PDA

View Full Version : காவலரணிலிருந்த இராணுவ வீரனுக்குத் தங்கம்மா சொன்ன கவிதை



M.Rishan Shareef
02-11-2010, 06:09 AM
காவலரணிலிருந்த இராணுவ வீரனுக்குத் தங்கம்மா சொன்ன கவிதை (http://rishantranslations.blogspot.com/2010/11/blog-post.html)

முதியவளான என்னில்
துப்பாக்கிக் கத்தியால் குத்திக் குத்தி
என்ன தேடுகிறாய் பிள்ளையே
வெடிப்புக்கள் கண்டு பால் வரண்ட மார்புகளன்றி
வேறெவை சுருக்கங்கள் விழுந்த என்னிடம்

வெடிக்கக் கூடியவை அனேகம்
பலவீனமான என் நெஞ்சுக்குள் உள்ளன
தென்படாது உன் இதயத்துக்கு அவை
நானும் உன் மத்தியில் இன்னுமொரு தாய்தான்

உன் புன்சிரிப்பைக் காணவென
பாசத்தின் ஈரத்தை நிரப்பி
உனை நோக்கிப் புன்னகைக்கிறேன்
உனது வதனத்திலொரு மாற்றத்தைக் காண இயலாவிடினும்
இச் சீருடையைக் களைந்ததன் பின்னர்
எப்பொழுதேனுமுனக்கு
புன்முறுவல் தோன்றுமென்பது நிச்சயம்

மூலம் - தர்மசிறி பெனடின்
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# காலச்சுவடு இதழ் - 130, அக்டோபர் 2010
# உயிர்மை
# ஊடறு
# திண்ணை
# ரவி (ஓவியம்)