PDA

View Full Version : காத்திரமான கருத்துக்கள்வானவர்கோன்
03-11-2010, 12:51 PM
தமிழ்மன்றத்தினருக்கு,

நான் தமிழ்மன்றத்தில் இணைந்து குறுகிய காலமே, இக் காலத்தில் ஒரு சிறுகதை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=25001)யும், ஒரு குறுங்கவிதை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=25036)யும் இணைத்திருந்தேன், தமிழ்மன்றத்தில் இருந்து ஆக்கபூர்வமான கருத்துக்கள் வந்து எழுத்தாற்றலை விஸ்வரூபமாக்குமென கனவு கண்டிருந்தேன், ஆனால் எனது படைப்புகளுக்காக தமிழ்மன்றத்தில் இருந்து காத்திரமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டவர்கள் அமரன், கீதம் மற்றும் ஆதவா இம் மூவருமே!

ஒரு படைப்பாளி தனது படைப்புக்களுக்கு சமூகத்தில் இருந்து வரும் கருத்துக்களைக் கொண்டே புளாங்கிதம் அடைவான். தயவு செய்து தமிழ்மன்றத்தினர் மன்றத்தில் அங்கத்துவம் வகிப்பதுடன் நின்று விடாது படைப்பாளிகளின் கற்பனைத் திறனுக்கும் ஊக்கம் கொடுங்கள், காத்திரமான கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.

நன்றி.

M.Jagadeesan
03-11-2010, 01:04 PM
சோர்வடையாது, தங்களது படைப்புகளை மன்றத்திற்கு அளித்து வாருங்கள்.

வானவர்கோன்
03-11-2010, 01:16 PM
சோர்வடையாது, தங்களது படைப்புகளை மன்றத்திற்கு அளித்து வாருங்கள்.
மன்றத்தில் படைப்புகளை அர்த்தமற்று இணைப்பதால் பலனேது நண்பரே, படைப்புகள் எத்தனை பேரின் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதே முக்கியம்.

சூறாவளி
03-11-2010, 05:36 PM
மன்றத்தில் அதிகம் என் பார்வையில் படுவது கவிதைகள் தான்.. ஆனா எனக்கு கவிதையை ரசிப்பது என்றால் பொதுவாழ்வில் புழக்கத்தில் இருக்கும் சொற்களை கொண்டு கவிதை தந்தால் அது எனக்கு புரியும், புரிந்த கவிதைக்கு நல்ல விமர்சனம் கொடுப்பேன்... ஆனால் இங்கு பதிக்கப்படும் அனேக கவிதைகள் எனக்கு புரிவதற்க்குள் பெரும்பாடு ஆகிடுது.. எந்த ஒரு திரியென்றாலும் அதன் சாராம்சம் புரிந்தால் தான் அதனை சார்ந்து விமர்சனம் அளிக்க முடியும்.. அதனால்தான் கவிதைகள் பக்கம் போனாலும் புரிந்த கவிதைக்கு மட்டும் பதிலுரைக்கிறேன்...

அமரன்
03-11-2010, 07:33 PM
வானவர்கோன்!

உங்கள் ஆதங்கம் நியாயமானதே.

இங்கே பலரும் கிடைக்கும் நேரத்தில் வருகிறார்கள்.

இப்போது பலருக்கு விடுமுறை வேறு. தீபாவளிக் கொண்டாட்டத்தில் தம்மை ஈடுபடுத்தி இருப்பார்கள்.

எல்லாரும் முழு வீச்சில் மன்றம் வரும் போது உங்கள் படைப்புகளுக்கும் பின்னூட்டம் கிடைக்கும்.

மனம் தளராமல் தொடர்ந்து படையுங்கள்.

தாமரை
04-11-2010, 02:17 AM
அன்பு வானவர்கோன்..

மற்ற இடங்களுக்கும் இந்த மன்றத்திற்கும் வித்தியாசங்கள் உண்டு..

நீங்கள் சொல்லும் இந்த நாட்களை இங்குள்ள பலரும் கடந்து வந்தவர்களே..

ஒரு படைப்பைப் படைத்து சமர்ப்பித்தால் 25 பின்னூட்டமாவது போட்டாக வேண்டும் என்று உத்தரவு போட்டால் ஒழிய, படைப்புகளை நிர்வாகம்தான் வெளியிடும் என்று வாய்க்கால் வெட்டினால் ஒழிய பின்னூட்டங்கள் அதிகம் வராது.

இங்குள்ள அனைவருமே உங்களைப் போல சாதாரண உறுப்பினர்தான். எனவே தமிழ் மன்றத்தினரே என விளித்ததில் நீங்கள் உங்களையும் விளித்துக் கொண்டுள்ளீர்கள். எல்லோருக்கும் படைக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகவே இருக்கிறது. தங்களின் படைப்பை பிறர் பாராட்ட வேண்டும் என்ற ஆர்வம் மிக அதிகமாகவே இருக்கிறது.

இங்கு படைப்பாளிகள், வாசகர்கள் என்ற பிரிவே இல்லை. படைப்பாளிகளே வாசகர்கள். பின்னூட்டமிடுவதால் சிலர் எப்படி உங்கள் மனதில் நுழைந்தார்களோ அப்படி நீங்களும் பின்னூட்டமிட்டு பலரின் மனதில் நுழையுங்கள். மக்கள் உங்கள் படைப்புகளைத் தேடி வருவார்கள்.

காலம் போகப் போக, உங்கள் படைப்புகளின் தொடர் தரம் வாசகர்களை உங்களிடம் இழுத்துவரும். உங்கள் படைப்புகள் அலசப்படும். சிறிது காலம் பிடிக்கும் காரியம் இது.

இறுதியாக நான் ஏன் பின்னூட்டம் இடவில்லை எனக் கேட்கலாம். அதற்கும் பதில் சொல்லி விடுகிறேன்,

என்னுடைய விமர்சனங்கள் மிக ஆழமாக பல சமயம் குறைகளை எடுத்துச் சொல்லி, அதை எப்படி எப்படி எல்லாம் கையாண்டிருக்கலாம் என்று போகும். பாராட்டுகள் மிகக் குறைவாகவே இருக்கும்.

உதாரணம் :

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=496129&postcount=18
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=24971

எனவே புதிதாய் மன்றத்தில் நுழைந்தவர்களுக்கு உடனடியாய் நான் விமர்சனம் இட்டு அவர்களை மனவருத்தம் கொள்ளச் செய்வதில்லை. அவர்கள் நான் பிறருக்கு அளிக்கும் விமர்சனத்தை படித்துப் பழகிய பின்னர்தான் என் விமர்சனம் அவர்களைத் தொடும்.

அத்னால்தான் என் விமர்சனப் பார்வை தங்கள் மீது படியவில்லை. புதியவர்களை ஊக்குவிக்க பலர் இருக்கலாம். ஆனால் என் பார்வையை வெறும் பாராட்டுகள் வெறுத்துப் போய் உண்மை விமர்சனக்களுக்கு ஏங்கும் சிலருக்காக ஒதுக்கி வைத்திருக்கிறேன்.

எனக்கு கிடைக்கும் நேரத்தில் என் படைப்புகளைப் படைக்கவும், சிக்கலான கேள்விகளுக்கு விடையளிக்கவும் மற்றும் இவ்வகை விரிவான விமர்சனக்களுக்குமே நேரம் சரியாக இருக்கிரது. அதனால் என்னை மன்னிக்கவும்.

nambi
04-11-2010, 04:59 AM
இங்குள்ளவைகள் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=434021&postcount=1) பொதுவான புரிதலை உருவாக்கலாம்.....

...........................................................

பொதுவாக எழுத்துக்கள் பார்வையினால், வாசிப்பினால் உள்வாங்கப்படுகிறது...புறந்தள்ளப்படுவதில்லை...புறந்தள்ளவும் முடியாது...பின்னூட்டங்கள் வேண்டுமானால் தள்ளிப்போகலாம்...இது எழுத்துக்கே உரிய சிறப்பு...

எழுத்துக்கள் குறிப்பிட்ட எவரையும் எதிர் நோக்கி காத்திருப்பதில்லை...(நம்) காலங்கடந்து பல மனங்களில் நுழைய காத்துக்கொண்டிருக்கும்....அப்படியே நுழைந்துவிடும்...நுழைந்தால் தானே பின்னுட்டமிடவேண்டுமா? வேண்டாமா? என்ற முடிவுக்கு வரமுடியும்.....

(இங்கேயுள்ள ஆதாரம்....ஒவ்வொரு பக்கத்தின் கீழேயுள்ள பகுதியில் எத்தனை பேர் பார்த்தனர் (வாசித்தனர்) என்ற பெயர் குறிப்புகள் தெரிவிக்கின்றன... (உள்வாங்கியதை தெரிவிக்கின்றன)...

ஆனால் எத்தனை பேர் இனி..இனிமேல்....எதிர்வரும் காலங்களில்...உள்வாங்கப்போகிறார்கள்? என்பதை அளவிட்டு தெரிவிப்பதில்லை....)

சில பின்னூட்டங்கள் உடனடியாக தெரிவிக்கப்படுகிறது...சில பின்னூட்டங்கள் காலங்கடத்துகிறது...இன்னும் சில பின்னூட்டங்கள் இன்னும் சில பின்னூட்டங்களை எதிர் நோக்கி காத்திருக்கிறது....

இன்னும் சில பின்னூட்டங்கள் தயங்குகிறது...நமக்குத்தான் தான் புரியவில்லையா? எல்லோருக்குமா?....தெரிவித்தால் சரியாக வருமா? என்று யோசித்து, யோசித்து பின்னூட்டமிடுகிறது...பல நேரங்களில் வாசிக்க நேரமின்மையால் தவிர்க்கிறது...

நீளம் கருதி பிறகு பொறுமையாக வாசித்து பின்னூட்டமிடலாம் எனத் தள்ளிப்போடுகிறது அப்படியே மறந்தும் விடுகிறது...

