PDA

View Full Version : நான் ஏன் மன்றத்தை விட்டு போகவேண்டும்......



ரங்கராஜன்
29-10-2010, 03:27 PM
நான் ஏன் மன்றத்தை விட்டு போகவேண்டும்......


இந்த தலைப்பை பார்த்தவுடனே உங்களுக்குள் எழும் கேள்வி என்னுல்லும் எழுந்தது.............

“உன்னை யார் மன்றத்தை விட்டு போகச் சொன்னது”

இதற்கு விடையை சொன்னால், இந்த திரியை நான் தொடங்கியதற்கு அர்த்தம் இல்லாமல் ஆகி விடும் என்பதால், இதை விட்டு விடுகிறேன். சரி மறுபடியும் நான் இதே கேள்வியை நான் என்னுடைய மனசாட்சியை கேட்கிறேன்

நான் ஏன் மன்றத்தை விட்டு போக வேண்டும்................

இது என் மன்றம், இதில் இருக்கும் பலர் என் உறவுகள், இதை விட்டு நான் ஏன் போக வேண்டு்ம்.

ஏன் திடீர் என்று இந்த ஞானோதயம், இதற்கு என் உறவின் ஒருவர் சொன்ன வார்த்தையையே சொல்ல விரும்புகிறேன்.

“ஒரு மரத்தின் கிளை உங்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று அந்த மரத்தையே வேருடன் பிடுங்குவது எந்த விதத்தில் நியாயம்”

இன்னும் ஓர் உறவு உரிமையுடன்

“உன் அப்படியெல்லாம் விட்டு விட முடியாது, ஒழுங்காய் மன்றம் வந்து சேரும் வழியை பாரு” என்று சொன்னது.

இன்னும் மற்றோரு உறவு சொன்னது,

“உங்களை தொல்லை செய்கிறவர்களுக்காக, உங்களை நேசிப்பவர்களை விட்டு செல்வது சரிதானா”

இப்படி பல உறவுகள் என் மேல் உள்ள அக்கறை, அன்பு, பாசத்தால் இப்படி பல கட்டளைகள், அறிவுரைகள், திட்டுகளின் மூலமாக தங்களுக்கு என் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தினார்கள். சிலர் உடனே எனக்கு தொலைபேசியின் மூலமாக அழைத்து, என்ன பிரச்சனை என்று பாசத்துடனும், உரிமையுடனும் கேட்டார்கள்.

சிலர் எனக்கு உடனே மின் அஞ்சலும் அனுப்பி, விஷயத்தை கேட்டார்கள். சிலர் உங்களின் முடிவில் தலையிடுவதற்கு எனக்கு உரிமை இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை, ஆனால் உங்களின் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று உரிமையுடன் கூறினார்கள்.

சிலர் என்னுடன் எப்போதும் தொடர்பில் இருங்கள் என்று என்னை அன்புடன் கட்டளையிட்டார்கள்.

இத்தனை விஷயங்களை சொன்னது, என் மீது இவ்வளவு பேர் அன்புடன் இருக்கிறார்கள், நான் இவ்வளவு செல்வாக்கானவன், என்னையும் மதிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதால் இல்லை, அப்படி நினைத்து இருந்தால் நான் அவர்களின் பெயருடன் மேலே இருக்கும் வசனத்தை போட்டு இருப்பேன்.

இருந்தாலும் எதற்கு இதை இங்கு குறிப்பிட்டேன் என்றால், இதை படிக்கும் புது மற்றும் கன்னி உறுப்பினர்களுக்காக தான். மேலே நான் குறிப்பிட்டுள்ள பதில்களில் இருந்து நம்முடைய பதிப்பு தான், பலருக்கு நம்முடைய முகவரியாக இருக்கிறது. இதில் எனக்கு என் முடிவை மறுரிசீனை செய்ய சொன்ன பலரை இதுவரை நான் தனியாக தொடர்பு கொண்டதே இல்லை.

இருந்தாலும் அவர்கள் என்னை முதல் முறையாக தொடர்புக் கொண்டு மன்றத்தை விட்டு செல்ல வேண்டாம் என்றுக் கேட்டுக் கொண்டார்கள், இதில் அவர்கள் மன்ற உறவுகளின் மீதும், படைக்கும் படைப்பின் மீதும் வைத்திருக்கும் மரியாதையை காட்டுகிறது.

