PDA

View Full Version : வேண்டும் மன மாற்றம்Ravee
07-11-2010, 09:54 AM
http://lh5.ggpht.com/_ija4A80-p4I/TNaEuLJC3FI/AAAAAAAAAVk/cTVGY0-Gjvw/sad.JPG


வேண்டும் மன மாற்றம்


இனிப்புக்கள் எல்லாமே இனித்தன

வாணங்கள் எல்லாமே வண்ணம் சொரிந்தன

குழந்தைகள் மனதில் குதுகலிப்பு

பெரியவர்களுக்கு ஏன் இது புரிவதில்லை

பிஞ்சு உள்ளங்களின் சந்தோசங்களை கொய்து .....

குழந்தைக்கு கொடுத்த இனிப்புக்கள் ஏன் குப்பைக்கு போகவேண்டும் ?

எல்லா கடவுளும் சந்தோசத்திற்குத்தானே ?

விடுமுறைகளை பங்கு போட்டுக்கொள்ளும் மனதோடு

விழாக்களிலும் பங்கெடுத்தால் என்ன .....???

ஓவியன்
07-11-2010, 10:03 AM
இனிப்புக்களையும், இனிமைகளையும்
இழந்த அந்த குழந்தைகளின்
பெற்றோரும் முன்னொரு நாளில்
இனிப்புக்களையும், இனிமைகளையும்
இழந்திருப்பார்கள்
தாமும் குழந்தைகளாக இருக்கையில்.....

ஆமாம், தமக்கு ஊட்டியதை
தம் சந்ததிக்கும் ஊட்டுகிறார்கள்
அதில் கொஞ்சமும் வஞ்சகமில்லாமல்.......!!

Ravee
07-11-2010, 11:49 AM
உண்மை ஓவியன், வியாதிக்கு மருந்து அறியாமல் விஷத்தை உண்டு இன்னும் விஷமாகி கொண்டே போகின்றோம் ... விடிவு காண்பதேப்போது ? :confused:

வானவர்கோன்
07-11-2010, 06:18 PM
வேண்டும் மன மாற்றம் பதில் கவிதை (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=499414#post499414) பதிவு செய்துள்ளேன் ரவி.

அமரன்
07-11-2010, 06:27 PM
ரவீ...

என்ன நினைத்து எழுதினீர்களோ தெரியாது.

எனக்குப் பேதத்தால் ’மறை’யும் மன நல்லிணக்கம் கருப்பொருளாகத் தெரிகிறது.

ஒவ்வொரு இனத்துக்கும் விழுமியங்கள் என்றழைக்கப்படும் சிறப்பியல்புகள் உண்டு. அவற்றைச் சுமந்து வருபவைகளில் விழாக்களுக்கு முக்கிய இடமுண்டு.

விழாக்களால் நாமடையும் பிரதானப் பயனென நான் நினைப்பது புரிந்துணர்வு. உலகின் பல பிரச்சினைகளுக்குக் காரணம் புரிந்துணர்வின்மை என்பது வெளிப்படை உண்மை.

இதை எல்லாம் சிறியவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். பெரியவர்கள் முரண்டு பிடிக்கிறார்கள்.

பேதங்கள் மறந்து விழாக்களைக் கொண்டாட எப்போதும் என்னாதரவு!!

கவிதைக் கர்த்தாக்கு என் வன் கண்டனம்.

அமரன்
07-11-2010, 06:29 PM
இதற்குப் கவிப்பதில் அளித்துள்ளார் வானவர்கோன்..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=25087

கீதம்
07-11-2010, 08:27 PM
தகர்க்கப்பட்ட இலக்கு மட்டுமே இங்கே! தாக்கிய கணை எதுவோ?

கரு உருவான கதை தெரியாததால் என்னவென்று புரிந்துகொள்ளமுடியவில்லை, ரவி.

Ravee
08-11-2010, 11:37 AM
ரவீ...

என்ன நினைத்து எழுதினீர்களோ தெரியாது.

எனக்குப் பேதத்தால் ’மறை’யும் மன நல்லிணக்கம் கருப்பொருளாகத் தெரிகிறது.

