PDA

View Full Version : கவிமூலம்



inban
02-11-2010, 03:02 PM
ருசித்துப் பருகும்
ஒரு மிடறு தேநீர்
அறுந்து விழும்
ஒருதுளி கண்ணீர்
கோலமிடும்
ஒரு சொட்டு வியர்வை
காற்றில் கரையும்
ஒரு குயிலின் கீதம்
உரக்க ஏட்டில் படியும்
ஒரு இரவின் கனவு
மனசினை மலர்த்தும்
ஒரு மழலையின் சிரிப்பு
ஊர்வலத்தில் சிதறும்
ஒரு வாக்கியத்தின் ஒலி
மயக்கத்தில் ஆடும்
ஒரு மரத்தின் கிளை
சிதறித் தெறிக்கும்
ஒரு துளி விந்து
உதறிப்போகும்
ஒரு மேகத்தின் திவலை
இவைகளில்
ஏதேனும் ஒன்றில்தான்
ஒளிந்திருக்கிறது
எனது
அடுத்த கவிதைக்கான கரு.

ஜனகன்
02-11-2010, 04:48 PM
இன்பன் அவர்களே! உங்கள் கவிதை மிக அருமையான கருத்துக்களை தரும் அமுதங்கள்.

இன்னும் பல கவிகள் வர வாழ்த்துக்கள்!!!

M.Jagadeesan
02-11-2010, 04:48 PM
கவிதை நன்று. ஒவ்வொரு கருவிலும் ஒரு கவிதை எழுதலாம்.

பென்ஸ்
02-11-2010, 07:11 PM
இன்பன்...

எதை பற்றி வேன்டுமானாலும் கவிதை எழுதலாம் - ஆனால்
கவிதை எழுத எதாவது இருக்கனும்
கவிதையில் எதாவது இருந்தால்
இருக்கும் எல்லாமே கவிதை போல் அழகாய்...

சும்ம லுலுவாயிக்கு...:D:D:D:D


ஊங்கள் கவிதை போல் என் அன்பு நண்பர் ப்ரியன் ஒரு கவிதை மன்றத்தில் எழுதியிருந்தார்... முடிந்தால் சுட்டி கொடுக்கிறேன்...

தாமரை
04-11-2010, 03:21 AM
இப்படிச் சுற்றிச் சுற்றிப் பார்க்கும் பலருள்

கவிமூலம்
இன்னொரு கவியிலும் இருக்கும்
எனப்பார்க்கும் சிலரில் ஒருவனாய்
நான்.

ஏன் நீங்களும் தான்
நீங்கள் சொன்ன
அத்தனைக் கவிமூலங்களும்
கவிதைகளே அல்லவா?