உண்மையில் நான் என்னுடைய எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை, என்று ஆரம்பிக்கும் போது இந்த பிரச்சனை இவ்வளவு பெரிசாகும் என்று நினைத்து பார்க்கவில்லை, பதித்த பின் தொடர்ந்து வந்த தொலைபேசி அழைப்பை பார்த்து தான் எனக்கு முதல் பயம் வந்தது. பயம் என்றால் நான் போட்ட பதிப்பை நினைத்து இல்லை, இவர்களிடம் பேசினால் கண்டிப்பாக நான் மன்றத்திற்கு திரும்ப வந்து விடுவேன் என்ற பயம் தான். எனக்கு வந்த அழைப்புகள் எல்லாம் என்னால் தட்டமுடியாத, தட்ட இயலாத குணத்திலும், அறிவிலும், அனுபவத்திலும் பெரிய மனிதர்களிடம் இருந்து வந்தது. அவர்கள் அழைப்பை உயிர்பெற வைத்துவிட்டு அவர்கள் என்ன கேள்வி கேட்பார்களோ, திட்டுவார்களோ, போன் வழியாக வந்து முகத்தில் குத்துவார்களோ என்ற பயம் என்னுள் இருந்துக் கொண்டே இருந்தது. இந்த இரண்டு நாட்கள் நான் தொடங்கிய திரிக்கும், அதில் சொல்லப்பட்ட மேட்டருக்கும் பயந்ததை விட, நான் பெரிதாக மரியாதை வைத்திருக்கும் உறவுகளின் போன் காலுக்கும், மெயிலுக்கும் பயந்து தான்.

அவர்கள் எல்லாரும் என்னை திட்டுவார்கள் என்று பயந்து இல்லை, மன்றத்தை விட்டு போகிறேன் என்று எந்த தைரியத்திலும், தெனாவட்டிலும் நீ திரியை தொடங்கினாய் என்று கேட்டு விடுவார்கள் என்று தான். அப்படியும் கேட்டார்கள் ஆனால் நான் அமைதியாக இருந்ததை பார்த்து, அவர்கள் அனைவரும் சொன்ன ஒரே பதில்........... சாரி இரண்டே பதில்

“உன்னை அப்படியெல்லாம் விட்டு விட முடியாது”

“நாங்கள் இருக்கிறோம் நீ கவலைப்படாதே”

இந்த வார்தைகள் என்னை நோக்கி வரும், எனக்காக வரும் என்று நான் அந்த திரியை ஆரம்பிக்கும் போது, நினைத்துக் கூட பார்க்கவில்லை.

ஆனால் இந்த பதில்களை கண்ட பின்பு எனக்கு தோன்றிய ஓரே கேள்வி

“நான் ஏன் மன்றத்தை விட்டு போகவேண்டும்......” என்பது தான்.

இவ்வளவையும் நான் இங்கு நான் ஏன் பதிக்கிறேன் என்றால், உங்களின் எழுத்துக்களையும், உங்களையும் மதிக்கும் நபர் உங்களிடம் எப்போதும் பேசிக் கொண்டு இருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. காரணம் நான் பல நாட்கள் இப்படித் தான் நினைத்துக் கொண்டு இருந்தேன். எனக்கு சில தனிமடல்கள் வரும் வரை, அதில் என்னை மிகவும் பாதித்த தனிமடல் ஒன்று இருக்கிறது. இது நான் மன்றத்தை விட்டு போகவேண்டும் என்று எண்ணிய சில தினங்களுக்கு முன்னால் வந்த தனிமடல். அதில் அவர் கூறி இருந்தார்.


“நான் இரண்டு வருடங்களாக உங்களின் படைப்புகளை படித்து வருகிறேன், நான் உங்களின் விசிறி நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் என்று இருந்தது”

எனக்கு இந்த மடலை பார்த்தவுடன் முதலில் உடைந்தது என்னுடைய எண்ணம், அதுவரை நான் வகுத்திருந்த அத்தனை இலக்கணத்தையும் அந்த மடல் உடைத்து விட்டது. இதுவரை அறிமுகமில்லாத அந்த உறவு, என்னுடைய படைப்புகளை படித்து இருக்கிறது, என் எழுத்தை மதித்து இருக்கிறது........... இப்படி நம் உறவுகள் பலரின் படைப்புகளை பல பேர் இப்படி அமைதியாக ரசித்து விட்டு போகிறார்கள்.

