PDA

View Full Version : அதிசய எண்

M.Jagadeesan
27-10-2010, 12:39 PM
எண்களாகிய கடலில் ஏராளமான முத்துக்கள் உள்ளன.மூழ்கி முத்தெடுத்தவர் வெகு சிலரே.அவ்வாறு எடுக்கப்பட்ட ஒரு முத்துதான் 6174 என்ற எண்.இதைக் கண்டறிந்தவர் அவகேட்ரோ என்ற கணித மேதை.இந்த எண் அவரது பெயராலேயே "அவகேட்ரோ எண்" என்று அழைக்கப்படுகிறது.

ஒரு நான்கு இலக்க எண்ணை எடுத்துக் கொள்ளவும்.அதை முதலில் இறங்கு வரிசையில் எழுதவும்.பின்பு ஏறு வரிசையில் எழுதவும். முதல் எண்ணிலிருந்து இரண்டாம் எண்ணைக் கழிக்கவும்.கழித்து வந்த விடையை மீண்டும் இதேபோல இறங்கு வரிசையிலும், ஏறு வரிசையிலும் எழுதி கழித்து விடை காணவும்.இதைத் தொடர்ந்து செய்தால் இறுதியில் 6174 என்ற எண் கிடைக்கும்.

உதாரணமாக 5678 என்ற எண்ணை எடுத்துக்கொள்வோம்

5678 ஐ இறங்கு வரிசையில் எழுத--- 8765
5678 ஐ ஏறு வரிசையில் எழுத------- 5678
கழித்து வரும் விடை-----------------3087 - -
3087 ஐ இறங்கு வரிசையில் எழுத---8730
3087 ஐ ஏறு வரிசையில் எழுத-------0378
கழித்து வரும் விடை-----------------8352
8352 ஐ இறங்கு வரிசையில் எழுத---8532
8352 ஐ ஏறு வரிசையில் எழுத-------2358
கழித்து வரும் விடை-----------------6174
எந்தவொரு எண்ணை எடுத்துக்கொண்டாலும் இந்த முறையில் தொடர்ந்து செய்யும்போது இறுதி விடையாக 6174 என்ற எண்ணே வரும்.

nambi
27-10-2010, 12:52 PM
அருமை! பயனுள்ள பகிர்வு!

M.Jagadeesan
27-10-2010, 01:05 PM
அருமை! பயனுள்ள பகிர்வு!

நன்றி நம்பி அவர்களே.

praveen
27-10-2010, 01:06 PM
ஆச்சர்யமான தகவல், இப்போது தான் அறிகிறேன். அறிய தந்தமைக்கு நன்றி நண்பரே

M.Jagadeesan
27-10-2010, 01:09 PM
ஆச்சர்யமான தகவல், இப்போது தான் அறிகிறேன். அறிய தந்தமைக்கு நன்றி நண்பரே

நன்றி பிரவீன் அவர்களே.

அறிஞர்
27-10-2010, 01:30 PM
அதிசய எண்...

சிறுவயதில் கூட்டி, கழித்து, பெருக்கி.... (மற்றவரின் விடையை) சொல்லும் விளையாட்டுகள் நியாபகத்தில் வருகிறது

mania
27-10-2010, 01:51 PM
எண்களாகிய கடலில் ஏராளமான முத்துக்கள் உள்ளன.மூழ்கி முத்தெடுத்தவர் வெகு சிலரே.அவ்வாறு எடுக்கப்பட்ட ஒரு முத்துதான் 6174 என்ற எண்.இதைக் கண்டறிந்தவர் அவகேட்ரோ என்ற கணித மேதை.இந்த எண் அவரது பெயராலேயே "அவகேட்ரோ எண்" என்று அழைக்கப்படுகிறது.

