PDA

View Full Version : தாம்பத்ய உலகம்



inban
31-10-2010, 08:33 AM
ஆடிக் காற்றில் தவிக்கும்
மரக்கிளைபோல
உன் பிடிவாதப்புயல்
எனை அலைகழிக்கிறது

அன்று நாம் மாற்றிக்கொண்டது
மாலைகளை மட்டும்தானா?
மனங்களை இல்லையா?

எரிந்து கருகி
மன்றம் வரும்
இந்த மனிதனுக்கு
மடிக்குபதிலாய்
வெருப்பைநீட்டும் வெண்ணிலவே

வாழ்கையின் அச்சாணிக்காய்
நான் அவஸ்தைப்படுகிறேன்....
நீ ஏன்
கூந்தல் பூக்களில்
குறைகண்டு கோபித்துக்கொள்கிறாய்?

உனது எண்ணவிளக்கு
ஏன் எதார்த்த மட்டத்துக்கு
ஏறிவர மறுக்கிறது?

அடியே!
எனது ஒவ்வொரு அடிவைப்பும்
உனக்கெனத்தானே?

மேகத்துளிகளின் அணிவகுப்பே
பூமியை முத்தமிடத்தானே?

புரிந்துகொள் அன்பே!

வர்க்க பேதத்தால்
வலுவிழந்துகிடக்கும் தேசத்திலே
வறியோரின் வாழ்நிலையை
விளங்கிக்கொள்!

சிலந்திவலைஒத்த
சமூகக் கூட்டுக்குள்
சிக்குண்டுகிடக்கும் இவனுக்கு
உன் செவ்விதழால்
நிம்மதிகொடு.

சிதறிக்கிடக்கும்
இவனின் இருதயச்சில்லுகள் யாவையும்
அன்பெனும் நாணில்
சேர்த்துக்கட்டு
சோகத்தைச் சுட்டு.

வானவர்கோன்
31-10-2010, 08:37 AM
அருமையான சோகம் ததும்பிய காதல் கவிதை, பாராட்டுக்கள். எழுத்துப் பிழைகளைத் திருத்தி விட்டால் இன்னும் சுவையாக இருக்கும்