PDA

View Full Version : வாழ்க ஜனநாயகம்



Ravee
26-10-2010, 09:45 AM
வாழ்க ஜனநாயகம்

http://farm2.static.flickr.com/1321/708083620_d4597c545e.jpg



நதிகளை இணைக்க

திட்டம் நிறைவேறியது

ராட்சத குழாய்கள்

சாலை ஓரங்களில்

மாநிலங்களும் மக்களும்

மாறி மாறி கொந்தளிக்க

திட்டமும் குழாய்களும்

கிடப்பில் கிடந்தன

குருவிக்கு கூடு போல

ஏழைக்கு கிடைத்த மாளிகை

குடிசை மாற்று வாரியத்தின்

வேலையே செய்த

குடிநீர் வாரியத்திற்கு

நன்றி சொல்லி

குழாயின் சாக்கு கதவுகள்

காற்றில் பறக்கிறது

வாழ்க ஜனநாயகம் என்று


http://swapnil.ej.am/blog/wp-content/uploads/2009/09/poverty_india.jpg

ஆதி
26-10-2010, 09:57 AM
செய்ய நினைத்ததை செயல் படுத்த முடியாததால்
செயல்படுத்தாமல் போனது செய்யப்பட்டுவிட்டது :)

//காற்றில் பறக்கிறது//

இந்த வரியோடு கவிதை முடிந்துவிட்டது என்றுத்தோன்றுகிறது

அண்ணா "வாழ்க ஜனநாயகம் என்று" இதை தலைப்பில் வைத்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும் என்பது என் கருத்து..

ஏழைக்கு கிடைத்த எளிய மாளிகை எனும் தலைப்பு ராட்சச குழாய்களைப் பற்றி சொல்ல வருகுறீர்கள் என்று முன்பே புரிந்து விடுவதால், சொல்ல படும் முறையில் வித்யாசம் எதிர்ப்பார்க்க தோன்றுகிறது..

தலைப்பை மாற்றிப்பாருங்கள் கவிதை வலிமை பெறும்...

Ravee
26-10-2010, 10:05 AM
நன்றி ஆதன் , உங்கள் விருப்பப்படி மாற்றிவிட்டேன் .... :p

ஆதி
26-10-2010, 10:12 AM
நன்றி ஆதன் , உங்கள் விருப்பப்படி மாற்றிவிட்டேன் .... :p

"வாழ்க்க ஜனநாயகம் என்று" எனும் கடைவரியை நீக்கிவிட்டு, தலைப்பில் அதை போடலாம், படிச்சு முடிக்கும் போது ஒவ்வொருத்தரும் தலைப்புக்கு வருவாங்க :)

**************

வாழ்க ஜனநாயகம் என்று


நதிகளை இணைக்க

திட்டம் நிறைவேறியது

ராட்சத குழாய்கள்

சாலை ஓரங்களில்

மாநிலங்களும் மக்களும்

மாறி மாறி கொந்தளிக்க

திட்டமும் குழாய்களும்

கிடப்பில் கிடந்தன

குருவிக்கு கூடு போல

ஏழைக்கு கிடைத்த மாளிகை

குடிசை மாற்று வாரியத்தின்

வேலையே செய்த

குடிநீர் வாரியத்திற்கு

நன்றி சொல்லி

குழாயின் சாக்கு கதவுகள்

காற்றில் பறக்கிறது

(அல்லது)

குடிநீர் வாரியத்திற்கு

நன்றி சொல்லி

குழாயின் சாக்கு கதவுகள்

வாழ்க ஜனநாயகம் என்று

காற்றில் பறக்கிறது

Ravee
26-10-2010, 12:50 PM
:lachen001: :lachen001: :lachen001: ஒரு சின்ன குழப்பம் .... சிரிப்புதான் வருகிறது குருவே

ஆதி
26-10-2010, 01:32 PM
:lachen001: :lachen001: :lachen001: ஒரு சின்ன குழப்பம் .... சிரிப்புதான் வருகிறது குருவே

என்ன குழப்பமண்ணா ?

அமரன்
26-10-2010, 08:54 PM
காட்சியைக் கவிதையாக்கி
சாட்சியாய் காட்சியை வைத்து
ஆட்சியை அங்க்லாய்ப்பில் குழைத்து
மனச்சாட்சியை உசுப்பி விட்டீர்கள்.

கீதம்
26-10-2010, 09:42 PM
பணநாயகமும்
இனநாயகமும்
குணநாயகவேடமிட்டு
சனநாயகத்தைச்
சாக்(குக்கடியில்)கடையில் தள்ளி
ஜனநாயகப் பெருமைபேச...
மனநாயகமிங்கே
மன்றத்தில் அங்கலாய்க்க...
துணைநாயகமென நாமும்!

ஆதி
27-10-2010, 07:41 AM
துணைநாய கமெல்லாமும் தூள்தூ ளாகும்
..துணிவுநாய கம்கொஞ்சம் குறைந்தால் அக்கா
விணைநாய கம்நல்ல விதையாய் ஆனால்
..விதிநாய கமெல்லாமும் சிதையாய் மாறும்
நினைவுநாய கத்தையென்றும் கூராய் வைத்து
..நியதிநியா யத்தையென்றும் சீராய் செய்து
இணைந்துதாய மதையொன்றாய் போட்டால் அக்கா
..இருக்குமநி யாயங்கள் இருட்டில் மாயும்

எ(ன்)ண் சீர் விரு(ப்ப)த்தம்