PDA

View Full Version : முடிவிலி..(Infinity) நாவல்.. அத்யாயம் 13



rambal
19-11-2003, 07:25 AM
முடிவிலி..(Infinity) நாவல்.. அத்யாயம் 13

காதலித்து தோற்றுப் போ..
காதல் என்பது உன் மன வைராக்கியத்தை சோதித்துப் பார்க்கும் கருவி..
அந்த அறையின் கதவில் ஒட்டப்பட்டிருந்த வாசகங்கள் இவை..
அறைக்குள் நுழையலாமா? வேண்டாமா? கொஞ்சம் யோசித்து விட்டு.. சரி உள்ளே போய் பேசிப் பார்க்கலாம்
எனும் தைர்யத்தோடு போனேன்..
- காதல் மேல் உனக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு?
- எனக்கா? இல்லையே..
- பின் ஏன் அந்த வாசகங்கள்?
- காதலித்துத்தான் தோற்றுப் போகச் சொல்லியிருக்கிறேன்..
- அப்படியானால் காதல் என்பது பொழுது போக்கா?
- இல்லை.. இந்த உலகை காதலிக்கிறேன்.. உலகில் வாழும் அனைத்து பெண்களையும் காதலிக்கிறேன்..
- ஏன்? ஒரு பெண்ணை மட்டும் காதலிக்க வேண்டியதுதானே?
- அணைக்கட்டுத் தண்ணீரை ஒரு பாத்திக்கு மட்டும் கொடுக்கமுடியுமா? என் காதல் அணைக்கட்டுத் தண்ணீர்..
- ஆனால், பெண்கள் ஒன்றும் பாத்திகள் இல்லையே..
- பெண்கள் பாத்திதான்.. தனக்கு பாத்தியமானவன் என்று ஒருவனை மட்டும் உரிமை கொண்டாட விளைகிறார்கள்..
- அதில் என்ன தவறு? கற்பு நெறி அதுதானே..
- என்னால் அது போல் இருக்க முடியாது..
- அதற்கு காதலை விளையாட்டாக பாவிக்கிறாயா?
- இல்லை.. காதல் ஒரு போதை.. காதல் தரும் பெண்ணும் போதை.. நான் போதைக்கு அடிமை..
- சரி சுபாவை ஏன் காதலிக்கவில்லை?
- அது நடிப்பு..
- அதுதான் ஏன்?
- அவள் செந்திலை செத்துப் போன பெரியப்பா என்று சொல்லி அவனை தற்கொலை முயற்சிக்கு தூண்டினாள்..
- அதற்கு?
- அவளுக்கு தான் ஒரு அழகி என்று நினைப்பு.. அதனால்தான்..
- அதனால் அவளை அழ வைத்தாயா?
- அவள் மேல் என் சுண்டு விரல் கூட பட்டதில்லை.. அவளாக கற்பனை வளர்த்துக் கொண்டால் நான் என்ன செய்ய?
- கல்லூரி கடைசி நாள் அவளிடம் என்ன சொன்னாய்?
- வாழ்க்கை என்பது ரயில் பயணம்.. நீ அடுத்த நிறுத்தத்தில் இறங்கப் போகும் பயணி என்று சொன்னேன்..
- சரி சுபாவை விடு.. அன்னபூரணா?
- அன்னபூரணாவிற்கு பயம்.. எங்கு நான் அவளை விட்டுவிட்டு வேறு யாரோடாவது போய்விடுவேனோ என்று..
- இருக்காதா பின்ன.. நீ அத்தனை பெண்களுடன் சுற்றினால் அவளுக்கு பயம் இருக்கத்தானே செய்யும்..
- இருந்தாலும் அவள் பயம் அதீதம்..
- சரி அன்னபூரணாவை விடு.. தபஸ¥ம் நிஷா..
- அவளுக்கு என் மீது மட்டும் ப்ரியை இல்லை.. என் சொத்து மீதும்தான்..
- சரி.. நிஷாவை விட்டுத் தள்ளு.. வித்யா..
- அவளைப் பற்றிப் பேசாதே..
- ஏன்?
- அவள் பிரிவினால்தான் நான் இத்தனை பெண்களோடு பழக ஆரம்பித்தேன்.. அதற்கு அவள்தான் மூலம்..
- அப்படியானால் ஜான்சி.. உன்னை விட எட்டு வயது மூத்தவள்..
- வித்யாவிற்கு அடுத்தபடியாக நான் அதிகம் நேசித்தது ஜானுவைத்தான்..
- பின் ஏன்?
- இன்று கூட நான் தயார்.. ஆனால், அவளுக்குள்தான் பிரச்சினை..
- என்ன?
- வயது மூத்தவள் என்று.. எத்தனை சந்தோச கணங்கள்?.. மறக்கக்கூடியவைகளா அவைகள்..
- வெறும் கணங்கள் என்றா?
- அதற்கு மேலும் கொஞ்சம் உண்டு..
- என்ன காமமா?
- கிடையாது.. பௌர்ணமி.. என் வீட்டு மொட்டைமாடி.. அவள் மடியில் தலை வைத்து படுத்தல் சுகம்..
அவள் தலைமுடி கோதுதல் சுகம்.. அந்த சுகத்திலேயே மரிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன்..
- மொத்தத்தில் நீ என்னதான் சொல்ல வருகிறாய்..
- இதுதான் காதல் என்று அறுதியிட்டு சொல்லமுடியாது.. அன்பென்றால் என்னவென்றும் எனக்குத் தெரியாது...
அதை தேடிக் கொண்டே இருக்கிறேன்..
- அப்படியானால் கவிதா?
- அது வேறு..
- வேறு என்றால்?
- அவளுடைய அப்பாவும் அம்மாவும் ஒரு கார் விபத்தில் இறந்து விட அவள் அக்கா ஒரு வயோதிகனுக்கு மூன்றாம்தாரமாக
மணமாகி.. இவளுடைய இன்னொரு அக்கா மனசிதைவில் இருக்கிறாள்.. இவளைப் படிக்க வைக்க அந்த வயோதிகனுக்கு