படைப்பை உடனே படித்து விட்டு ரசித்துவிட்டு பின்னூட்டம் இடும் உறவுகளும் இருக்கிறார்கள், படித்து விட்டு பிடிக்கவில்லை என்று பின்னூட்டம் இடும் மனிதர்களும் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால் படித்துவிட்டு ரசித்து விட்டு அமைதியாக போகும் உறவுகளும் இருக்கிறார்கள் என்று அப்போது தான் எனக்கு தெரிந்தது.

இப்படிபட்ட பல குணாதிசயங்கள் நிறைந்து இருக்கும் மன்றத்தில் சில வேப்பம்பூ விழுந்து இருக்கிறது, என்று இனிப்புகளை புறக்கணிப்பதில் நியாயம் இல்லை என்று எனக்கு சில உறவுகள் உணரவைத்தனர். உண்மையில் எனக்கு அந்த திரியை பதிக்கும் போது இருந்த கோபம் இப்போது இல்லை, அதற்கு காரணம் எனக்கு மன்றத்தின் மகத்துவத்தை புரியவைத்த பல உறவுகள்.

கோபமாக போனால் போகட்டும் விடுங்கள், பத்தோடு பதினொன்று என்று நினைக்காமல், அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த பல நிர்வாகிகள், தலைமை நிர்வாகி, சில பொறுப்பாளர்கள் அனைவருக்கு நன்றிகள். உண்மையாக இந்த விஷயத்தை இவ்வளவு மும்முரமாக எடுத்து அலசி கர்நாடகாவில் நடைபெறும் நிலைப் போல அதிருப்தி எம்.எல்.ஏ வான என்னை இரண்டே நாளில் பல மன்ற உறவுகள் மாற்றி விட்டனர்.

மாற்றி விட்டார்கள், என்பதை விட என் மீது உள்ள பாசத்தை அவர்களிடம் பார்தேன், என் மீது உள்ள பாசத்தை விட மன்றத்தில் இந்த பிரச்சனை ஒரு கறுப்புள்ளியாகி விடக்கூடாது என்று அக்கறையையும் நான் பார்த்தேன். எனக்கு நான் முதலில் குறிப்பிட்டு இருந்த பாசம் தேவைப்பட்டாலும், நான் இரண்டாவதாக குறிப்பிட்டு இருந்த பாசம் அதிகமாக தேவைப்படுவதாலும், எதிர்ப்பார்ப்பதாலும் இங்கு இந்த திரியை தொடங்கியுள்ளேன்

“நான் ஏன் மன்றத்தை விட்டு போகவேண்டும்......”

என்னிடம் போனில் பேசியவர்களையும், மடலில் பேசியவர்களையும், நேரில் பேசியவர்களை நான் இங்கு குறிப்பிட்டு அதன் மூலமாக சில பிரச்சனைகளுக்கு வித்திட விரும்பவில்லை என்பதால், மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து செய்திகளையும் பொதுவாக பதித்து இருந்தேன்.

என்னுடைய பழைய அதிருப்தி திரியை படித்த சில புதிய உறவுகள் பதிலிட்டு இருந்தார்கள். அதில் ஒருவர் “ இப்படி தமிழ்மன்றத்தில் கோச்சிக்கொண்டு செல்வது தமிழ் மீதே கோபப்படுவதற்கு சமம் என்று பதிலிட்டு இருந்தார்கள்”
அவருக்கு இந்த பதிலை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

“தலைவா இப்படி நான் மூச்சு பிடிக்க பேசிக்கொண்ட இருப்பது எனக்காக இருந்தாலும், அதன் பலனை அனுபவிக்க போகிறவர்கள் புதிய உறுப்பினர்களான நீங்களும் தான்”

என்னுடைய பேச்சையும், என்னுடைய வாதத்தையும் ஏற்றுக் கொண்டு மன்றத்தில் சில புதிய நடவடிக்கைகளும், சில புதிய தீர்மானங்களையும் நிறைவேற்றி நிர்வாகி அவர்களுக்கு நன்றி. இருந்தும் நான் எதிர்பார்த்தபடி COMPLAINT CELL என்ற ஒன்றை அமைத்து, அதில் பாராபட்சமற்ற, நடுநிலையான, யாராவது ஒருவரை மன்ற போலீஸ்காராக நியமித்தால் அவர்களிடத்தில், என்னை போன்றவர்கள் அல்லது குறைகளை உள்ளவர்கள் தங்களின் மனபாராத்தை இறக்கி வைக்க அது சரியான இடமாக இருக்கும்.