ஒவ்வொரு இனத்துக்கும் விழுமியங்கள் என்றழைக்கப்படும் சிறப்பியல்புகள் உண்டு. அவற்றைச் சுமந்து வருபவைகளில் விழாக்களுக்கு முக்கிய இடமுண்டு.

விழாக்களால் நாமடையும் பிரதானப் பயனென நான் நினைப்பது புரிந்துணர்வு. உலகின் பல பிரச்சினைகளுக்குக் காரணம் புரிந்துணர்வின்மை என்பது வெளிப்படை உண்மை.

இதை எல்லாம் சிறியவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். பெரியவர்கள் முரண்டு பிடிக்கிறார்கள்.

பேதங்கள் மறந்து விழாக்களைக் கொண்டாட எப்போதும் என்னாதரவு!!

கவிதைக் கர்த்தாக்கு என் வன் கண்டனம்.

அமரன் தெளிவாக என் சிந்தனையை படம் பிடித்துள்ளீர்கள். கர்த்தாவை கண்டனம் செய்ய வேண்டியதில்லை . அவர்களுக்கும் புரிதல் வந்தால் நல்லதுதானே... சில கருத்துக்களை குழந்தைகள் மேல் வலிமையாக திணிப்பதை நான் வெறுக்கிறேன். அன்பு காதல் போல இறை உணர்வும் அதுவாக ஏற்ப்படும் வரை காத்திருப்பதே சிறப்பு என நினைக்கிறேன்.

Ravee
08-11-2010, 11:44 AM
தகர்க்கப்பட்ட இலக்கு மட்டுமே இங்கே! தாக்கிய கணை எதுவோ?

கரு உருவான கதை தெரியாததால் என்னவென்று புரிந்துகொள்ளமுடியவில்லை, ரவி.


இதை வெளிப்படையாக பேச முடியாத காரணத்தால் நாகரீகம் காக்கிறேன் கீதம். சிலரின் மதம் பற்றிய குறுகிய மனப்பான்மையை குழந்தைகள் மேல் காட்ட வந்த கோபம்தான் இது ... இப்போது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.

nambi
08-11-2010, 02:44 PM
சமயத்தில் சமயக் கற்பனையான கடவுள்கள் கூட தீண்டத்தகாதவர்களாக மாறிவிடுவதுண்டு....அந்தக்கடவுள் சாப்பிட்ட பலகாரத்தை சாப்பிட்டால் (படைக்கும் போது சாப்பிடுகிறார் அல்லவா?).....இந்தக் கடவுள் கோபித்துக்கொள்ளமாட்டாரா? சமயத்திலிருந்து விலக்கினாலும் விலக்கி விடுவார்.

பசிவந்தால் பத்தும் பறந்து விடும்....அதனால் தான் பகுத்தறிவும், சுயமரியதை உணர்வு கொண்ட பெரியார் கூட எச்சில் இலையில் இருந்த உணவை உண்டாரோ?

.நண்பன் கூறினான் இது எச்சி...நான் சாப்பிட்டு விட்டேன்டா? வேற எடுத்து வரேன்டா? அட கொடுடா நமக்குள் என்ன வேண்டிக்கிடக்கிறது...

(இன்னும் எவ்வளவோ இருக்கிறது....)

சமூகத்திற்கு தேவையானப்பதிவு...பகிர்வுக்கு நன்றி!

கீதம்
08-11-2010, 10:18 PM
விளங்கிக்கொண்டேன் ரவி.

எனக்கு ஒரு சகோதரியைத் தெரியும். அவர், அவர் கணவர் இருவருமே கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். காதல் மணம். ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு.

எல்லாப்பண்டிகையும் கொண்டாடுவார்கள். தீபாவளிக்கு பலகாரம் செய்வார்கள். கார்த்திகை தீபம் ஏற்றுவார்கள். கிறிஸ்துமஸ் சமயத்தில் குடில் சோடிப்பார்கள்.வாசலில் நட்சத்திரம் கட்டுவார்கள். கேக் செய்வார்கள். இஸ்லாமியப் பண்டிகைகளின்போது நண்பர்களை அழைத்து பிரியாணி செய்து உண்பார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதபோதும் குழந்தைகளிடம் வேறுபாடு காட்டி வளர்க்க விரும்பவில்லை என்று சொல்வார்கள்.

