PDA

View Full Version : மழைக்கொடை

கீதம்
28-10-2010, 08:39 AM
உழலும் உழவும் நலியும்
விழலும் அழியும் தழலும்
ஒழியும் கழலும் கழலும்
பிழியும் விழியும் வழியும்.

திருவும் உருவும் மருவும்
உருகும் உளமும் இறுகும்
அருகும் அருகும் கருகும்
பிறகும் பெருகும் சுடரும்.

நிறையும் குறையும் மறையும்
குறையும் இரையும் இறையும்
இறையும் அறையும் முறையும்
உறையும் கறையும் சிறையும்.

உருளும் உலகும் சுழலும்
அரளும் இருளும் புலரும்
ஒளிரும் கதிரும் மிளிரும்
திரளும் முகிலும் அருளும்.

மழையும் பொழியும் குழையும்
இலையும் கிளையும் தழையும்
விளையும் களையும் இழையும்
இழையும் வளையும் களையும்.

முதிரும் கதிரும் உதிரும்
உதறும் பதரும் சிதறும்
குதிரும் பதறும் கதறும்
சதிரும் புதிரும் அதிரும்.

ஒளியும் வளியும் உலவும்
கிளியும் பலவும் குலவும்
பொலிவும் களியும் பொழியும்
இழிவும் பழியும் கழியும்.

மனையும் துணையும் இணையும்
அணியும் மணியும் பிணையும்
பிணியும் வினையும் தணியும்
நினையும் பணியும் பணியும்.

வரவும் வரவும் பரவும்
கறுவும் உறவும் மறவும்
தரவும் பெறவும் விரவும்
பரிவும் பிறவும் திறவும்.

******************************************

என்னவோ தோன்றியது, எழுதிவிட்டேன். பொய்த்த மழைக்குப்பின்னும் பொழிந்த மழைக்குப்பின்னும் இல்லத்திலும் உள்ளத்திலும் நிகழும் நிகழ்வுகளை வடித்திருக்கிறேன். விளக்கம் அறிந்தவர்கள் விளக்கம் தர முன்வரலாம். குறையிருப்பினும் தயங்காமல் சொல்லுங்கள். விளங்காதவர்கள் சற்றுப் பொறுங்கள். பிறகு விளக்குகிறேன்.

ஆதவா
28-10-2010, 08:56 AM
வாவ்,.... வாவ்.... சபாஷ்!!!
தமிழ் விளையாடுகிறது என்பது இதுதான்!!!
உங்களது இந்த பதிவுக்கு என்னால் இயன்ற 100 ஐகாஸ் அன்பளிப்பு!!

மழை டூ மனைவி!! ரூட் பஸ் பிடித்திருக்கீறது!
வார்த்தை வெள்ளத்தை அனுபவிக்க யார் வருவார் பார்ப்போம்!!!

தாமரை
28-10-2010, 08:56 AM
ஒரே சந்தேகமுங்கக்கா!!!

மனையும் துணையும் இணையும் - அப்படீன்றீங்களே

கண்டிப்பா இரண்டும் இணையுமா???(மனை - மனைவி, துணை - ஹிஹி...)

இது சொற்சிலம்பத்தில் எழுத வேண்டியது,, இங்க எழுதிட்டீங்க. நீங்க விளக்குங்க.. அப்புறமா உங்களுக்குத் தெரியாத (!!!!!) அர்த்தத்தை நான் விளக்கறேன்.

ஆதவா
28-10-2010, 08:58 AM
ஒரே சந்தேகமுங்கக்கா!!!

மனையும் துணையும் இணையும் - அப்படீன்றீங்களே

கண்டிப்பா இரண்டும் இணையுமா???(மனை - மனைவி, துணை - ஹிஹி...)

ஏன் முடியாது அண்ணா
இப்போ நம்ம கருணா...... சரி, வேண்டாம் விடுங்க... :D

தாமரை
28-10-2010, 09:03 AM
மழைக்கொடைக்குக் கொடைமழை - 1000 பொற்காசுகள்!!!

