PDA

View Full Version : புது மொந்தை

inban
01-11-2010, 04:07 PM
அறுபது கிலோமீட்டர்க்கு
அப்பாலே இருக்கும்
ஒகேனக்கல்லுக்கு
ஆடிதோறும்
கால் நடையாய்
முழுகப்போவாராம்
தாத்தா

மனோகரா பார்க்க
கட்டுச்சோறோடு கிளம்பி
பாதிவழியில்
குரங்குகளிடம் பறிகொடுத்து
பசியோடு திரும்பிவந்தாராம்
பாட்டி

கல்லூரிக்கு அப்புறம்தான்
கால்சட்டை மாட்டினாராம்
அப்பா

மாமா வாங்கிய மிதிவண்டியை
கூடி நின்று
வேடிக்கை பார்க்குமாம்
ஊர்

கோவணத்திலிருந்து கால்சட்டைவாரை.....
கட்டைவண்டிதொடங்கி கார்கள் வரை......

காலத்தின் சக்கரத்தில்
விஞ்ஞான வாகனத்தில்
உலகே ஓர்
வீதியாய் வகைமாறிவிட

யோசித்துப் பார்க்கையில்
மாறாதுகிடப்பது
அன்று முதல் இன்றுவரை
அடை காத்துவரும் -இந்த
அரைப்பட்டினி மட்டும் தான்.

பென்ஸ்
01-11-2010, 04:15 PM
அதுவும் தீர்ந்து விட்டால் இந்த உலகம் ஸ்தம்பித்துவிடுமே இன்பன்...
தேவைகளின் பூர்த்திகளுக்காகதானே இந்த "தேடல்" அதுவும் பூர்த்தியாகிவிட்டால் உலகில் முன்னேற்றம் ஏது..??

கவிதையில் என்ன சொல்ல வருகிறிர்கள் என்று என்னால் கடைசி வரி வரை யூகிக்க முடியவில்லை... பாராட்டுகள்...:D

inban
01-11-2010, 04:31 PM

பட்டினி உலகின் நியதி என்கிறிர்களா ? எல்லோர்க்கும் வயிறு நிறைந்து விட்டால் தேடலும் முன்னேற்றமும் இருக்காது என்கிறீர்களா!? கவிதை அடித்தட்டு மக்களின் மாறாத வாழ்நிலையை விளக்க முயற்சிக்கிறது அவ்வளவுதான். :icon_b:

தாமரை
01-11-2010, 04:40 PM
அடித்தட்டு மக்களில் விழித்தோர்கள் அரைப்பட்டினியை மாற்றி இருக்கிறார்கள்
தூங்கியோர்களும்தான்..

விழித்தவர்கள் வயிறு வளர்க்கக் கற்றுக் கொண்டுவிட்டார்கள்
தூங்கியவர்கள் முழுப்பட்டினிக்கு மாறி விட்டார்கள்.

அரைப்பட்டினியில் இப்பொழுதெல்லாம்
அழகை வளர்க்கும் ஆரணங்குகள் தான் ... ::D:D:D

inban
01-11-2010, 05:03 PM

விதர்பாவிலும், ராயலச்சிமாவிலும், தஞ்சையிலும் வறட்சியாலும் பட்டினியாலும் தற்கொலை செய்துகொண்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் விழிப்படையாதவர்களா? அல்லது தூங்கிக்கொண்டு இருந்தவர்களா !?

பென்ஸ்
01-11-2010, 06:19 PM
விதர்பாவிலும், ராயலச்சிமாவிலும், தஞ்சையிலும் வறட்சியாலும் பட்டினியாலும் தற்கொலை செய்துகொண்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் விழிப்படையாதவர்களா? அல்லது தூங்கிக்கொண்டு இருந்தவர்களா !?

