PDA

View Full Version : குறுங்கவிகள்- 5



inban
03-11-2010, 04:24 PM
1

கொட்டும் மழைநாளில்
குடை வேண்டாமென்று
புறப்பட்ட என்னை
ஆச்சர்யத்தோடு பார்த்தாள் அம்மா.
ஏந்திய குடையோடு
எதிரே வரும் என் அன்பே
எங்கம்மாவுக்கு என்னதெரியும்?
அவளொரு நாட்டுப்புறம்.

2

தொடமுடியாதபடி
தூர ஓடிடுவேன்
எனத்தான் நீ
எதிர்பார்த்திருபாய்.
அடியே!
நீ தொடவேண்டும் என்பதற்குத்தானே
இந்த தொட்டுப்பிடிக்கும் விளையாட்டு !?

3

என் அண்ணன் மகன் அரவிந்தனிடம்
முத்தம் கேட்டு
கெஞ்சியபடி இருகிறாய்
அடியே!
விவரம் வந்த நாழிகைமுதல்
உனக்கெனத்தானே
உயிரை
உயில் எழுதி வைத்திருக்கிறேன்

4

சூடிடும் மலர்
சடுதியில் வாடிப்போவதாய் சொல்லி
ஆச்சர்யப்படுகிறாய்

என்னைப் பார்த்ததிலிருந்துதானே!?

5
எவளின் முனகலுக்ககு
செவி தீட்டி இருக்கிறது
கும்மிருட்டு ?

வானவர்கோன்
05-11-2010, 01:03 PM
அனுபவக் கவி அருமை.

M.Jagadeesan
05-11-2010, 02:40 PM
பெற்ற தாயை "நாட்டுப்புறம்" என்று அழைத்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

inban
06-11-2010, 07:39 AM
பெற்ற தாயை "நாட்டுப்புறம்" என்று அழைத்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

நண்பரே நாட்டுப்புறம் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டேனே அன்றி சிறுமை படுத்த அன்று. நாட்டுப்புறம் என்றால் அவளவு மோசமில்லையே ...
மலர்ந்த பூ போன்று அவ்வளவு இயல்பானது அது.

பென்ஸ்
07-11-2010, 01:27 AM
எத்தனை நனைந்தாலும்
சளியும் இல்லை.. சளைப்பும் இல்லை...
காதலில் எல்லாம் சாத்தியம்...
கவிதை மழை தொடரட்டும்... சளைக்காமல் நனைகிறோம்..

அமரன்
07-11-2010, 07:48 PM
குடைக்குள் மழை!

பருவம் கண்டு
எடுத்துக் கிளம்புகிறேன் என்னுடனொரு
கறுப்புக் குடை.


என்னைத் தொடாமல்
தற்கொலை செய்து கொள்கி்றது
மழை..

கம்பிகளில் உருகியோடும் உயிர்
கொடுக்கிறது உயிரை
எனக்கு!

பெய்யத் துவங்குகிறது
குடைக்குள் மழை!

அருமை இன்ப(ம்)ன்.