PDA

View Full Version : நன்று ஆற்றல் உள்ளும் தவறுண்டு.



M.Jagadeesan
01-11-2010, 04:16 PM
முனிவர் ஒருவர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்.கரை ஓரமாக வளர்ந்திருந்த மரத்திலிருந்து, தேள் ஒன்று, அவருக்குப் பக்கத்தில் விழுந்தது. நீரில் விழுந்து தத்தளித்தது.உயிருக்குப் போராடியது. முனிவர் தேளின் நிலை கண்டு இரக்கம் கொண்டார். அதைக் காப்பாற்ற எண்ணிக் கையிலெடுத்தார். தேள்,அவரது கையில் கொட்டியது.வலி தாங்கமாட்டாது,முனிவர்,நீரிலே விட்டுவிட்டார். மீண்டும் தேளைக் கையிலெடுத்தார். மீண்டும் அது அவரைக் கொட்டியது.மறுபடியும் நீரிலே விட்டுவிட்டார்.மூன்றாவது முறையாக, முனிவர், தேளைக் காப்பாற்ற முயன்றார்.இறுதியாக அதைக் கையிலெடுத்துக் கரையில் விட்டார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வழிப்போக்கன் ஒருவன்,முனிவரைப் பார்த்து சிரித்தான்."ஏனப்பா சிரிக்கிறாய்?'-என்று முனிவர் கேட்டார்.
"ஐயா, தேளின் குணம் தங்களுக்குத் தெரியாதா?"-என்று கேட்டான்.அதற்கு முனிவர்,"தம்பி கொட்டுவது தேளின் குணம்.காப்பாற்றுவது மனித குணம்"-என்று சொன்னார்.

"ஐயா தாங்கள் தேளைக் காப்பாற்ற முயன்றது தவறு என்று நான் சொல்லவில்லை. காப்பாற்றிய முறைதான் தவறு"-என்று சொன்னான்."எப்படிக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிறாய்?-என்று முனிவர் கேட்டார்.

"ஐயா தேளைக் கையில் எடுப்பதற்குப் பதிலாக,ஒரு குச்சியில் எடுத்துக் கரையில் விட்டிருக்கலாமே? தங்களைக் கொட்டாமல் இருந்திருக்குமே?"-என்று வழிப்போக்கன் பதில் சொன்னான். அவன் பதிலை முனிவரும் ஏற்றுக்கொண்டார்.

நன்று ஆற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை.

என்பது குறள்.அவரவர் குணமறிந்து நாம் உதவி செய்ய வேண்டும்.இல்லையென்றால் அது தவறாக முடிந்துவிடும். என்பது இக்குறளின் கருத்து.

பென்ஸ்
01-11-2010, 06:27 PM
பழைய கதையில் புதிய நீட்சி
நன்றி ஜகதீசன்..

குணமதி
02-11-2010, 01:40 AM
திருக்குறள் கதைகள் அருமையாக எழுதி விளக்கம் தருகிறீர்கள்.
அரிய முயற்சி. பாராட்டுகிறேன்.

M.Jagadeesan
02-11-2010, 02:45 AM
திருக்குறள் கதைகள் அருமையாக எழுதி விளக்கம் தருகிறீர்கள்.
அரிய முயற்சி. பாராட்டுகிறேன்.

நன்றி குணமதி அவர்களே.

M.Jagadeesan
02-11-2010, 02:46 AM
பழைய கதையில் புதிய நீட்சி
நன்றி ஜகதீசன்..

நன்றி பென்ஸ் அவர்களே.

வானவர்கோன்
02-11-2010, 03:51 AM
அறிந்த கதை தான், இருப்பினும் ஞாபகமூட்டலுக்கு நன்றி.

M.Jagadeesan
02-11-2010, 04:03 AM
அறிந்த கதை தான், இருப்பினும் ஞாபகமூட்டலுக்கு நன்றி.

நன்றி.