இந்தக் கவிதையைப் பலபரிமாணங்களில் பார்த்து செய்யும் ஆய்வைக் காண இங்கே வாருங்கள்

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=497905#post497905

பூங்குழலி
28-10-2010, 09:27 AM
கீதம் அக்கா கவிதை வரிகளில் இனிக்கிறது. ஆனால் பொருள் உணர்ந்து சுவைக்க முடியவில்லை. விரைவில் வந்து விளக்குங்கள்.

பென்ஸ்
28-10-2010, 02:39 PM
கீதம்... இது எமினத்தின் ரேப் சாங் கேட்ட மாதிரி இருக்கு...
அதுவும் புரியாது.. இதுவும் சரியா புரியலை...

நமக்கு என்னவோ புதுகவிதைகள் கூட புரியாது....

கீதம்
29-10-2010, 01:51 AM
வாவ்,.... வாவ்.... சபாஷ்!!!
தமிழ் விளையாடுகிறது என்பது இதுதான்!!!
உங்களது இந்த பதிவுக்கு என்னால் இயன்ற 100 ஐகாஸ் அன்பளிப்பு!!

மழை டூ மனைவி!! ரூட் பஸ் பிடித்திருக்கீறது!
வார்த்தை வெள்ளத்தை அனுபவிக்க யார் வருவார் பார்ப்போம்!!!

மிக்க நன்றி ஆதவா. பயந்துகொண்டே பதித்தேன். உங்கள் ஊக்குவிப்பு மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கிறது. நன்றி.

கீதம்
29-10-2010, 01:56 AM
ஒரே சந்தேகமுங்கக்கா!!!

மனையும் துணையும் இணையும் - அப்படீன்றீங்களே

கண்டிப்பா இரண்டும் இணையுமா???(மனை - மனைவி, துணை - ஹிஹி...)

இது சொற்சிலம்பத்தில் எழுத வேண்டியது,, இங்க எழுதிட்டீங்க. நீங்க விளக்குங்க.. அப்புறமா உங்களுக்குத் தெரியாத (!!!!!) அர்த்தத்தை நான் விளக்கறேன்.

இத்தனை எழுதியிருக்கேன். உங்களுக்கு சந்தேகம் வந்தது இந்த இடத்தில் மட்டும்தானா? ஆகா.... தன்யனானேன். :)

மழைக்கொடைக்குக் கொடைமழை - 1000 பொற்காசுகள்!!!

கோடைமழையெனக் கொட்டும் பரிசுக்கு மிகவும் நன்றி, தாமரை அவர்களே. பரிசு கொட்டிவிட்டீர்கள். குட்டு எப்போது வைக்கப்போகிறீர்கள்? (மோதிரக்கையால்):confused:

கீதம்
29-10-2010, 01:59 AM
கீதம் அக்கா கவிதை வரிகளில் இனிக்கிறது. ஆனால் பொருள் உணர்ந்து சுவைக்க முடியவில்லை. விரைவில் வந்து விளக்குங்கள்.

நம் மன்ற அண்ணன்கள் வந்து விளக்குவார்கள். :icon_b::lachen001:

உங்கள் ஆர்வத்துக்கு நன்றி ஆங்கிலப்பூமகள்.

கீதம்
29-10-2010, 02:05 AM
கீதம்... இது எமினத்தின் ரேப் சாங் கேட்ட மாதிரி இருக்கு...
அதுவும் புரியாது.. இதுவும் சரியா புரியலை...

நமக்கு என்னவோ புதுகவிதைகள் கூட புரியாது....

எல்லாம் உங்களுக்குப் புரிந்தவைதான். இருப்பினும் விரைவில் விளக்கம் தருகிறேன்.

என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

அநேகமாய் உங்கள் கையெழுத்துப்படி அடிக்கடி என்னுடன் தான் சண்டையிடுவீர்கள் என்று நினைக்கிறேன்.