ஒரு நான்கு இலக்க எண்ணை எடுத்துக் கொள்ளவும்.அதை முதலில் இறங்கு வரிசையில் எழுதவும்.பின்பு ஏறு வரிசையில் எழுதவும். முதல் எண்ணிலிருந்து இரண்டாம் எண்ணைக் கழிக்கவும்.கழித்து வந்த விடையை மீண்டும் இதேபோல இறங்கு வரிசையிலும், ஏறு வரிசையிலும் எழுதி கழித்து விடை காணவும்.இதைத் தொடர்ந்து செய்தால் இறுதியில் 6174 என்ற எண் கிடைக்கும்.

உதாரணமாக 5678 என்ற எண்ணை எடுத்துக்கொள்வோம்

5678 ஐ இறங்கு வரிசையில் எழுத--- 8765
5678 ஐ ஏறு வரிசையில் எழுத------- 5675
கழித்து வரும் விடை-----------------3090
3090 ஐ இறங்கு வரிசையில் எழுத----9300
3090 ஐ ஏறு வரிசையில் எழுத--------0039
கழித்து வரும் விடை-----------------9261
9261 ஐ இறங்கு வரிசையில் எழுத----9621
9261 ஐ ஏறு வரிசையில் எழுத------- 1269
கழித்து வரும் விடை-----------------8352
8352 ஐ இறங்கு வரிசையில் எழுத----8532
8352 ஐ ஏறு வரிசையில் எழுத--------2358
கழித்து வரும் விடை-----------------6174
எந்தவொரு எண்ணை எடுத்துக்கொண்டாலும் இந்த முறையில் தொடர்ந்து செய்யும்போது இறுதி விடையாக 6174 என்ற எண்ணே வரும்.
5678 ஏறு வரிசையில் 5678 தானே ஆகும்???????
அன்புடன் மணியா

அறிஞர்
27-10-2010, 01:55 PM
5678 ஏறு வரிசையில் 5678 தானே ஆகும்???????
அன்புடன் மணியா

5678 ஏறு வரிசையில் 8765 தானே... :confused::confused::confused::confused:

M.Jagadeesan
27-10-2010, 02:18 PM
5678 ஏறு வரிசையில் 5678 தானே ஆகும்???????
அன்புடன் மணியா

நன்று.தவறு சரி செய்யப்பட்டது.

mania
28-10-2010, 01:38 AM
5678 ஏறு வரிசையில் 8765 தானே... :confused::confused::confused::confused:

தலைவா..... அது இறங்கு வரிசை......எதுக்கு உங்க ஆராய்ச்சியையெல்லாம் கணக்கிலே....!!!!!!!:rolleyes::rolleyes:
அன்புடன்
மணியா:D

பென்ஸ்
28-10-2010, 02:15 AM
தலைவா..... அது இறங்கு வரிசை......எதுக்கு உங்க ஆராய்ச்சியையெல்லாம் கணக்கிலே....!!!!!!!:rolleyes::rolleyes:
அன்புடன்
மணியா:D

:D:D:D:D:D

கண்மணி
28-10-2010, 02:18 AM
தலைவா..... அது இறங்கு வரிசை......எதுக்கு உங்க ஆராய்ச்சியையெல்லாம் கணக்கிலே....!!!!!!!:rolleyes::rolleyes:
அன்புடன்
மணியா:D

கணக்கில்லே!!

ஆன்டனி ஜானி
28-10-2010, 04:46 PM
இப்படி கணக்கு எல்லாம் பார்க்கும் போது எனக்கு பள்ளிகூடதில் வாதியார் சொல்லிதந்த மாதிறி தோனுது ஏறுவரிசை,இறன்குவரிசை இதுபோல இருக்கு இருந்தாலும் உன்கள் படைப்புக்கு ரெம்ப நன்றி

பூங்குழலி
28-10-2010, 05:41 PM
சிந்திக்க வைக்கும் கணித விளையாட்டு.

Narathar
28-10-2010, 06:23 PM
:) நான் என்னாத்தை சொல்றது.....
நல்லாத்தான் கணக்கு போடுறீங்க ஜெகதீஸண்ணே....