அன்று என் மனதில் பதிந்த நிகழ்வுகளை இன்று உங்கள் மனவருத்தம் கண்டு இங்கு பதிக்கத் தோன்றியது.

தாமரை
09-11-2010, 12:24 AM
பண்டிகைகள் திருவிழாக்கள் போன்றவை கலாச்சாரம் வளர்ப்பவை. ஒவ்வொன்றின் பின்னாலும் பல த்துவங்கள், கருத்துகள் உண்டு.

பகிர்ந்துண்ணல், கலை நுகர்ச்சி, மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ளுதல், தூய்மை பேணுதல் என எத்தனையோ விஷயங்கள் இந்தக் கொண்டாட்டங்களுக்குப் பிண்ணனியில் உண்டு.

குழந்தைகளுக்காவே பல கொண்டாட்டங்கள் உண்டு. நமது பண்பாட்டை, கலாச்சாரத்தை நிலாச்சோறு போல பண்டிகைகள் என்னும் நிலாவைக் காட்டியே நாம் ஊட்டுகிறோம்.

எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுதலே இந்தியக் கலாச்சாரம். நம்மிடம் வந்து சேர்ந்த அத்தனைக் கலாச்சாரக் கொண்டாட்டங்களியும் ஒன்று விடாமல் கொண்டாடுகிறோம்.

ஆனால் சில காலங்களாக பரவி வரும் கலாச்சார மாறுதல்களில் வழக்கமான பண்டிகைகளை கொண்டாடும் உற்சாகம் பெரியவர்களிடையே குறைந்து வருகிறது. சம்பிரதாயத்திற்காக மேலோட்டமாகக் கொண்டாடுதல்தான் உள்ளது.

கூட்டுக் குடும்பங்கள் உடைந்ததாலும், குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்ததாலும் இன்று தலைமுறை இடைவெளிகளை நிரப்ப முடியாத அளவிற்கு அகலப்பட்டு உள்ளன. எனவே இக்கலாச்சார விழாக்கள் கொண்டாடும் உற்சாகம் வடிந்தே போய்விடுகிறது. தலை முறை இடைவெளியின் காரணமாக பண்டிகை கொண்டாடும் உற்சாகமிழந்த தந்தைகளைப் பார்க்கிறோம். அதே சமயம் மிக ஆடம்பரமாக தங்கள் பணபலத்தைக் காட்டுபவர்களையும், அந்த ஆராவரங்களைப் பார்த்து ஏக்கத்தில் விரியும் ஏழைக் குழந்தைகளையும்.. பண்டிகையை ஒரு பொருட்டாக எண்ணாத படித்த வர்க்கத்தையும் இன்று காண்கிறோம்.

இனிப்பு என்பது முழுதும் கெடுத்தியல்ல. சொல்லப் பொனால் கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்துதான் எரிபொருள். அதை உண்டால் அதற்குரிய அளவிற்கு சக்தியைச் செலவிட வேண்டும். சோஃபாவில் உடகார்ந்து கொண்டு தொலைக்காட்சி பார்த்தோ அல்லது சோம்பலாய் படுத்துக் கொண்டோ இருந்தால் அத்தனை வியாதிகளும் வரத்தான் செய்யும். பகிர்ந்து உண் என்னும் வழக்கத்தையும் பண்டிகைகள் சொல்லுகின்றன. நாமோ அவற்றை நமக்கு யார் உபயோகமாய் இருப்பாங்களோ அவர்களுக்கு அட்வான்ஸ் இலஞ்சமாகவே தருகிறோம்.

மதச்சார்பின்மை என்பது அரசியல்வாதிகளின் முழக்கமாக இருந்தாலும் இந்தியாவின் இறையாண்மை மத நல்லிணக்கம்தான். எந்த மதமுமே தீய கருத்துக்களை சொல்லும் நோக்கத்துடன் பண்டிகைகள் கொண்டாடுவதில்லை.

நல்லவன பலவற்றை பல மதங்கள் ஒன்றிடம் இருந்து இன்னொன்று சுவீகரித்துக் கொண்டுள்ளன.

