PDA

View Full Version : வார்த்தைகள் வழியும் கால்வாய்...!

செல்வா
27-10-2010, 08:24 AM
இருமனங்களுக்கு இடையில்
ஓருமனதாய்
வெட்டப்பட்டதொரு
கால்வாய்

தூரப்பார்வையில் ஒரேமாதிரித்
தென்பட்ட இரு கரைகளின்
ஏற்றத் தாழ்வுகள் கிட்டப்பார்வையில்
கண்டறியப் பட்டன

வலகரை உயர்ந்த சில இடங்களும்
இடகரை உயர்ந்த சில இடங்களும்
பொதுவில் ஒரு ஒற்றுமையை
புதிதாய் உருவாக்கிக் கொடுத்தது

புதிதாய் வெட்டப் பட்டதால்
தடங்கித் தயங்கி ஊரத்துவங்கிய
வார்த்தைகள்
சிறு சிறு தடைகள்
அடித்துச் செல்லப் பட்டதும்
தடங்கலின்றிப் பாயத்துவங்கி
இருகரை தொட்டுயரத் துவங்கின

அபாய நிலை வரும் முன்னரே
அணை போட்டுத் தடுத்தது அரசு
அடுத்த அறிவிபு்பு வரும் வரை
தற்காலிகமாகத் தள்ளிப் போடப்பட்டது
அணைத் திறப்பு

அணைகரையை முட்டிய வார்த்தைகள்
அலைபேசி வழியாய்
கசியத் துவங்கின

பெரிய கால்வாயின்
நடுப்பகுதியில்
ஒரு சிறு ஓடையாகத்
தன்னைச் சுருக்கிக் கொண்டபடி
வளைந்தும் நெளிந்தும்
வழிந்து கொண்டிருந்தன
வார்த்தைகள்.

அரசுக்குத் தெரியாமல் அவ்வப்போது
கள்ளத்தனமாய்த் திறக்கப்பட்ட
அணையிலிருந்து
அவசரமாய் வெளியேறத் துடித்த
வார்ததைகளின் வேகம்
கரைகளை அசைத்துப் பார்த்தது

வேக வார்த்தைகள்
வழிந்து தீர்ந்த
அந்த அழகிய நடுநிசியில்

இரு கரைகளுக்குமி்டையே
மெளன ஊற்று
பீறிட்டுக் கிளம்பியது

சத்தமே இல்லாத வார்த்தைகள்
இரு கரைகளினிடையே
வந்து போய்க் கொண்டிருந்தன
யாரும் அறியாமலே....!

கீதம்
27-10-2010, 08:55 AM
மதகு திறக்கும்வரையே
மந்த நீரொழுக்கு!
திறந்தபின் பொங்கியெழும்
புதுவெள்ளப் பெருக்கு!
உறவுப்பயிர் வளர்க்க
அப்போதில்லை கட்டுப்பாடு!
வார்த்தை நீரூற்றுக்கு
இனியும் இல்லை தட்டுப்பாடு!

:icon_b::icon_b:

Ravee
27-10-2010, 08:55 AM
http://www.lisahenderling.com/images/phone_call.jpg

தம்பி போன மாசம் போன் பில் என்னப்பா ???? :lachen001:

ஆதி
27-10-2010, 08:59 AM
கால் வாய் னு பொய்யெல்லாம் சொல்லப்படாது, முழுவாயும் தானா ?

வாய் கால்வாயானா ஜொள்ளு னு கண்மணியக்கா சொன்ன ஞாபகம், எதுக்கும் சரி பார்த்துக்கோ டா...

அலைபேசி
அலை அலையாய் பேசி
அளந்தளந்து இந்த பக்கம் கவிதையா வாசி...

ஆதவா
27-10-2010, 10:08 AM
அண்ணே...
நீங்க தமிழ்மன்றத்தில இனி புதுசா திரி எழுதறதா இருந்தா ஜனவரியில ஆரம்பிங்கண்ணே.... :D
எங்க சுத்தி எங்க வந்தாலும்
சரியான இடத்துக்கு வந்திடறீங்க!!!!!! :lachen001::lachen001::lachen001:

ஓவியன்
27-10-2010, 01:12 PM
`கால்வாய்` எனக்கு தமிழிலே பிடித்த ஒரு சொல், ஏன் தெரியுமா...??, கால்வயை `வாய்கால்` என திருப்பிப் போட்டாலும் ஒரே பொருள் தருகிறதே...!!! :)

என்னவோ தெரியலை எனக்கு இந்தக் கவிதை தப்புத் தப்பாவே பொருள் தருகிறது, அதபாலே ஒன்றும் சொல்ல மாட்டேன்..

நல்லாருக்கு செல்வா, நல்லா இருங்க செல்வா..!! :D:D:D

விகடன்
27-10-2010, 01:29 PM
எனக்கும் ஏதோ தப்பாகத்தான் விளங்குகிறது.