ஏன் இப்போது ரிப்போர்டு என்ற வசதி இருக்கிறதே என்று நீங்கள் பதில் கூறினால், அதற்கு என்னுடைய எதிர்பதில் இப்போ சம்பந்தப்பட்டவரை பற்றி நான் புகார் கூறவேண்டும் என்று நினைத்தால் நான் யாரிடம் கூறுவது. அவரின் அப்பாவிடம் தான் கூறவேண்டும், அவரின் அப்பாவை தேட அனைவரின் நேரமும் அனுமதிக்காததால், தயவு செய்து இரண்டு பேரை நியமித்து, அவர்களிடத்தில் மன்றம் சம்பந்தமான குறைகளை தெரியப்படுத்தும் படியான வசதியை செய்து தாருங்கள். ஆனால் அந்த இரண்டு பேரை நியமிப்பது கொஞ்சம் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து, தகுதியானவர்களை நியமியுங்கள்..

நியமித்து அதை அனைத்து மன்ற மக்கள் பார்வைக்கு படும்படி பொதுவாக மன்ற அறிவிப்புகளில் வெளியிடுங்கள். இவ்வாறு செய்வதால், நம் மன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு வரை இருந்த கட்டுக்கோப்பு காப்பாற்றப்படும்.

இப்படி செய்வதால் கண்டிப்பாக மன்றத்தில் பல நல்ல விதமான மாறுதல்கள் உண்டாகும், என்ன தான் தரமான படைப்புகளை பதித்தாலும் அதை படித்து ரசிக்க வாசகர்கள் இல்லை என்றால் அவை அனைத்தும் வெறும் நேர விரயம் தான். அந்த நிலை மன்றத்திற்கு வராமல் இருக்க மன்றத்தில் உள்ள உறவுகளை விரட்டாமல் இருந்தாலே போதும், அப்படி விரட்டாமல் இருக்க இவ்வாறான கட்டுப்பாடுகள் உதவி புரியும்.

அதனால் இந்த கட்டுப்பாடுகளை மன்ற நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து விரைவில் கொண்டு வரவேண்டும் என்றுக் கேட்டுக் கொள்கிறேன். இந்த மன்றத்தில் கடைசியாக கோச்சிக் கொண்டு போவது நானாக தான் இருக்க வேண்டும், அதே போல மன்றத்தின் கோச்சிக் கொண்டு சென்றவர்களில் நான் முதலாவதாக இருக்க வேண்டும், இதை மட்டும் நீங்கள் செய்தால் பல உறவுகள் மன்றத்திற்கு திரும்ப வரவும் வாய்ப்புகள் இருக்கிறது.

அதனால் மன்ற நிர்வாகிகள் யோசித்து முடிவை சீக்கிரமாக எடுக்க வேண்டும்.

ஒரு தனி மனித பிரச்சனையை இந்த அளவிற்கு அலசும் உறவுகள் இருக்கும் போது .......... நான் ஏன் மன்றத்தை விட்டு போகவேண்டும்......

நான் மன்றத்தை விட்டு போகிறேன் என்று சொன்னது, இப்போது திரும்ப வந்தது இவை அனைத்தையும் தயவு செய்து ஒரு பப்ளிசிட்டி ஸ்டண்டு என்று நினைத்து விடாதீர்கள்.... அப்படி நினைத்தாலும் கவலை இல்லை, காரணம் நான் இதற்கு பிறகு மன்றத்திற்காகவும், மன்றத்தின் உள்ள சில உறவுகளுக்காகவும் தொடரப்போகிறேன்........ அப்படி இருக்க சிலர் நான் மேலே குறிப்பிட்ட படி நினைத்துக் கொண்டால் அதைப்பற்றி கவலை இல்லை........... கவலை இல்லை என்று முடிவு செய்த பின்

நான் ஏன் மன்றத்தை விட்டு போகவேண்டும்......

என்ன புரியவில்லை.......... புரியவைக்கிறேன் சமீபத்தில் நான் பேப்பரில் ஒரு விளம்பரத்தை பார்த்தேன் அதில் இப்படி அச்சிட்டு இருந்தது.