குழந்தைகள் இல்லாத வீட்டில் பண்டிகைகள் அத்தனை உற்சாகமாகக் கொண்டாடப்படுவதில்லை. கொண்டாட்டங்கள் எல்லாமே குழந்தைகளை முன்னிறுத்தியே இருக்கும். குழந்தைகள் இல்லா வீட்டில் தீபாவளியோ, பொங்கலோ, கிறிஸ்துமஸ்ஸோ, ரம்ஜானோ வழிபாடுகளும் அமைதியான காரியங்களும் நிறைந்ததாகவோ மட்டுமே இருக்கும்.

கொண்டாட்டங்கள் குழந்தைகளுக்கானவை. பெரியவர்களின் மன இறுக்கத்திற்காக குழந்தைகளின் சந்தோஷத்தைப் பலியிடுதல் என்பது சற்றும் ஞாயமில்லை..

பண்டிகைகளால் கிடைக்கும் சலுகைகளை உபயோகித்துக் கொள்ள கூச்ச உனர்வு உண்டாவதில்லை. அதில் நேரடி இலாபம் கண்ணுக்குத் தெரிகிறது. அதையும் விடுங்கள். போட்டிகள் நிறைந்த வியாபார உலகில் எந்த வியாபாரத் ஸ்தாபனமும் பண்டிகைகளை முன்னிட்டு வரும் விற்பனைப் பெருக்கத்திற்காக விளம்பரங்கள், உற்சாகப் பரிசுகள் அளித்து உற்சாகமாய் பங்கெடுத்துக் கொள்ளும்.

தீபாவளிச் சிறப்புத் தள்ளுபடி என்பது சாதி.மத, இன வித்தியாசமில்லாமல் எல்லாக்கடைக்காரர்களாலும் தரப்படும். நாங்கள் தீபாவளி கொண்டாடுவதில்லை. அதனால் தள்ளுபடி இல்லை என்று சொன்னால் கடையை மூடிவிட்டுப் போக வேண்டியதுதான். இங்கே அதே கண்டிப்பைக் காட்டமுடியாதில்லையா?

அப்போ ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல குழந்தைகளின் ஆசைகள்தான் இந்த விஷயங்களில் பலியிடப்படுகின்றன.

இத்தனைக் கருத்துக்களையும் ஒரு சின்ன கவிதையில் அடைப்பது அகத்தியன் மாதிரிக் கடலை குடலுக்குள் அடைப்பதற்குச் சமம். இதைச் சின்ன தொடர் கதையாக முயற்சி செய்திருந்தால் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக நல்ல குத்தலுடன் சொல்லி இருக்கலாம்.

அதாவது குழந்தைகளுக்கு கொண்டாட்டங்களை மறுப்பவர்கள் வெட்கமின்றிச் சலுகைகள் அனுபவிப்பதை இரண்டு மூன்று காட்சிகளாக வடிவமைத்து பின் பண்டிகைகள் - குழந்தைகள் பிணைப்பை பண்டிகையை அமைதியாகக் கொண்டாடும் குழந்தையில்லாக் குடும்பங்களின் அமைதியான வேண்டுதலுடானன கொண்டாட்டத்துடன் சொல்லி பண்டிகைகள் குழந்தைகளுக்கேச் சொந்தம் அதை மட்டும் மறுத்து விட்டு மற்றச் சலுகைகளை அனுபவிக்கும் வேடிக்கை மனிதர்களுக்கு ஒரு கேலியான கேள்வியுடன் கதையை முடித்திருக்கலாம்.

இப்பவும் ரொம்பவும் தாமதம் இல்லை. எழுதலாம்.

பென்ஸ்
09-11-2010, 12:30 AM
ஐய்யா சாமி, நானும் ரம்சானுக்கு பிரியானியும், தீபவளிக்கு முறுக்கும், கார்த்திகைக்கு கொழுக்கட்டையும், கிறிஸ்துமஸுக்கு கேக்கும் சாப்பிடுவோமாக்கும்...
ஆனா எல்லா பண்டிகைக்கும் என் கையில் இருந்து "பிடுங்கி தின்னுசாம் அனுமாரு" அப்படின்னு எல்லோரும் பறிக்கிறங்களே தவிர கொடுப்பதில்லை...
சரி கவிதைக்கு வருவோம்...
சாதி...
மதம்...
என்று எத்தனை பெயரில் தவறான தடைகளை பிள்ளைகளுக்கு முளைக்கும் முன்னே விஷ உரம் இடுகிறோம்... மாற வேண்டியோர் அனேகர்....

