PDA

View Full Version : வெளியேறும் வழி வைத்தால் நல்லது [solved]



Vanambadi
01-04-2003, 06:48 AM
நமது புதிய இத்தளத்தில் முறைப்படி வெளியேறும் வழி (logout) இல்லை. வைத்தால் நல்லது. ஆவன செய்வீர்கள் என நம்புகிறேன்.

பொன்னியின் செல்வன்
01-04-2003, 06:59 AM
வானம்பாடி அவர்களே, நாம் உள்ளே நுழைந்த பின், நமது பெயர் login என்ற இடத்தில் தெரிகிறதே. நாம் வெளியேற, அங்குள்ள நமது பெயரை சுட்டி, தட்டினால் போதுமே. வெளியேறி விடலாம்.

----பொன்னியின் செல்வன்

Vanambadi
01-04-2003, 07:05 AM
[b]வானம்பாடி அவர்களே, நாம் உள்ளே நுழைந்த பின், நமது பெயர் login என்ற இடத்தில் தெரிகிறதே. நாம் வெளியேற, அங்குள்ள நமது பெயரை சுட்டி, தட்டினால் போதுமே. வெளியேறி விடலாம்.

----பொன்னியின் செல்வன்[b]

நன்றி ! செல்வன் அவர்களே! Logout என்று வெளிப்படையாக இல்லாததால் அப்படி கேட்டுவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!

aren
01-04-2003, 11:37 AM
உள்ளே வந்தால் வெளியே செல்ல மனது ஒத்துக்கொள்ளவில்லையே. அதனால் அதை வெளிப்படையாக தலைவர் வைக்கவில்லையோ என்னவோ.

நன்றி வணக்கம்
ஆரென்

madhuraikumaran
01-04-2003, 05:11 PM
நானும் முதல் நாள் இதைத் தேடிக் கண்டுபிடித்தேன். பெயருக்குப் பக்கத்தில் logout என்று இருந்தால் நன்றாக இருக்கும்.

அருமையாகச் சொன்னீர்கள் ஆரென் ! மனது வரவில்லை தான் !

pgk53
02-04-2003, 12:42 AM
நானும் முதலில் குழப்பம் அடைந்தேன் ..பின்னர் தெளிவு பெற்றேன்.
இப்படியே இருந்தாலும் பரவாயில்லை என்றே என்னுகிறேன்.

இராசகுமாரன்
02-04-2003, 05:53 AM
இந்தக் குழப்பமே வேண்டாம்,
பேசாமல் அதைச் சேர்த்து விடுகிறேன்..

என்ன சேர்த்து விடுகிறேன்?..
இதோ சேர்த்தே விட்டேன்.

aren
02-04-2003, 12:18 PM
தலைவரே உங்களுக்கு நன்றி.

நன்றி வணக்கம்
ஆரென்