PDA

View Full Version : கருப்பை

inban
04-11-2010, 06:07 PM
அப்போதெல்லாம்
ஏரிபோலவே
எல்லோர்க்கும்
நிறைந்த மனதிருந்தது.

மதகு வழியே
துள்ளிப் பாய்ந்த
தண்ணீர்தான் என்னை
பட்டணத்துக் கல்லூரிவரை
படி ஏற வைத்தது.

நண்டு வலையென நம்பி
நீட்டிய கரத்திலே
நெளிந்த நீர் பாம்பு...

துலவிய சேற்றிலே துள்ளி
அரைக்கால் சட்டைக்குள் புகுந்து
அட்டகாசம் செய்த
விரால் மீன்...

மதகுச் சந்திலே மறைந்தபடி
மாமா மகளுக்கு வைத்த
முதல் முத்தம் - என

அன்னையப்போல
அடைக்கலமருளிய
இந்த ஏரிக்குத்தான் சொந்தம்
எனது இளமைப் பருவத்து
எல்லா இலச்சினைகளும்.

கார்த்திகையில்
கரு வைத்து
சித்திரை வரைக்கும்
சர்வ வளத்தோடு
சிங்காரம் பூணும்
இந்த ஏரிதான்
தொழு நோயாளிபோல்
தனது உறுப்புக்களை
எல்லாம்
இழந்து கிடக்கிறது

பட்டினி
வறட்சி
வெறுமை
இழப்பு-என
ஏரி போலவேதான் இருக்கிறது
இங்கே
எல்லோருடைய வாழ்க்கையும்.

M.Jagadeesan
04-11-2010, 09:41 PM
கவிதை நன்று இன்பன். கவிதைத் தலைப்பு,"ஏரி" என்று இருந்தால் பொருத்தமாக இருக்கும்.

பென்ஸ்
05-11-2010, 01:02 PM
ஜகதீசன் கவிதையின் தலைப்பு சரியாகவே எனக்கு தெரிகிறது...

நீர் நிலைகளை ஒட்டியே மனித வாழ்க்கை தொடங்குகிறது.. அது ஆறோ அல்லது ஏரியோ...

வாழமான நீர் நிலையினால் மனித வாழ்க்கை வழமாக இருக்கிறது... மகிழ்ச்சியாக இருக்கிறது, மன்மும் நன்றாக இருக்கிறது...
அதே போல் வறட்சி வரும் போது நிலமும் வாழ்கையும் வறண்டு போகிறது...

வாழ்க்கை கொடுத்த கருப்பை... மலடாய்....

வாழ்த்துகள் இன்பன்... பாருங்க உங்க கவிதைகளுக்கு ரசிகனாயி, அதை எல்லாம் தேடி படிக்க தொடங்கிட்டேன்...

வானவர்கோன்
05-11-2010, 01:06 PM
கார்த்திகையில்
கரு வைத்து
சித்திரை வரைக்கும்
சர்வ வளத்தோடு
சிங்காரம் பூணும்
இந்த ஏரிதான்
தொழு நோயாளிபோல்
தனது உறுப்புக்களை
எல்லாம்
இழந்து கிடக்கிறது

அருமை.

inban
06-11-2010, 07:21 AM
ஜகதீசன் கவிதையின் தலைப்பு சரியாகவே எனக்கு தெரிகிறது...

நீர் நிலைகளை ஒட்டியே மனித வாழ்க்கை தொடங்குகிறது.. அது ஆறோ அல்லது ஏரியோ...

வாழமான நீர் நிலையினால் மனித வாழ்க்கை வழமாக இருக்கிறது... மகிழ்ச்சியாக இருக்கிறது, மன்மும் நன்றாக இருக்கிறது...
அதே போல் வறட்சி வரும் போது நிலமும் வாழ்கையும் வறண்டு போகிறது...
வாழ்த்துகள் இன்பன்... பாருங்க உங்க கவிதைகளுக்கு ரசிகனாயி, அதை எல்லாம் தேடி படிக்க தொடங்கிட்டேன்...

நன்றி நண்பரே கவிதைக்கு பின்னுட்டம் கொடுத்தற்கு மட்டுமல்ல முதல் முறையாக எனக்கு வக்காலத்து வாங்கியதற்கும்...... ஹிஹி .....

govindh
06-11-2010, 10:46 AM
நீர்ப்பாசனத்தையும்....
மக்கள் வாழ்க்கையினையும்
'கருப்பை' -கவிக்குள்
காட்டிய விதம் அருமை...
பாராட்டுக்கள் இன்பன்.