சில பின்னூட்டங்கள் சூழல்களை எதிர்நோக்கியிருக்கிறது...நல்ல பின்புல சூழ்நிலையில் பின்னூட்டங்களில் எழுத்துக்கள் சரளமாக வருகிறது...சில பின்புல சூழல்களில் வழக்கமான வார்த்தைகளே கூடத் தடுமாறுகிறது...

பின்னூட்டங்களும் படைப்புத்தான்...சாதாரண விஷயமில்லை...

சில பின்னூட்டங்கள் சிலவருடங்கள் கடந்த எழுத்துக்களை தேடிப்போய் ஆச்சரியமுறும் வகையில் கருத்திடுகிறது...

கருத்துக்கள் உண்மையாகிவிட்டன் என் பின்னூட்டமிடுகிறது...

கருத்துக்கள் பொய்யாகிவிட்டன என கருதி பின்னூட்டமிடுகிறது...

சமூகத்துக்கு முரணானத் தகவல் எம் பின்னூட்டம் அங்கே இருந்தே ஆகவேண்டும் எனக் கருதி உணர்ச்சிவயப்பட்டு இடப்படுகிறது...

நிறை அதிகமிருக்கிறது..குறை குறைவாகத்தானே இருக்கிறது என்று பின்னூட்டமிடத் தவிர்க்கிறது...

நான் தெரிவிக்க நினைத்ததை இன்னொரு பின்னூட்டம் தெரிவித்து விட்டதே! என்றும் தவிர்க்கிறது...:D

(சில அரசியல், சமூகத்தை தேடுகிறது..விழிப்புணர்வை பற்றி யோசிக்கிறது....ஆன்மீகத்தை தேடுகிறது...பகுத்தறிவைப் பார்க்கிறது....இசையைத் தேடுகிறது..கவிதையை ரசிக்கத்த துடிக்கிறது....பொழுதுபோக்கை நாடுகிறது...அந்த மனம் அன்றைய நிலையில் எதை விரும்புகிறதோ? அதைப்பொருத்து...பின்னூட்டம்)

இது நம்பிக்கை சார்ந்த விஷயம் பிறகு பார்த்துகொள்ளலாம் என அப்படியே இருக்கட்டும் என்றும் விட்டுவிடுகிறது...

சிலநம்பிக்கைகள் மூடநம்பிக்கையாக மாறும் பொழுது பின்னூட்டமிடுகிறது...இப்படி மனங்களின் அடிப்படையில் பின்னூட்டங்கள் இடுவதும், தவிர்ப்பதும் நடைபெறுகிறது...

திரி ஆரம்ப படைப்பு என்றால் பின்னூட்டம் பலரின் பங்கேற்பில் வரும் தொடர்ச்சியான படைப்பு என்று கூட செல்லலாம்........

இப்பொழுது கூட சூழல்கள் சரியில்லை... இணையப் பிரச்சனையால் முதல் எழுதியது அழிந்துவிட்டதால்...இரண்டாவது முறை தட்டச்சு செய்து...திருப்தியில்லாமல் வெளியிடுகிறது...முதலில் வந்த வார்த்தைகள் இப்பொழுதுவரவில்லை...:D

இது வழக்கமாக அனைத்துப் படைப்பாளிக்கும் வரும் ஆதங்கம் தான்....ஆனால் பாதகமில்லை...பலனுண்டு...

இவ்வளவு குறிப்பிட்டும்.... இறுதியாக குறிப்பிட நினைப்பது...''பின்னூட்டமிடுவோம்''....அனைவரையும் ''ஊக்கப்படுத்துவோம்''..என்ற ஒருமுக கூற்றை மட்டும் தான்....:D

மேற்கூறிய காரணங்களில் ஒவ்வொரு மனங்களின் காரணங்களாக ஒன்றோ அல்லது ஒன்றுக்குமேற்பட்ட காரணங்களாகக் கூட அல்லது இங்கு குறிப்பிடப்படாத காரணங்களாகவும் இருக்கலாம்....

ஆனால் இது நிச்சயம் புரிதலுக்காக மட்டுமே!

நன்றி!

Ravee
04-11-2010, 05:36 AM
ஆதங்கப்பட வேண்டாம் வானவர்க்கோன் , சில வேளைகளில் ஒருவருடம் கழித்துக்கூட விமர்சனங்கள் வரும் ... உங்கள் பதிப்புக்கு ஆற அமர தெளிவாக பின்னுட்டமிடவேண்டும் என்றும் நினைத்து இருக்கலாம். உங்கள் தடங்களை பதியுங்கள் .... பின் பற்றி நாங்கள் வருகிறோம்.

கீதம்
04-11-2010, 08:14 AM
மன்ற உறவுகளின் மனங்களைப் பிரதிபலித்த நம்பிக்கு நன்றியும் பாராட்டும்.

மனந்தளராமல் தொடர்ந்து பங்களியுங்கள் வானவர்கோன் அவர்களே.

விரைவில் அனைவரின் மனங்கவர்ந்த பதிவாளராக என் வாழ்த்துகள்.

வானவர்கோன்
04-11-2010, 02:22 PM
மன்றத்தில் அதிகம் என் பார்வையில் படுவது கவிதைகள் தான்.. ஆனா எனக்கு கவிதையை ரசிப்பது என்றால் பொதுவாழ்வில் புழக்கத்தில் இருக்கும் சொற்களை கொண்டு கவிதை தந்தால் அது எனக்கு புரியும், புரிந்த கவிதைக்கு நல்ல விமர்சனம் கொடுப்பேன்... ஆனால் இங்கு பதிக்கப்படும் அனேக கவிதைகள் எனக்கு புரிவதற்க்குள் பெரும்பாடு ஆகிடுது.. எந்த ஒரு திரியென்றாலும் அதன் சாராம்சம் புரிந்தால் தான் அதனை சார்ந்து விமர்சனம் அளிக்க முடியும்.. அதனால்தான் கவிதைகள் பக்கம் போனாலும் புரிந்த கவிதைக்கு மட்டும் பதிலுரைக்கிறேன்...
எனது படைப்பில் புரியாத சொற்களுக்கு சந்தர்ப்பம் குறைவாகவே இருக்கும் என்பதே எனது எண்ணம், சில கிராமியச் சொற்களை புகுத்தியிருப்பேன் அவ்வளவே!
கருத்து தெரிவித்தமைக்கு நன்றி.

வானவர்கோன்!

உங்கள் ஆதங்கம் நியாயமானதே. இங்கே பலரும் கிடைக்கும் நேரத்தில் வருகிறார்கள்.
இப்போது பலருக்கு விடுமுறை வேறு. தீபாவளிக் கொண்டாட்டத்தில் தம்மை ஈடுபடுத்தி இருப்பார்கள்.
எல்லாரும் முழு வீச்சில் மன்றம் வரும் போது உங்கள் படைப்புகளுக்கும் பின்னூட்டம் கிடைக்கும்.
மனம் தளராமல் தொடர்ந்து படையுங்கள்.
நன்றி அமரன், எனது படைப்புகளுக்கு பின்னூட்டம் வரவேண்டும் என்பது எனது நோக்கமல்ல, இது தமிழ்மன்றம் பல ஆக்கவாதிகளைக் கொண்ட மேடை, ஆக்கங்களை வாசிப்போர் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தால் படைப்பாளி இன்னும் விருத்தியடைய சந்தற்பம் வாய்க்கும் அல்லவா.

தங்களின் கருத்து கூறுவது கீதம், ஆதவா மற்றும் நீங்கள் தவிர்ந்த மற்றய அனைத்து நண்பர்களும் பண்டிகைக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக எண்ணத் தோன்றுகின்றது.

அன்பு வானவர்கோன்..

மற்ற இடங்களுக்கும் இந்த மன்றத்திற்கும் வித்தியாசங்கள் உண்டு..

நீங்கள் சொல்லும் இந்த நாட்களை இங்குள்ள பலரும் கடந்து வந்தவர்களே..

ஒரு படைப்பைப் படைத்து சமர்ப்பித்தால் 25 பின்னூட்டமாவது போட்டாக வேண்டும் என்று உத்தரவு போட்டால் ஒழிய, படைப்புகளை நிர்வாகம்தான் வெளியிடும் என்று வாய்க்கால் வெட்டினால் ஒழிய பின்னூட்டங்கள் அதிகம் வராது.

இங்குள்ள அனைவருமே உங்களைப் போல சாதாரண உறுப்பினர்தான். எனவே தமிழ் மன்றத்தினரே என விளித்ததில் நீங்கள் உங்களையும் விளித்துக் கொண்டுள்ளீர்கள். எல்லோருக்கும் படைக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகவே இருக்கிறது. தங்களின் படைப்பை பிறர் பாராட்ட வேண்டும் என்ற ஆர்வம் மிக அதிகமாகவே இருக்கிறது.

இங்கு படைப்பாளிகள், வாசகர்கள் என்ற பிரிவே இல்லை. படைப்பாளிகளே வாசகர்கள். பின்னூட்டமிடுவதால் சிலர் எப்படி உங்கள் மனதில் நுழைந்தார்களோ அப்படி நீங்களும் பின்னூட்டமிட்டு பலரின் மனதில் நுழையுங்கள். மக்கள் உங்கள் படைப்புகளைத் தேடி வருவார்கள்.

காலம் போகப் போக, உங்கள் படைப்புகளின் தொடர் தரம் வாசகர்களை உங்களிடம் இழுத்துவரும். உங்கள் படைப்புகள் அலசப்படும். சிறிது காலம் பிடிக்கும் காரியம் இது.

இறுதியாக நான் ஏன் பின்னூட்டம் இடவில்லை எனக் கேட்கலாம். அதற்கும் பதில் சொல்லி விடுகிறேன்,

என்னுடைய விமர்சனங்கள் மிக ஆழமாக பல சமயம் குறைகளை எடுத்துச் சொல்லி, அதை எப்படி எப்படி எல்லாம் கையாண்டிருக்கலாம் என்று போகும். பாராட்டுகள் மிகக் குறைவாகவே இருக்கும்.

