PDA

View Full Version : நான் துபாயில்.

அகத்தியன்
06-11-2010, 07:40 AM
அடுக்கப்பட்ட பெட்டிகள் போல பிரம்மச்சாரிகள் வாசம்..
அது இங்கு விதிக்கப்பட..
உடைகள் மட்டும் அடுக்கும் இடங்கள் விலக்கி எம்மை சுருக்கிகொள்வோம்.
உறங்கவும் இளைப்பாறவும் என..
காலைகள் போர்க்களமாய் விடியும்..
குளியலறை சாகசங்களுடன்..
இடம்பிடிப்பதும்.. அவசரமான நேரக்கரைதலின் பதைபதைபோடும்..
உடை தேடி, உதறி, மூட்டை தேடி நசுக்கி
பின் ஓரளவு ஒப்பனைகளுடன், சிரிப்பினையும் ஒட்டிக்கொண்டு ஓடுகின்றோம்
மேலாளர்களின் முட்டாள்தனங்களுக்கும் சேர்த்து கடி வாங்கவென..
கரைகின்ற பொழுதின் நீள அகலம் தெரியாத ஓர் தருணம் வயிறு தீயாக
பசி போக்கும் உணவுடன் பொழுது சாய.. மீண்டும் பயணம் தொடங்கும்
குடும்பம், வீடென மாறும் சிந்தனைகள் ..
அலைபேசியூடு கேட்கும் அம்மாவின் குரலுடன் கொஞ்சம் புத்துயிர் பெறும்.
இதோ இன்று முடிந்தது.
மாற்றங்கள் ஏதும் இன்றி நகரும் நாளைக்காக….
ஆனாலும் பெருமையோடு சொல்லிக்கொள்வோம்..
“ நான் துபாயில்..” என…

வானவர்கோன்
06-11-2010, 07:51 AM
வெளிநாடு செல்ல
பட்ட கடனை
வருடங்கள் கடந்தும்
அடைக்க முடியாமல்
தினமும்
அல்லலுறும் உள்மனம்
அம்மாவின் அலைபேசிக்
குரல் கேட்டு
தெம்படையும்!

ஓவியன்
06-11-2010, 09:08 AM
கவிதை என்பதையும் தாண்டி துபாயில் ஒருவருட காலத்தை கிட்டத்தட்ட இதே போன்ற நிலையில் கழித்தவன் என்ற வகையில் இந்த பதிவு என்னை நிரம்பவே பாதித்துள்ளது.

ஊதியத்தை ரூபாயாக பெருக்கிப் பார்க்கத் தெரிந்த எமக்கு, படும் சிரமங்களைப் பெருக்கிப் பார்க்கத் தெரியாதுள்ளதா...?? என்று கேட்டால் இல்லை என்றுதான் பதில்வரும். நாம் படும் சிரமங்களெல்லாம் நம்மையும் நம் குடும்பத்தினையும் வாழ்க்கையில் முன்னகர்த்தவே என்ற ஒரு நோக்குடன் எல்லா சிரமங்களையும் சகித்துக் கொள்ளும் பக்குவம் தானே வசப்படும்....

நல்ல கவிதை அகத்தியன், ஏற்கனவே பல கவிஞர்களால் கையாளப் பட்ட கருவென்றாலும் அதனை நீங்கள் கையாண்ட விதம் அழகு..!! :icon_b:

M.Jagadeesan
06-11-2010, 03:49 PM
அடுக்கப்பட்ட பெட்டிகள் போல பிரம்மச்சாரிகள் வாசம்..
அது இங்கு விதிக்கப்பட..
உடைகள் மட்டும் அடுக்கும் இடங்கள் விலக்கி எம்மை சுருக்கிகொள்வோம்.
உறங்கவும் இளைப்பாறவும் என..
காலைகள் போர்க்களமாய் விடியும்..
குளியலறை சாகசங்களுடன்..
இடம்பிடிப்பதும்.. அவசரமான நேரக்கரைதலின் பதைபதைபோடும்..
உடை தேடி, உதறி, மூட்டை தேடி நசுக்கி
பின் ஓரளவு ஒப்பனைகளுடன், சிரிப்பினையும் ஒட்டிக்கொண்டு ஓடுகின்றோம்
மேலாளர்களின் முட்டாள்தனங்களுக்கும் சேர்த்து கடி வாங்கவென..
கரைகின்ற பொழுதின் நீள அகலம் தெரியாத ஓர் தருணம் வயிறு தீயாக
பசி போக்கும் உணவுடன் பொழுது சாய.. மீண்டும் பயணம் தொடங்கும்
குடும்பம், வீடென மாறும் சிந்தனைகள் ..
அலைபேசியூடு கேட்கும் அம்மாவின் குரலுடன் கொஞ்சம் புத்துயிர் பெறும்.
இதோ இன்று முடிந்தது.
மாற்றங்கள் ஏதும் இன்றி நகரும் நாளைக்காக….
ஆனாலும் பெருமையோடு சொல்லிக்கொள்வோம்..
“ நான் துபாயில்..” என…

பெற்ற தாயும்,பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனிசிறந்தனவே.