பென்ஸ்
09-11-2010, 12:31 AM
நல்ல பின்னூட்டம் தாமரை...

Ravee
09-11-2010, 03:54 AM
இத்தனைக் கருத்துக்களையும் ஒரு சின்ன கவிதையில் அடைப்பது அகத்தியன் மாதிரிக் கடலை குடலுக்குள் அடைப்பதற்குச் சமம். இதைச் சின்ன தொடர் கதையாக முயற்சி செய்திருந்தால் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக நல்ல குத்தலுடன் சொல்லி இருக்கலாம்.

அண்ணா அருமையான விளக்கம் , நடைமுறையில் பிரச்சனைகளுடன் எழுந்து பிரச்சனைகளோடு பொழுதை கழிக்கும் நமக்கு பண்டிகைகள் ஒரு புத்துணர்வு கொடுக்கும் மருந்து. சிறிய வயதில் இருந்து என் பெற்றோர்கள் எங்களை கிறிஸ்துமஸ் சமயத்தில் சர்ச்சுக்கு அழைத்து போவார்கள் . கேக் வாங்கி களிப்போம் , ரம்ஜான் சமயத்தில் நோன்பு கஞ்சி உண்போம் , மதங்களோ மனிதர்களோ அன்னியமாக படவில்லை . அதே போல பல நண்பர்கள் எங்களை போல எங்கள் வீட்டு திருவிழாவில் ஒன்றாய் கூடி களிப்போம். ஆனாலும் ஒரு சிலர் செய்யும் தவறை சுட்டிக்காட்டவே விரும்பினேன். ஆசை பட்டு ஒரு இனிப்பை வாங்கிய குழந்தை கையை தட்டி விட்டு கிழே விழுந்துடுச்சி என்று அற்பமாக ஒரு காரணம் சொல்லி குப்பையில் போட்ட செயல் அந்த குழந்தையை மட்டும் அல்ல என் குழந்தையும் பாதித்தது. நம்ம வீட்டில அவங்க சாப்பிட்டா தப்பா அப்பா என்று கேட்க்கும் போது என்ன சொல்வது என்று எழுந்த ஆதங்கம் தான் இந்த கவிதை .

Ravee
09-11-2010, 03:57 AM
[QUOTE=பென்ஸ்;499614]ஐய்யா சாமி, நானும் ரம்சானுக்கு பிரியானியும், தீபவளிக்கு முறுக்கும், கார்த்திகைக்கு கொழுக்கட்டையும், கிறிஸ்துமஸுக்கு கேக்கும் சாப்பிடுவோமாக்கும்...
ஆனா எல்லா பண்டிகைக்கும் என் கையில் இருந்து "பிடுங்கி தின்னுசாம் அனுமாரு" அப்படின்னு எல்லோரும் பறிக்கிறங்களே தவிர கொடுப்பதில்லை...

QUOTE]

பென்ஸ் அடுத்த முறை எந்த பண்டிகை என்றாலும் பரவாயில்லை மதுரை வாங்க ஜமாய்ச்சுடுவோம் .... :lachen001:

Ravee
09-11-2010, 04:06 AM
சமயத்தில் சமயக் கற்பனையான கடவுள்கள் கூட தீண்டத்தகாதவர்களாக மாறிவிடுவதுண்டு....அந்தக்கடவுள் சாப்பிட்ட பலகாரத்தை சாப்பிட்டால் (படைக்கும் போது சாப்பிடுகிறார் அல்லவா?).....இந்தக் கடவுள் கோபித்துக்கொள்ளமாட்டாரா? சமயத்திலிருந்து விலக்கினாலும் விலக்கி விடுவார்.

பசிவந்தால் பத்தும் பறந்து விடும்....அதனால் தான் பகுத்தறிவும், சுயமரியதை உணர்வு கொண்ட பெரியார் கூட எச்சில் இலையில் இருந்த உணவை உண்டாரோ?