பெங்களூரின் சுற்றுபுறங்களில் இருந்த விவசாயிகள் தாம் இன்று பெங்களூரின் மிக பெரிய கோடிஸ்வரர்கள்.... தஞ்சையில் தலை கீழ்... உலக சுழர்ச்சியில் இயற்க்கையும், மனிதனும் மாறுகிறான் .. முடியாதவர்கள் மாழ்கிறார்கள்...

inban
02-11-2010, 12:25 AM
பெங்களூரின் சுற்றுபுறங்களில் இருந்த விவசாயிகள் தாம் இன்று பெங்களூரின் மிக பெரிய கோடிஸ்வரர்கள்.... தஞ்சையில் தலை கீழ்... உலக சுழர்ச்சியில் இயற்க்கையும், மனிதனும் மாறுகிறான் .. முடியாதவர்கள் மாழ்கிறார்கள்...

நல்ல நகைச்சுவை நண்பரே. இந்திய வேளாண்மை குறித்தும் 60 சதவிகித மக்கள் வறுமை கோடுக்கு கீழ் வாழ்கிறார்கள்என்பது குறித்தும் மத்திய அரசின் ஆண்டு அறிக்கைகளையும் பிரபல இதழ்களில் கட்டுரைகளையும் பாருங்கள். பென்ஸ் அவர்கள் இந்திய கிராமப்புறம் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது போல....

தாமரை
02-11-2010, 02:05 AM
விதர்பாவிலும், ராயலச்சிமாவிலும், தஞ்சையிலும் வறட்சியாலும் பட்டினியாலும் தற்கொலை செய்துகொண்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் விழிப்படையாதவர்களா? அல்லது தூங்கிக்கொண்டு இருந்தவர்களா !?

கண்டிப்பாக தூங்கிக் கொண்டு இருப்பவர்கள்தான். இவர்கள் தூங்கிக் கொண்டே உழைக்கும் வியாதி கொண்டவர்கள்.

ஏனென்றால் தங்களில் ஒருவனைத் தலைவனாக்கி தங்கள் வாழ்வை உயர்த்திக் கொள்ளும் எண்ணம் அவர்களுக்குள் இல்லையே! (அப்படித் தலைவனாக்கினால் அவனும் மாறிவிடுகிறானே என்பீர்கள். அப்படி என்றால் பிழை யாரிடம்? )

விழித்துக் கொண்டவர்களில் நானும் ஒருவன் என்பதால் சொல்கிறேன்..:icon_b::icon_b::icon_b:

வானவர்கோன்
02-11-2010, 03:40 AM
கவிதையை வாசித்தேன்,

மாறாமல் இருப்பது எப்போதும்
மாற்றம் எனும் சொல்
ஒன்றே!

பென்ஸ்
02-11-2010, 03:20 PM
நல்ல நகைச்சுவை நண்பரே. இந்திய வேளாண்மை குறித்தும் 60 சதவிகித மக்கள் வறுமை கோடுக்கு கீழ் வாழ்கிறார்கள்என்பது குறித்தும் மத்திய அரசின் ஆண்டு அறிக்கைகளையும் பிரபல இதழ்களில் கட்டுரைகளையும் பாருங்கள். பென்ஸ் அவர்கள் இந்திய கிராமப்புறம் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது போல....

நகைசுவையன்று நண்பரே... காரணமாகவே கூறினேன்...

60 சதவிகிதம் என்பது ரேசன் கடை இலவசத்திற்க்காகவும், நிலவரிக்காகவும் குறைக்கபட்ட வருமானத்தில் வந்தது இல்லையென்றால் வருத்த பட தக்கதே...

எங்கள் கிராமத்தில் உள்ள நிலங்கள் விவசாயத்திக்கு ஆள் இல்லாமல் தென்னை தோப்பாக மாறுகிறது... வீட்டு வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை, கேட்டால் அப்படி செய்வது கேவலமாம்...

இலவச அரிசியும் , டீவியும், மக்களை சோம்பேரியாக்கியதா என்றால் தெரியாது... ஆனால் பட்டினி என்பது இல்லை... அப்படி இருக்குமானால் சொல்லுங்கள் நான் அவர்களுக்கு வேலை கொடுக்க தயார்...