PDA

View Full Version : நீக்கிய எண்ணைக் காணல்



M.Jagadeesan
04-11-2010, 03:16 PM
ஒரு சமயம் நண்பர் ஒருவர் என் வீட்டுக்கு வந்திருந்தார்.அவர் வேடிக்கைக் கணக்குகளைச் சொல்வதில் வல்லவர்.அவரிடம் வேடிக்கைக் கணக்கு ஒன்றைச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டேன்.

"சரி பேப்பரும்,பென்சிலும் எடுத்துக்கொள்"-என்று சொன்னார்.ஒரு ஐந்திலக்க எண்ணை எழுதச் சொன்னார்.எண் பூச்சியத்தில் முடியக் கூடாது என்று சொன்னார்.நானும் அவருக்குத் தெரியாமல் 96452 -என்ற எண்ணை எழுதினேன்.ஐந்திலக்கங்களின் கூடுதலை எண்ணிலிருந்து கழிக்கச் சொன்னார்.நானும் 96452 -26 =96426 என்று கழித்து வைத்துக் கொண்டேன்.

கழித்து வந்த விடையிலிருந்து எதாவது ஒரு எண்ணை எடுத்து விட்டு மீதி எண்ணை சொல்லச் சொன்னார்.நானும் 96426 -என்ற எண்ணிலிருந்து கடைசியாக இருந்த 6 -ஐ எடுத்து விட்டு மீதி இருந்த 9642 -என்ற எண்ணைச் சொன்னேன்.

சிறிது நேரம் யோசித்து விட்டு " நீ எடுத்த எண் 6 தானே?"என்று கேட்டார்.

"ஆம்" என்று சொன்னேன்.மிகவும் விந்தையாக இருந்தது.

நாஞ்சில் த.க.ஜெய்
21-12-2010, 08:47 AM
கணிதம் எனும் அறிவு புதையலில் இதும் ஒன்றுதான் இருந்தாலும் அந்த எண் இதுதான் என எவ்வாறு கண்டறிந்தார் என்று கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் நண்பரே !
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

அன்புரசிகன்
21-12-2010, 12:43 PM
ஏதோ நம் மூளைக்கு எட்டியது. (அப்படி இருக்கா என்று கேட்டால் நான் என்ன சொல்வது)

நீங்கள் நினைக்கும் எண்களிலிருந்து கூட்டிய எண்ணை கழித்தால் வரும் எண்களின் கூட்டுத்தொகை எப்போதுமே 27 ஆகத்தான் வருகிறது. (முயன்று பாருங்கள்.) மீதி இலக்கத்தை நீங்கள் சொன்னால் அவர்கள் 27 இல் இருந்து கழித்து வந்த விடையை நீங்கள் மறைத்த இலக்கமாக கருதுவார்கள்.

நான் 5 உதாரணங்கள் செய்து பார்த்தேன். விடை வேறுவிதமாக வந்தால் சொல்லுங்கள். மீண்டும் இல்லாததை இயக்கிப்பார்த்திடலாம்.:D

இன்னுமொன்று. இறுதியில் 0 இல் முடிந்தால் கூட்டுத்தொகையை கழித்தபின் வருவது எப்போதும் 18 ஆக வருகிறது.. :D

M.Jagadeesan
10-02-2011, 12:07 PM
நீக்கிய எண்ணைக் காணல்:
.......................................
96452 இதன் இலக்கங்களின் கூடுதல்=26

96452லிருந்து 26ஐக் கழிக்க மீதி=96426

இதிலிருந்து 6ஐ நீக்கியபின் மீதி எண்களின் கூடுதல்=9+6+4+2=21

21க்கு அடுத்த 9ஆல் வகுபடும் எண்=27

நீக்கிய எண்:27லிருந்து 21ஐக் கழிக்க வரும் எண்.அதாவது 6 ஆகும்.

ஓர் எண்ணை நீக்கியபின் மீதி எண்களின் கூடுதல் 9ன் மடங்காக இருந்

தால் நீக்கியஎண் 0 அல்லது 9 ஆக இருக்கும்.

sarcharan
10-02-2011, 12:14 PM
சுட்டி புதிர்... கலக்கல்...
ஜெகதீசன் அய்யா உங்களது விளக்கம் அபாரம்

M.Jagadeesan
10-02-2011, 12:31 PM
சுட்டி புதிர்... கலக்கல்...
ஜெகதீசன் அய்யா உங்களது விளக்கம் அபாரம்

திரு.சர்சரன் அவர்களுக்கு நன்றி!

பாரதி
11-02-2011, 06:15 AM
நீக்கிய எண்ணைக் காணல்:
.......................................
96452 இதன் இலக்கங்களின் கூடுதல்=26

96452லிருந்து 26ஐக் கழிக்க மீதி=96426

இதிலிருந்து 6ஐ நீக்கியபின் மீதி எண்களின் கூடுதல்=9+6+4+2=21

21க்கு அடுத்த 9ஆல் வகுபடும் எண்=27

நீக்கிய எண்:27லிருந்து 21ஐக் கழிக்க வரும் எண்.அதாவது 6 ஆகும்.

ஓர் எண்ணை நீக்கியபின் மீதி எண்களின் கூடுதல் 9ன் மடங்காக இருந்

தால் நீக்கியஎண் 0 அல்லது 9 ஆக இருக்கும்.

ஐயா,

உங்கள் பதில் பார்க்கும் முன்னர் நான் முயன்ற வகையை கீழே தந்துள்ளேன். இது சரியா என கூறுங்கள்.

அவர் கூறும் நான்கு எண்களின் எண்ணிக்கையை கூட்டினால் வரும் ஒற்றைப்படை எண்ணாக மாற்றவும்.
அதாவது 9+6+4+2=21
2+1 = 3
வரும் எண்ணான மூன்றை ஒன்பதிலிருந்து கழித்தால் வரும் எண் 6. அதுவே விடை.

ஆக மொத்த எண்களையும் கூட்டி ஒரு எண்ணாக மாற்றி அதை ஒன்பதிலிருந்து கழித்தால் வரும் எண்ணே விடையாகும்.

வேறு எண்களைக்கொண்ட புதிரில் இவ்வகையில் ஒரு வேளை கூடுதல் தொகை ஒன்பதாக இருக்குமெனில் (நீக்கப்பட்ட எண்)விடை சுழியமாக இருக்கும்.

M.Jagadeesan
11-02-2011, 08:11 AM
மொத்த எண்களையும் கூட்டி ஒரே எண்ணாக மாற்றி அதை 9 லிருந்து
கழித்தால் நீக்கிய எண் கிடைக்கும் என்பது சரியே!
ஆனால் கூட்டிய எண் 9 ஆக இருக்குமானால் நீக்கிய எண் 0 அல்லது
9 ஆக இருக்கும்.