உதாரணம் :

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=496129&postcount=18
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=24971

எனவே புதிதாய் மன்றத்தில் நுழைந்தவர்களுக்கு உடனடியாய் நான் விமர்சனம் இட்டு அவர்களை மனவருத்தம் கொள்ளச் செய்வதில்லை. அவர்கள் நான் பிறருக்கு அளிக்கும் விமர்சனத்தை படித்துப் பழகிய பின்னர்தான் என் விமர்சனம் அவர்களைத் தொடும்.

அத்னால்தான் என் விமர்சனப் பார்வை தங்கள் மீது படியவில்லை. புதியவர்களை ஊக்குவிக்க பலர் இருக்கலாம். ஆனால் என் பார்வையை வெறும் பாராட்டுகள் வெறுத்துப் போய் உண்மை விமர்சனக்களுக்கு ஏங்கும் சிலருக்காக ஒதுக்கி வைத்திருக்கிறேன்.

எனக்கு கிடைக்கும் நேரத்தில் என் படைப்புகளைப் படைக்கவும், சிக்கலான கேள்விகளுக்கு விடையளிக்கவும் மற்றும் இவ்வகை விரிவான விமர்சனக்களுக்குமே நேரம் சரியாக இருக்கிரது. அதனால் என்னை மன்னிக்கவும்.

நன்றி தாமரை, எனது படைப்புகளுக்கு தமிழ்மன்றத்தில் இருந்து பாராட்டுதல்கள் கிடைக்க வேண்டுமென்பதற்காக இந்தத் தளத்துக்கு நான் வரவில்லை, வாசிப்பவர்களின் பல தரப்பட்ட கருத்துக்களையும் அறியும் நோக்கமே அதில் அதிகம் தொக்கி நிற்கின்றது.

உங்களின் படைப்புகள் சார்ந்த திறனாய்வுப் பார்வையை ஒரு வட்டத்திற்குள் மாத்திரம் முடக்கிக் கொள்ளாமல் சகலருக்கும் கிடைக்கக் கூடியதாக காத்திரமான விமர்சனங்களைப் படையுங்கள், அதனையே படைப்பாளிகள் அதிகம் விரும்புவர்.

இங்குள்ளவைகள் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=434021&postcount=1) பொதுவான புரிதலை உருவாக்கலாம்.....

...........................................................

பொதுவாக எழுத்துக்கள் பார்வையினால், வாசிப்பினால் உள்வாங்கப்படுகிறது...புறந்தள்ளப்படுவதில்லை...புறந்தள்ளவும் முடியாது...பின்னூட்டங்கள் வேண்டுமானால் தள்ளிப்போகலாம்...இது எழுத்துக்கே உரிய சிறப்பு...

எழுத்துக்கள் குறிப்பிட்ட எவரையும் எதிர் நோக்கி காத்திருப்பதில்லை...(நம்) காலங்கடந்து பல மனங்களில் நுழைய காத்துக்கொண்டிருக்கும்....அப்படியே நுழைந்துவிடும்...நுழைந்தால் தானே பின்னுட்டமிடவேண்டுமா? வேண்டாமா? என்ற முடிவுக்கு வரமுடியும்.....

(இங்கேயுள்ள ஆதாரம்....ஒவ்வொரு பக்கத்தின் கீழேயுள்ள பகுதியில் எத்தனை பேர் பார்த்தனர் (வாசித்தனர்) என்ற பெயர் குறிப்புகள் தெரிவிக்கின்றன... (உள்வாங்கியதை தெரிவிக்கின்றன)...

ஆனால் எத்தனை பேர் இனி..இனிமேல்....எதிர்வரும் காலங்களில்...உள்வாங்கப்போகிறார்கள்? என்பதை அளவிட்டு தெரிவிப்பதில்லை....)

சில பின்னூட்டங்கள் உடனடியாக தெரிவிக்கப்படுகிறது...சில பின்னூட்டங்கள் காலங்கடத்துகிறது...இன்னும் சில பின்னூட்டங்கள் இன்னும் சில பின்னூட்டங்களை எதிர் நோக்கி காத்திருக்கிறது....

இன்னும் சில பின்னூட்டங்கள் தயங்குகிறது...நமக்குத்தான் தான் புரியவில்லையா? எல்லோருக்குமா?....தெரிவித்தால் சரியாக வருமா? என்று யோசித்து, யோசித்து பின்னூட்டமிடுகிறது...பல நேரங்களில் வாசிக்க நேரமின்மையால் தவிர்க்கிறது...

நீளம் கருதி பிறகு பொறுமையாக வாசித்து பின்னூட்டமிடலாம் எனத் தள்ளிப்போடுகிறது அப்படியே மறந்தும் விடுகிறது...

சில பின்னூட்டங்கள் சூழல்களை எதிர்நோக்கியிருக்கிறது...நல்ல பின்புல சூழ்நிலையில் பின்னூட்டங்களில் எழுத்துக்கள் சரளமாக வருகிறது...சில பின்புல சூழல்களில் வழக்கமான வார்த்தைகளே கூடத் தடுமாறுகிறது...

பின்னூட்டங்களும் படைப்புத்தான்...சாதாரண விஷயமில்லை...

சில பின்னூட்டங்கள் சிலவருடங்கள் கடந்த எழுத்துக்களை தேடிப்போய் ஆச்சரியமுறும் வகையில் கருத்திடுகிறது...

கருத்துக்கள் உண்மையாகிவிட்டன் என் பின்னூட்டமிடுகிறது...

கருத்துக்கள் பொய்யாகிவிட்டன என கருதி பின்னூட்டமிடுகிறது...

சமூகத்துக்கு முரணானத் தகவல் எம் பின்னூட்டம் அங்கே இருந்தே ஆகவேண்டும் எனக் கருதி உணர்ச்சிவயப்பட்டு இடப்படுகிறது...

நிறை அதிகமிருக்கிறது..குறை குறைவாகத்தானே இருக்கிறது என்று பின்னூட்டமிடத் தவிர்க்கிறது...

நான் தெரிவிக்க நினைத்ததை இன்னொரு பின்னூட்டம் தெரிவித்து விட்டதே! என்றும் தவிர்க்கிறது...:D

(சில அரசியல், சமூகத்தை தேடுகிறது..விழிப்புணர்வை பற்றி யோசிக்கிறது....ஆன்மீகத்தை தேடுகிறது...பகுத்தறிவைப் பார்க்கிறது....இசையைத் தேடுகிறது..கவிதையை ரசிக்கத்த துடிக்கிறது....பொழுதுபோக்கை நாடுகிறது...அந்த மனம் அன்றைய நிலையில் எதை விரும்புகிறதோ? அதைப்பொருத்து...பின்னூட்டம்)

இது நம்பிக்கை சார்ந்த விஷயம் பிறகு பார்த்துகொள்ளலாம் என அப்படியே இருக்கட்டும் என்றும் விட்டுவிடுகிறது...

சிலநம்பிக்கைகள் மூடநம்பிக்கையாக மாறும் பொழுது பின்னூட்டமிடுகிறது...இப்படி மனங்களின் அடிப்படையில் பின்னூட்டங்கள் இடுவதும், தவிர்ப்பதும் நடைபெறுகிறது...

திரி ஆரம்ப படைப்பு என்றால் பின்னூட்டம் பலரின் பங்கேற்பில் வரும் தொடர்ச்சியான படைப்பு என்று கூட செல்லலாம்........

இப்பொழுது கூட சூழல்கள் சரியில்லை... இணையப் பிரச்சனையால் முதல் எழுதியது அழிந்துவிட்டதால்...இரண்டாவது முறை தட்டச்சு செய்து...திருப்தியில்லாமல் வெளியிடுகிறது...முதலில் வந்த வார்த்தைகள் இப்பொழுதுவரவில்லை...:D

இது வழக்கமாக அனைத்துப் படைப்பாளிக்கும் வரும் ஆதங்கம் தான்....ஆனால் பாதகமில்லை...பலனுண்டு...

இவ்வளவு குறிப்பிட்டும்.... இறுதியாக குறிப்பிட நினைப்பது...''பின்னூட்டமிடுவோம்''....அனைவரையும் ''ஊக்கப்படுத்துவோம்''..என்ற ஒருமுக கூற்றை மட்டும் தான்....:D

மேற்கூறிய காரணங்களில் ஒவ்வொரு மனங்களின் காரணங்களாக ஒன்றோ அல்லது ஒன்றுக்குமேற்பட்ட காரணங்களாகக் கூட அல்லது இங்கு குறிப்பிடப்படாத காரணங்களாகவும் இருக்கலாம்....

ஆனால் இது நிச்சயம் புரிதலுக்காக மட்டுமே!

நன்றி!

நன்றி நம்பி, தமிழ்மன்றத்தில் பதிவான எனது படைப்புகளின் வயது பத்துக்கும் அதிகமானவை, ஆகவே இது சார்ந்த புரிதல்கள் என்னிடம் அதிகமாகவே உள்ளன.

புதிதாக தமிழ்மன்றத்தினுள் பிரவேசிப்பவர்களை வரவேற்று தட்டிக் கொடுத்தால் தான் இன்னும் அதிகமான இலக்கியப் படைப்புகள் பிரசவமாகும், தட்டிக் கொடுப்பு என்றால் பாராட்டுதல்கள் மாத்திரமல்ல, குறைகளை செப்பனிட கருத்து தெரிவிப்பதுவும் கூடவே!

ஆதங்கப்பட வேண்டாம் வானவர்கோன் , சில வேளைகளில் ஒருவருடம் கழித்துக்கூட விமர்சனங்கள் வரும் ... உங்கள் பதிப்புக்கு ஆற அமர தெளிவாக பின்னுட்டமிடவேண்டும் என்றும் நினைத்து இருக்கலாம். உங்கள் தடங்களை பதியுங்கள் .... பின் பற்றி நாங்கள் வருகிறோம்.