என்ற கருத்து தங்கள் படைப்பில் காணமுடிகிறது.

ஆன்டனி ஜானி
06-11-2010, 04:38 PM

வெளினாட்டில் வாழும் அனைவருக்கும் தனது சொந்தனாட்டு தாயின் குரல் தொலைபேசியில் கேட்டதும் அடையும் மகிழ்ச்சி எந்த ஒரு பேரும்,பணமும்,புகழும் அந்த சந்தோசத்தை தர முடியாது

பென்ஸ்
07-11-2010, 01:15 AM
ஒரு நிமிடம் என் உதடின் ஓரங்களில் இரு சிரு பின்னகை வந்து சென்றது மறுக்க முடியாது அகத்தியன்...
துபாய் மட்டுமல்ல... திரவியம் என்று என்னி கரை கடந்து சென்ற அனைவருக்கும் இது பொருந்தும்....

Ravee
07-11-2010, 11:15 AM
இதோ இன்று முடிந்தது.
மாற்றங்கள் ஏதும் இன்றி நகரும் நாளைக்காக….
ஆனாலும் பெருமையோடு சொல்லிக்கொள்வோம்..

“ நான் துபாயில்..” என…

இதோ இன்று முடிந்தது.
மாற்றங்கள் ஏதும் இன்றி நகரும் நாளைக்காக….
ஆனாலும் பெருமையோடு சொல்லிக்கொள்வோம்..

" நான் வீட்டில் "

என்பதில் மட்டும் என்ன பெருமை இருக்கிறது. தேவைகள் இருக்கும் வரை தேடுவோம் ... தேடிக்கொனர்வோம் செல்வம் ... பின்னர் தேடுவோம் சொந்த பெருமைகள்....:icon_b:

அகத்தியன்
07-11-2010, 11:29 AM
வெளிநாடு செல்ல
பட்ட கடனை
வருடங்கள் கடந்தும்
அடைக்க முடியாமல்
தினமும்
அல்லலுறும் உள்மனம்
அம்மாவின் அலைபேசிக்
குரல் கேட்டு
தெம்படையும்!

உண்மை கோன்... அது மாத்திரம்தான் உள்ளது அட்க்கடி நான் மனிதன் என்பதை நினைவூட்டியவாறு.. யாவும் எந்திரமயம்தானே!!

]கவிதை என்பதையும் தாண்டி துபாயில் ஒருவருட காலத்தை கிட்டத்தட்ட இதே போன்ற நிலையில் கழித்தவன் என்ற வகையில் இந்த பதிவு என்னை நிரம்பவே பாதித்துள்ளது.

ஊதியத்தை ரூபாயாக பெருக்கிப் பார்க்கத் தெரிந்த எமக்கு, படும் சிரமங்களைப் பெருக்கிப் பார்க்கத் தெரியாதுள்ளதா...?? என்று கேட்டால் இல்லை என்றுதான் பதில்வரும். நாம் படும் சிரமங்களெல்லாம் நம்மையும் நம் குடும்பத்தினையும் வாழ்க்கையில் முன்னகர்த்தவே என்ற ஒரு நோக்குடன் எல்லா சிரமங்களையும் சகித்துக் கொள்ளும் பக்குவம் தானே வசப்படும்....

நல்ல கவிதை அகத்தியன், ஏற்கனவே பல கவிஞர்களால் கையாளப் பட்ட கருவென்றாலும் அதனை நீங்கள் கையாண்ட விதம் அழகு..!! :icon_b:
[/COLOR]

நன்றி ஓவியா!!

பெற்ற தாயும்,பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனிசிறந்தனவே.

என்ற கருத்து தங்கள் படைப்பில் காணமுடிகிறது.

நன்றிகள் ஜெகதீஸன்

வெளினாட்டில் வாழும் அனைவருக்கும் தனது சொந்தனாட்டு தாயின் குரல் தொலைபேசியில் கேட்டதும் அடையும் மகிழ்ச்சி எந்த ஒரு பேரும்,பணமும்,புகழும் அந்த சந்தோசத்தை தர முடியாது

நன்றிகள் சகாய அந்தணி!

ஒரு நிமிடம் என் உதடின் ஓரங்களில் இரு சிரு பின்னகை வந்து சென்றது மறுக்க முடியாது அகத்தியன்...
துபாய் மட்டுமல்ல... திரவியம் என்று என்னி கரை கடந்து சென்ற அனைவருக்கும் இது பொருந்தும்....

நன்றிகள் பென்ஸ் உங்கள் கருத்து உண்மைதான்.. ஊரில் சொல்வார்கள் , "ஊர் விட்டு போனால் யார் வீட்டு நாயாம்" என... அப்போது புரியாத இதன் பொருள் இப்போது புரிகின்றது..

