PDA

View Full Version : எச்சம் - கவிதை

வானவர்கோன்
02-11-2010, 12:39 PM
http://4.bp.blogspot.com/_FigNK6QnoVY/SqeF4QApZoI/AAAAAAAAAE8/P6_AnGsmAZw/s200/1.1.jpg

சிவப்பாய்
மனித
மணமுள்ள
மண்!

* * *

சுற்றம்
சூழல்
சகதியாய்ச்
சுடுகாடு!

* * *

வெடிச்
சத்தம்
அருகில்
சப்பாத்துக்
காலரவம்!

* * *

மாலையில்
வல்லூறு
வௌவால்
ஊழையிடும்
நாயொலி!

* * *

குற்றுயிராய்க்
குதறிய
கேட்பாரற்ற
மனிதம்!

* * *

இவை...

* * *

துப்பாக்கி
உமிழ்ந்த
உவகையின்
எச்சங்கள்!

(17 - 23, செப்டம்பர் 1995 இலங்கை தினமுரசு பத்திரிகையின் தேன்கிண்ணம் பகுதியில் பிரசுரமாகியது) (http://vaanavarkhon.blogspot.com/2009/09/blog-post_09.html)

ஆதவா
02-11-2010, 01:15 PM
சில நறுக் நறுக் கவிதைகளைக் கேட்கும் பொழுதெல்லாம் மனதுக்குள் துப்பாக்கி வெடியின் புகை கிளம்பும்!!
இன்றுவரையிலும் ஈழம் என்ற பெயரைக் கேட்கும்பொழுதெல்லாம் சொட்டாய் ஒழுகிய ஒரு துளி இரத்தம் என்றே நினைக்கிறேன்.

இரத்தம் எளிதில் உறையும் திரவம்.
எனக்குத் தெரியவில்லை, ஈழத்தில் உறையுமா என்று!!

அவ்வப்போது நான் ஈழமக்களை நினைக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் நம் மன்றத்தின் ஈழ மக்களின் பங்களிப்புகள்தான்!!!
ஒவ்வொரு கவிதைகளும் மனதில் சுருக் என்று தைக்கிறது!
அதிகம் பேசி கவிதையின் தரத்தைக் குறைக்க விரும்பவில்லை!!

அன்புடன்
ஆதவா

வானவர்கோன்
02-11-2010, 01:35 PM

நன்றி ஆதவா, இப்போது ஈழத்தில் மலிந்துள்ளவை குருதிப் பாறைகளே!

அமரன்
02-11-2010, 07:01 PM
இந்த வாமணக் கவிதைகளின் விசுவரூபம்... நினைத்தாலே நடுங்கும்.

ஒவ்வொன்றும் நெஞ்சைத் தைக்கும் தோட்டா.

இன்னும் என்னென்ன நடக்கப் போகிறதோ..

கீதம்
02-11-2010, 09:51 PM
அச்சத்தின் உச்சம்!
இன்று எச்சங்களே மிச்சம்!
காலக்கண்ணாடியின் பிரதிபலிப்பில்
காணக்கிடைக்கின்றன,
கனம் நிறைந்த எழுத்துகள்!

வானவர்கோன்
03-11-2010, 05:50 AM
இந்த வாமணக் கவிதைகளின் விசுவரூபம்... நினைத்தாலே நடுங்கும்.

ஒவ்வொன்றும் நெஞ்சைத் தைக்கும் தோட்டா.

இன்னும் என்னென்ன நடக்கப் போகிறதோ..

நன்றி அமரன்.

Ravee
04-11-2010, 05:18 AM
வலிகளை வார்த்தைகளாய் தாங்கிய கவிதை வாழ்த்துக்கள் வானவர்க்கோன்

வானவர்கோன்
04-11-2010, 02:35 PM
அச்சத்தின் உச்சம்!
இன்று எச்சங்களே மிச்சம்!
காலக்கண்ணாடியின் பிரதிபலிப்பில்
காணக்கிடைக்கின்றன,
கனம் நிறைந்த எழுத்துகள்!

நன்றி கீதம்.

வானவர்கோன்
04-11-2010, 02:36 PM
வலிகளை வார்த்தைகளாய் தாங்கிய கவிதை வாழ்த்துக்கள் வானவர்க்கோன்

நன்றி ரவி.