PDA

View Full Version : பரிதாபம்



inban
07-11-2010, 03:05 AM
தனிமை கவிந்த
ஆற்றங்கரையில் அமர்ந்திருக்கிறோம்.

என்ன நினைத்தாயோ
திடீரெனத் தழுவி
முத்த மழை பொழிகிறாய்

நீயாகவே நிறுத்திவிட்டு
இதுவரை எத்துனை
முத்தங்கள் வாங்கினீர் என
கண்ணடிப்போடு கேட்கிறாய்

அடியே !
எப்படிச் சொல்வது ?

உன் முதல் முத்தத்தின்
இன்ப வெள்ளத்திலேயே
மூழ்கிப் போனதை....

ஆன்டனி ஜானி
07-11-2010, 03:42 AM
இது கவிதைக் காதளா,,,,,,,,இல்ல காதல் கவிதையா ???????

வானவர்கோன்
07-11-2010, 09:12 AM
படைப்பை இன்னும் கொஞ்சம் கவிநயத்துடன் எழுதினால் படிக்கச் சுவையாக இருக்கும் நண்பனே!

அமரன்
07-11-2010, 07:09 PM
முதல் முத்தத்தில் மூர்ச்சையானவனை
எழுப்பவில்லை
மற்ற முத்தங்களின் எச்சில்கள்..

நல்ல கற்பனை..

எப்படியாவது சொல்லி விடுங்கள்..

முதலை முந்தும் முத்தம் கொடுக்க முனைவாள்..

முத்த மழையில் நனையலாம்!!

கீதம்
07-11-2010, 08:48 PM
அர்ப்பணிக்கப்பட்டவற்றில்
ஆதியைத்தவிர அத்தனையும்
அர்த்தமற்றுப்போனதென்றறிய,
அடுத்தமுறை கிடைக்கலாம்
அநேகமாய் ஒன்றே ஒன்று,
முன்னிலும் மிக அழுத்தமாய்!