செல்வா சொல்லவந்ததை

சரியாக விளங்கிக்கொண்டதால்
தப்பாகப்படுகிறதா?- இல்லை
தப்பாக விளங்கிக்கொண்டதால்த்தான்
தப்பாக விளங்குகின்றதா...???

தெரியவில்லையே...

ஆதவா
27-10-2010, 01:29 PM
`கால்வாய்` எனக்கு தமிழிலே பிடித்த ஒரு சொல், ஏன் தெரியுமா...??, கால்வயை `வாய்கால்` என திருப்பிப் போட்டாலும் ஒரே பொருள் தருகிறதே...!!! :)

..!! :D:D:D

கால்வாய் வேறு வாய்க்கால் வேறு ஓவியன்..

கால்வாய் என்பது ஆற்றிலிருந்து பிரியும் சிறிய கிளை.
வாய்க்கால் என்பது வயல்வெளிக்காக (பாத்தி கட்டி) அமைக்கப்பட்ட பாதை!!

நானும் முதலில், இரண்டும் ஒன்றுதான் என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது, வேறுவேறென்று

ஆதவா
27-10-2010, 01:31 PM
எனக்கும் ஏதோ தப்பாகத்தான் விளங்குகிறது.

செல்வா சொல்லவந்ததை

சரியாக விளங்கிக்கொண்டதால்
தப்பாகப்படுகிறதா?- இல்லை
தப்பாக விளங்கிக்கொண்டதால்த்தான்
தப்பாக விளங்குகின்றதா...???

தெரியவில்லையே...

யாரப்பா இது விகடன்??
பேர மாத்தினா அனவுன்ஸ் பண்ணுங்கப்பா... நம்ம மண்டைக்கு சட்டுனு ஏறாதில்ல??

ஓவியன்
28-10-2010, 04:51 AM
கால்வாய் வேறு வாய்க்கால் வேறு ஓவியன்..

கால்வாய் என்பது ஆற்றிலிருந்து பிரியும் சிறிய கிளை.
வாய்க்கால் என்பது வயல்வெளிக்காக (பாத்தி கட்டி) அமைக்கப்பட்ட பாதை!!

ஒத்துக்க மாட்டேன், ஒத்துக்க மாட்டேன் (சண்டை போட்டு நாளாச்சிலே, இலேசிலே விட்டிடுவேனா..??? :D), கால்வாய் ஆற்றின் கிளைதான் ஆனால் இயற்கையாக அமைந்ததில்லை, அவ்வாறு இயற்கையாக அமைந்தால் அதனை ஓடை, ஆறு (வேண்டுமானால் சிறிய ஆறு :D) என்றுதான் கூறுவார்கள். கால்வாய் ஆறு, அல்லது குளத்திலிருந்து பிரிந்து வரும் கிளைதான் ஆனால் செயற்கையாக அமைக்கப்பட்டு மனிதனின் உபயோகத்துக்கானது.

வாய்க்காலும் அத்தகையதே, வேண்டுமானால் ஒரு சிறிய வித்தியாசம் கூறலாம், பெரியளவில் இருப்பதை கால்வாய் எனவும், சிறியளவில் இருப்பதை வாய்க்காலெனவும் கூறலாம்....

நம்ம ஊரில நாம ரெண்டையும் ஒன்றாக யூஸ் பண்ணுவமிலே..!! :icon_b:

ஆதவா
28-10-2010, 06:02 AM

நீங்க தினமும் வந்தால் “வேணும்னே” சண்டைக்கு இழுக்க நான் ரெடி. :icon_b:

இணையத்தில் தட்டிப் பார்த்ததில் இலங்கையில் இவ்விரண்டு விதமான உபயோகமும் ஒன்றான பொருளில் இருக்கிறதாம்....
கொங்கு நாட்டில்தான் இப்படி பிரித்திருக்கிறார்கள். :eek:
அதனால் சண்டைக்கு இடமில்லாமல் போச்சே!!!:traurig001:

தாமரை
28-10-2010, 06:08 AM

காளிங்கராயன் கால்வாயா? வாய்க்காலா? கொங்குன்னு சொன்னதால கேட்கிறேன்!!!

http://wapedia.mobi/ta/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D

http://www.hindu.com/2007/01/17/stories/2007011700470300.htm

கீழ்பவானித் திட்டக் கால்வாய்,,,

http://wapedia.mobi/ta/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D

பிரேம்
28-10-2010, 06:37 AM
நதி நீர் இணைப்பில் ஆர்வம் உடையவரோ..?

ஓவியன்
28-10-2010, 06:45 AM
இணையத்தில் தட்டிப் பார்த்ததில் இலங்கையில் இவ்விரண்டு விதமான உபயோகமும் ஒன்றான பொருளில் இருக்கிறதாம்....