அமரன்
28-10-2010, 08:26 PM
அப்பவும் சரி.. இப்பவும் சரி.. கணக்கு என்றால் விளங்கச் சுணங்கும்.

சிவா.ஜி
28-10-2010, 09:40 PM
புதிய தகவல். நன்றிங்க் ஜகதீசன்.

M.Jagadeesan
31-10-2010, 12:11 PM
:) நான் என்னாத்தை சொல்றது.....
நல்லாத்தான் கணக்கு போடுறீங்க ஜெகதீஸண்ணே....

நன்றி பல.

ஸ்ரீதர்
31-10-2010, 03:07 PM
என் 6 வயது மகளுடன் இந்த விளையாட்டு விளையாடலாம் என்று அவளை ஒரு 4 இலக்க எண் சொல்ல சொன்னேன்.

அவள் சொன்ன 4 இலக்க எண் கேட்டு திகைத்து விட்டேன்.

அவள் சொன்ன எண் 1000 .

இந்த எண்ணுக்கு இந்த விதி பொருந்தாது தானே ???

M.Jagadeesan
31-10-2010, 03:23 PM

கண்டிப்பாகப் பொருந்தும்.முயன்று பாருங்கள்.

govindh
31-10-2010, 05:59 PM
"அவகேட்ரோ எண்" -
புதிய தகவல்...
பகிர்வுக்கு நன்றி...

ஸ்ரீதர்
01-11-2010, 02:16 AM
கண்டிப்பாகப் பொருந்தும்.முயன்று பாருங்கள்.

புரியவில்லையே !!

1000

1000 - 0001 = 999
999 -999 = ௦

தானே வருகிறது?

ஸ்ரீதர்
01-11-2010, 02:24 AM
ஒ ! 999 ஐ 0999 ஆக எடுத்துக்கொண்டால் விடை வருகிறது அல்லவா ?

இப்போது புரிகிறது.

M.Jagadeesan
01-11-2010, 02:47 AM
ஒ ! 999 ஐ 0999 ஆக எடுத்துக்கொண்டால் விடை வருகிறது அல்லவா ?

இப்போது புரிகிறது.

நன்றி.

ஆளுங்க
12-02-2011, 02:44 PM
வணக்கம்....

அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும்....
இந்த தரியில் உள்ள ஒரு முக்கிய பிழை உண்டு!!!

இந்த விந்தை எண்ணிற்கும் அவகட்ரோவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது!!!
இதைக் கண்டறிந்தவர் ஒரு இந்தியர் என்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்..

அவர் பெயர் : தத்தார்யா ராமசந்திரா கப்ரேகர்..(Dattaraya Ramchandra Kaprekar)

அவரது பெயராலேயே இது கப்ரேகர் மாறிலி (Kaprekar's constant) என்று வழங்கப்படுகிறது!!

இரண்டாவது, அவகாட்ரோ ஒரு இயற்பியல் மற்றும் வேதியல் மேதை..

ஆதாரம்:விக்கிபீடியா (http://en.wikipedia.org/wiki/6174_%28number%29)

M.Jagadeesan
21-02-2011, 03:06 AM
திரு.ஆலுங்கா அவர்களுக்கு,

திரு.கோவி.பழனி அவர்கள் எழுதிய "கணக்கு சொல்லும் கதைகள்"
என்ற புத்தகத்தில் 6174 என்ற எண் "அவகேட்ரோ எண்' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.வேறு சில புத்தங்களைப் பார்த்தபின் தாங்கள்
கூறியது சரி என்று தெரிந்துகொண்டேன். பிழையைச் சுட்டிக்காட்டிய*
மைக்கு நன்றி.

உமாமீனா
21-02-2011, 04:44 AM
அட நானும் ஒரு எண்ணை (2005) செய்து பார்த்தேன் - கன கச்சிதமாக 6174 வருகிறது - தகவலுக்கு நன்றி

ஆளுங்க
22-02-2011, 11:19 AM

நன்றி!!