எழுத்துப்பிழை களைவதற்காகவே ஒரு திரி ஆரம்பித்திருக்கிறேனே!:lachen001:

தாமரை
29-10-2010, 02:11 AM
என் பதிவில் உள்ள எழுத்துப் பிழையை(களைச்) சகிக்கவும்... அதைச் சுட்டிக் காட்டுபவர்களுடன் நான் சண்டையாக்கும்....

பென்ஸோட சண்டை போடறதுன்னா எங்களுக்கு ரொம்பப் பிடிச்ச விஷயமாக்கும்.!!!!

கீதம்
29-10-2010, 04:47 AM
வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க கவிதை(?)யின் பொழிப்புரை தருகின்றேன்.

**********

உழலும் உழவும் நலியும்
விழலும் அழியும் தழலும்
ஒழியும் கழலும் கழலும்
பிழியும் விழியும் வழியும்

உழலும் உழவும் நலியும் - எற்கனவே திணறிக்கொண்டிருக்கிற உழவுத்தொழில் மழையின்மையால் மேலும் நலிந்துவிடுகிறது.

விழலும் அழியும் - கவனிப்பாரின்றி வளர்ந்துநிற்கும் விழல் எனப்படும் புல்வகையும் கூட அழிந்துவிடுகிறது.

தழலும் ஒழியும் - வீட்டில் அடுப்பு எரிவது ஓய ஆரம்பிக்கிறது.

கழலும் கழலும் - உடல் மெலிவதால் கழல் எனப்படும் காலில் அணியப்படும் தண்டை கழன்றுவிழுகிறது அல்லது கொலுசு முதலான ஆபரணங்களும் கழற்றி விற்கப்பட்டு ஜீவனம் நடக்கிறது என்று இருபொருள் கொள்ளலாம்.

பிழியும் விழியும் வழியும் - விழிகள் பிழிந்து நீரை வழியவிடுகின்றன. அழுவதற்கும் சக்தியில்லை எனலாம்.

**************

திருவும் உருவும் மருவும்
உருகும் உளமும் இறுகும்
அருகும் அருகும் கருகும்
பிறகும் பெருகும் சுடரும்.

திருவும் உருவும் மருவும் - இருந்த சேமிப்பும், உடல் வனப்பும் நாளடைவில் தேய்ந்து உருமாறிவிடுகின்றன.

உருகும் உளமும் இறுகும் - இரக்க மனங்களும் வறுமையின் காரணமாய் இறுகிவிடுகின்றன.

அருகும் அருகும் கருகும் - கிளைத்து வளரும் அருகம்புல் கூட வெப்பத்தால் கருகி அழியும் அளவு வறட்சி.

பிறகும் பெருகும் சுடரும் - இந்த அளவு வந்தபின்னும் சூரியனின் உக்கிரம் தணிந்தபாடில்லை.

***********

நிறையும் குறையும் மறையும்
குறையும் இரையும் இறையும்
இறையும் அறையும் முறையும்
உறையும் கறையும் சிறையும்.

நிறையும் குறையும் மறையும் - குடும்பத்தினரிடம் இருந்த நிறைவான நற்குணங்கள் யாவும் குறையத்துவங்கி நாளடைவில் மறைந்தேவிடுகின்றன.

குறையும் இரையும் இறையும் - பசியால் வாடும் நிலையில், கடவுளின் மீதான நம்பிக்கையும் குறையத்தொடங்குகிறது.

இறையும் அறையும் முறையும் - வீட்டில் தகராறுகளும், குற்றச்சாட்டுகளும் எங்கும் எவர்மீதும் இறைந்துகிடக்கின்றன.

உறையும் கறையும் சிறையும் - மனதில் கறைபடிந்து, அவரவர் தனிமைச்சிறையில் அடைபட்டதுபோல் ஒருவருடன் ஒருவர் முகம் கொடுத்துப்பேசாமல் இருக்கின்றனர்.

***************

உருளும் உலகும் சுழலும்
அரளும் இருளும் புலரும்
ஒளிரும் கதிரும் மிளிரும்
திரளும் முகிலும் அருளும்.

