PDA

View Full Version : சிலேட்டு முத்தம்!



ரசிகன்
06-11-2010, 11:05 AM
பிஞ்சு விரல்களின் பிடியில்

சிலேட்டு பரப்பில்

கரையத்தொடங்கும் பல்பம்!



அம்ம்ம்ம்ம்மா......

என உச்சரித்தவாறு

வட்டங்களை வரையும்

பல்ப முனைகள்!



முதலிரண்டு கண்ணாம்,

கீழ்

கொஞ்சம் நெளிந்தவாறு மூக்காம்,

அடுத்து

இரு கோணல் கோடிட்டு வாயாம்!



இது பொட்ட்ட்டு.....

என்றழுத்தியதில்

உடைபட்டுப்போனது

பல்பம் இரண்டாய்!



உயிரொன்று குறைகிறதென்று

பால்யத்தின் உச்சத்தில்

சிலேட்டில்

பதிக்கிறதொரு ஈர முத்தம்-



பல்ப துகள்களை

ருசித்தபடி!

பென்ஸ்
07-11-2010, 01:21 AM
பணம் வேண்டி புல்லறுக்க சென்றாளோ..
பிண வேட்டையில் புல்லட் வாங்கி மாய்ந்தாளோ...
அவள் அரவணைப்பும், முத்தமும் இச்சிறு குழந்தைக்கு சிலேட்டில் மட்டுமா..??
அந்த ஏக்கம் சகிக்கவோ ருசிக்கவோ முடியாமல் போனாலும், கவிதையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

அமரன்
07-11-2010, 07:13 PM
கவிதையின் ஆழத்துக்கு வாசகனை அழைத்துச் செல்ல ரசிகனால் முடியும்.

ரசிகன்
07-11-2010, 10:00 PM
பணம் வேண்டி புல்லறுக்க சென்றாளோ..
பிண வேட்டையில் புல்லட் வாங்கி மாய்ந்தாளோ...
அவள் அரவணைப்பும், முத்தமும் இச்சிறு குழந்தைக்கு சிலேட்டில் மட்டுமா..??
அந்த ஏக்கம் சகிக்கவோ ருசிக்கவோ முடியாமல் போனாலும், கவிதையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
நன்றி பென்ஸ்...

உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி...

ஒரு குழந்தையை பொருத்தமட்டில் அவை செய்யும் எல்லாமே குறும்பானது தான்.. அதன் செயல்களில் ஒரே ஒரு பிரதியை நகல் எடுப்பதற்கான முயற்சி தான் இது... வேறெந்த களத்தையும் இதில் கோர்க்கவில்லை... :)

நன்றி!

ரசிகன்
07-11-2010, 10:01 PM
கவிதையின் ஆழத்துக்கு வாசகனை அழைத்துச் செல்ல ரசிகனால் முடியும்.
மிகைப்படியான பின்னோட்டம் :)

நன்றி அமரன்! :)