“சென்னையில் வீடு வாங்குவது உங்களின் கனவா
எங்களை அணுகுங்கள்.........
சென்னைக்கு மிக அருகில், உங்களின் கனவு இல்லத்தை கட்ட தயாராகுகள்......
உங்களின் பல ஆண்டு கனவை நினைவாக்குகள்
சென்னை அருகிலே அருனையான தண்ணீர் வசதியுடன் உங்களின் சென்னை உறவுகளுடன் நீங்கள் குதுகலமாக வாழ வேண்டுமா
காரில் பயணம் செய்தால் சென்னையை 20 நிமிடத்தில் சேர முடியும்
அப்படியான பிளாட்டை எதிர்பார்க்கிறீர்களா
உடனே அணுகுங்கள் சாய் ராம் பிளாட் பிரமோட்டர்ஸ்”

அந்த அருமையான வீட்டு மனைகள் இருக்கும் இடம் என்று கீழே ஒரு மேப் போட்டு இருந்தது. அதில் இருப்பதை பார்த்து அதிர்ந்து விட்டேன்.

சென்னைக்கு மிக அருகில் என்று விளம்பரம் செய்யப்பட்ட அந்த வீட்டு மனை , சென்னையில் இருந்து 195 கிலோ மீட்டர் தொலைவிலும், விழுப்புரத்திற்கு 3 கிலோ மீட்டர் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் இருப்பதாக மேப்பில் போட்டு இருந்தது............. விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு இருபது கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல ULTRA SONIC விமானத்தில் தான் செல்லமுடியும்...........

உறவுகளுடன் கொண்டாட்டமாக வாழ நாம் விழுப்புரம் வரை போக வேண்டிய இந்த மோசடி காலத்தில், பட்டனை தட்டினால் கணிணி திரையில் தோன்றும் சில உண்மையான உறவுகள் நிறைந்த இருக்கும் போது,

நான் ஏன் மன்றத்தை விட்டு போகவேண்டும்......

பாசத்துடன்
தக்ஸ்

பூங்குழலி
29-10-2010, 03:33 PM
ஏதோ திரும்பி வந்தமட்டில் சந்தோஷமுங்க.. நான் புதியவளுங்க.. அதனால் ஏனைய நடந்து முடிந்த விஷயங்கள் தெரியாதுங்க..

Mano.G.
29-10-2010, 03:52 PM
நல்ல முடிவு தம்பி,
செய்வதை செவ்வனே செய்வோம்
உங்கள் மனமாற்றத்திற்கு மன்ற உறவுகளின்
பாசத்தை பற்றி நீங்கள் எழுதியதை வாசித்த பிற்கு
மன்ற எதிர்காலம் பாசப்பினைப்பால் ஆனது ஆகப்போகிரது
என நினைக்கும் பொழுது மனம் சந்தோசமாக இருக்கிரது.

தமிழ் மன்றத்தை உறுவாக்கிய சகோதரர் இராஜகுமரனை
இந்நேரத்தில் நினைவுகூர்ந்து நன்றி கூறியே ஆகவேண்டும்.

உங்கள் மனமாற்றத்தை மிகவும் எதிர்பார்த்த

சகோதரன் மனோ.ஜி

ஆதி
29-10-2010, 04:38 PM
அதானே நீ ஏன் போகனும் ??

மீள மன்றம் வந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது..

சிவா.ஜி
29-10-2010, 04:51 PM
வாப்பா.....!!!!

அப்பா அம்மாக்கிட்ட சண்டைப் போட்டுக்கிட்டு ரெண்டுநாள் ஊரை சுத்திட்டு திரும்ப வர்ற பையன் மாதிரிதான் இருக்கு. இனிமே என்ன வழக்கம்போல கலக்கு...!!!

மதி
29-10-2010, 05:27 PM
:D:D:D:D

நல்லது சார். உங்கள சென்னைக்கு வரும் போது பாக்கறேன்.. :eek:

பென்ஸ்
29-10-2010, 06:26 PM
என்னது திரும்ப வந்திட்டிங்களா..???:sprachlos020::sprachlos020::sprachlos020:

ஆமா.. எப்ப போனீங்க..???:D:D:D:D:D

அனுராகவன்
29-10-2010, 06:50 PM
வந்தாதனே ..போகனும்..
அருமை நண்பா...

mania
30-10-2010, 01:25 AM
உன் முடிவை மறு பரிசீலனை செய்து மறுபடியும் இணைந்திருப்பேன் என்றதில் எனக்கு மிக்க மகிழ்சி தாக்ஸ்....:D:D
அன்புடன்
மணியா:D

சூறாவளி
30-10-2010, 04:06 AM
ஆகா... இப்பதான் பழைய திரி படிச்சேன்... வாங்கன்னு சொல்லிட்டு வந்தேன்.. மீண்டு வந்ததுக்கு மகிழ்ச்சி...