நன்றி ரவி, ஒரு வருடத்தின் பின்பும் விமர்சனம் வரலாம், ஆனால் அதுவரை அடுத்த பதிவை தரவேற்ற காத்திருக்க வேண்டுமே! சூட்டோடு சூடாக படைப்புகளுக்குரிய கருத்துக்கள் வரின், படைப்பாளிகளின் அடுத்த படைப்புகள் இன்னும் மெருகேற வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் அல்லவா.

மன்ற உறவுகளின் மனங்களைப் பிரதிபலித்த நம்பிக்கு நன்றியும் பாராட்டும்.

மனந்தளராமல் தொடர்ந்து பங்களியுங்கள் வானவர்கோன் அவர்களே.
விரைவில் அனைவரின் மனங்கவர்ந்த பதிவாளராக என் வாழ்த்துகள்.

நன்றி கீதம்.

என்னைப் போன்று பல படைப்பாளிகளும் ஆரம்பத்தில் தங்களது படைப்பு சார்ந்த கருத்துக்களுக்காக ஏங்கி காத்திருந்திருப்பார்கள் என்பது நானறிந்ததே, காத்திரமான கருத்துக்களைத் தெரிவிப்பதன் மூலம் படைப்பாளிகள் மெருகேற்றப்படுவார்கள் என்பது எனது நம்பிக்கை.

தாமரை
04-11-2010, 05:23 PM
=
நன்றி தாமரை, எனது படைப்புகளுக்கு தமிழ்மன்றத்தில் இருந்து பாராட்டுதல்கள் கிடைக்க வேண்டுமென்பதற்காக இந்தத் தளத்துக்கு நான் வரவில்லை, வாசிப்பவர்களின் பல தரப்பட்ட கருத்துக்களையும் அறியும் நோக்கமே அதில் அதிகம் தொக்கி நிற்கின்றது.

உங்களின் படைப்புகள் சார்ந்த திறனாய்வுப் பார்வையை ஒரு வட்டத்திற்குள் மாத்திரம் முடக்கிக் கொள்ளாமல் சகலருக்கும் கிடைக்கக் கூடியதாக காத்திரமான விமர்சனங்களைப் படையுங்கள், அதனையே படைப்பாளிகள் அதிகம் விரும்புவர்.இது நான் போட்ட வட்டமல்ல.. படைப்பாளிகள் வேண்டுக்கோளுக் கிணங்கவே இந்த வட்டம் வரையப்பட்டுள்ளது.. அதில் நான் நின்று கொண்டு இருக்கிறேன். உங்களுக்காக அதை மாற்றிக் கொள்ள இயலாது. மன்னிக்கவும்.

என் மனதில் உள்ளவற்றை எழுதி முடிக்கவே எனக்கு இருக்கும் ஆயுள் போதாது... !!!

வானவர்கோன்
05-11-2010, 12:58 PM
இது நான் போட்ட வட்டமல்ல.. படைப்பாளிகள் வேண்டுக்கோளுக் கிணங்கவே இந்த வட்டம் வரையப்பட்டுள்ளது.. அதில் நான் நின்று கொண்டு இருக்கிறேன். உங்களுக்காக அதை மாற்றிக் கொள்ள இயலாது. மன்னிக்கவும்.

என் மனதில் உள்ளவற்றை எழுதி முடிக்கவே எனக்கு இருக்கும் ஆயுள் போதாது... !!!

ஏன் இப்படியான வரட்டுப் பிடிவாதம்!

பென்ஸ்
05-11-2010, 01:27 PM
வானவர்கோன்...
உங்கலை சமாதான படுத்த நான் இந்த பதிவை கொடுக்கவில்லை, உங்கள் ஆதாங்கம் தேவையற்றது.

1) உங்கள் பதிவுகளை நான் வாசித்திருந்தேன்.. அவை ஈழம் பற்றியவை... அவற்றை நான் வாசித்து இரக்கபட விருப்பமா, பரிதாப பட வேண்டுமா இல்லை கவிதையில் என்ன தவறு இருக்கிறது என்று நக்கீரனாக இருக்க முடியுமா...???

சில படைப்புகள் மிகவும் சென்சிடிவானவை, அதற்க்கு முதலில் சடென்று விமர்சனம் கிடைக்காது...

2) உங்கள் பின்னூட்டஙளை வாசித்து வந்தேன்... அனைத்தும் ஒற்றை வரிகள்... நீங்களும் ஒரு படைப்பாளீ தானே, உங்கள் அதே மனம் தானே அடுத்தவருக்கும் இருக்கும், நீங்கள் இப்படி ஒரு வரி விமர்சனம் கொடுக்கலாமா???
http://tamilmantram.com/vb/showthread.php?t=25044
http://tamilmantram.com/vb/showthread.php?t=25045
http://tamilmantram.com/vb/showpost.php?p=498792&postcount=9
http://tamilmantram.com/vb/showpost.php?p=498790&postcount=11
http://tamilmantram.com/vb/showpost.php?p=498771&postcount=7

3) மன்றத்தில் மற்றவர்கள் படைப்புகளை வாசியுங்கள்... படையுங்கள், விமர்சியுங்கள்.... உங்கள் நல்ல படிப்புக்கு பாராடும் , வழிகாட்டுதலும் நிச்சயம் வரும்.... மன்றம் பல கவிஞர்களையும் , எழுத்தாளர்களையும் உருவாக்கி இருக்கிறது... அந்த வரிசையில் நீங்களும் நிச்சயம் இருப்பீர்கள்...

4) நீங்கள் இருக்கு மன நிலையை கடந்து வந்தவர்களில், நானும் ஒருவன்...

தாமரை
05-11-2010, 01:43 PM
அன்பு வானவர்கோன்..

எனவே புதிதாய் மன்றத்தில் நுழைந்தவர்களுக்கு உடனடியாய் நான் விமர்சனம் இட்டு அவர்களை மனவருத்தம் கொள்ளச் செய்வதில்லை. அவர்கள் நான் பிறருக்கு அளிக்கும் விமர்சனத்தை படித்துப் பழகிய பின்னர்தான் என் விமர்சனம் அவர்களைத் தொடும்.

எனக்கு கிடைக்கும் நேரத்தில் என் படைப்புகளைப் படைக்கவும், சிக்கலான கேள்விகளுக்கு விடையளிக்கவும் மற்றும் இவ்வகை விரிவான விமர்சனக்களுக்குமே நேரம் சரியாக இருக்கிறது. அதனால் என்னை மன்னிக்கவும்.
நன்றி தாமரை, எனது படைப்புகளுக்கு தமிழ்மன்றத்தில் இருந்து பாராட்டுதல்கள் கிடைக்க வேண்டுமென்பதற்காக இந்தத் தளத்துக்கு நான் வரவில்லை, வாசிப்பவர்களின் பல தரப்பட்ட கருத்துக்களையும் அறியும் நோக்கமே அதில் அதிகம் தொக்கி நிற்கின்றது.

உங்களின் படைப்புகள் சார்ந்த திறனாய்வுப் பார்வையை ஒரு வட்டத்திற்குள் மாத்திரம் முடக்கிக் கொள்ளாமல் சகலருக்கும் கிடைக்கக் கூடியதாக காத்திரமான விமர்சனங்களைப் படையுங்கள், அதனையே படைப்பாளிகள் அதிகம் விரும்புவர்... இது நான் போட்ட வட்டமல்ல.. படைப்பாளிகள் வேண்டுக்கோளுக்கிணங்கவே இந்த வட்டம் வரையப்பட்டுள்ளது.. அதில் நான் நின்று கொண்டு இருக்கிறேன். உங்களுக்காக அதை மாற்றிக் கொள்ள இயலாது. மன்னிக்கவும்.

என் மனதில் உள்ளவற்றை எழுதி முடிக்கவே எனக்கு இருக்கும் ஆயுள் போதாது... !!!

ஏன் இப்படியான வரட்டுப் பிடிவாதம்!

இது போன்ற உணர்ச்சிவயப்படும் வார்த்தைகள் என் பின்னூட்டத்திற்கு அப்புறம் வரக்கூடாதல்லவா அதற்காகத்தான் இந்தப் பிடிவாதமே..

வானவர்கோன்
06-11-2010, 12:26 AM
எனது "காத்திரமான கருத்துக்கள்" எனும் தலைப்புடனான முகப்புப் பதிவை மீண்டும் ஒரு தடவை வாசித்துப் பாருங்கள், அதில் எந்த இடத்திலேனும் பாராட்டுதலைக் கோரியிருக்கவில்லை, பரந்து விரிந்துள்ள தமிழ்மன்றத்தில் மூவரே ஆரம்பத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர், பார்வையாளர்களோ எழுவரைத் தாண்டவில்லை அக் கணத்தில், ஏன் தமிழ்மன்றத்துக்கு இந்த நிலமை எனும் ஆதங்கமே என்னை இந்த பதிவினுள் தள்ளியது.

கருத்து என்பது வேறு விமர்சனம் என்பது வேறு, ஒரு படைப்பாளியின் தனித்துவத்தில் விமர்சனம் காண முடியாது, ஆனால் கருத்துக்களின் மூலம் ஓட்டத்தைச் செம்மைப் படுத்தலாம். இவையே நீங்கள் குறிப்பிட்ட சுட்டிகளில் நான் தெரிவித்த ஒரு வரி கருத்துக்களாகும், தாயுமானவர் பாடல், சித்தாந்த சிரோமணி, பெருக்கலின் அதிசயம் போன்றவை என்னால் விமர்சிக்க முடியாதவை, அறிவில் உச்சம். கருத்துக்களைத் தான் பதிவு செய்ய இயலும், அதே சுட்டியில் தாமரையின் ஆச்சரியக் குறி பிரமாதமான குறுங்கவி இதனை அருமை எனச் சொல்வதில் நான் பெருமை கொள்கின்றேன்.