இதோ இன்று முடிந்தது.
மாற்றங்கள் ஏதும் இன்றி நகரும் நாளைக்காக….
ஆனாலும் பெருமையோடு சொல்லிக்கொள்வோம்..

" நான் வீட்டில் "

என்பதில் மட்டும் என்ன பெருமை இருக்கிறது. தேவைகள் இருக்கும் வரை தேடுவோம் ... தேடிக்கொனர்வோம் செல்வம் ... பின்னர் தேடுவோம் சொந்த பெருமைகள்....:icon_b:

ரவி க்கு எனது நன்றிகள்.. நீங்கள் சொல்வது சரிதான்.. தேவைகள் இருப்பது உண்மைதான்.. அதற்கு பொருள் தேடவெண்டியதும் அவசியம்தான்... ஆனால் மனிதன் எந்திரமாக்கப்படுகின்ற போது பலவலிகள் மனசிலும் உடலிலும் உண்டாகின்றதே நண்பா??

Ravee
07-11-2010, 11:44 AM
ரவி க்கு எனது நன்றிகள்.. நீங்கள் சொல்வது சரிதான்.. தேவைகள் இருப்பது உண்மைதான்.. அதற்கு பொருள் தேடவெண்டியதும் அவசியம்தான்... ஆனால் மனிதன் எந்திரமாக்கப்படுகின்ற போது பலவலிகள் மனசிலும் உடலிலும் உண்டாகின்றதே நண்பா??

ஊர் பேர் தெரியாதவர்கள் கொடுக்கும் வலியை விட உறவுகள் கொடுக்கும் வலி நூறு மடங்கு அதிகம் அகத்தியன் .... நான் இரண்டு வலிகளையும் அனுபவித்தவன் ....

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு ... உங்கள் வேலைகளை நேசியுங்கள் ..... பின்னர் அது கடினமாக இருப்பதில்லை .... முயன்று பாருங்கள். :)

அமரன்
07-11-2010, 06:12 PM
அகத்தியன்..

அடுக்கப்பட்ட பெட்டிகள் போல பிரம்மச்சாரிகள் வாசம்..

தீப்பெட்டி நெடி..!!!!!

தீக்குச்சிகள்
நீங்கள் சொன்னப்
பிரம்மச்சாரிகள்..

எத்துனை பொருத்தம்!!!!

தீக்குச்சிகள்
ஒன்றுடன் ஒன்று ஒட்டி இருந்தாலும்
உரசுவதில்லை..
தீப் பற்றுவதில்லை..
பெட்டியையும் குச்சிகளையும்
அழிப்பதில்லை..

எடுத்து உரசு’பவர்’களே
தீர்மானிக்கிறார்கள்
ஆக்கமா அழிவா என்று..

ஆக்கமோ அழிவோ
தீக்குச்சியின் கிழிப்பில்
வெளிச்சம் நிச்சயம்.

அருமை.. அருமை..

குடும்பம், வீடென மாறும் சிந்தனைகள் ..
அலைபேசியூடு கேட்கும் அம்மாவின் குரலுடன் கொஞ்சம் புத்துயிர் பெறும்.

இதுதான்.. இதுதான்..
உரசும் கரங்கள்..
வாழ்க்கையின் சுரங்கள்..

இதோ இன்று முடிந்தது.
மாற்றங்கள் ஏதும் இன்றி நகரும் நாளைக்காக….

இங்கே கோர்க்கிறீர்கள்
இயந்திரத்தை..
இயக்குபவர்களை முன்னே சொன்னதில்
இசைகிறது வார்தைகள்..

ஆனாலும் பெருமையோடு சொல்லிக்கொள்வோம்..
“ நான் துபாயில்..” என…

தப்பில்லை
பெருமை பொங்குவதில்!!!

விகடன்
08-11-2010, 01:00 PM
ஓவியனைப்போலவே, ஆனால் ஓவியனை விட ஒரு வருடம் அதிகமாகவே காலத்தை கழித்திட்ட நானும் உங்கள் வரிகளிற்கு பிற்பாட்டுப்பாடுகிறேன் அகத்தியன்.

ஏதோ ஓவியனும் அவனைப்போல பல நண்பர்களும் வார இறுதியில் வந்து எம்முடன் இருந்துவிட்டு போவதால் சந்தோசமாக இருந்தது. வியாழக்கிழமை பிற்பகல் என்றால் இவர்களை சந்திக்கப்போகிற கழிப்பில் இருக்கும் மனம், வெள்ளி பிற்பகல் ஆனதும் பெருமூச்சொன்றை மட்டுந்தான் விட்டெறியும்.

மீண்டும் அடுத்த வியாழனை நினைத்து மனதை ஆசுவாசப்படுத்திக்கொண்டு
வழக்கப்படுத்திக்கொண்ட வாழ்க்கைச்சக்கரத்தில் காலடி வைப்போம்.