PDA

View Full Version : மரணக்குறிப்பு

ரசிகன்
31-10-2010, 12:34 PM
தலை சாய்ந்து கிடக்கும்

மதுப்புட்டிகளின் வாசத்தில்...

சொட்டுச்சொட்டாய் புணரும்

அமில உணர்வுகள்!

எந்த ஒரு நிகழ்வையும் போல

ஆர்ப்பாட்டமோ இரைச்சலோ

சலசலப்போ இல்லாதிருக்கிறது!

மயான அமைதி என்பதை

ருசித்தும் புசித்தும்

பேனாக்கள்

இச்சைகளை தீர்க்கப்போகும்

காகித இரவின் கடைசிப் பகுதி!!

குறிப்பெழுதல் புதிதல்ல

எனினும்

மரணக்குறிப்பெழுதல்

சற்றே அசௌகரியமாய் தான் இருக்கிறது!

இதுவரை இல்லாததொரு

பயம்!

இடையிடையே தொற்றிக்கொள்ள

அது எதற்காகவேனும் இருக்கலாம் -

நீங்கள் யூகித்துக் கொள்ளுங்கள்!

எனக்கு

அவள் பிரிவு!

-

ரசிகன்

ஆதவா
01-11-2010, 07:33 AM
ஒரு நிகழ்வை எவ்வளவு நுண்ணியமாகப் பார்க்கிறோம் என்பதில்தான் வார்த்தைக் குவியலின் இடுக்குகளிலெல்லாம் நுணுக்கத்தைச் செறுகி கவிதையாக்கிவிடுகிறோம். நுண்ணியமாகப் பார்க்கும் எவரும் நல்ல கவிதை படைத்துவிடலாம். கீழ்கண்ட வரிகளில் அப்படியொரு நுண்மை தெரிவதாக நினைக்கிறேன்.

தலை சாய்ந்து கிடக்கும்
மதுப்புட்டிகளின் வாசத்தில்...
சொட்டுச்சொட்டாய் புணரும்
அமில உணர்வுகள்!

இவ்வரிகளில் கவிதை முழுக்கவும் மது தோய்ந்து கிடக்கும் இரவு குறிக்கப்படுகிறது. அமிலத்தைக் குடித்துவிட்டு, அதன் ஒவ்வொரு சொட்டுகளையும் ரசிக்கும் உணர்வுகள். என் மாமா ஒருவர் தனது மரணக்குறிப்பாக மதுப்புட்டியைத்தான் குறித்தார். அன்றைய இரவு என்றென்றும் குடித்திராதவர் குடியை முதலாக்கி தனது வாழ்வை இறுதியாக்கி, சைனட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். ”சொட்டுச்சொட்டாய் புணரும்” உணர்வுகள் மரணகாரணத்தை எண்ணி எண்ணி மனதில் இறங்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம்.

பேனாக்களின் இச்சை தீரும் கடைசி இரவு, குறிப்பெழுதுதல் ஆகியவை முன்னிட்டு அவன் ஒரு கவிஞனாக இருக்கவேண்டும்.

எனக்கு
அவள் பிரிவு

இந்த வரிகளைத் தவிர்த்து இருக்கலாம். காரணத்தை வாசகர் யூகத்திற்கு விட்டிருக்கலாம். என்றாலும் பாதகமில்லை. நன்றாகவே இருக்கிறது.

குறிப்பெழுதல் - குறிப்பெழுதுதல்..

மரணம் என்பது என்ன? உடலை விட்டு உயிர் பிரிதல். பிரிந்த உயிர் என்னாகும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாமலிருந்தாலும் உயிர் இருப்பதாக நம்பப்படுகீறடுது. அதாவது ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு அது மாறிவிடுகிறது... மரணக்குறிப்பு வெறும் தற்கொலை குறிப்பு மட்டுமல்ல. அவளை மறப்பதற்கான ட்ரீட்மெண்ட்! மரணம் ஒத்த நிகழ்வு (http://tamilmantram.com/vb/showthread.php?t=24995) எனும் உங்கள் கவிதையின் நீட்சியாக இக்கவிதை தென்படுகிறது...

ஓவரா குடிச்சு உடம்பைக் கெடுத்துக்காதீங்க..... :D

அன்புடன்
ஆதவா.

ரசிகன்
01-11-2010, 08:45 AM

நுணுக்கமான ஒரு விமர்சனம்!

எனக்கு வியப்பானதும் கூட :)

எழுத்துப்பிழையை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி :)

ரொம்ப லாம் குடிக்கறது இல்லே... :ப

நன்றி ஆதவா :)