உருளும் உலகும் சுழலும் - உலகம் சுழன்றுகொண்டிருப்பதால் காலமாற்றம் ஏற்படுகிறது.

அரளும் இருளும் புலரும் - பயமுறுத்திக்கொண்டிருந்த இருள் விலகி பொழுது புலர்கிறது. இது வரவிருக்கும் விடிவுகாலத்துக்கான குறியீடு.

ஒளிரும் கதிரும் மிளிரும் - சூரியன் இப்போதும் ஒளிர்கிறது. ஆனால் அதில் ஒரு மிளிர்வு தென்படுகிறது.

திரளும் முகிலும் அருளும் - இம்முறை மேகங்கள் திரண்டு, அருள்பாலிக்க வருகின்றன.

**************

மழையும் பொழியும் குழையும்
இலையும் கிளையும் தழையும்
விளையும் களையும் இழையும்
இழையும் வளையும் களையும்.

மழையும் பொழியும் குழையும் - மழை பொழிகிறது, இதுவரை இறுகிக்கிடந்த மண் குழையத்தொடங்குகிறது.

இலையும் கிளையும் தழையும் - காய்ந்திருந்த மரஞ்செடிகள் துளிர்க்கின்றன.

விளையும் - பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன.

களையும் இழையும் - கூடவே களைகளும் வளர்கின்றன.

இழையும் வளையும் களையும் – அக்களைகளை, வளையல்கள் இழையும் கரங்கள் அதாவது பெண்கள் களைகின்றனர்.

********************

முதிரும் கதிரும் உதிரும்
உதறும் பதரும் சிதறும்
குதிரும் பதறும் கதறும்
சதிரும் புதிரும் அதிரும்.

முதிரும் கதிரும் உதிரும் - அமோக விளைச்சலால் கதிர்கள் நன்கு வளர்ந்து முற்றி உதிரத் தொடங்குகின்றன.

உதறும் பதரும் சிதறும் - தூற்றி உதற, பதர்கள் காற்றில் சிதறி வெளியேறுகின்றன.

குதிரும் பதறும் கதறும் - தானியங்களை சேமிக்கும் குதிரானது இவ்வளவு தானியங்களையும் தன்னுள் அடக்கமுடியுமா என்று பதறுகிறது. இருந்தும் அது கதறக் கதற, கழுத்துவரை நிரப்பப்படுகிறது.

சதிரும் புதிரும் அதிரும் - ஆட்டபாட்டங்களும் வேடிக்கைப் பேச்சுகளும் எங்கும் அதிரச்செய்கின்றன.

********************

ஒளியும் வளியும் உலவும்
கிளியும் பலவும் குலவும்
பொலிவும் களியும் பொழியும்
இழிவும் பழியும் கழியும்.

ஒளியும் வளியும் உலவும் - இதமான ஒளியும் இளந்தென்றல் காற்றும் உலவுகிறது.

கிளியும் பலவும் குலவும் - கிளிகளும், பலவிதப் பறவைகளும் கொஞ்சிப் பேசிக் குலவுகின்றன.

பொலிவும் களியும் பொழியும் - எங்கும் அழகும், ஆனந்தமும் நிறைந்திருக்கிறது.

இழிவும் பழியும் கழியும் - கீழான செய்கைகளும், குற்றப்பேச்சுகளும் மறைந்துவிடுகின்றன.

*********************

மனையும் துணையும் இணையும்
அணியும் மணியும் பிணையும்
பிணியும் வினையும் தணியும்
நினையும் பணியும் பணியும்.

மனையும் துணையும் இணையும் - இதுவரை பிணக்கிட்டிருந்த மனையாளும் அவள் துணைவனும் ஒன்றுபடுகின்றனர்.

அணியும் மணியும் பிணையும் - இழந்திருந்த ஆடை அணிகலன்கள் வாங்கப்படுகின்றன.

பிணியும் வினையும் தணியும் - உடல்நோவும், மனநோவும் குணமாக்கப்படுகின்றன.