நீங்கள் குறிப்பிட்ட சுட்டி நீங்கலாக இன்னும் பல ஆக்கங்களுக்கு கருத்திட்டுள்ளேன், அவற்றில் பல சேதிகள் உள்ளடங்கி இருக்கும் அவற்றை நீங்கள் தவிர்த்துப் பார்த்துள்ளீர்கள் போலும்!

பாராட்டுதலுக்காக நான் தமிழ்மன்றம் வரவில்லை, படைப்பு சார்ந்த வாசகர்களின் பல தரப்பட்ட கருத்தியலையும் அறியும் நோக்கமே பிரதானமாகும்.

தாமரை
06-11-2010, 02:28 AM
நோக்கம் நல்லது. ஆனால் இரண்டே படைப்புகள் எழுதிவிட்டு இதை எழுப்பியதுதான் கொஞ்சம் அல்ல ரொம்பவுமே அதிகப்படியாய் இருக்கிறது.

10000 பதிவுகள் இட்ட நான் 293 திரிகளை மாத்திரமே தொடங்கி இருக்கிறேன் என்றால் என் பின்னூட்டம் 97.1 சதவிகிதம். நானே பின்னூட்டம் வரலைன்னு கவலைப்படறது கிடையாது.. நீங்க என்னன்னா.... :eek::eek::eek::eek::eek:

வானவர்கோன்
06-11-2010, 07:16 AM

திரிகள் தொடங்குவது பெரிய விடயமல்ல தாமரை, அந்த திரிகளில் அர்த்த புஷ்டியாக எதை எப்படிச் சொல்கின்றோம் என்பதே முக்கியம், அந்த வகையில் நீங்கள் அமைத்த திரிகளும் அவற்றுக்கான பதிவுகளும், அவற்றுக்குக் கிடைத்த பின்னூட்டங்களும் சாட்சி.

நீங்கள் கவலைப்படவில்லை என்பதற்காக தமிழ்மன்றத்தில் இணைந்துள்ள நான் என் ஆக்கம் சார்பாக முனைப்புக் காட்டக் கூடாது என நீங்கள் வாதிடுவது தவறு, அதுவும் ஆலோசகர் ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு!

இரண்டு படைப்புகளைப் பதிந்து விட்டு கருத்துக்களைக் காணவில்லையே என நான் ஆதங்கப்பட்டது உங்களைப் போன்றோருக்கு கடினமாகத் தான் இருக்கும், நான் முதற் பதிவின் அந்தத்திலே இந்தக் கேள்வியைத் தொடங்க முனைந்தேன், இருப்பினும் அடுத்த பதிவைத் தரவேற்றி விட்டு பொறுமையிழந்து சாடலுடனான இந்த பதிவை கேள்விக்குள்ளாக்கினேன்.

இந்த சாடலுடனான வினாத் தளத்துக்கு வந்துள்ள பார்வையாளர்களின் தொகையும், கருத்துக்களும் படைப்புகளுக்குக் கிடைத்திருக்கவில்லையே!

இரண்டு படைப்புகளல்ல முதற் பதிவிலே அதற்கு எப்படியான வரவேற்பு கிடைத்துள்ளது என்பதை வரைபுக் கோடு தெளிவாக்கியது, போகப் போக இந் நிலை அதிகரிக்க வாய்ப்புகளே அதிகம், அதை முளையிலே செப்பனிடாவிடின் எத்தனை ஆயிரம் திரிகளை மாத்திரமல்ல படைப்புகளைத் தரவேற்றினாலும் அவை வாசகர்களைச் சென்றடையாது என்பது எனது நம்பிக்கை!

ஓவியன்
06-11-2010, 07:39 AM
வணக்கம் வானவர்கோன்,

உங்களது இந்த திரி தொடர்பாக எனது கருத்தினையும் இரண்டு நாட்களுக்கு முன்னரேயே பதிக்கவேண்டுமென நினைத்தேன், ஆனால் வழக்கம் போல சில, பல தவிர்க்க முடியாத காரணங்களால் இடமுடியவில்லை (கவனியுங்கள் நான் பதிவிட நினைத்தேன், ஆனால் முடியவில்லை).

சரி அதிருக்கட்டும், மற்றவர்களைப் பற்றி பேச முன்னர் நான் இங்கே என்னைப் பற்றிப் பேச நினைக்கின்றேன். ஆமாம், 2009ம் ஆண்டுக்கு முன்னர் எனது பதிவிடும் வேகம் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 34 பதிவுகள் என்ற வீதத்தில் இருந்ததென்றால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். ஆமாம், அந்த காலத்தில் ஒவ்வொரு மாதத்திலும் ஓவ்வொரு ஆயிரங்களை நான் தாண்டிய சந்தர்பங்கள் பல. (இதனை உறுதிப்படுத்த நீங்கள் நினைத்தால் நம் மன்றத்தில் அந்த காலப்பகுதியிலிருந்து உறுப்பினர்களாக இருக்கும் பதிவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்). அந்தக்காலப் பகுதியில் எனது வேடிக்கைப் பதிவுகள் கணிசமாக இருந்திருந்தாலும், மற்றவர்களை ஊக்கப்படுத்தும் என் பதிவுகளும் கணிசமானவையே.....

ஆனால், இன்றைய காலப்பகுதியில் முன்னைய வேகத்தில் என்னால் பதிவிட முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம், 2009ம் ஆண்டுப் பகுதியில் ஏற்பட்ட உலகப் பொருளாதார வீழ்ச்சி என் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் என்றால் நீங்கள் நம்புவது சிலவேளை கடினமாகத்தானிருக்கும். ஆனாலும் உண்மை அதுதான், கையிலிருந்த நல்ல பணி பறிபோக, பணியின்றி சிரமப்பட்டு கிடைத்த பணியைத் தக்க வைக்க போராடி, அந்த போராட்டத்தில் கிடைத்த சில எதிர்பாராத முன்னேற்றங்களை தக்க வைக்க போராடிக் கொண்டு இருக்கும் எனக்கு முன்னர் போல நேர அவகாசங்கள் கிடைக்காத போது என்னால் எப்படி முன்னர் போலவே பதிவிட முடியும், சொல்லுங்கள்...??

மன்றத்தின் மீதான ஈடுபாட்டின் நிமித்தம், மன்றம் வருகை ஒவ்வொரு நாள் அமைந்தாலும் பல நல்ல பதிவுகளைப் படிக்கவே எனக்கு முடியாதுள்ளது, இந்த வகையில் நல்ல ஆரோக்கியமான பின்னூட்டங்களென்றால்.....???

ஒற்றை வரியில் நன்று, நன்று என பின்னூட்டமிட்டுப் போகவும் என்னால் முடியாதிருக்க, என் பதிவுகளில் இந்த இடைவேளி.....

இருந்தாலும் முன்னைய காலம் மீள வரும், அதற்கான வழிகளை நான் செய்யவேண்டுமென அவற்றினையும் முன்னெடுத்துக் கொண்டு இந்த காலப் பகுதியைக் கழித்துக் கொண்டிருக்கின்றேன்....

இந்த நிலையில், நீங்கள் என் இன்றைய நிலையில் இருந்து, உங்களை யாராவது பின்னூட்டமிடவில்லை என வினவினால் என்ன பதில் தருவீர்களென்பது எனது கேள்வி..??

வானவர்கோன்
06-11-2010, 07:58 AM

நன்றி ஓவியன், இதழ் தொகுப்பாளருக்கே நேரமின்மையெனில் மன்றத்தின் எதிர்காலம்?

ஓவியன்
06-11-2010, 08:07 AM
நன்றி ஓவியன், இதழ் தொகுப்பாளருக்கே நேரமின்மையெனில் மன்றத்தின் எதிர்காலம்?

முதலில் நான் கேட்ட எனது கேள்விக்கு உங்களது பதிலைத் தாருங்கள், அதன் பின்னர் நான் உங்களது கேள்விக்குப் பதிலளிக்கின்றேன். :)

ஓவியன்
06-11-2010, 08:18 AM
நன்றி ஓவியன், இதழ் தொகுப்பாளருக்கே நேரமின்மையெனில் மன்றத்தின் எதிர்காலம்?

மன்றத்தின் எதிர்காலமென்பது தனியொருவரது பங்களிப்பை மட்டும் நம்பியதில்லை. மன்றம் ஒரு ஆலமரம், நாங்களெல்லாம் குருவிகள், நான் நன்றாக பங்களிக்காது போனால் இன்னொருவர் பங்களிப்பார். இந்த பங்களிப்புக்களுக்கான ஊதியம் மன நிறைவு மட்டுமே, அந்த மன நிறைவை நாடியே எல்லா குருவிகளும் இந்த ஆல மரத்தினை நாடி ஓடி வருகின்றன....

நானும் எனக்கு அரிதாகக் கிடைக்கும் நேர அவகாசத்தினை பயன்படுத்தி என்னாலியன்ற அளவில் மன்றத்தில் பங்களிக்கின்றேன். அதாவது என்ன வேலைக்கு முன்னுரிமை (இதழ் பணிக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டுமென்பதில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்காதென நினைக்கின்றேன்) கொடுக்க வேண்டுமோ அதற்கு கொடுத்து வருகிறேன். இதில் என்ன தப்பு இருக்கிறது வானவர்கோன் அவர்களே...???

தாமரை
06-11-2010, 10:58 AM
திரிகள் தொடங்குவது பெரிய விடயமல்ல தாமரை, அந்த திரிகளில் அர்த்த புஷ்டியாக எதை எப்படிச் சொல்கின்றோம் என்பதே முக்கியம், அந்த வகையில் நீங்கள் அமைத்த திரிகளும் அவற்றுக்கான பதிவுகளும், அவற்றுக்குக் கிடைத்த பின்னூட்டங்களும் சாட்சி.

