PDA

View Full Version : காதலாகி.....(2)



inban
29-10-2010, 11:55 AM
'சேலை பிடிக்குமா
சுடிதாரா'?

'சேலைதான்
உங்களுக்கு?'

எனக்கு.....
ஏவாளின் உடைதான் எப்போதும்.

குட்டு விழுகிறது
தலையில்.

கீதம்
29-10-2010, 12:00 PM
'ஏவாளின் உடையில்
எவளையும் பிடிக்குமோ?
குட்டுவெளிப்பட்டுவிட்டதே!'
குட்டு தொடர்கிறது.

பூங்குழலி
29-10-2010, 12:18 PM
"ஏவாளின் உடை தான்
எப்போதும் என்னவனே - நீ
ஆதாமாக இருந்தால்"

inban
29-10-2010, 03:02 PM
'ஏவாளின் உடையில்
எவளையும் பிடிக்குமோ?
குட்டுவெளிப்பட்டுவிட்டதே!'
குட்டு தொடர்கிறது.

ஐயோ ...வம்பில் மாட்டி விடாதிர்கள் கீதம் . அது எவளையும் அல்ல என்னவளை மட்டும்.

கீதம்
29-10-2010, 10:20 PM
ஐயோ ...வம்பில் மாட்டி விடாதிர்கள் கீதம் . அது எவளையும் அல்ல என்னவளை மட்டும்.

அதை நான் கேட்கவில்லை. உங்களவள்தான் கேட்கிறாளாக்கும்.:)