நினையும் பணியும் பணியும் - நினைக்கும் எல்லாக்காரியங்களும் நிறைவேறுகின்றன.

**************************

வரவும் வரவும் பரவும்
கறுவும் உறவும் மறவும்
தரவும் பெறவும் விரவும்
பரிவும் பிறவும் திறவும்.

வரவும் வரவும் பரவும் - வருவாய் பெருகவும் விருந்தினர் வரவும் பெருகுகிறது.

கறுவும் உறவும் மறவும் - பகையாயிருந்த உறவுகளும் அதை மறந்து உறவாடுகிறது.

தரவும் பெறவும் விரவும் - செழிப்புடன் இருப்பதால் பெண் தரவும் பெண் எடுக்கவும் முன்வருகின்றனர். அல்லது சிறிய அளவில் எதையேனும் தந்து பெரிய அளவில் பொருள் பெற்றுச் செல்கின்றனர். அல்லது செலவு தரவும் வரவு பெறவும் வருகின்றனர். மூன்று பொருள் கொள்ளலாம்.

பரிவும் பிறவும் திறவும் - அதனால் இதுவரை இல்லாத பரிவு போன்ற பல புதிய விஷயங்களை மனந்திறந்துகாட்டுகின்றனர்.

***********************

புரியாதவர்களுக்கு இப்போது புரியும் என்று நினைக்கிறேன்.:icon_b:

ஆதி
29-10-2010, 05:49 AM
தாமரை அண்ணா விளக்கமும் படிக்க ஆசையாக இருக்கு..

இந்த கவிதையை நான் வேற மாதிரி படிச்சேன்...

உழலும்
விழலும்
ஒழியும்
பிழியும்

திருவும்
உருகும்
அருகும்
பிறகும்

நிறையும்
குறையும்
இறையும்
உறையும்

இப்படி வாசித்தேன்

அண்ணாவின் விளக்கத்திக்கு பின் வந்து பின்னூட்டம் போடுகிறேன் அக்கா

Ravee
30-10-2010, 02:54 PM
கீதம் அக்கா உங்க வேகத்திற்கு இப்போ என்னாலே ஓடி வர முடியலை ... கதை எழுதினீங்க நானும் எழுதினேன் ... புது கவிதைகள் எழுதினீர்கள் நானும் ஏதோ வசன கவிதை போட்டேன் இப்போ நீங்க ராக்கெட் வேகத்தில் போறதை பார்த்தால் ரொம்ப பிரம்மிப்பா இருக்கு ... அய்யா பார்த்தால் ரொம்ப சந்தோசப்படுவார்தானே ....

மூச்சு விடாமல் ... அப்படியே சொல்லிப்பார்த்தேன் ... கவிதையின் தொடக்கமும் முடிவும் ..... சிலிர்க்குது :)

ஆன்டனி ஜானி
30-10-2010, 03:29 PM
எனக்கு இந்த மளைக்குடை இந்த கவிதையிள் எல்லாம் ம்.ம்.ம். என்று முடிகிற அந்த சென்டன்ஷ்ஸ் ரெம்ப நல்லா இருக்கு

govindh
31-10-2010, 10:02 PM
வார்த்தைகளின் வர்ணஜாலம்....
தமிழ் சொற் சிலம்ப விளையாட்டு...
பிரமித்து போனேன்....

பொழிப்புரை....படித்து புரிந்து கொண்டேன்....
மிக்க நன்றி....
பாராட்டுக்கள்.....

M.Jagadeesan
01-11-2010, 01:56 AM
தங்களது கவிதை பிரமிப்பை ஊட்டுகிறது.

சூறாவளி
01-11-2010, 03:50 AM
ம்ம்ம்.. நான் இந்த கவிதையை படித்து முடித்ததும் மனதில் தோன்றிய க்ளிக் என்ன தெரியுமா.... அப்படியே எடுத்து வார்த்தை விளையாட்டு நண்பர்களோடு விளையாடலாம் என்றுதான்.. ஏன்னா ஒவொரு நாலு வரிகளையும் பத்து முறை ஸ்பீடாக சொல்லனும்னா ரொம்ப தண்ணி குடிக்க வேண்டி இருக்கும்..:lachen001:

ரசித்தேன்..