நீங்கள் கவலைப்படவில்லை என்பதற்காக தமிழ்மன்றத்தில் இணைந்துள்ள நான் என் ஆக்கம் சார்பாக முனைப்புக் காட்டக் கூடாது என நீங்கள் வாதிடுவது தவறு, அதுவும் ஆலோசகர் ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு!

இரண்டு படைப்புகளைப் பதிந்து விட்டு கருத்துக்களைக் காணவில்லையே என நான் ஆதங்கப்பட்டது உங்களைப் போன்றோருக்கு கடினமாகத் தான் இருக்கும், நான் முதற் பதிவின் அந்தத்திலே இந்தக் கேள்வியைத் தொடங்க முனைந்தேன், இருப்பினும் அடுத்த பதிவைத் தரவேற்றி விட்டு பொறுமையிழந்து சாடலுடனான இந்த பதிவை கேள்விக்குள்ளாக்கினேன்.

இந்த சாடலுடனான வினாத் தளத்துக்கு வந்துள்ள பார்வையாளர்களின் தொகையும், கருத்துக்களும் படைப்புகளுக்குக் கிடைத்திருக்கவில்லையே!

இரண்டு படைப்புகளல்ல முதற் பதிவிலே அதற்கு எப்படியான வரவேற்பு கிடைத்துள்ளது என்பதை வரைபுக் கோடு தெளிவாக்கியது, போகப் போக இந் நிலை அதிகரிக்க வாய்ப்புகளே அதிகம், அதை முளையிலே செப்பனிடாவிடின் எத்தனை ஆயிரம் திரிகளை மாத்திரமல்ல படைப்புகளைத் தரவேற்றினாலும் அவை வாசகர்களைச் சென்றடையாது என்பது எனது நம்பிக்கை!

எதை நீ வேண்டுகிறாயோ, விரும்புகிறாயோ அதை அடுத்தவருக்குக் கொடு. அதைத்தான் ஆரம்பத்திலேயே உங்களுக்குச் சொன்னேன்..

இங்கு படைப்பாளிகள், வாசகர்கள் என்ற பிரிவே இல்லை. படைப்பாளிகளே வாசகர்கள். பின்னூட்டமிடுவதால் சிலர் எப்படி உங்கள் மனதில் நுழைந்தார்களோ அப்படி நீங்களும் பின்னூட்டமிட்டு பலரின் மனதில் நுழையுங்கள். மக்கள் உங்கள் படைப்புகளைத் தேடி வருவார்கள்.

காலம் போகப் போக, உங்கள் படைப்புகளின் தொடர் தரம் வாசகர்களை உங்களிடம் இழுத்துவரும். உங்கள் படைப்புகள் அலசப்படும். சிறிது காலம் பிடிக்கும் காரியம் இது. உங்கள் படைப்புகளுக்கு பின்னூட்டம் வரவேண்டுமென்றால் அது மக்களின் மனதைக் கவரவேண்டும்..கண்ணியமாக உறவுகளை வளர்த்து, மனதில் இருப்பதைப் பகிர்ந்து கொண்டு படைப்புகளைப் பகிர்ந்து கொண்டு வாழ்கிறோம்.

கேள்விகளைக் கேட்பதை விட ஆலோசனைகளைச் சொல்லுங்கள்..
என்ன செய்யலாம்?

பின்குறிப்பு : கண்ணியமான கருத்துக்களை சொல்ல கட்டுப்பாடன உரிமை இருக்கிறது. ஆனால் கருத்துக்களைச் சொல்லாமல் இருக்க ஒவ்வொருவருக்கும் முழு உரிமை இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.அதுதான் ஜனநாயகம்.

எனவே கருத்துக்கள் கிடைக்கவில்லையே என வருத்தப்படுங்கள் நியாயம். ஆனால் அதற்காக சாடல் என்றால் அது ஆக்ரமிப்பு... அன்புக்கு மக்கள் பணிவார்கள்.. சாடலுக்கு கண்டிப்பாக மாட்டார்கள்.

நான் என்ன செய்வது என்று நீங்கள் ஆலோசனை செய்வதை விட மக்கள் உங்கள் எழுத்துக்களை தேனீக்கள் போல் மொய்க்க நீங்கள் என்ன செய்வது என ஆலோசித்தால் அதனால் நன்மை விளையலாம்.

ஏனென்றால் நீங்கள் சொல்லியது உங்களுக்கே பொருந்தும்...

திரிகள் தொடங்குவது பெரிய விடயமல்ல தாமரை, அந்த திரிகளில் அர்த்த புஷ்டியாக எதை எப்படிச் சொல்கின்றோம் என்பதே முக்கியம், அந்த வகையில் நீங்கள் அமைத்த திரிகளும் அவற்றுக்கான பதிவுகளும், அவற்றுக்குக் கிடைத்த பின்னூட்டங்களும் சாட்சி.

அதை வலியக் கேட்டு வாங்க முடியாது... கூடாது!!

அமரன்
06-11-2010, 06:33 PM
இதில் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றங்கள் போதும் என்று நினைக்கிறேன்.

வேறு ஆக்கங்களைப் படிப்பதிலும், பின்னூட்டுவதிலும் நம் நேரத்தைச் செலவிட்டு நாமும் படைத்தோமானால் இந்தக் கேள்விக்கு இனி இடமில்லாமல் போகும்.

செய்வோமா நண்பர்களே!!

த.ஜார்ஜ்
06-11-2010, 07:50 PM
வணக்கம் நண்பா..
முதல்ல கையை குடுங்க.... குலுக்கிக்குவோம்.
இப்ப என்னை உத்து பாருங்க.. கெக்கே பிக்கேன்னு சிரிக்கிற மாதிரி இருக்கேனா.... அதேதாங்க.... அப்படி ஒரு டம்மி பீசுதாங்க நானு..
அப்புறமென்ன.... கொஞ்சம் சிரிங்க.. ஆங்.. இது எவ்வளவு நல்லாயிருக்கு.

முதல்ல ஏதோ பரபரப்பு பண்ணி கவனம் ஈர்க்கிற சமாசாரம்னுதான் இருந்தேனுங்க.. ஆனா மன்றம் இப்படி மண்ணா போகுதென்னு நீங்க படுற ஆதங்கம் மெல்லதான் புரிஞ்சுதுங்க. நமக்கு அந்த அளவு விவரம் இல்லையா.. அதான் எல்லாமே லேட்டாதான் புரியுதுங்க. நானும் உங்க பக்கம்தாங்க. இங்க ஒருத்தருக்கும் பொறுப்பில்லீங்க.. யாருக்குமே அக்கறை இல்ல. இந்த காலத்தில இத எடுத்து சொன்னா எடுத்துகறதேயில்ல... வீச்சரிவாளக் கண்டாதான் எல்லோரும் பயப்படறாங்க.. எல்லாரும் ஒழுங்கா இருந்தா நாம ஏன் கண்டதையும் கையில எடுக்கிறோம் இல்லையா.

நானும் நினைச்சிருக்கேன். எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு படைப்பை எழுதறோம். அதப் போல வேற யாராலும் எழுத முடியுமா?.. அத படிச்சா ஒவ்வொருத்தனும் கதறணுமே.. அலறியடிச்சிட்டு வந்து கமென்டை தட்டி விடணுமே.... என்ன ஆச்சி... யாருக்குமே பொறுப்பில்லாம போச்சேன்னு நினைச்சிருக்கேன். நிறைய பேரு இதுக்காகவே நான் இந்த விளையாட்டுக்கு வரலைன்னு போயிருக்காங்க. ஆனா விட்டிருவோமா.. உள்ளே வரவரைக்கும் வேப்பிலையடிச்சி அடிச்சி..... அத ஏன் கேட்கிறீங்க.. பிரண்ட்ஷிப்பாம் என்ன புடலங்காயோ..

பிறகு விசரிச்சா.. இங்க இருக்கிற எல்லாருமே படைப்பாளியாம்பா.. பெரிய பெரிய திமிங்கிலங்க.. ஒண்ணுக்கொண்ணு குறைஞ்சதில்லயாம்.... நல்லா ஊறிப் போய் கிடக்குதுங்க.. இதில ஒரு குசும்பு என்னன்னா வேற படைப்பாளிகள படிக்கிறதில்ல.... படிச்சாலும் கமுக்கமா இருந்திடறது... விட்டிருவோமா நாம.... விடாம துரத்துவோம்ல.. துரத்தி துரத்தி வலைல மாட்ட வச்சிருவோம்ல.. என்ன செய்றது இப்படிதான் யாவாரம் போய்ட்டிருக்கு.

எனக்கும் இப்ப ஒண்ணு தோணுதுங்க. எச்சக் கையால ஈ ஓட்டாதவங்களை சும்மா விடக்கூடாதுங்க.. தினசரி பத்து பின்னூட்டம் கட்டாயமாக்கணும். செய்யாதவங்களுக்கு உறுப்பினர் உரிமை ரத்துன்னு சொல்லி ஓட ஒட விரட்டணுமுங்க. அப்பதான் மன்றம் உருப்படும். எழுதறதும் படிக்கிறதும் எங்க விருப்பம். இதுக்காக சம்பளம் குடுத்து வேலைக்க வச்சிருக்கீங்கன்னு யாராவது கேட்டா கட்டையால அடிக்கணும்னு தோணுதுங்க.

