PDA

View Full Version : ”தீ”



அனுராகவன்
01-11-2010, 07:48 PM
தீபாவளி வாழ்த்து உனக்கு
தீப ஒளி உன் வீட்டில்
தீபமும் உன் வாழ்வில்
தீயும் பற்றும்;

தீயே அடுப்பு எரிக்க
தீங்கு செய்வாரை அழிக்க
தீது பேசுபவரை ஓழிக்க
தீமை நினைப்பவரை மறக்க;

தீ சூவாலை கண்டு
தீபுண் பட்டு
தீண்டா என் ஏழைமக்களுக்கு
தீப்பொறி கொடுத்து
தீப்பற்ற செய்தால்
தீங்குகளும் ,வறுமையும் மாறும்;

தீபா ஒலி உன் காதுக்கு(பட்டாசு)
தீபா ஒளி என் கண்களுக்கு(விளக்கு)
தீப்பெட்டி என் மக்களுக்கு வேலை
தீப்பொறி நம் மனதில் எழும் எண்ணம்;

என் சிறு கிறுக்கல்...
தவறு இருந்தால் மன்னிக்கனும்.

வானவர்கோன்
01-11-2010, 10:20 PM
சிறு திருத்தம் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும் அல்லவா?, தலைப்பே குடையுதே!

அனுராகவன்
17-11-2010, 05:32 AM
சிறு திருத்தம் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும் அல்லவா?, தலைப்பே குடையுதே!
தலைப்பை பார்த்து களைப்பா..
என் கவிக்கு உன் மலைப்பா..

நன்றி ..:icon_b:

ஆதவா
17-11-2010, 05:43 AM
நல்ல கவிதைங்க...
மோனைகள் தீ” பறக்கிறது!

govindh
17-11-2010, 12:36 PM
கவி மழையில் 'தீ' -
தொடர்ந்து எரியட்டும்.

வாழ்த்துக்கள்.

ஜனகன்
17-11-2010, 01:37 PM
கவிதை அருமை.எனக்கு கவிதை எழுத வராட்டியும் கை தட்ட வரும்.