PDA

View Full Version : தொலைந்து போனவன் விட்டுச் சென்ற குறிப்புகள்:



rambal
19-11-2003, 08:24 AM
தொலைந்து போனவன் விட்டுச் சென்ற குறிப்புகள்:

பின்நவீனத்துவம் சில விளக்கங்கள்..

பின்நவீனத்துவம் என்பது
1. இதுவரை சொல்லி வந்த சித்தாந்தங்களை மறுப்பது.
2. கடவுள் மீறிய விஞ்ஞானத்தில் அதீதப் பற்றில் அதை ஆராய்வது.
3. இதுவரை சொல்லப்பட்ட தத்துவங்கள் அத்தனையையும் குப்பைத்தொட்டியில் போடுவது.
4. அதீத கற்பனை.
5. சகித்துக் கொள்ள முடியாத முகத்தில் அறையும் உண்மைகளை மட்டும் சொல்வது.

இவைகளே பின் நவீனத்துவத்தின் முக்கியமான சாராம்சங்கள் ஆகும்..

எனது முந்தைய நாவல் முயற்சி (முடிவிலி) என்பது பின் நவீனத்துவ முயற்சியே ஆகும். இப்பொழுது
இந்த குறுநாவலும் அத்தகைய முயற்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை ஆகும்.
ஏன், நான் இது போன்ற முறையில் எழுத வேண்டும்?
எப்படி சுந்தரராமசாமி ஒரு புளிய மரத்தின் கதை எழுதும் பொழுது நவீன வடிவில் எழுதினாரோ..
அதே போன்றுதான் இதுவும். நவீனத்தின் ஆரம்ப கால கட்டத்தில் பலவித சர்ச்சைகளுக்கு இடையில் அந்த
நாவல் அன்று வெற்றி பெற்றது.
இன்று நவீனத்தின் இறுதிக் கால கட்டத்தில் இருக்கும் தமிழ் இலக்கிய உலகின்
அடுத்த படி பின் நவீனத்துவம். கடந்த பத்து ஆண்டுகளாக தமிழில் சில எழுத்தாளர்கள் இந்த முறையில் எழுதி வருகிறார்கள்.
தீவிர இலக்கியத்தில் இப்போதைக்கு நான் நுழைய முடியாவிட்டாலும் இன்னும் சில வருடங்களில் அதற்குள் நுழைவதற்கான
முயற்சியே இந்த வகை நாவல்கள்.

இந்த நாவலில் சில புது யுக்திகள் கையாண்டிருக்கிறேன்..
இந்த நாவல் ஒரு வித்யாசமான வாசிப்பு அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும் என்று உறுதியாகக் கூறுகிறேன்.

வழக்கம்போல் உங்கள் ஆதரவை நாடும்...

குறிப்பு: நாவல் விரைவில்.. (அநேகமாக இன்று மாலைக்குள்)

இக்பால்
19-11-2003, 08:26 AM
இந்தாங்க என் கை. (இது என்ன என்று கேட்கிறீர்களா?)

ஆதரவுதான்.-அன்புடன் அண்ணா.

rambal
19-11-2003, 10:45 AM
இன்று இரவிற்குள் இந்த குறுநாவலின் அனைத்துப் பாகங்களையும் வெளியிடுகிறேன்..
இந்த முன்னுரைக்குப் பின்புதான் நாவலை எழுத ஆரம்பித்தேன்..
நாவல் என்னை வைத்து தன்னை எழுதிக் கொண்டிருக்கிறது..
உங்கள் ஒருவருக்காகவாவது இந்த நாவலின் முழுத் தொகுதியையும் இன்று இரவு பதிப்பேன்..
(அதற்காக மற்ரவர்கள் கண்டுக்காம விட்டுடாதீங்க)

இக்பால்
19-11-2003, 11:10 AM
உங்கள் ஒருவருக்காகவாவது இந்த நாவலின் முழுத் தொகுதியையும் இன்று இரவு பதிப்பேன்..


நீங்கள் எங்கள் ராம். உங்கள் பதிவு எல்லோருக்காகவும்தான்.
வாழ்த்துக்கள் ராம். கண்டிப்பாக இருமுறை படிப்பேன்.

உள்மனசு: ஆமாம்...அப்பத்தான் உனக்குப் புரியும்.

rambal
19-11-2003, 03:24 PM
உங்கள் உள் மனசை ஏற்கனவே எதிர்சீட்டு என்று உருவகப்படுத்தியுள்ளேன்..
நாவலின் பத்து பாகங்கள் முடிவடைந்து விட்டது.. இன்னும் சில பாகங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது.. உங்கள் ஆதரவிற்கு நன்றி..

மன்மதன்
24-05-2004, 10:20 AM
ராம் அவர்களுக்கு,
நவீனத்துவம் என்றால் என்ன?
இலக்கியத்தின் புது பரிமாணம்
இது என்றால் அதன் நோக்கம் என்ன?
விளக்கமுடியுமா?