சம்பளம்னு சொன்னதும் இன்னொன்னு ஞாபகம் வருது நண்பா.. இபணம் இபணம்னு ஒரு பாவ்லா காட்றாங்கப்பா.. முத முறையா எனக்கு கிடைச்சப்போ புதுசா அக்கவுன்ட் தொடங்கி செக் வருமின்னு காத்து காத்து இருந்ததுதான் மிச்சம்.. நல்லா ஏமாத்திபுட்டாங்கப்பா.... அந்த பணத்தை பேப்பர்ல எழுதி நாக்குதான் வழிக்கணுமாம். இந்த இழவத்தான் எல்லாருக்கும் குடுக்கிறாங்களாம். இத வச்சிட்டு எப்படிதான் குப்ப கொட்டுறாங்களோ? நம்ம வீட்ல வேலைமெனக்கெட்டு எழுதிகிழிச்சி என்ன சம்பாதிச்ச.. வீட்டு செலவுக்கு ஒரு வழியையும் காணலென்னு வையுறாங்க.. அதான் எழுத்தெல்லாம் மூட்டை கட்டிவச்சிட்டு இருந்த நேரம் பார்த்து இந்த இழை கண்ணுல பட்டுச்சி. அதில உங்க தன்னம்பிக்கை மிளிறத பார்க்க முடிஞ்சது.. அதப் பார்த்து எத்தனை பேரு வந்து ஜல்லியடிக்கிறாங்க பாருங்க.. அவங்களைப் பார்த்தா பாவமா இருக்குன்னு வடிவேலு மாதிரி சொல்லத் தோணுது நண்பா..

காத்திரம் அப்படீங்கிற வார்த்தை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் போல.. நிறைய பயன்படுத்தியிருக்கீங்க.. நமக்கு அதன் சரியான பொருள் புரியும் அளவுக்கு கூட ஞானம் இல்லீங்க. விசயம் காரம்மானதுங்க. தீயை அணைய விட்டுராதீங்க.. தூக்க கலக்கத்தில என்னமோ உளறிக் கொட்டிடு இருக்கேன் போலயிருக்கு.... அப்படியே குடுகுடுன்னு ஓடி வந்து என் மண்டையிலேயும் ‘ணங்’ என்று ஒரு குட்டு வையுங்கள் பார்ப்போம் .அப்படியாவது தூக்கம் கலைகிறதான்னு பாக்கணும்
நல்லிரவு தோழா! சந்திப்போம்.

ஆன்டனி ஜானி
07-11-2010, 03:27 AM
இந்த மன்றம் குறித்து சில சந்தேங்கள் இந்த மன்றம் ஆட்கள் பார்த்து செயல்படுகின்றீர்கள் தமிழ்மன்றத்திள் யாரும் சுத்த தமிழ்ல பதிப்பு பதிக்கல என்னுடய பதிப்புகள் எல்லாம் சுத்த தமிழ் ஆனால் ஒன்றும் சரியில்லை என்று தான் சொல்லுகிறிர்கள் தவறுகளை சரிபண்ணி தருவது தான் மன்றத்தின் தலைவர்கள் பொறுப்பு அதனை சுட்டிகாட்டுவது இல்ல

ரங்கராஜன்
07-11-2010, 03:28 AM
வணக்கம் வானவர்கோன் அவர்களே...

உங்கள் எங்களின் கருத்துக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, அப்புறம் எதுக்கு கருத்து சொல்ல இங்கு வந்தாய் என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. தெரியவில்லை என்றால் எங்கு ஆரம்பிப்பது என்று குழப்பமாக இருக்கிறது. உங்களின் இந்த திரியை இப்போ தான் பார்த்தேன், படித்தேன், அதிர்ந்தேன்... மன்றத்தின் முன்னோர்கள் பலர் தங்களின் கருத்தையும் அனுபவத்தையும் தீர்க்கமாக சொல்லியுள்ளனர். இதற்கு பிறகும் நான் கருத்து சொல்வதற்கு ஒன்றுமே இல்லை, காரணம் நீங்கள் ஏற்கனவே கோபத்தில் இருப்பீர்கள்..........அதனால் தான் கருத்து கூற விரும்பவில்லை என்று போட்டு இருந்தேன். ஆனால் நண்பனாக தோள் மீது கையை போட்டு உங்களுக்கு சில விஷயங்களை கூற ஆசைபடுக்கிறேன்.... உங்களை முன்னிறுத்தி அல்ல ...... பொதுவாக சொல்கிறேன்.

நமது ஆக்கங்களை நாம் புத்தக வடிவிலோ, நாளிதழ்களிலோ, வாரப்பத்திரிக்கைகளிலோ பதித்து இருந்தால், அவை எத்தனை பேருக்கு போய் சேரும், அப்படி சேர்ந்தாலும் அதில் இருக்கும் நமது ஆக்கத்தை எத்தனை பேர் படிப்பார்கள்......... சரி எத்தனை பேர் படித்தாலும், உங்களின் ஆக்கங்களைப் பற்றிய அவர்களின் விமர்சனம் உங்களுக்கு கிடைக்குமா.........

ஆனால் மன்றத்தில் அவை உங்களுக்கு கிடைக்கும், இந்த மன்றம் பற்றி கொஞ்சம் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன், இந்த நேரத்தில் நீ உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம், சில நாட்களுககு முன்பு மன்றத்தை விட்டு போக முடிவு செய்தவன் நீ உனக்கு என்ன தகுதி இருக்கிறது. என்று (நான் மன்றம் விட்டு போக வேண்டும் என்று என்னுடைய அதிருப்தி திரியில் உங்களின் பதிலை நான் கண்டேன்.)

மன்றத்தை விட்டு போக முடிவு செய்தும் போகாமல் இங்கேயே இருப்பதால்....... உண்மையில் இந்த கருத்தை சொல்ல எனக்கு மட்டும் தான் தகுதி இருக்கிறது.

இந்த மன்றத்தில் இருப்பவர்கள் அனைவரும் (உங்களையும் சேர்த்து தான்) வாழ்க்கையில் பல துறைகளில் சாதித்து, வாழ்க்கையையும் சாதித்துக் கொண்டு இருப்பவர்கள்..... பல விஞ்ஞானிகள், பல தொழிலதிபர்கள், பல மென்பொருள் வல்லுனர்கள், பல மேலாளர்கள், பல அறிவுஜீவிகள், என்ற நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்த மன்றம் மட்டும் வாழ்க்கை அல்ல, ஏன் உங்களுக்கும் தான், அதையும் தாண்டி அவர்களின் வேலை பளுக்கு நடுவில் மன்றம் வருவது மன்றத்தின் மீது இருக்கும் அன்பாலும், இங்கு இருக்கும் உறவுகளி்ன் மீது இருக்கும் பாசத்தாலும் தான்.

மன்றத்தில் அங்கீகாரம் என்ற வார்த்தையை பெறுவதற்கு அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டு, உழைத்து தான் பெற்று இருக்கிறார்கள்....... உழைத்து என்றால் உடல் உழைப்பு இல்லை, மன உழைப்பு....... ஒரு கதையை, கவிதையை மன்றத்தில் பதிப்பதற்கு நீங்கள் மட்டுமல்ல அனைவரும் தான் கஷ்டப்படுகிறோம். அப்படி கஷ்டப்பட்டு தான் இந்த மன்றத்தில் அனைவரும் இன்றும் நிலைத்து நிற்கிறார்கள். இந்த திரியில் உங்களுக்கு அறிவரையோ, அல்லது நிதர்சன உண்மையையோ எடுத்து கூற வந்த தாமரை, ஓவியன், பென்ஸ் உள்ளிட்ட மன்றத்தின் சீனியர் உறுப்பினர்கள் பலரை காட்டமாக விமர்சித்து உள்ளீர்கள், உங்களுக்கு அவர்களிடம் பிரச்சனை இருந்தால் அப்படி காட்டமாக விமர்சித்து இருக்கலாம், ஆனால் அவர்கள் உங்களுக்கு புரிய வைக்க முயற்சி எடுத்தவர்களை நீங்கள் இப்படி காட்டமாக விமர்சித்தது எந்த விதத்தில் நியாயம். ஒரு பள்ளியிலோ, கல்லூரியிலோ, அலுவலகத்திலோ புதிதாக போய் சேரும், சேர்ந்த ஒரு வாரத்திற்குள் உங்களிடம் யாரும் சரியாக பேசவில்லை, பழகவில்லை, மதிக்கவில்லை என்று குற்றம் சுமத்த முடியுமா....... அப்படி தான் இருக்கிறது உங்களி்ன் மன்றத்தின் மீதான சாடல்களும்.

நீங்கள் நினைப்பது போல மன்ற உறவுகளிடம் விமர்சனம் வாங்குவது சுலபமான காரியம் அல்ல, நீங்களும் சில விமர்சனங்களை சிலரின் திரிக்கு கொடுத்து இருக்கிறீர்கள், ஏன் நூறுக்கணக்கான படைப்புகள் வந்து குவியும் மன்றத்தில் நீங்கள் அந்த சிலருக்கு மட்டும் விமர்சனம் போட்டீர்கள் என்ற கேள்வியை உங்கள் முன்னால் வைத்தால் நீங்கள் பதில் சொல்வீர்கள்.... எனக்கு பிடித்த திரிக்கு நான் போட்டேன், அல்லது என்னை பாதித்த திரிக்கு நான் பதில் போட்டேன் என்பது தானே உங்களின் பதிலாக இருக்கும்.

அப்போ, மீதி படைப்புகள் எல்லாம் உங்களை பாதிக்கவில்லை என்று தானே அர்த்தம், அப்போ நீங்களும் உங்களைப் போல யாரோ ஒரு படைப்பாளியை நோகடிக்கிறீர்கள் என்று தானே அர்த்தம். உங்களின் புகைப்படத்தை பார்த்தேன், நீங்கள் வயதில் மூத்தவராக உள்ளீர்கள், அதனால் வாழ்க்கையில் பல கட்டத்தை கடந்து வந்து இருப்பீர்கள். உங்களின் இந்த திரியின் நோக்கம் எனக்கு புரிகிறது, காரணம் நானும் மன்றம் சேர்ந்த புதிதில் அந்த அங்கீகாரத்திற்கு ஏங்கி பலரை கடித்து மென்று தின்று இருக்கிறேன்.ஒரு கட்டத்தில் நானே மாறிவிட்டேன், ஏன் மாறினேன் என்று தெரியவில்லை ஆனால் மாறிவிட்டேன்......