இஷ்டமில்லை.. அதனால் அவளை வேலைக்கு அனுப்பப் போவதாக என்னிடம் வந்து அழுதாள்.. அதனால் அவளை நான் தான்
படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன்..
- மற்றவர்களுக்கு இல்லாத கரிசனம் உனக்கு எதற்கு?
- எனக்கு உடன் பிறந்தவர்கள் என்று யாரும் கிடையாது.. அதனால்தான் அவளை என் தங்கையாக நினைத்துக்கொண்டிருக்கிறேன்..
- ஆனால், அவள் வேறு மாதிரி நினைத்துக் கொண்டிருக்கிறாளே..
- அவள் நன்றாக படிக்கிறாள்.. படிக்கட்டும்.. இப்போது ஏதாவது சொன்னால் அவள் படிப்பு கெட்டுவிடும்.. நானே அவளுக்கு ஒரு
பையனை பார்த்து கட்டிவைப்பேன்..
- எப்போதிலிருந்து இப்படி நல்லவனானாய்?
- நான் கெட்டவனும் இல்லை... நல்லவனும் இல்லை.. அதை முதலில் நீ புரிந்து கொள்...
- நல்ல காரியத்தை சத்தமில்லாமல் செய்கிறாய்.. கெட்ட காரியத்தை ஊருக்கு முன் செய்கிறாய்.. அது ஏன்?
- எதைச் சொல்ல வேண்டும் சொல்லக் கூடாது என்று இங்கு எவருக்கும் தெரியவில்லை.. அதற்கு நான் என்ன செய்வது?
- சரி.. காதல் திருமணங்கள் செய்து வைக்கிறாயே? பிரச்சினைகள் எவ்வளவு வருகிறது.. எத்தனை பேர் வயிற்றெரிச்சல்? ஏன்?
- எனக்குத்தான் நான் நினைத்த வாழ்க்கை கிடைக்கவில்லை.. மற்றவர்களுக்காவது அமையட்டுமே என்றுதான்..
- சரி.. சாந்தி கோமதி பற்றி..
- அவள் குரு.. தப்பாக பேசாதே..
- பின் அவள் வேறு ஊருக்கு போகிறாள் என்றவுடன் கண்ணீர் விட்டாயே.. அது ஏன்?
- எனக்கு என்று இருந்த ஒரே ஒரு நபர் அவள்தான்.. நான் உயிரோடிருக்கிறேனா இல்லையா என்று அவள் ஒருத்திதான்
கவலைப்பட்டாள்.. அதற்காகத்தான்..
- அவள் மேல் உனக்கு காதல் இல்லை என்று என்னைப் பார்த்து சொல்..
- இருந்தது.. இருக்கிறது.. ஆனால், அது காதலா ஈர்ப்பா என்று எனக்குத் தெரியாது..
- அப்படியானால், அவளையும்..
- நிறுத்து.. அவளை என் அம்மாவின் சாராம்சமாகத்தான் பார்த்தேன்.. பசி அறிந்து சோறூட்டியவள் கண்டிப்பாக தாய்தான்..
- அப்படியானால் கவிப்பிரியா? அவள் உனக்கு பாடம் எடுக்க வந்தவள்?
- அவளை ஜானுவின் சாராம்சமாகத்தான் பார்த்தேன்..
- ஜனனி?
- அவள் என் மகள்..
- அவளுக்கு வயது பதிமூன்று.. உனக்கு வயது இருபத்தியிரண்டு.. இது சாத்தியமா?
- அதுதான் சாத்தியம் ஆகிவிட்டதே..
- அவளுக்கு நீ அப்பா என்று வெளியில் கூட்டிக்கொண்டு போனால் ஏதோ பள்ளிக் கூட பெண்ணைத்தள்ளிக் கொண்டு
வந்துவிட்டதாகத்தானே ஊர் பேசுகிறது..
- என் அப்பா அம்மாவிடம் சொல்லி தத்தெடுக்க சொன்னேன்.. அவர்கள் தத்தெடுத்திருந்தால் அவள் எனக்கு தங்கை
ஆகி இருப்பாள்.. அவர்கள் முடியாது என்று சொல்லி விட்டதால்தான் நான் தத்தெடுத்தேன்..
- மொத்தத்தில் வயது வித்யாசம், கலாச்சாரம் பொருட்படுத்தாது.. பிடித்த பெண்களை எல்லாம் காதலிக்கிறாய்..
இது எந்த வகை சித்தாந்தம்?
- அன்பு எனும் சித்தாந்தம்..
- இல்லை.. எல்லாம் காமம்..
- நான் இன்னும் எவளோடும் கலவியில் ஈடுபடவில்லை..
- அப்படியானால் நீ கொடுக்கும் முத்தத்திற்கு என்ன அர்த்தம்?
- அன்பின் வெளிப்பாடு.. குழந்தைகளுக்கு கொடுத்தால் தப்பில்லை.. வயது வந்தவர்களுக்கு கொடுத்தால் மட்டும் தப்பா?
- அதை பொது இடத்தில் ஏன் கொடுக்கிறாய்?
- தெருவில் இறங்கி தெருநாய் போல் சண்டை போடலாம்.. அன்பை மட்டும் வெளிப்படுத்தக்கூடாதா?
- நம் சமூகம் இன்னும் அந்த அளவிற்கு முன்னேறவில்லை..
- அதனால்தான் எய்ட்ஸ்ஸில் இரண்டாம் இடத்தில் இருக்கிறோம்..
- நிறுத்து.. இதற்கு மேல் உன்னோடு பேச எனக்கு இஷ்டமில்லை..
- உண்மை சுடுகிறதோ?
- இல்லை.. கலாச்சாரம் தடுக்கிறது..
- கலாச்சாரம் என்பது நம்மால்தான் விதிக்கப்பட்டது.. அதை நாம் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை..
- நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்..
- அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது..
இதற்கு மேல் ரமேஸ்ஸ¤டன் பேசி பிரயோசனம் இல்லை எனும் முடிவிற்கு வந்து நந்தாவைக் காணக்கிளம்பினேன்..

