PDA

View Full Version : நானும் வரலாமா???



இமை
31-10-2010, 01:32 PM
கூவம்...

கூப்பாடு போடாத கவிதை எது தெரியுமா?
கூவம் நதிதான்....
நீ என்ன செய்தாலும் ஏன் என்று கேக்காது.....

பழையது...

தேய்ந்த செருப்பை செம்மை பட செப்பனிட்டாலும்!
தேய்த்தவனுக்கு அது புதிதாகாது....


அறியாமை..

விண்மீன் வரலாற்றை குழந்தைகள் கேட்டால்.....
அதற்கு பதிலாய்...
ஒரு பிடி சோறும் பாட்டி வடை சுட்ட கதையும்.....

உண்மை...

உருவம்மில்லா ஓவியங்கள் எள்ளி நகையாடின கண்காட்சில்......
அந்த உருவத்தின் விலை 10 பைசாவோ 5 பைசாவோ....

இகோ....

நட்பிற்கு நாள் கடிகாரம் தேவையா?????
சின்ன முள் ஓடவில்லை என்றால்...
பெரிய முள் தன் எஜமானை கூப்பிடுவதற்கு????


தொமஸ் ஆல்வா எடிசன்....

ஐயோ பாவம் எடிசன் விளக்கு
சிகப்பு நிறத்தில்...


மிண்டும் சந்திப்போம்....
அன்புடன்,
இமை.

ஓவியன்
31-10-2010, 04:14 PM
சின்ன சின்ன வரிகளை அழகாக கோர்த்து கருத்துக் கவிதைகளை ஆக்கும் வல்லமை உங்களுக்கு கைவரப் பற்றிருக்கிறது இமை....

வார்த்தைகளை மாற்றி, மாற்றிப் போட்டுப் பாருங்கள் உங்கள் கவிதைகள் இன்னும், இன்னும் வளம் பெறும்....

வாழ்த்துகளும் பாராட்டுகளும்..!! :icon_b: