கும் குழந்தைகள் மிக அரிது. இவ்வகை பிரசவத்திற்கு செலவும் அதிகம்.
வளர்ந்த நாடுகள் சிலவற்றில், இதுபோன்ற பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில், சுகாதாரத் திட்டத்தில், இவ்வகைப் பரிசோதனையை சேர்ப்பது, கூடுதல் செலவுக்கு வழி வகுக்கும். தனியார் மருத்துவமனைகளில், கர்ப்பிணிகளுக்கென தனி பராமரிப்பு, கூடுதல் மருத்துவர்கள், வசதியான அறைகள் என, மகப்பேறு செலவு அதிகரித்தாலும், குழந்தை பிறந்த உடனேயே மேற்கொள்ளக் கூடிய இந்த பரிசோதனைக்கு, குறைந்த செலவு தான் ஆகும். பரிசோதனை முடிவும் 24 மணி நேரத்திற்குள் கிடைத்து விடும். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உடனே சிகிச்சை மேற்கொள்ள வசதியாக இருக்கும். எனவே, பிரசவம் வரை செலவு செய்த பிறகு, குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும் இப்பரிசோதனைக்கென குறைந்த செலவு செய்வதை, அதிக சுமையாகக் கருத வேண்டாம்

ஓவியன்
07-11-2010, 02:42 PM
நண்பரே, இந்த செய்தியின் மூலத்தினைக் கூறி நன்றி சொல்வதன்றோ தமிழ் மன்ற பண்பு...

ஆன்டனி ஜானி
07-11-2010, 02:45 PM
இதனை முழுவதும் படித்து அனைவரும் பயன்பெற வாழ்த்துக்கள் நன்றி..........

srivinoth
19-12-2010, 04:55 PM
போலிக் அமிலம் விற்றமின்களை, குழந்தையை பெற்றுக்கொள்ள திட்டமிடும் போதே அதாவது உடலுறவுக்கு முன்னரே எடுத்தல் மிகுந்த பலனை அளிக்கும்.