இக்பால்
19-11-2003, 07:32 AM
ம்ஹ¥ம்....இன்னும் நம்பிக்கை வரவில்லை.

இருந்தாலும் நன்றியுடன் பாராட்டுக்கள்.

-அன்புடன் அண்ணா.

முத்து
19-11-2003, 10:09 PM
நாவல் நன்றாகச் செல்கிறது ...
அவன் யாரைச் சந்தித்தாலும்
நானைத்தானே வெளிப்படுத்துகிறான் ...
இன்னும் அவனைப் பலரைச் சந்திக்கவைத்து
அவனுடன் நிறையப் பேரைப் பேசவிடுங்கள் ....
குறிப்பாக அவனுடைய பிரதிகளிடம் ...
பாராட்டுக்கள் ராம்பால் ....

இளசு
20-11-2003, 09:19 PM
ராம்,
கவனக்குறைவால் இதை வேறுபகுதிக்கு தவறுதலாய் மாற்றியிருக்கிறேன்..
தவறினை உணர்ந்ததும் சரி செய்துவிட்டேன்.

இதற்காக மன்னிப்பு கோருகிறேன்.

பாலமுருகன்
21-11-2003, 03:42 AM
ராம்பால் மிக்க அருமை.. எத்தைனைப்பென்களைத்தான் கடந்திருப்பீர்கள்.??? என் மனதை தொட்ட வரிகள்.... பாரட்டுக்கள்....


முடிவிலி..(Infinity) நாவல்.. அத்யாயம் 13

காதலித்து தோற்றுப் போ..
காதல் என்பது உன் மன வைராக்கியத்தை சோதித்துப் பார்க்கும் கருவி..
---------------------------------------
- அப்படியானால் காதல் என்பது பொழுது போக்கா?
- இல்லை.. இந்த உலகை காதலிக்கிறேன்.. உலகில் வாழும் அனைத்து பெண்களையும் காதலிக்கிறேன்..
-------------------------------------------
- அணைக்கட்டுத் தண்ணீரை ஒரு பாத்திக்கு மட்டும் கொடுக்கமுடியுமா? என் காதல் அணைக்கட்டுத் தண்ணீர்..
------------------------------------------
- பெண்கள் பாத்திதான்.. தனக்கு பாத்தியமானவன் என்று ஒருவனை மட்டும் உரிமை கொண்டாட விளைகிறார்கள்..
------------------------------------------
- இல்லை.. காதல் ஒரு போதை.. காதல் தரும் பெண்ணும் போதை.. நான் போதைக்கு அடிமை..
----------------------------------------
- அவள் மேல் உனக்கு காதல் இல்லை என்று என்னைப் பார்த்து சொல்..
- இருந்தது.. இருக்கிறது.. ஆனால், அது காதலா ஈர்ப்பா என்று எனக்குத் தெரியாது..
-----------------------------------------
- தெருவில் இறங்கி தெருநாய் போல் சண்டை போடலாம்.. அன்பை மட்டும் வெளிப்படுத்தக்கூடாதா?