அதன் பின் நண்பர் தந்த விளக்கம் படித்தேன்.. விளக்கவுரை முடித்ததும் மனதில் தோன்றிய ஒரே வரி கருத்து பணம்

பணம் இல்லையென்றால் மனம் கூட இறுகிவிடும் என கூறியிருக்கிறிர்கள்.. துணைவனும் மனையாலும் கூட இணைவதை குறிப்பிட்டு எடுத்து கூறியிருக்கிறிர்கள்..

இந்த கவியின் கருத்துக்களோடு நான் முற்றிலும் ஒத்துப்போகிறேன்..

பாராட்டுக்கள்.. விள்க்கவுரை அளித்த நண்பருக்கும் நன்றிகள்..

கீதம்
11-11-2010, 12:56 AM
அண்ணாவின் விளக்கத்திக்கு பின் வந்து பின்னூட்டம் போடுகிறேன் அக்கா

நமக்குள் நிறைய கணக்கு வழக்கு பாக்கி இருக்கு.

நினைவிருக்கா ஆதன்?:D

கீதம்
11-11-2010, 12:59 AM
கீதம் அக்கா உங்க வேகத்திற்கு இப்போ என்னாலே ஓடி வர முடியலை ... கதை எழுதினீங்க நானும் எழுதினேன் ... புது கவிதைகள் எழுதினீர்கள் நானும் ஏதோ வசன கவிதை போட்டேன் இப்போ நீங்க ராக்கெட் வேகத்தில் போறதை பார்த்தால் ரொம்ப பிரம்மிப்பா இருக்கு ... அய்யா பார்த்தால் ரொம்ப சந்தோசப்படுவார்தானே ....

மூச்சு விடாமல் ... அப்படியே சொல்லிப்பார்த்தேன் ... கவிதையின் தொடக்கமும் முடிவும் ..... சிலிர்க்குது :)

நன்றி ரவி.

நீங்கதான் இப்ப ராக்கெட் வேகத்தில் போய்க்கொண்டிருக்கீங்க. :icon_b:

கீதம்
11-11-2010, 01:00 AM
எனக்கு இந்த மளைக்குடை இந்த கவிதையிள் எல்லாம் ம்.ம்.ம். என்று முடிகிற அந்த சென்டன்ஷ்ஸ் ரெம்ப நல்லா இருக்கு

நன்றி சகாய ஆண்டனி.

கீதம்
12-11-2010, 11:41 PM
வார்த்தைகளின் வர்ணஜாலம்....
தமிழ் சொற் சிலம்ப விளையாட்டு...
பிரமித்து போனேன்....

பொழிப்புரை....படித்து புரிந்து கொண்டேன்....
மிக்க நன்றி....
பாராட்டுக்கள்.....

மிகவும் நன்றி, கோவிந்த். உங்கள் பின்னூட்டம் புது உத்வேகம் கொடுக்கிறது.

கீதம்
12-11-2010, 11:42 PM
தங்களது கவிதை பிரமிப்பை ஊட்டுகிறது.

என் சிறு முயற்சியே. மிகவும் நன்றி ஐயா.

கீதம்
12-11-2010, 11:44 PM
ம்ம்ம்.. நான் இந்த கவிதையை படித்து முடித்ததும் மனதில் தோன்றிய க்ளிக் என்ன தெரியுமா.... அப்படியே எடுத்து வார்த்தை விளையாட்டு நண்பர்களோடு விளையாடலாம் என்றுதான்.. ஏன்னா ஒவொரு நாலு வரிகளையும் பத்து முறை ஸ்பீடாக சொல்லனும்னா ரொம்ப தண்ணி குடிக்க வேண்டி இருக்கும்..:lachen001:

ரசித்தேன்..