அகத்தியன்
30-10-2010, 06:41 AM
மிக்க மகிழ்ச்சி மூர்த்தி.............. :):):)

யாவும் நன்மைக்கே...... இணைந்திருப்போம்:):)

அமரன்
30-10-2010, 07:35 AM
உங்களை நான் வரவேற்க மாட்டேன் தக்ஷினா.

உடனிருப்பவரை எப்படி வரவேற்பது..

திரும்ப வருவேன் இங்கே

ஸ்ரீதர்
30-10-2010, 07:43 AM
ஆஹா மிக்க மகிழ்ச்சி .. நன்றி நண்பர் தக்சுக்கு

மதுரை மைந்தன்
30-10-2010, 08:12 AM
இந்த கேள்வியை நான் பல முறை என்னை கேட்டுருக்கிறேன் ஒரு சில சமயங்களில் விடை பெற்று பதிவுகள் இட்டுருக்கிறேன். உங்களுக்கு மன்றத்தில் கிடைத்த கிடைக்கும் ஆதரவு எனக்கில்லை எனபது என் படைப்புகளுக்கு வரும் பின்னுட்டங்களிலேயே தெரியும். சில கதைகளை பாதியில் நிறுத்தியிருக்கிறேன். இருந்தும் விளக்கை நோக்கி சென்று மடியும் விட்டில் பூசியைப்போல் மன்றத்தில் தொடர்ந்து இருக்கிறேன்.

மன்றத்தில் இணைந்து குறுகிய காலத்திலேயே மனங்கவர் பதிவாளராக தெரிவு செய்யப்பட்டிருக்கிரிர்கள். எனக்கு இன்னும் அந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை. அப்படி என்ன எனது படைப்புகள் தரம் குறைந்தவை என்று எனக்கு தெரியாது. ஆகவே இந்த கேள்வி எனக்கே பொருந்தும்.

உங்கள் பிரச்சினை என்ன என்று எனக்கு தெரியாது. ஆனால் மன்றத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள். அதுவே எனக்கு மகிழ்ச்சி.

Ravee
30-10-2010, 08:57 AM
தகஸ் ரொம்ப சந்தோசம் .... உங்கள் முடிவில் ஏற்ப்பட்ட மாற்றத்திற்கு .... நானும் இது போல பல சம்பவங்களை சந்தித்து இருக்கிறேன் ... விலகி போனதால் இழந்ததுதான் அதிகம் அதில் இருந்து நீண்ட நாள் நண்பர்கள் இல்லை என்ற பார்வையை மாற்றி நீண்ட கால எதிரிகள் இல்லை என்றே வாழ்க்கையை தொடர்கிறேன். அதனால் சில நன்மைகளும் கைகூடி இருக்கிறது. அதே போல உங்களுக்கும் வாழ்க்கையில் எல்லாமும் எப்போதும் கிடைக்கட்டும் . சந்தோசம் தகஸ் ..... :)

aren
30-10-2010, 09:03 AM
உங்கள் மீள்வரவிற்கு என் வாழ்த்துக்கள்.

தொடருங்கள்.

ஆனால் அப்படியே உங்களை விட்டுவிடுவதா, அது கூடாது. ஒரு கதையை ஒரு வாரத்திற்குள் எழுதவேண்டும் என்று கட்டளையிடுகிறேன்.

அமரன்
30-10-2010, 09:23 AM
நண்பர்களுக்கு..

ஒவ்வொரு அங்கத்தவரும் வழங்கும் ஆலோசனைகளை கவனத்தில் எடுத்துக் கருத்தாய்ந்து முடிவு எடுப்பது மன்ற வழக்கம்.

தக்சின் கருத்தும் பரிசீலீக்கப்பட்டு முடிந்தவரையில் விரைவாக முடிவெடுக்கிறோம்.

அதுவரை, நிறை குறையின் தன்மைக்கு ஏற்ப பொதுவிலோ, புகார்ப்பொத்தான் அழுத்தியோ, தனிமடல் மூலமோ நிறைகுறைகளைத் தெரியப்படுத்துங்கள்.

