PDA

View Full Version : நீ சிரித்தால்

M.Jagadeesan
30-10-2010, 01:59 PM
சிரித்தால் குழிவிழும்
அழகிய கன்னங்கள்

அந்தக்
கன்னக் குழியினிலே என்றோ விழுந்தவன்தான்
கரையேற முடியாமல் இன்றளவும் தவிக்கின்றேன்

இருளிலும் ஒளிவீசும் முத்துப் பற்கள்
இரண்டுமணி நேர மின்தடையையும்
இல்லாமல் செய்துவிடும்.

ஆன்டனி ஜானி
30-10-2010, 03:05 PM
இந்த கவிதைகள் உள்ள வரிகள் ரெம்பா நல்லா இருக்கு நீங்க இன்னும் இது போல கவிதைகள் தர வேன்டி நன்றி கூருகிரேன்

Ravee
30-10-2010, 03:15 PM
ஆற்காடரின் கருணையால் நாம் எல்லாம் இளித்தவாயர்களாகத்தானே இருக்கிறோம். மணிவிழா கொண்டாட்டத்திற்கும் , புது வருட கல்யாண வைபவத்திற்கும் மதுரையை சேர்ந்தவர்களுக்கு உபரியாக ஐந்து மணிநேர அறிவிக்காத மின் வெட்டு காத்து இருக்கிறது ... :frown:

M.Jagadeesan
30-10-2010, 03:42 PM
இந்த கவிதைகள் உள்ள வரிகள் ரெம்பா நல்லா இருக்கு நீங்க இன்னும் இது போல கவிதைகள் தர வேன்டி நன்றி கூருகிரேன்

நன்றி சஹாய ஆண்டனி அவர்களே.

சிவா.ஜி
30-10-2010, 04:22 PM
நல்லக் கற்பனை. அரசின் சதித்திட்டத்தை முறியடித்த முத்துப் பற்கள்.

வாழ்த்துக்கள் ஜகதீசன்.

அமரன்
30-10-2010, 05:37 PM
மிக ஆழமான குழிதான்..

ஏறி வர இரு மணிநேரம் பிடிச்சிருக்கே..

பாராட்டுகள் ஜகதீசன்

M.Jagadeesan
31-10-2010, 01:46 AM
நல்லக் கற்பனை. அரசின் சதித்திட்டத்தை முறியடித்த முத்துப் பற்கள்.

வாழ்த்துக்கள் ஜகதீசன்.

நன்றி சிவா.ஜி. அவர்களே.

M.Jagadeesan
31-10-2010, 01:47 AM
மிக ஆழமான குழிதான்..

ஏறி வர இரு மணிநேரம் பிடிச்சிருக்கே..

பாராட்டுகள் ஜகதீசன்

நன்றி அமரன் அவர்களே.

M.Jagadeesan
31-10-2010, 01:52 AM
ஆற்காடரின் கருணையால் நாம் எல்லாம் இளித்தவாயர்களாகத்தானே இருக்கிறோம். மணிவிழா கொண்டாட்டத்திற்கும் , புது வருட கல்யாண வைபவத்திற்கும் மதுரையை சேர்ந்தவர்களுக்கு உபரியாக ஐந்து மணிநேர அறிவிக்காத மின் வெட்டு காத்து இருக்கிறது ... :frown:

ஐந்து மணிநேர மின்வெட்டை
அமல் படுத்துவதற்குப் பதிலாக
ஆளுக்கொரு லாந்தர் விளக்கை
இலவசமாய்க் கொடுத்திடலாம்.