உங்களுக்கு நான் ஒரு யோசனை சொல்கிறேன்.....

1. முதலில் கொஞ்ச காலம் நீங்கள் மன்றத்தில் பதிக்காமல் இங்கு பதிக்கப்படும் திரிகளைப் படியுங்கள்.... அந்த திரிகள் உங்களின் ஆக்கங்களுக்கு கீழே இருக்கிறதா, மேலே இருக்கிறதா, இல்லை சமமாக இருக்கிறதா என்று சோதித்துக் கொள்ளுங்கள்.

2. வாசகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப படைப்பை உருவாக்குவது ஒரு வகை, படைப்புக்கு ஏற்றமாதிரி வாசகர்களை உருவாக்குவது ஒரு வகை. இதில் நீங்கள் எந்த வகை என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

3. நீங்கள் படைப்பை பதியுங்கள், பதியுங்கள், பதியுங்கள், பலனை எதிர்பார்க்காமல் பதியுங்கள் கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் உங்களின் படைப்பு மன்ற வாசகனை சென்று அடையும், அதன் பின் நீங்கள் பதித்த அனைத்து திரிகளை அவர்கள் தேடி படிப்பார்கள். அப்போது கண்டிப்பாக விமர்சனம் வரும், அப்போது நீங்கள் அடையும் சந்தோஷத்திற்கு அளவே இருக்க முடியாது.

4. இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பில்லை, நீ யார் இதையெல்லாம் எனக்கு அறிவுரைக்க என்று கேட்டீர்கள் என்றால், சாரி உங்களின் தோளில் இருந்து கையை எடுத்து விட்டு இதை கூறுகிறேன்........ உங்களுக்கு இந்த மன்றம் ஒத்துவராது.......

5. அப்புறம் இன்னோரு விஷயம் புதியவரான நீங்கள் இந்த திரியில் பதிலளித்துள்ள மன்ற மூத்த உறுப்பினர்களை (என்னை கூறவில்லை, நான் சேர்ந்து இரண்டு வருடம் தான் ஆகிறது) கொஞ்சம் மரியாதையுடனும், உபயோகிக்கும் வார்த்தைகளில் கவனத்துடனும் இருக்க வேண்டுகிறேன்.

6. மன்றத்தினுல் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும், மன்னிக்கவும் புதியவர் ஒருவர் வந்து இப்படி மன்ற உறவுகளை சாடுவதை அனுமதிக்க முடியாது. நாளைஒருவேளை நீங்கள் மன்றத்தில் தொடர்ந்து இணைந்திருந்தால் அப்போது உங்களை இப்படி ஒரு புதியவர் வந்து சாடினாலும் இதே போல தான் நானும், நாங்களும் அதை தட்டிக் கேட்போம்.... தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம், இதுதான் மன்றத்தின் பிணைப்பின் அடையாளம்.

7. கோபம் வரும் இடத்தில் குணம் இருக்கும், ஆனால் கோபம் மட்டுமே வந்துக் கொண்டு இடத்தில் மன்றம் இருக்காது, சோ மன்றத்தில் தொடர்வதும் தொடராததும் உங்களின் இஷ்டம்........... புதியவர்கள் அதிகம் வரவேண்டும் என்று நினைப்பவர்களில் நானும் ஒருவன் தான். ஆனால் புதியவரான நீங்கள் வெறும் இரண்டு பதிப்புகளை போட்டு விட்டு, இப்படி இவ்வளவு பெரிய எதிர்பார்ப்புகளை வைத்து இருப்பது கொஞ்சம் அதீதமாக இருக்கிறது. உங்களைப் பொறுத்தவரை அந்த இரண்டு பதிப்புகளும் முக்கியமாக இருந்து இருக்கலாம், ஆனால் மன்றத்தை பொறுத்தவரை அந்த இரண்டும், தினமும் பதிக்கப்படும் நூற்றுக்கானக்கான பதிவுகளி்ல் இரண்டு அவ்வளவே.

இவ்வளவு பெரிய என்னுடைய பதில் கண்டிப்பாக உங்களுக்கு எரிச்சலையும், கடுங்கோபத்தையும் உண்டு செய்து இருக்கும் என்று நினைக்கிறேன். இதை படித்த உடனே நீங்கள் எனக்கு பதில் எழுதுவதை விட, ஒரு டம்ளர் குளிர்ந்த நீரை அருந்தி விட்டு, எனக்கு உங்களின் பதிலை போடுங்கள... இதில் நான் கூறி இருப்பது அனைத்தும் நிதர்சனமாக உண்மைகள், எடுத்துக் கொள்வதும் எடுத்துக் கொள்ளாததும் உங்களின் இஷ்டம்.

பின்குறிப்பு : இந்த திரியை தொடங்கியதன் மூலம் நீங்கள் பல உறவுகளிடம் பரிட்சயமாகி விட்டீர்கள், அதனால் நீங்கள் போட இருக்கும் அடுத்த படைப்பை அனைவரும் படிப்பார்கள், அதனால் உங்களின் திறமையை வெளிப்படுத்தும் அருமையான படைப்பை நீங்கள் பதிக்க, கவனத்துடன் பதிக்க என் வாழ்த்துக்கள்.

ரங்கராஜன்
07-11-2010, 03:41 AM
இந்த மன்றம் குறித்து சில சந்தேங்கள் இந்த மன்றம் ஆட்கள் பார்த்து செயல்படுகின்றீர்கள் தமிழ்மன்றத்திள் யாரும் சுத்த தமிழ்ல பதிப்பு பதிக்கல என்னுடய பதிப்புகள் எல்லாம் சுத்த தமிழ் ஆனால் ஒன்றும் சரியில்லை என்று தான் சொல்லுகிறிர்கள் தவறுகளை சரிபண்ணி தருவது தான் மன்றத்தின் தலைவர்கள் பொறுப்பு அதனை சுட்டிகாட்டுவது இல்ல

"இங்கு தூய தமிழில் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, உள்ளிட்ட வரலாற்று தமிழ் நூல்கள் எழுத்துபிழை இல்லாமலும், எழுப்பிழை இருந்தால் அவற்றை முற்றிலுமாக நீக்க சொல்லித் தரப்படும்" என்ற பலகையை யாரும் மாட்ட வில்லையே சகாய ஆண்டனி.

உங்களை தூய தமிழில் இதிகாசத்தை எழுத கூறி யாரும் வற்புறுத்தவில்லை, ஆங்கிலத்தில் பதிக்காதீர்கள் என்ற விதிமுறை மட்டும் தான் மன்றத்தில் இருக்கிறது.

அப்புறம் தூய தமிழில் நீங்கள் பதிப்பததாக கூறி இருந்தீர்கள், நீங்கள் மேலே பதித்து இருக்கும் வாக்கியத்தில் எத்தனை தொடர்பின்மை, எத்தனை எழுத்துப்பிழை, எத்தனை வார்த்தை பிழை இருக்கிறது என்று கவனித்தீர்களா........ பொதுவாக மன்றத்தில் எழுத்துப்பிழைகளை யாரும் பெரிதாக குறையாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்......

பின்னர் மன்ற தலைவர் மன்றத்தில் இருக்கும் தவறுகளை எழுத்துப்பிழைகள் திருத்த வேண்டும் என்று நீங்கள் கேட்பதற்கு அவர்கள் ஒன்றும் உங்களின் ட்யூஷன் வாத்தியார் அல்ல, நீங்களும் மாணவர்கள் அல்ல.

குறை கூறுவதற்கு முன்பு யோசித்து நியாமான குறைகளை சுட்டிக் காட்டுங்கள் சகாய ஆண்டனி, அனைவரும் கேள்வி கேட்பதற்கு, அனைவருக்கும் பதில் சொல்வதற்கு மன்றம் இடம் கிடையாது.

உங்களுக்கு வரும் விமர்சனங்கள் தவறாக இருந்தால் உங்கள் திரிகளிலே அதற்கான காரணத்தை நீங்கள் கேட்கலாம், அதை விடுத்து பொதுவாக கூறுவது நியாமாக எனக்கு படவில்லை.

த.ஜார்ஜ்
07-11-2010, 05:06 AM
மன்னியுங்கள் அமரன். நான் தட்டச்சிக் கொண்டிருந்த இடைப்பட்ட நேரத்தில் நீங்கள் ஒரு பதிவிட்டிருப்பதை கவனியாமல் பதிவிட்டு விட்டேன்.

அன்பு தகஸ்
உங்கள் பார்வையில் பட்ட தவறை சுட்டிகாட்டியிருக்கிறீர்கள். உண்மையில் என் தொனியை வைத்து உண்மையான பொருளை உணர்ந்து கொள்ளாமல் போனீர்கள் என்றே கருதுகிறேன். இப்போதும் நான் சரியாகத்தான் சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். அதைதான் நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள் என்று புரிந்துக் கொண்டிருக்கிறேன். நன்றி.

ஆதி
07-11-2010, 06:42 AM
நம் திறமையையும், இருப்பையும் வெளிக்காட்டவே அனைவரும் படைப்புக்களை இங்கு பகிர்ந்து கொள்கிறோம், மற்றவர்களின் படைப்புக்களை நாம் அங்கிகரிக்க ஆரம்பித்தால், நம் படைப்புக்களை மற்றவர்கள் தானா அங்கிகரிக்க ஆரம்பிப்பார்கள்.. சந்தேகம் இருப்பின், சிவா அண்ணா, கீதம் அக்கா போன்றோரின் பின்னூட்டங்களை கவனிக்கவும்..

இனி ஆக்கங்களையும், ஊக்கங்களையும் பற்றி யோசிப்போம், நேரத்தை இங்கேயே தேக்கிவிட வேண்டாம், மற்ற திரிகளில் செலவிடுவோம்.. நன்றி...

திரி பூட்டப்படுகிறது, விவாதங்களை தவிர்ப்பதற்காக மட்டும்..