ஐ, சண்டை போடாமலேயே சமாதானம் ஆயிட்டிங்களே..!! :cool:

தாமரை
28-10-2010, 04:17 PM
தலைப்பிலேயே குறிப்பு தந்திருக்கீங்க செல்வா! வார்த்தைகள் "வழியும்" கால்வாய். ஆமாம் அந்தக் குறிப்பிட்ட காலத்தில் பேசுவதை எல்லாம் வழியல் என்றுதான் எடுத்துக்கணும்.

நிரம்பி வழிவது அல்ல.. ஓட்டை(வாய்) வழியே வழிவது..

என்னதான் இரு நீர்நிலைகளுக்கு இடையில் வெட்டப்பட்டாலும் கால்வாயில் நீரின் ஓட்டம் ஒருபுறமாகவே இருக்கும். இங்கயும் ஒரு பக்கமாவே ஓடுது என்கிறாங்க சிலபேர்... உண்மைதானா?

தூரப்பார்வை கிட்டப்பார்வை எல்லாம் என்ன காட்டும் தெரியுமா? பார்வைக் கோளாறைத்தான். கிட்டத்தில் ஒரு மாதிரியும் தூரத்தில் ஒரு மாதிரியும் தெரியறது அதைத்தான் காட்டுது. அதனால கண்ணைப் பரிசோதனை செய்து கொள்ளவும்..

ஆனால் இந்தக் காதல் இருக்கே அது வந்துட்டா உயர்ந்த விஷயங்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். குனிஞ்சு பார்க்கவே தெரியும். நீங்க சொல்ல வந்த விஷயம் வேற.

நம்ப தஞ்சாவூர் கோவில் கட்ட சிமெண்ட் மாதிரியான பூச்சுகளை உபயோகப்படுத்தலையாம். கற்களில் குழிகளையும் நீட்சிகளையும் உண்டாக்கி சரியாகப் பொருத்தியதால் ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் இன்னும் அப்படியே இருக்காம். அதுமாதிரி துறுத்திக் கொண்டிருக்கும் சில குணங்களை நாம் குழிப்பட்டு பொருந்தி வந்து அதை சரியாக வாங்கிக் கொண்டால் அந்தப் பிணைப்பு காலாகாலத்துக்கும் வாழும்.

மிச்சமிருப்பதெல்லாம் வெறும் நீரோட்டம்.

ரொம்ப காலத்துக்கு முன்னால ஓவியன் இதே மாதிரி ஒரு சிச்சுவேஷனில் என்னிடம் ரொம்பவே ஆலோசனை கேட்டார்.. ஓவியனைக் கேட்டுப்பாருங்க. மிச்சம் புரியும்.:icon_b:

சிவா.ஜி
28-10-2010, 04:56 PM
அரசு எதுக்குத் தடைபோடனும்......பயிர் வளர்ச்சி(?) நல்லாருக்கனும்ன்னா....வாய்க்கால் வழி வார்த்தை வெள்ளம் நிறையப் பாயனும். அரசுக்கு ஒரு மனு போடுங்க செல்வா....ஹி...ஹி...!!

(அப்பாவோட அலைபேசி எண்ணைக் கொடுங்க....தடையை நீக்க சிபாரிசு பண்றேன்)

பூங்குழலி
28-10-2010, 05:47 PM
என்னவோ தெரியலை எனக்கு இந்தக் கவிதை தப்புத் தப்பாவே பொருள் தருகிறது, அதபாலே ஒன்றும் சொல்ல மாட்டேன்.. :D:D:D
ஆமாம். எனக்கும் தப்பாகவே பொருள் தருகிறதே.. ஏன்?

அமரன்
28-10-2010, 08:16 PM
இங்கயும் ஒரு பக்கமாவே ஓடுது என்கிறாங்க சிலபேர்... உண்மைதானா?.:icon_b:

:):):)

செல்வா
29-10-2010, 04:55 PM
பின்னூட்ட ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள்...!

எல்லாரோட பின்னூட்டத்திற்கும் பதிலா..

ஹி...ஹி...ஹி னு வழியிறதத் தவிர வேற வழியில்ல.. :icon_ush::eek:

அமரன்
29-10-2010, 09:03 PM
பின்னூட்ட ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள்...!

எல்லாரோட பின்னூட்டத்திற்கும் பதிலா..

ஹி...ஹி...ஹி னு வழியிறதத் தவிர வேற வழியில்ல.. :icon_ush::eek:

இந்த மூன்று எழுத்தை இந்தளவு பெரிய கவிதையாக்கிட்டியே..

தாமரை
30-10-2010, 02:10 AM
பின்னூட்ட ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள்...!

எல்லாரோட பின்னூட்டத்திற்கும் பதிலா..

ஹி...ஹி...ஹி னு வழியிறதத் தவிர வேற வழியில்ல.. :icon_ush::eek:

அங்க வழியறது பத்தாதா?

கால்வாய் போட்டு வழியறதே வழியல் வேறு யாருக்கும் போகக் கூடாதுன்னுதான்..

இப்படி வழிமாறி வழிஞ்சா ஒரு வழியாயிடுவீங்க..

கபர்தார்!!