PDA

View Full Version : காலையைக் கலைக்கும் இரவின் மிச்சங்கள்.



அமரன்
29-10-2010, 10:58 PM
தினமும் இரவில்
முற்றத்தில் கூடும் நட்சத்திரங்களின் நடுவில்
நிலவென அமர்ந்து
கதைகள் சொல்வாள் அவள்..

வெவ்வேறு வேசம் பூண்டு
கோரக் குணம் கொண்டு
கதைகளில் வரும் தீய சக்தி
அழிக்கப்பட்ட பிறகும்
பயமறுக்க மறுத்து விடும் குழந்தைகள்
அவளுடன் ஒட்டிக் கொள்ளும்..

ஏதேதோ சொல்லிச் சமாளித்து
தூங்க வைத்து பின்பு
கட்டிலில் விழுந்தவளுக்குள்
எழுந்து கொள்ளும்
பாட்டி சொன்ன வீட்டுக் கதைகளின் பய மிச்சங்கள்...
 
 

ஆதவா
01-11-2010, 08:06 AM
இக்கவிதையை முதலில் படிக்கும்பொழுது ”அவள்” என்பவள் பாட்டியாகப் படித்தேன்.. அதுவும் சுவாரசியமாகத்தான் இருக்கிறது.

தன்னிடமிருக்கும் பயத்தை இன்னொரு இடத்திற்கு ஷிப்ட் செய்யும் முயற்சிதான் இது... என்னதான் மாற்றிக் கொண்டிருந்தாலும் எளிதில் அழிக்க முடியாத ஹார்ட் டிஸ்க் அல்லவா.... இருக்கும் மிச்சங்கள் இவளை கனவில் உசுப்பிவிடும்!! இப்போதுள்ள தலைமுறை குழந்தைகள், அமானுஷ்யங்களைக் கண்டு பயப்படுவதேயில்லை.... இருள் என்றாலேயே ஏதோ “இரு”க்கிறது என்று பயந்த காலங்கள் எல்லாம் போய்விட்டது... என் மாமா பையன் (ஐந்து வயது) ஒரு கொடும் இரவில் தனியாக வீட்டை விட்டு வெளியே வந்தான்... அதே ஐந்தாம் வயதில் நான் வீட்டை விட்டு வந்ததே கிடையாது... எனக்கு ஞாபகம் இருக்கிறது இன்னும், நான் எதற்காக பயந்தேன் என்று..

என்றாலும் சிலநேரங்களில் மிச்சங்கள் இரவுநேரத்தில் என் போர்வைக்குள் உறங்குவதுண்டு... ஆனால் எழுந்ததில்லை......

கவிதை அருமை அமரன்!!

Ravee
01-11-2010, 08:13 AM
சாந்தி நிலையம் படத்தில் இதுபோல ஒரு பாடல் காட்சி வரும் அமரன் , உங்கள் கவிதை படித்ததும் அந்த காட்சி கண் முன் வந்தது.....:)