முந்தி இருந்து இருக்கும் நடைமுறையை மீண்டும் அனைவருக்கும் நினைவூட்டுகிறேன்..

என்னைப் பற்றி ஏதாவது எனக்குத் தெரியாமல் சொல்ல வேண்டி இருந்தால் அதை ஏனைய பொறுப்பாளர்களுக்கோ, ஆலோசகர்களுக்கோ, நிர்வாகிக்கோ தனிமடலில் தெரியப்படுத்துங்கள்.

மன்ற நலனைக் கருத்தில் கொண்டு தக்கபடி முடிவு செய்வார்கள்.

இது மன்றத்தின் எல்லா உறுப்பினர்களுக்கும் பொருந்தும்.

நன்றி!

Mano.G.
30-10-2010, 09:41 AM
உங்கள் மீள்வரவிற்கு என் வாழ்த்துக்கள்.

தொடருங்கள்.

ஆனால் அப்படியே உங்களை விட்டுவிடுவதா, அது கூடாது. ஒரு கதையை ஒரு வாரத்திற்குள் எழுதவேண்டும் என்று கட்டளையிடுகிறேன்.

இந்த பரிந்துரையை நான் வன்மையாக வழிமொழிகிரேன்.
தம்பி தாக்ஸ் உடனடியாக தாங்களின் இசைபயின்ற தொடரை
தொடர கட்டளையிடுகிரேன்.


மனோ.ஜி

விகடன்
31-10-2010, 06:42 AM
மன்றத்திற்கு தக்ஸை வரவேற்கின்றோம். :)

ஓவியன்
31-10-2010, 11:04 AM
வணக்கம் தக்ஸ்,

இந்த பதிவில் நிறைய எழுதவேண்டும் போலத் தோன்றினாலும் எழுத நேரம் இடம் கொடுப்பதாயில்லை. உங்களது முதலாவது திரியைப் பார்த்த போது, என்னுள் என் மனதினுள் ஏற்பட்ட அதே எண்ணம் உங்களது இந்த திரியின் தலைப்பாக இருப்பது கண்டு இரட்டை மகிழ்சி எனக்கு....

ஆமாம், நீங்கள் ஏன் மன்றத்தை விட்டுப் போகவேண்டும்.....??

ஆதலால், வாழ்த்தி நிற்கின்றேன் உங்கள் தொடரும் பதிவுகளை எதிர்நோக்கி...

பூமகள்
31-10-2010, 06:04 PM
வாங்க தக்ஸ்.. எங்க அன்பு புரிந்து மீண்டு வந்தது கண்டு பெருமகிழ்ச்சி.. தொடர்ந்து அசத்துங்க.. உங்க அரசியல் பதிவை பின்பு படித்து பதிலிடுகிறேன்... கொஞ்சம் முக்கிய வேலையாக பிஸி.. கோவிச்சுக்காதீங்க.:icon_ush:

ஜனகன்
31-10-2010, 07:30 PM
நீங்கள் எங்கே போனீர்கள்?.... ஒரு இடைவேளை விட்டு மீண்டும் வந்துள்ளீர்கள்.அவ்வளவேதான்.

நானும் அப்படித்தானுங்கோ பலநாட்களின் பின் இன்று மன்றம் வந்துள்ளேன்.

மன்மதன்
07-11-2010, 04:44 PM
மிக்க மகிழ்ச்சி தக்ஸ்...

Narathar
07-11-2010, 06:30 PM
இதென்னப்பா புதுக்குழப்பம்??
நான் இல்லாமலே ஒரு கழகம் நடந்து ஓய்ந்திருக்கிறது போலிருக்கிறதே?
(வர வர நான் ஒருத்தன் இங்கிருக்கிறதையே யாரும் கண்டுக்கிறதில்லை.... நாராயணா!!!! காலம் வரட்டும் காலம் வரட்டும்!!!)

எப்படியோ எல்லாம் நல்லபடியாக முடிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.... அது சரி என்ன ஆச்சு? (இது காந்தி செத்துட்டாரான்னு கேட்பது போல் இருக்கா??? ) என்னசெய்யிறது வேலைப்பழு..... யாராவது தன் இ மடலிட்டாவது சொல்லுங்கப்பா....

அமரன்
07-11-2010, 06:33 PM
திரி’லோகசஞ்’சாரி’யே..:)

குடும்பத்துக்குள் நடக்கும் குழப்பம்தான். கவலை வேண்டாம்..