அதன் பின் நண்பர் தந்த விளக்கம் படித்தேன்.. விளக்கவுரை முடித்ததும் மனதில் தோன்றிய ஒரே வரி கருத்து பணம்

பணம் இல்லையென்றால் மனம் கூட இறுகிவிடும் என கூறியிருக்கிறிர்கள்.. துணைவனும் மனையாலும் கூட இணைவதை குறிப்பிட்டு எடுத்து கூறியிருக்கிறிர்கள்..

இந்த கவியின் கருத்துக்களோடு நான் முற்றிலும் ஒத்துப்போகிறேன்..

பாராட்டுக்கள்.. விள்க்கவுரை அளித்த நண்பருக்கும் நன்றிகள்..

ரொம்ப சரியா சொன்னீர்கள். பாராட்டுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சூறாவளி அவர்களே.

selvaaa
09-05-2011, 09:37 PM
ரொம்பவும் அருமையான வார்த்தை உபயோகம்.

இருமுறை படித்தாலும் உங்கள் விளக்கமே அனைத்தையும் விளங்க வைத்தது.

மீண்டும் மீண்டும் படிக்க ஆசை! அத்தனை வார்த்தைகள்!!!!!!!!!!!!!

பூமகள்
10-05-2011, 01:52 AM
வியந்து முயன்று..
குழைந்து குமைந்து
இயன்று நன்று
பகன்று நகர்ந்தேன்.. :)

பாராட்டுகள் கீதம் அக்கா.. :)

கீதம்
10-05-2011, 04:36 AM
ரொம்பவும் அருமையான வார்த்தை உபயோகம்.

இருமுறை படித்தாலும் உங்கள் விளக்கமே அனைத்தையும் விளங்க வைத்தது.

மீண்டும் மீண்டும் படிக்க ஆசை! அத்தனை வார்த்தைகள்!!!!!!!!!!!!!

என் பழைய பதிவுகளைக் கிளறி மேலெழுப்பியதற்கும் பாராட்டுக்கும் நன்றி selvaaa. என் மனமும் பழைய நினைவுகளைக் கிளறி வெளிக்கொண்டுவந்து ரசிக்கிறது.:)

வியந்து முயன்று..
குழைந்து குமைந்து
இயன்று நன்று
பகன்று நகர்ந்தேன்.. :)

பாராட்டுகள் கீதம் அக்கா.. :)

மனம் நிறைந்த நன்றி பூமகள்.

ஜானகி
10-05-2011, 06:06 AM
மழைக் கொடை, கோடை மழையென, பிரமிக்கவும், மகிழவும் வைக்கிறது. செல்வாவின் தயவால், பொக்கிஷங்கள் மேலெழும்பிவருகின்றன....பலரும் அனுபவிக்க...

தாமரை
10-05-2011, 06:46 AM
மழைhttp://www.tamilmantram.com/vb/showthread.php?t=24971க்கொடை படிச்சா மட்டும் போதுமா? அனுபவிக்கணும்... இதையும் படிங்க

கீதம்
10-05-2011, 11:59 AM
மழைக் கொடை, கோடை மழையென, பிரமிக்கவும், மகிழவும் வைக்கிறது. செல்வாவின் தயவால், பொக்கிஷங்கள் மேலெழும்பிவருகின்றன....பலரும் அனுபவிக்க...

நன்றி ஜானகி அம்மா. கவிதையை விடவும் அதை சிலாகித்து விவரித்துள்ள தாமரை அவர்களின் தமிழ்க்கொடை மிக ரசிக்கும். இத்திரியில் சுட்டி இருப்பதால் அனைவரும் பார்த்திருப்பார்கள் என்று நினைத்து சுட்டாமல் இருந்துவிட்டேன். கவனிக்கத் தவறியிருந்தால் மேலே தாமரை அவர்கள் சுட்டியுள்ள திரிக்குச் சென்று முற்றிலும் வேறுபட்டக் கோணத்தில் கவியை ரசித்து மகிழுங்கள்.

ஜானகி
10-05-2011, 03:50 PM
இடி, மின்னலுடன் கூடிய கோடை மழையில் நனைந்தேன்...நன்றி.