.நண்பன் கூறினான் இது எச்சி...நான் சாப்பிட்டு விட்டேன்டா? வேற எடுத்து வரேன்டா? அட கொடுடா நமக்குள் என்ன வேண்டிக்கிடக்கிறது...

(இன்னும் எவ்வளவோ இருக்கிறது....)

சமூகத்திற்கு தேவையானப்பதிவு...பகிர்வுக்கு நன்றி!

பெரியாருக்கும் சிலை நிறம் உடை என ஒரு உருவகம் கொடுத்து அவரையும் ஒரு அடையாளத்துக்குள் அடைத்து விட்டார்கள் நம்பி , மக்களுக்கு வேண்டியது ஒரு புள்ளி அதை பின்பற்றி ஆட்டு மந்தை போல போவதே வழக்கமாகி விட்டது. ஜே கிருஷ்ணமூர்த்தி சொல்வது போல தனிமனிதனுக்கு தலைவன் தேவை இல்லை அவர் அவர் பாதையை அவர்களே காணவேண்டும் என்ற தத்துவம் எனக்கு பிடிக்கும்.

ஆதவா
09-11-2010, 05:15 AM
நல்ல கருத்துள்ள கவிதை ரவீயண்னே.

முன்பு ஒருகாலத்தில் எங்கள் வீட்டில் ரம்ஜான் கொண்டாடுவோம்.... கொண்டாடுவோம் என்றால் எப்படி..... அன்று தீபாவளையைப் போலவே ஸ்பெஷல் பிரியாணி உண்டு!! வருடாவருடம் தீபாவளியன்று சிக்கன் பிரியாணி, ரம்ஜான் அன்று தலை + மட்டன் பிரியாணி... உண்மையில் தீபாவளி அன்று தெருவே “கொளுத்திக்” கொண்டிருக்க.... நான் மட்டும் விளக்கேற்றி கொண்டாடினேன்....
கிறிஸ்மஸ் அன்று இரண்டு பலூன்கள்... அதுகூட கிறிஸ்மஸ் கொண்டாட்டமாகத்தான் தெரிந்தது!!
இப்பொழுதோ எதுவும் இல்லை.
யாருக்கும் தனிப்பட்ட முறையில் அழைத்து வாழ்த்தும் கூற மனமில்லை...
எல்லா தினங்களும் ஒரே தினங்கள் தான்!!
ஆயுத பூஜை (தொழிலே தெய்வம்)
சரஸ்வதி பூஜை (அறிவே தெய்வம்)
பொங்கல் (உணவே தெய்வம்)
ஆகியன தவிர வேறெதுவும் நினைவில் நிற்பதுமில்லை!!
இவை மூன்றும் எந்த மதமும் சாராத பொதுப்பண்டிகைகள்!!

எங்கள் வீதிக்குப் பின்புறம் இசுலாமிய மக்கள் வாழும் வீதிகள் உண்டு.. அங்கேயும் தீபாவளி கொண்டாட்டங்கள் உண்டு. சிறப்பு மட்டுமில்லை... அவ்வளவுதான்!
யாரும் யாரையும் கொண்டாடுவதையோ, கொண்டாட மறுப்பதையோ வற்புறுத்துவது எனக்குப் பிடிப்பதில்லை!!

இவையாவும் என் அனுபவங்கள்..

கவிதை என்பது அறிவுரை சொல்லுவது என்ற கட்டமெல்லாம் தாண்டி பலவருடங்களாகிவிட்டன. மீண்டும் ஒரு அறிவுரைக் கவிதை.. ஆனால் கவிதையையும் அழகாகக் கட்டவேண்டும்.... அழகான வீடுகளைப் போல... இங்கே கட்டப்பட்டது அவ்வாறில்லை. கொஞ்சம் ஆழமாக ஊன்றி சொல்லியிருந்தாலோ அழுத்தமான வார்த்தைகளால் எழுதப்பட்டிருந்தாலோ இன்னும் கொஞ்சம் கவிதாபாணி கிடைத்திருக்கும்!!

