PDA

View Full Version : சொப்பனம்



inban
30-10-2010, 10:49 AM
நிறைந்த நீர்நிலை ஒன்றில்
முகம் பார்த்தபடி
உட்கார்ந்திருக்கிறாய்.

பின்னால நின்ற
என் பிம்பம்
தண்ணீரில் தெரிய

கனவென்று நீ
கதையாடிய போதுதான்
கையும் களவுமாக
பிடிபட்டுப் போனாய்.

பூமகள்
30-10-2010, 01:12 PM
ஹா ஹா.. அருமை.. இன்பன்.

--

கனவென நீ நினைக்க
நிஜத்தில் நான் வந்தால்..
நிஜமாகவா என அலறி
நிழலோடு மறைந்தாயே...!! :cool:

அமரன்
30-10-2010, 06:08 PM
ச்சீய் என்றபடி
முகத்தை மூடிய கை விரலிடைகளில்
தெரிகிறது..

கண்ணாமூச்சி ஆட்டத்தில்
கண்டு பிடிபட்டதில்
வென்று விட்ட விசித்திர மகிழ்ச்சி..

சிவா.ஜி
30-10-2010, 06:43 PM
சூப்பர்ங்க இன்பன். காட்சியை கற்பனை செஞ்சிப் பாத்தா ரொம்ப அழகா இருக்கு. வாழ்த்துக்கள்.

ஓவியன்
31-10-2010, 04:18 PM
கனவிலும்,
நனவிலும்,
இருவர் நினைவிலும்,
ஏன் தண்ணீரிலும்.....


இருவரும் ஒன்றாகவே.......


வாழ்த்துகளும் பாராட்டுகளும் இன்பன்..!! :)

பென்ஸ்
07-11-2010, 01:42 AM
அசாதாரன காதல் கவிதைகளில் இதுவும் ஒன்று....
கவிதையின் காட்சியமைப்பு பிரமாதம்... தொடருங்கள்...