PDA

View Full Version : பேதைமை



inban
28-10-2010, 12:06 PM
தொலைபேசி ஒலிக்க
மறுமுனையில் உனது குரல்

'எங்கிருக்கிறாய்'?

'வீட்டில், நீங்கள்' ?

'நானா ...உனது இதயத்தில்'

சற்று மௌனத்துக்குப் பிற்பாடு

'இதயத்தோடே பேசிக்கொள்கிறேன்
நீங்கள்
தொலை பேசியை வைக்கலாம்'

தொடர்பு
துண்டிக்கப்பட்டது.

பென்ஸ்
28-10-2010, 02:29 PM
இன்பன் சின்ன சின்ன ஊடல் கவிகள் நன்று... ஆனால் அவற்றை உரையாடல் போலல்லாமல் கவிதையாக கொடுக்க முயல வெற்றி கிடைக்குமே...

ஆதவா
28-10-2010, 03:09 PM
இதை கவிதையென்பதைக் காட்டிலும் குறுங்கதை என்று சொல்லிவிடலாம்!! என்னும் பட்சத்தில் அழகாக இருக்கிறது. இருப்பினும் பாதகமில்லை!! ஊடல்களை வெகு அழகாக கொடுக்க இயலுகிறது உங்களால்!! மேலும், பால் வித்தியாசம் காண்பிக்கப்படாததும் குறிப்பிடத்தக்கது! எந்த இடத்திலும் யார் வேண்டுமானாலும் பொருந்திக் கொள்ளலாம்.

கவிதையை சற்று ஆராய்ந்தால், மறுமுனையில் ஒலித்த குரல் ஒரு பெண்ணாகவே இருக்கவேண்டும். ஆனால் ஒருமை வித்தியாசத்தை வைத்துப் பார்த்தால் அது ஆணாக இருக்கிறது.

ஒரு சமயோசித பதில்.... அவளு(னு)க்கு பாராட்டுக்கள்!!


இன்பன் சின்ன சின்ன ஊடல் கவிகள் நன்று... ஆனால் அவற்றை உரையாடல் போலல்லாமல் கவிதையாக கொடுக்க முயல வெற்றி கிடைக்குமே...

அண்ணே... புதுக்கவிதை என்பதே எந்த கட்டுக்குள்ளும் நிற்காமலிருப்பதுதானே.... உரையாடலாய் ஒரு கவிதை....

பூங்குழலி
28-10-2010, 03:35 PM
அண்ணே... புதுக்கவிதை என்பதே எந்த கட்டுக்குள்ளும் நிற்காமலிருப்பதுதானே.... உரையாடலாய் ஒரு கவிதை....
சரியாக சொன்னீர்கள் ஆதவா. எந்த மரபுகளுக்குள்ளும் அடங்காததே புதுக்கவிதை. கவிதை உரையாடல் போல் இருந்தாலும் சுவையாய் தான் உள்ளது.

பென்ஸ்
28-10-2010, 03:43 PM
அண்ணே... புதுக்கவிதை என்பதே எந்த கட்டுக்குள்ளும் நிற்காமலிருப்பதுதானே.... உரையாடலாய் ஒரு கவிதை....

கவிதைன்ன நீ எழுதுற மாதிரி புரியாம இருக்கனும்... இது நல்லாவே புரியுதே...

inban
28-10-2010, 04:04 PM
உரையாடல்களை கவிதைகளுக்குள் புகுத்துவது ஒன்றும் புதிய சேதி இல்லை நண்பரே. வானம்பாடிகள் காலம் தொடங்கி இன்றைய தபு ஷங்கர் வரை நெடியது .குறிப்பாக குருங்கவிதையாக வெளிவந்து வெற்றி பெற்ற மீராவின் கனவுகள் +கற்பனைகள்-காகிதங்கள் கூட உரையாடலை முதன்மைப் படுத்தும்.அதுசரி வாழும் கவிதை வடிவத்திலா இருக்கிறது?

கீதம்
29-10-2010, 04:57 AM
என்னிதயத்தில் நீர் என்றால்
உம் இதயத்தில் நானில்லையா?
இருந்திருந்தால் இப்படி
அலைபேசியிலும் தொலைபேசியிலும்
அழைக்கமுயன்றிருப்பீரா?

ஆதி
29-10-2010, 05:17 AM
மிக சாதுர்யமான பதில், காதலில் மட்டும் தான் இவ்வாறான சின்ன சின்ன பேச்சுக்களையும் ரசத்தோடு ரசிக்க முடிகிறது..

அது என்னங்க தபுசங்கரோடு முடிச்சுட்டீங்க, கவிதைக்கான பரப்பு மிக பெரிது, அது எல்லா திசையிலும் விசாலமாய் விரிந்திருக்கிறது, உரைநடைக்கும், கவிதைக்கும் நடுவில் ஒரு மெல்லிய நூல் போட்டு நடப்பவர் தபுசங்கர்..

--------------------


என்னிதயத்தில் நீர் என்றால்
உம் இதயத்தில் நானில்லையா?
இருந்திருந்தால் இப்படி
அலைபேசியிலும் தொலைபேசியிலும்
அழைக்கமுயன்றிருப்பீரா?

அழைத்தது ஆளோடு பேச அல்ல
இதயங்கள் பேச

பிரேம்
29-10-2010, 08:27 AM
உண்மையை சொல்லனும்னா..தொல்லை தங்கமுடியலன்னு உங்கள கழட்டி விட்டுருக்காங்க...அலர்ட்டா இருங்க...