@ தாமரை அண்ணா..
அருமையான பின்னூட்டம்..
பொதுவாக எனக்கு இரண்டு விதமாகத் தோணுவதுண்டு.
முதலாவது எல்லா பண்டிகைகளையும் கொண்டாடுவது மதநல்லிணக்கத்தை வளர்க்கும்
இரண்டாவது எல்லா பண்டிகைகளையும் தவிர்ப்பதாலும் மதசார்பின்மை நிரூபிக்கலாம்..
என்றாலும் நான் ஒரு இந்து என்ற எண்ணம் என்னுள் ஆழமாகவே புதைந்து கிடப்பதை மட்டும் என்னால் வெளியேற்ற முடியவில்லை! உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமெனில், ஒரு தீபாவளியை சிறுதுளியேனும் எதிர்பார்க்கும் நான், ரம்ஜானையோ கிறிஸ்மஸையோ அல்லது வேறெந்த இந்துமத சார்பற்ற பண்டிகையையோ எதிர்பார்க்க முடியவில்லை!! நான் வேண்டுமானால் “அப்படியெல்லாம் இல்லை எல்லா மதமும் ஒன்றாகத்தான் பார்க்கிறேன்” என்று ஸ்டேட்மெண்ட் விடலாம். ஆனால் உண்மையென்னவெனில், ஒரு துளியேனும் தான் இன்ன மதத்துக்காரன் எனும் எண்ணம் நீங்குவதேயில்லை.

கவிதையும் பின்னூட்டமும் மிக அருமை!!! வாழ்த்துக்கள் ரவீயண்ணே!!

ஆதி
09-11-2010, 06:59 AM
இத்தனைக் கருத்துக்களையும் ஒரு சின்ன கவிதையில் அடைப்பது அகத்தியன் மாதிரிக் கடலை குடலுக்குள் அடைப்பதற்குச் சமம். இதைச் சின்ன தொடர் கதையாக முயற்சி செய்திருந்தால் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக நல்ல குத்தலுடன் சொல்லி இருக்கலாம்.அண்ணா, கவிதையின் பலமே கதையையும் கவிதையில் சொல்ல முடிவது தானே..

நீங்கள் எடுத்தக்களம் சரி, இன்னும் கவனமாய் கையாண்டிருந்தால் கவிதை பல தளங்களுக்கு விரிந்திருக்கும்..

கவிதைக்காக உங்களுக்கும், விளக்கமான பின்னூட்டம் எழுதிய தாமரை அண்ணாவிற்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும்...

மதமென்றும் சாதியென்றும் மற்றப்பிற மாண்பென்றும்
சதமற்ற வாழ்க்கையிலே சகடானேன் பராபரமே!
விதமான பிரிவிணையில் விரிசலுற்ற என்மனதை
பதமான பாதைக்கு பழக்கிடுவாய் பராபரமே!

தாமரை
09-11-2010, 07:31 AM
அண்ணா, கவிதையின் பலமே கதையையும் கவிதையில் சொல்ல முடிவது தானே..

நீங்கள் எடுத்தக்களம் சரி, இன்னும் கவனமாய் கையாண்டிருந்தால் கவிதை பல தளங்களுக்கு விரிந்திருக்கும்..

.

இதனை இதனான் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

முதலில் விளக்கமாக யோசிக்க தெரிந்து கொள்ள வேண்டும்

அடுத்ததாய் யோசித்ததை கோர்வையாக்கி சொல்ல நினைத்ததை முழுதும் சொல்ல அறிந்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாய் சொல்ல வந்ததை மிகக் கச்சிதமாக சொல்லப்பழக வேண்டும்

அடுத்ததாய்தான் மற்ற அத்தனை வேலைகளும்..

எழுதப் பழகுபவர்கள் இப்படி எழுதப் பழகினால் மிகச் சிறந்த படைப்பாளிகளாக உயரலாம்.

பிற்காலத்தில் அவர்களின் படைப்புகள் செறிவு நிறைந்ததாக வெளிவரும்.

இரவி இப்பொழுது எந்தப் படியில் இருக்கிறார் என்று அவருக்கு சரியாகத் தெரியும். முழுமையான பயிற்சி அடைந்த பிறகு நீங்கள் சொல்லும் மேடையில் அவர் ஒளிருவார்.

Ravee
09-11-2010, 12:42 PM
உங்கள் அனைவரின் தயவில் ஏறுமுகமாக இருக்கிறேன் ... அனைவருக்கும் நன்றி :)