PDA

View Full Version : மொழி கவிதையாகிறது



inban
28-10-2010, 03:07 PM
யதார்த்தம்
எப்போதெல்லாம்
மொழியோடு
பூரணமாய் புணர்கிறதோ...

பூவின் மலர்ச்சி
எப்போதெல்லாம்
பதங்களால் படி எடுக்கப்படுமோ...

வார்த்தைகளுக்கு
வாளின் கூர்மை
எபபோது வாய்க்கிறதோ....

கண்ணீரின் அர்த்தம்
எப்போது
வரிகளுக்குள் வசியப்படுகிறதோ...

தாலாட்டின் உயிரோட்டம்
தாள்களில்
என்றைக்கு வடிக்கப்படுகிறதோ....

அப்போதெல்லாம்
ஒரு மொழி கவிதையாகிவிடுகிறது .

-பாவெல்@இன்பன்

பூங்குழலி
28-10-2010, 03:15 PM
மொழியின் தாலாட்டு இனிக்கின்றது இன்பன். பாராட்டுக்கள்.